கர்மா என்றால் செயல். நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு. ஒருவரின் எண்ணம், சொல், செயலின்மூலம் கர்மா உருவாகி, அவற்றின்மூலமாகவே வேலையும் செய்யும்.
16 வயதுவரை சொந்த கர்மா வேலை செய்யாது. தாய்- தந்தையின் ஆன்மவழி கர்மாவே இயங்கும்.
"கருவமைப்பின் வழிவந்த வினைப்பதிவு சஞ்சிதமாம்
உருவெடுத்த பின்கொண்ட வினைப்பதிவு பிராப்தமாம்
இருவினையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியமாம்
ஒருவினையும் வீண்போக உள்ளடங்கிப் பின்விளைவாம்.'
மேற்கண்ட பாடலின்படி மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்மவினைகளைப் பெற்று அனுபவிக்கிறான். அவை: சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம்.
இதில் சஞ்சித கர்மம் என்பது, நம் கரு உருவாகும்போதே உடன் உருவாவது. நமது தாய்- தந்தையிடமிருந்தும் அவர்களின் முன்னோர்களிடமிருந்தும் நமது ஆத்மா பல்வேறு பிறப்புகளில் செய்த பாவ- புண்ணியங்களின் சேர்க்கையே சஞ்சித கர்மா.
அதாவது முன்ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் வித்தாக இந்தப் பிறவியில் நம்மைப் பற்றிக்கொள்ளும் கர்மவினையாகும்.
பிராப்த கர்மா என்பது, நாம் இந்தப் பிறவியில் உடலெடுத்து வாழும் காலத்தில், நம் ஜீவனத்துக்காக நாம் செய்யும் தொழிலின் வாயிலாக நாம் பிறருக்குச் செய்யும் நன்மை- தீமைகளால் உண்டாகும் கர்மவினை.
இந்த கர்மாவால் வரும் பலனையும் நாம் இந்தப் பிறவியிலேயே அனு

இந்த கர்மாவால் வரும் பலனையும் நாம் இந்தப் பிறவியிலேயே அனுபவிக்கவேண்டும்.
மூன்றாவதாக ஆகாமிய கர்மா என்பது, இந்தப் பிறவியில் நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால் பிறருக்குச் செய்யும் நன்மை- தீமைகளால் வருவது. இந்தப் பிறவியில் நாம் சேர்க்கும் வினை.
இவ்விதமாக மூன்று வகையான கர்மாக்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன.
இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட இயலாது. அனைவரும் கர்மவினைகளில் சிக்கி உழன்றாக வேண்டியதுதான். நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழப்பங்கள் எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், முடக்கங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் மேலே குறிப்பிட்ட கர்மவினைகளின் சாராம்சமாகும்.
இந்த கர்மவினைகளைக் களைய நம்மில் பலர் பல ஆலயங்களுக்குச் சென்றும், பலவிதமான பரிகாரங்களை மேற்கொண்டும் கைப்பணம் செலவானதுதான் மிச்சம். நம் கர்மவினைப்பலன்கள் மட்டும் மாறிய பாடில்லை. நம் வேதனை தீர்ந்தபாடில்லை. அப்படியென்றால் நம் கர்மவினைகளைத் தீர்க்க வழியே இல்லையா என்பது பலரின் ஆதங்கம்.
கர்மவினைகளை நீக்கப் பரிகாரங்கள் உள்ளன. நம் கர்மவினைகள் நீங்க நாம் யாரைப் பற்றவேண்டும்? நம் கர்மவினைகளை யாரால் தீர்க்க முடியும்? தேவாதி தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் யாரிடம் சரண் புகுந்து தம் கர்மவினையைத் தீர்த்துக் கொண்டனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அத்தகைய ஆற்றல் கொண்டவர் சிவபெருமான் ஒருவரே. அவர் மேற்கொள்ளும் தொழிலே அழித்தல் தொழில்தானே.
தான் செய்த வினை என்னவென்பதைப் புரியவைத்து ஆணவம், மாயை, ஆசை, பொருள்பற்றில் உள்ள ஈடுபாட்டை அழித்து முக்திக்கு வழி கூறுபவர்.
நாமும் நம் கர்மவினைகள் நீங்க அவரையே பற்றவேண்டும். சரி; அவரைப் பற்றிவிட்டோம். நம் கர்மவினைகள் நீங்க நாம் என்ன செய்யவேண்டும்?
மனித உடல் இறைவனால் பஞ்சபூதத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை பஞ்ச பூதங்களாகும்.
சிவனே பஞ்சபூதப் பெருமையை சிறப்பிக்கும் விதமாக, பஞ்சபூதத் தலங்களில் நாயகனாக நின்று அருள்பாலிக்கிறார்.
ஆகவே பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கும் மனிதன், தாம் வாழும் காலத்தில் பஞ்ச இந்திரியங்களான மெய், வாய், கண், காது, மூக்கு ஆகியவற்றின்மூலமாகத் தூண்டப்பட்டு, தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்குத் தீங்கு நேரும்போது ஏற்படும் பாவங்களால் கர்மவினைகள் உண்டாகின்றன.
எவ்வகையில் பாவம் செய்தோமோ அவ்வகையில்தானே அதனைத் தீர்க்க முடியும்?
ஐந்துவிதமான சேவைகள்மூலம் நம் பாவங்களைப் போக்க முடியும். அவையாவன-
1. யாதனம்- கோவில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோவில் திருப்பணிகள் செய்தல்.
2. சிரவணம்- இறைவனின் பெருமைகளை ஆன்மிகம் அறிந்தவர்களின் மூலமாகக் கேட்டல்.
3. கீர்த்தனம்- இறைவனை இசைக்கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.
4. பூஜார்த்தனம்- அபிஷேகம் அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத்தியம் படைத்துப் பூஜை செய்தல்.
5. ஸ்துதி- இறைவனைப் புகழ்ந்து தோத்திர இசைப்பாடல்களைப் பாடுதல். இந்த ஐந்துவிதமான சேவைகளை நாம் செய்து வர, நம் கர்மவினைகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும்.
இந்த வழிபாட்டை நமது ஜென்ம நட்சத்திர நாளில் செய்யும்போது பலன் இரட்டிப்பாகும்.
ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்னம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி உடலையும் குறிக்கும். சந்திரனானது ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திரப் பாதத்தில் இருக்கும். அதுவே நமது பிறந்த ஜென்ம நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர்.
கர்மவினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்குக் காரணமானவர்கள் இந்த ஜென்ம நட்சத்திரம், அதன் அதிபதி. இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிகமிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திர நாளில் கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபடவேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்ள முடியும்.
அனைத்துவித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திர நாளே.
ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமும் அருள்செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும்.
ஜென்ம நட்சத்திர வழிபாட்டிலுள்ள ஆன்மிக ரகசியமே இதுதான். எனவே இந்த வாய்ப்பை ஒருபோதும் தவறவிட்டுவிடாதீர்கள். குறைந்த பட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
ஜென்ம நட்சத்திர தினத்தன்று உங்கள் ஜாதகம் மூலம் தீமைகள் அகல, தோஷம் விலக எந்த கடவுளை வழிபட வேண்டுமென்று தெரிந்து வைத்துக்கொண்டு வழிபாடு செய்தால் கர்மவினைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை- எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.
இந்த வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்துவந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது. தடைப்படும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.
ஜென்ம நட்சத்திர நாளில் அவரவர் தகுதிக்கேற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்புப்பூஜைகள் செய்வது நல்லது.
வசதி இருப்பவர்கள் ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனைப் பெறமுடியும்.
பலர் ஆங்கிலத் தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்கிறார்கள். இது தவறு.
குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதி தெய்வம் அல்லது உபாசனை தெய்வம் எதுவென்பதை அறிந்து வழிபட்டால் நூறு சதவிகித வெற்றி நிச்சயம்!
செல்: 98652 20406