Advertisment

சாபங்கள் சுமக்கும் நட்சத்திரங்களும் கரை சேர்க்கும் பரிகாரங்களும்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/stars-carry-curses-and-remedies-bring-them-back-shore-melmaruvathur-s

ஜோதிடத்தின் சூட்சமப் பாதையில் நட்சத்திரங்களின் பங்களிப்பு மகத்தானதாகும்.

ஒரு கிரகத்திற்கு ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்று மூன்று நட்சத்திரங்களை வழங்கியிருந்தாலும், 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு கிரகத்தின் சாபம் புதைக்கப்பட்டு மானுடத்தை வழிநடத்துகின்றது.

இந்த சாபத்தின் தன்மையை சுமந்துதான் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனை பின்தொடரும் உறவு களிடம் நன்மையோ அல்லது தீமையோ அனுபவிக்கும் சூழ்நிலை உருவாக்குகின்றது.

மேலோட்டமாகக் கூறும்பொழுது என்ன வாக இருக்கும் என்கின்ற ஆவல் குறைபாடு இருந்தாலும், இதன் ஆழம் தொடும்பொழுது பல உண்மைகள் நமக்கு புலப்படும்.

Advertisment

ss

கிரகங்களின் உறவான தந்தைக்கு சூரியனும், தாய்க்கு சந்திரனும், கணவன்- மனைவி இருபாலருக்கும் சகோதரமாக செவ்வாயும், மாமனுக்கு புதனாகவும், குழந்தைகளுக்கும், முன்னோர்களுக்கும், குருவாகவும், மனைவி, சகோதரி, அத்தை ஆகியோருக்கு சுக்கிரனாக வும் சித்தப்பா மற்றும் பெரியப்பா போன்ற பங்காளிகளுக்கு சனி ஆகவும், தாத்தாவிற்கு ராகுவாகவும், பாட்டி வர்க்கத்திற்கு கேது என்ற அடிப்படையில் கிரகங்களின் உறவு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கேதுவின் முதல் நட்சத்திர மான அஸ்வினியும், அதன் கர்ம வினையும், என்னவென்று ஆராயும்பட்சத்தில் அஸ்வினி சூரியனின் சாபம்பெற்ற நட்சத்திரமாக பிரத

ஜோதிடத்தின் சூட்சமப் பாதையில் நட்சத்திரங்களின் பங்களிப்பு மகத்தானதாகும்.

ஒரு கிரகத்திற்கு ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்று மூன்று நட்சத்திரங்களை வழங்கியிருந்தாலும், 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு கிரகத்தின் சாபம் புதைக்கப்பட்டு மானுடத்தை வழிநடத்துகின்றது.

இந்த சாபத்தின் தன்மையை சுமந்துதான் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனை பின்தொடரும் உறவு களிடம் நன்மையோ அல்லது தீமையோ அனுபவிக்கும் சூழ்நிலை உருவாக்குகின்றது.

மேலோட்டமாகக் கூறும்பொழுது என்ன வாக இருக்கும் என்கின்ற ஆவல் குறைபாடு இருந்தாலும், இதன் ஆழம் தொடும்பொழுது பல உண்மைகள் நமக்கு புலப்படும்.

Advertisment

ss

கிரகங்களின் உறவான தந்தைக்கு சூரியனும், தாய்க்கு சந்திரனும், கணவன்- மனைவி இருபாலருக்கும் சகோதரமாக செவ்வாயும், மாமனுக்கு புதனாகவும், குழந்தைகளுக்கும், முன்னோர்களுக்கும், குருவாகவும், மனைவி, சகோதரி, அத்தை ஆகியோருக்கு சுக்கிரனாக வும் சித்தப்பா மற்றும் பெரியப்பா போன்ற பங்காளிகளுக்கு சனி ஆகவும், தாத்தாவிற்கு ராகுவாகவும், பாட்டி வர்க்கத்திற்கு கேது என்ற அடிப்படையில் கிரகங்களின் உறவு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கேதுவின் முதல் நட்சத்திர மான அஸ்வினியும், அதன் கர்ம வினையும், என்னவென்று ஆராயும்பட்சத்தில் அஸ்வினி சூரியனின் சாபம்பெற்ற நட்சத்திரமாக பிரதிபலிக்கின்றது.

இதன்பொருட்டு தந்தை காரகமான சூரியனின் உறவு நிலையில் சில கசப்பான சம்பவங்களைச் சந்திக்க நேரிடுகின்றது.

மேலும் அஸ்வினி அமர்ந்துள்ள மேஷத் திலிருந்து, சூரியனின் ஆட்சி வீடான சிம்மம் ஐந்தாம் பாவகமாக வருவதனால், அரசு வழியில் சில இடர்பாடுகள், பூர்வீக சொத்து, பூர்வீகத்தில் வளர்ச்சியில்லாமல் இருப்பது, பூர்வீகத்தை விட்டு விலகியிருப்பது, குழந்தை கள்வழியில் பிரச்சினை, குழந்தைகளுக்கு பிரச்சினை போன்றவற்றை சந்திக்கும் சூழல் இவர்களின் பிறப்பிலேயே பிணைக்கப் பட்டுள்ளது.

மேலும் ஐந்தாமிடம் காதல், ஆழ்மனது ஆகிய உணர்வுகளை தொட்டுக்காட்டும் இடமாக அமைந்துள்ளதனால், எப்பொழு துமே ஒரு மன அமைதியற்ற சூழலையும், காதல் நிறைவேறாத தன்மையும், இந்த நட்சத்திரத் தின் பிறப்பு பயணத்தின் இடை சொருகலாக வைத்துவிடும்.

இந்த கர்மவினையில் தொடர்பால் இப்பிறவியில் இவர்கள் தந்தையின்மீது அதீத பாசம் கொண்டிருப்பார்கள். சூரியன் கேது இணைவு இருப்பதனால் மனநோயும், தலைவலியும், அடிக்கடி தொந்தரவு செய்யும் சூழல் இவர்களுக்கு உருவாகும்.

முற்பிறவியில் அரசு தந்தை, தந்தைவழி உறவுகளுக்கு அளித்த துரோகத்தின் காரண மாக இப்பிறவியில் அஸ்வினி நட்சத்திரத்தின் ஜனனம் அமையப்பெறும்.

இந்த வினையிலிருந்து தற்காத்துக் கொள்ள திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் அமையப்பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு நீங்கள் பிறந்த மாதத்தில் சென்று உங்களின் வயதிற்கு ஏற்ற எண்ணிக்கையில் நெய் தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வரவேண்டும். உதாரணமாக 40 வயது நடப்பில் உள்ளவர்கள் 41 தீபங்கள் ஏற்றவேண்டும்.

ஐந்தாம் பாவகம் மற்றும் சூரியன் சார்ந்த பிரச்சினைகள், தந்தை வழி பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.

பரணி

மேஷத்தில் அமையப் பெற்ற சுக்கிரனின் பரணி நட்சத்திரம், சந்திரனின் சாபம் பெற்ற நட்சத்திரமாகும்.

சுக்கிரன், சந்திரன், கடகம் ஆகிய அனைத்தும் பெண் வீடு மற்றும் பெண் கிரகம் சார்ந்த சூழலை எடுத்துரைக்கின்றது.

சந்திரனின் சாபம் பெற்ற பரணி நட்சத் திரத்தில் பிறந்த அநேகமான குழந்தைகளின் தாயார்வழியில் பிரச்சினைகளும், குறிப்பாக பரணி நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தை களின் தாயார் சுக்கிர தசையின் முடிவுக்குள் பல பிரச்சினைகளையும், கண்டங்களையும், சந்திப்பதற்கு அம்சத்தில் சந்திரன் நீசமாவது ஒரு காரணமாக இருந்தாலும், பரணி சந்திரனின் சாபத்தை பெற்றதும் ஒரு காரணமாகும்.

எல்லா கிரகங்கள் மற்றும் பாவகங்கள் பெண் தொடர்பு பெறுவதனால் முற்பிறவி யில் இவர்கள் தாய் தங்களைவிட மூத்த பெண்கள், அத்தை போன்ற உறவுகளுக்கு துரோகம் செய்து கர்மவினையைப் பெற்றவர்கள்.

இவர்களுக்கு தாய்வழி சொத்துகளும், தாயாதிவழி உறவுகளும் பிரச்சினையாக இருக்கும்.

பெண்களாக இருக்கும்பட்சத்தில் கருப்பை சார்ந்த பிரச்சினைகளும் இருக்கும்.

மேஷத்தில் அமர்ந்து பரணிக்கு சந்திரனின் வீடு நான்காம் பாவகமாக வருவதனால் வீடு, சுய சம்பாத்தியம், உயர்கல்வி போன்றவற்றிலும் சில தடைகளும், தாமதங்களும் ஏற்படும்.

சுக்கிரன், சந்திரன், செவ்வாய் ஆகிய இணைவானது உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் அதிக சக்கரை சார்ந்த பிரச்சினைகளை மிக எளிதில் அளித்துவிடும்.

இந்த வினையை தகர்த்துக்கொள்ள நீங்கள் பிறந்த மாதத்தில் வருகின்ற உங்களின் நட்சத்திரத்தன்று தாயாருக்கு மனமார பாத பூஜை செய்யவேண்டும்.

தாய் அல்லாதவர்கள் பெரியம்மா, சித்தி ஆகிய அன்னையின் உறவில் பயணிப்பவர்களுக்கு செய்யலாம். அவர் களுக்கு வெண்மை நிறம் கலந்த புடவை வாங்கி தரவேண்டும்.

இவர்கள் திருப்புகலூர் (நல்லாடை) அருகில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந் துள்ள ஸ்ரீ அக்னிஸ்வரருக்கு உங்களின் வயது பூர்த்தியாகி அடுத்த வயதிற்குரிய எண்ணிக்கையில் நெய் தீபம் போடவேண்டும்.

கிருத்திகை

மேஷத்திலும், ரிஷபத்திலும் தன்னை பரவச் செய்துள்ள கிருத்திகை நட்சத்திரம், செவ்வாயின் சாபத்தை வாங்கிய நட்சத்திரமாகும்.

இந்த செவ்வாய் பெண்களுக்கு கணவனாக வும், இருபாலருக்கும் சகோதர உறவாகவும் அமையும்.

இவர்களுக்கு ரத்தம் சார்ந்த பிரச்சினைகளும், இந்த வம்சாவழியில் தீ விபத்து, மின்சார விபத்து போன்றவையும் நிகழ்ந்திருக்க பெரும் வாய்ப்புகளை அளித்திருக்கும்.

கிருத்திகை ஒன்றாம் பாதத்தில் பிறந்த வர்களுக்கு ஒன்று மட்டும் எட்டாம் பாவகங்கள் சில பிரச்சினைகளைத் தொடர்ந்துகொண்டே இருக்கும். மேலும் நித்திய கண்டம் பூரண ஆயுள் என்பது போன்ற சூழல் அமையும்.

அதீத எதிர்மறை எண்ணங்கள் இவர்களுக்கு தோன்றும். என்னதான் உயர்வான சிந்தனை இருந்து நல்ல சூழல் அமைந்திருந்தாலும் பிறரால் ஏற்றுக் கொள்ள முடியாத சில அவமானங்களை சகித்தாக வேண்டிய தன்மையை இவர் களுக்கு இயல்பிலேயே அளித்துவிடும்.

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்த வர்கள் 7 மற்றும் 2-ஆம் பாவகத்தின் இயக்கத்தின் பிடியில் பயணித்து களத்திரம் மற்றும் நண்பர்களின்மூலம் விரயத்தை சந்திக்கும் சூழல் உருவாகும்.

பெண்களாக இருந்தால் அன்னோன்யம் இல்லாத குடும்ப வாழ்க்கை இருக்கும். இவர்களுக்கு தாம்பத்தியத்தில் நிச்சயமாக ஒரு பிரச்சினை இருக்கும். இவர்களுக்கு அமைகின்ற நண்பர்களால் மட்டுமல்லாமல், கூட்டாளிகளாலும் நஷ்டத்தை அனுபவிக் கும் சூழல் ஏற்படும்.

இவர்கள் மயிலாடுதுறை ஸ்ரீ காத்ர சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு அவரவர் பிறந்த மாதத்தில் வயதிற்கு ஏற்ற நெய் தீபமேற்றி வழிபட வேண்டும். மேலும் செவ்வாயின் கோவிலான வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் செல்வது மேலும் சிறப்பு.

மேற்கூறிய பரிகாரங்கள் செய்யும் பொழுது தங்களால் இயன்ற நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தானம் வழங்கவேண்டும்.

செல்: 80563 79988

Advertisment
bala140325
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe