Advertisment

சாபங்கள் சுமக்கும் நட்சத்திரங்களும் கரை சேர்க்கும் பரிகாரங்களும்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/stars-carry-curses-and-remedies-bring-them-back-shore-melmaruvathur-s-0

கால சுழற்சியில் நம்மை கரைசேர்க்கும் ஜோதிட வியல் பல பரிமாணங்களை தன்னில் போதித்து பிரதிபலித் தாலும், அவற்றுள் நாம் ஆழ்ந்துள்ள இடங்களில் இருந்து வெளியேறும் தன்மையை சில சூட்சமங்கள் எளிதில் நமக்கு வழங்கிவிடுகின்றது.

அவற்றில் இந்த கர்ம ஜோதிடம் முதலிடம் வகிக்கின்றது. இதன் துணைகொண்டு ஒவ்வொரு நட்சத்திரத்தின் கர்மப் பதிவை அகற்றும் அற்புதமான சூழலை பின்வருமாறு காணலாம்.

ஹஸ்தம்

கன்னி ராசியில் தன்னை ஆழ்ந்து அர்ப்பணித்துக்கொண்ட ஹஸ்தம் குருவின் கர்மப் பதிவு கொண்ட நட்சத்திரமாகும்.

கன்னி ராசி காலபுருஷனுக்கு 6-ஆம் பாவகமாகி சுக்கிரனின் நீசத்தை அனுமதித்து, பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை இயல்பிலேயே கொண்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் குருவின் தொடர்பான வழியிலும் பாதை அடைக்கப் படுவதனால் வழிகாட்டிகள் வழியிலும், சிறப்பானதொரு ஆலோசனை வழங்கும் தன்மையிலும், சில விரும்பத்தகாத சூழலை ஏற்படுத்தும்.

Advertisment

ss

மேலும் ராசிக்கு 4 மற்றும் 7-ஆம் பாவகமான குருவின் வீடான மீனம் மற்றும் தனுசு தாய் மற்றும் தாயாதி வழியிலும், கூட்டாளி மற்றும் களத்திரத்தின் வழியிலும், இடர்பாடுகளை அமைத்துத் தரும். இவர் களின் கூட்டுத்தொழில் நாளடைவில் பிரச்சினையை நோக்கி நகர்வதைக் காண முடிகின்றது. அதோடு வண்டி, வாகனம், வீடு, மனை, உயர்கல்வி ப

கால சுழற்சியில் நம்மை கரைசேர்க்கும் ஜோதிட வியல் பல பரிமாணங்களை தன்னில் போதித்து பிரதிபலித் தாலும், அவற்றுள் நாம் ஆழ்ந்துள்ள இடங்களில் இருந்து வெளியேறும் தன்மையை சில சூட்சமங்கள் எளிதில் நமக்கு வழங்கிவிடுகின்றது.

அவற்றில் இந்த கர்ம ஜோதிடம் முதலிடம் வகிக்கின்றது. இதன் துணைகொண்டு ஒவ்வொரு நட்சத்திரத்தின் கர்மப் பதிவை அகற்றும் அற்புதமான சூழலை பின்வருமாறு காணலாம்.

ஹஸ்தம்

கன்னி ராசியில் தன்னை ஆழ்ந்து அர்ப்பணித்துக்கொண்ட ஹஸ்தம் குருவின் கர்மப் பதிவு கொண்ட நட்சத்திரமாகும்.

கன்னி ராசி காலபுருஷனுக்கு 6-ஆம் பாவகமாகி சுக்கிரனின் நீசத்தை அனுமதித்து, பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை இயல்பிலேயே கொண்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் குருவின் தொடர்பான வழியிலும் பாதை அடைக்கப் படுவதனால் வழிகாட்டிகள் வழியிலும், சிறப்பானதொரு ஆலோசனை வழங்கும் தன்மையிலும், சில விரும்பத்தகாத சூழலை ஏற்படுத்தும்.

Advertisment

ss

மேலும் ராசிக்கு 4 மற்றும் 7-ஆம் பாவகமான குருவின் வீடான மீனம் மற்றும் தனுசு தாய் மற்றும் தாயாதி வழியிலும், கூட்டாளி மற்றும் களத்திரத்தின் வழியிலும், இடர்பாடுகளை அமைத்துத் தரும். இவர் களின் கூட்டுத்தொழில் நாளடைவில் பிரச்சினையை நோக்கி நகர்வதைக் காண முடிகின்றது. அதோடு வண்டி, வாகனம், வீடு, மனை, உயர்கல்வி போன்றவற்றாலும் இணக்கமற்ற சூழல் உருவாகின்றது.

Advertisment

காலப்போக்கில் கல்வியின் நிலைக்கேற்ற தொழிலோ, பணியோ, அமையாமல் இருக்கும்.

குரு கல்வியும் சுட்டிக்காட்டும் ஆற்றல் பெற்றத னால் இந்த சூழல் இவர்களுக்கு அமைந்து விடுகின்றது. அதோடு காலபுருஷனுக்கு 9 மற்றும் 12-ஆம் பாவகங்களையும், குரு தனதாக்கிக் கொள்வதனால் இவர்களுக்கு வெளிநாடு மற்றும் நல் அனுபவங்கள் பெறுவதற்கு ஒரு தடையை ஏற்படுத்துகின்றது. தடை என்றால் வெளிநாடு சென்றபின்பு நினைத்து சென்ற வேலை அமையாமல் கிடைத்த வேலையை செய்ய அழுத்தப்படும் நிலை உருவாகின்றது.

ஹஸ்தம் நட்சத்திரத்தின் கர்மப்பதிவு குருவிடம் சிக்குவதனால் இவர்கள் ஜீவசமாதி வழிபாடு மற்றும் ஒரு வித்தையை கற்றுக் கொடுக்கும் நபர்களிடம் பணிவாக செல்வது, பெரியவர்களுக்கு உரிய மரியாதையை வழங்குவது போன்றவற்றின்மூலமும் இவர்கள் நல்ல வாழ்வை மேற்கொள்ளமுடியும்.

இவர்கள் மயிலாடுதுறை கோமல் கிருபா உபேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று தங்களின் வயது பூர்த்தியாகி அடுத்த வயதுக்குரிய தீபம் ஏற்றுவதோடு, ஆலங்குடி சென்றுவருவது பெரும் சிறப்பைத் தரும் அதோடு அன்னதானம் வழங்குதல், அனாதை ஆசிரமங்களுக்கு சென்று தொண்டுசெய்தல், உணவு வழங்குதல் போன்றவை இவர்களின் வாழ்வை அதிக பட்ச சுகத்திற்கு இட்டு செல்லும் என்பது உறுதி.

சித்திரை

கன்னி மற்றும் துலா ராசியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சித்திரை, சுக்கிரனின் கர்மப் பதிவை கொண்ட நட்சத்திரமாகும். மேலே கூறியதுபோலவே கன்னி பெண் வழி பிரச்சினைகளை போதித்த ராசியாகும். துலா சுக்கிரனின் ஆளுமையில் அமைந்த பெண்ணிய நளினம்மிகுந்த ராசியாகும். சுக்கிரனின் கர்மப் பதிவும் அழுத்தம் அளிப்பதனால் இந்த குடும்பத்தில் தந்தைவழி பெண் வர்க்கம் பாதிக்கப்பட்டு இருப்பதைக் காணமுடிகின்றது.

குறிப்பாக தந்தையின் சகோதரிகள் பெரும் இன்னலுக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் இந்த வர்க்கத்தில் நெருப்பு, மற்றும் மின்சாரம், திடீர் விபத்து போன்றவற்றினால் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கணக்கிட முடிகின்றது.

கன்னி சித்திரைக்கு 2 மற்றும் 3-ஆம் பாவகமாக சுக்கிரன் அமைவதால் குடும்பம், வாக்கு, தனம், உணவு, கண்கள் போன்றவற்றாலும் 9-ஆம் பாவகம் ரிஷபத்தோடு தொடர்புகொள்வதனால் தந்தை, உயர்கல்வி, பாக்கியம் போன்றவற்றினாலும், சுகமற்ற சூழல் உருவாகும்.

தந்தையின் வளர்ச்சியில் சில பாதிப்புகள் மற்றும் மனம் சார்ந்த பலவீனங்களையும், இனம்புரியா பயத்தையும் அளிக்கும் இவர் களின் குடும்பத்தில் இவர்களின் பேச்சுக்கு ஒரு உயர்வோ, பெரும் பலமோ, இருக்காது. வருமான வழியிலும் தடை அமைந்திருக்கும்.

துலா சித்திரைக்கு 1 மற்றும் 8-ஆம் பாவகத்திற்கு பொறுப்பேற்பதனால் தன்னா லேயே தனக்கு ஒரு அவமானத்தை ஏற்படுத் தும் சூழலும், மறைமுகமாக சில விஷயங்களை செய்யும் ஆற்றலும், உயிர் சார்ந்த பயமும், இவர்களைப் பற்றி வழி நடத்து வதனால் மன உளைச்சலையும், தீர்க்கமான முடிவையும் எடுக்கமுடியாத சூழலை தந்தலிக் கும்.

மதுரை குருவித்துறை சித்திரை ரத வல்லவப் பெருமாள் இந்த ஆலயத்திற்கு சென்று தங்களின் வயது பூர்த்தியாகி அடுத்த வயதிற்கு உண்டான எண்ணிக்கையில் தீபமிட்டு அன்னதானமும், வழங்கிவர சிறப்பை பெறமுடியும்.

சுக்கிரனின் ஆலயத்திற்கும் செல்வது சிறப்பு.

சுக்கிரனின் கர்மப்பதிவு கொண்டிருப்ப தனால் இவர்கள் வீட்டில் அமைந்துள்ள பெண்கள் மற்றும் மனைவி ஆகியோர்களுக்கு மனம் சார்ந்த பாதிப்பையோ, கண்டிப்பாக தன்மையோ, வழங்காமல் அன்புடன் விட்டுக்கொடுத்து செல்வதனால் சுக்கிரனின் ஆசி கிடைக்கப்பெறும்.

சுவாதி

துலா ராசியில் அமைந்துள்ள போகக் காரகன் ராகுவின் நட்சத்திரமான சுவாதி, சனிபகவானின் கர்மப் பதிவைகொண்ட நட்சத்திரமாகும்.

இந்த சனிபகவான் துலா ராசிக்கு 4 மற்றும் 5-ஆம் பாவகத்திற்கு பொறுப்பு ஏற்கின்றார். சனி இவர்களுக்கு தாய் மற்றும் பூர்வபுண்ணியத்திற்கு பாத்தியப்படுவதனால் தாய்வழி நிலையான சொத்தும், பாட்டனார் வழி சொத்தும், பிரச்சினைக்கு உள்ளாக வாய்ப்புகள் அதிகம்.

மேலும் இவர்களுக்கு காதல், உயர்கல்வி, மனம், முதல் குழந்தை போன்றவற்றிலும் இடர்பாடுகள் இருக்கும். உடல் சார்ந்த விஷயத்தில் (animic) என்று சொல்லக்கூடிய சத்துக் குறைபாடு ஏற்படும். மேலும் பாதம், உடலிலுள்ள மூட்டு, நடு முதுகு சார்ந்த வலி போன்றவைகளும், மண்ணில் இருந்து எடுக்கப்படும் சுரங்கம், ஜல்லி போன்றவற்றினால் தொழில் அமையும்பட்சத்தில் அவற்றிலும் சில இடர்பாடுகளையும், இந்த சனிபகவான் தந்துசெல்வார்.

வீடு கட்டும் சூழலில் சுணக்கமும், வீடு பூர்த்தியாகாமல் நிற்பது போன்றவையும், குலதெய்வம் மறைந்தோ அல்லது என்ன வென்று தெரியாமல் இருக்கும் சூழலையோ இவர்களுக்கு உருவாக்கிவிடும். இல்லை யென்றால் குலதெய்வ அனுக்கிரகத்தை பெரும் ஆற்றல் இவர்களுக்கு அற்று காணப்படுகின்றது.

சென்னையில் அமைந்துள்ள பூந்தமல்லியில் நிலைகொண்டுள்ள தாத்தீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று தங்களின் வயது பூர்த்தியாகி அடுத்த வயதிற்கு உண்டான எண்ணிக்கையில் தீபம் இடுவதோடு அன்னதானம் மற்றும் தண்ணீர் தானம் வழங்கி உண்டான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் அதோடு திருநள்ளாறு சென்று வழிபடுவதும் சிறப்பைத் தரும்.

கடைநிலை ஊழிய தன்மையில் பயணிக் கும் நபர்களுக்கு செருப்பு வாங்கி தருவதும் சிறந்த பரிகாரமாக அமையும்.

அடுத்து:

((விசாகம், அனுஷம், கேட்டை.)

செல்: 80563 79988

bala180425
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe