Advertisment

சாபங்கள் சுமக்கும் நட்சித்திரங்களும் கரை சேர்க்கும் பரிகாரங்களும் -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/star-images-carry-curses-and-remedies-bring-them-relief-melmaruvathur-s

ரு மனிதனின் உருவாக்கம் எப்படி டி.என்.ஏ.விலிருந்து தொடர்ந்து அதை சார்ந்த வழிகளில் அவர்களின் வளர்ச்சி அமைகின்றதோ, அதே போன்றுதான் நிலையான பலனை வழங்கக் கூடிய நட்சத்திரங்களின் உட்கரு ஒரு கிரகத்தின் சாபமாக திகழ்கின்றது.

நம்மை வதைக்கும் உறவுகளும், சுற்றமும் அமையும்பொழுது விடை தெரியாமல் சிலசமயம் விழி பிதுங்கும். நாம் இது எதன் அடிப்படையில் இன்று கணக்கிட்டால் உண்மையானது மழலையின் சிரிப்புபோல வெளிக்காட்டுவது ஆச்சரியமே.

அதன் அடிப்படையில் மகம், பூரம், உத்திரம் நட்சத்திரங்களின் சாபம் மற்றும் அவற்றை கையாளும் வழிமுறைகளும், அதற்கான பரிகாரங்களையும் தொடர்ந்து காணலாம்.

Advertisment

ss

மகம்

கேதுவின் நட்சத்திரமான மகம் தாய்மையை பறைசாற்றும் சந்திரனின் சாபத்தை பெற்ற நட்சத்திரமாகும். மகம் அமைந்துள்ள சிம்மத்திற்கு சந்திரனின் வீடானது 12-ஆம் பாவகத்தைக் காட்டுகிறது.

இதன் அடிப்படையில் பன்னிரண்டாம் பாவகம் அயன, சயன, போகஸ்தானம் ஆகவும், வெளிநாடு மற்றும் அசையாத சொத்து போன்றவற்றை தனக்குள் நிறுத்தி வைத்திருக்கும் தன்மையை காட்டுகின்

ரு மனிதனின் உருவாக்கம் எப்படி டி.என்.ஏ.விலிருந்து தொடர்ந்து அதை சார்ந்த வழிகளில் அவர்களின் வளர்ச்சி அமைகின்றதோ, அதே போன்றுதான் நிலையான பலனை வழங்கக் கூடிய நட்சத்திரங்களின் உட்கரு ஒரு கிரகத்தின் சாபமாக திகழ்கின்றது.

நம்மை வதைக்கும் உறவுகளும், சுற்றமும் அமையும்பொழுது விடை தெரியாமல் சிலசமயம் விழி பிதுங்கும். நாம் இது எதன் அடிப்படையில் இன்று கணக்கிட்டால் உண்மையானது மழலையின் சிரிப்புபோல வெளிக்காட்டுவது ஆச்சரியமே.

அதன் அடிப்படையில் மகம், பூரம், உத்திரம் நட்சத்திரங்களின் சாபம் மற்றும் அவற்றை கையாளும் வழிமுறைகளும், அதற்கான பரிகாரங்களையும் தொடர்ந்து காணலாம்.

Advertisment

ss

மகம்

கேதுவின் நட்சத்திரமான மகம் தாய்மையை பறைசாற்றும் சந்திரனின் சாபத்தை பெற்ற நட்சத்திரமாகும். மகம் அமைந்துள்ள சிம்மத்திற்கு சந்திரனின் வீடானது 12-ஆம் பாவகத்தைக் காட்டுகிறது.

இதன் அடிப்படையில் பன்னிரண்டாம் பாவகம் அயன, சயன, போகஸ்தானம் ஆகவும், வெளிநாடு மற்றும் அசையாத சொத்து போன்றவற்றை தனக்குள் நிறுத்தி வைத்திருக்கும் தன்மையை காட்டுகின்றது.

இதன் அடிப்படையில் இந்த மக நட்சத் திரத்தை சார்ந்தவர்களுக்கு தடைகளும், பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கும்.

இவர்களுக்கு தாய் மற்றும் தாய்யாதி வழி உறவுகள் இணக்கமான சூழ்நிலையில் இருப்பது கிடையாது. அதோடு வெளிநாடு சார்ந்த பயணத்தில் நினைத்து சென்ற வேலையில்லாமல் மாற்று வேலைகள் அல்லது சரியான சூழ்நிலைகள் அமையாத தன்மை போன்றவற்றை அளித்து மனதை சங்கடப்படுத்திவிடும் சூழலை உருவாக்கும்.

இந்த நட்சத்திரத்தில் ஜனித்த நபர்கள் தாம்பத்யம் சார்ந்த சிறு பிரச்சினைகள் இருப்பதற்கான சூழல் பிரதானமாகக் காணப்படுகின்றது. இவர்களுக்கு தூக்கத்தில் சில பிரச்சினைகளும், சிறுநீரகம், பித்தப்பை, இவற்றை சார்ந்த பிரச்சினைகளும் இருப் பதை அதீதமாக காணமுடிகின்றது. பெண் களாக இருந்தால் கருப்பை சார்ந்த பிரச்சினை கள் இவர்களை அதிக அளவில் பாதிப்பதை கணக்கிட முடிகின்றது.

இவர்களுக்கு திண்டுக்கல் விராலிப் பட்டி விளக்கு ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் திருக் கோவில் சென்று உங்களின் வயது பூர்த்தி யாகும் எண்ணிக்கையில் தீபம் இட வேண்டும். அதோடு திங்களூருக்கும் சென்று வழிபட்டு அன்னதானம் மற்றும் தண்ணீர் தானம் செய்வது மேற்கூறிய பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும் ஒரு அற்புதமான தன்மையை உருவாக்கித் தரும்.

பூரம்

சிம்மத்தில் அமையப்பெற்ற பூர நட்சத்திரம் செவ்வாயின் சாபத்தை பெற்ற நட்சத்திரமாகும். இது சிம்ம ராசிக்கு நான்கு மற்றும் ஒன்பதாம் பாவகத்திற்கு உரித்தாகி அமைந்துள்ளது.

ஆண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந் திருந்தால் நிச்சயமாக மனை சார்ந்த பிரச்சினைகளும், சொத்தை சார்ந்த இடர்பாடுகளும், இருக்கும்.

பெண்களாக இருந்தால் கணவர்வழியில் பல துன்பங்களையும், இணக்கமற்ற சூழலையும், அனுபவிக்கும் தன்மையை உருவாக்கி விடும்.

இவர்கள் தாய்- தந்தை சம்பாதித்த சொத்தை காப்பாற்றி வைத்து அனுபவிக்க முடியாது. பெரும்பாலும் தாய்- தந்தையின் அரவணைப்பில் இவர்கள் இருப்பது சற்று கடினம். புதிதாக வாங்கும் சொத்துகூட இவர்களின் பெயரில் வாங்காமல் இருப்பது சிறப்பு.

மேலும் தந்தைவழி சொத்தை எதிர்பார்க்காமல் இருந்தால் நிம்மதியான ஒரு சூழலை எதிர்பார்க்கலாம். இவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள் அதோடு இவர்களுக்கு செவ்வாயின் தசா புக்தியில் வாகனம் சார்ந்த பிரச்சினைகளும், இளைய சகோதரன் வழியில் தொல்லைகளும் ஏற்படும்.

இவர்கள் புதுக்கோட்டை திருவரங்குளம் ஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று உங்களின் வயது பூர்த்தியாகும் அடுத்த வயதிற்கு ஏற்ற தீபங்களை ஏற்றி வழிபடு வதும் செவ்வாயின் ஸ்தலமான வைத்தீஸ் வரன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவதும் இவர்களின் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்க்கும்.

உத்திரம்

சிம்மம் மற்றும் கன்னியில் தன்னை பகுத்து அளித்திருக்கும் உத்திரம், புதனின் சாபத்தைகொண்ட நட்சத்திரமாகும். உடலில் அமையப்பெற்ற நரம்புகள், மேல் தோல் மற்றும் ஹைப்போதலாமஸ் என்கின்ற சுரபி போன்றவற்றை தன்னகத்தே போதித்து வைத்திருக்கின்ற இந்த புதன், உத்திரத்தின்மீது சாபத்தை பரப்பிய தனால் இவற்றை சார்ந்த பிரச்சினைகள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கும்.

உத்திரம் 1-ல் பிறந்தவர்களுக்கு 2 மற்றும் 11-ஆம் பாவகத்தை கையாளும் தன்மையில் அமைந்திருக்கும். மேலும் 2, 3, 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 1, மற்றும் 10-ஆம் பாவகம் சார்ந்த இடர்பாடுகளும், இன்னல்களும் தொடரும். இவர்களுக்கு கற்ற கல்விக்கு ஏற்ற தொழில் அமைவது கடினம்.

மேலும் பேச்சின்மூலம் பல இழப்புகளை சந்தித்திருப்பார்கள்.குடும்பத்தில் இவர்களின் பேச்சுக்கு அங்கீகாரம் கிடைக்காது. மேலும் மூத்த சகோதரன் மற்றும் தாய்மாமன் இம்சைக்கு உள்ளாக நேரிடும்.

இவர்களின் வம்சாவழியில் நிச்சயமாக ஒரு பத்திரம் சார்ந்த வழக்கோ அல்லது வில்லங்கமும் இருப்பதற்கான சூழல் அதிகமாக காணப்படுகின்றது.

ஏதோ ஒரு தொழிலுக்காக போடப்படும் ஒப்பந்தங்களின் மூலமும் இவர்களின் தன்மை பாதிக்கப்படுவதை அதிகமாக காணமுடிகின்றது.

திருச்சி லால்குடியில் அமைந்துள்ள மாங்கல்யேஸ்வரர் ஆலயத்தில் இவர்களின் வயதிற்கு பூர்த்தியாகும் அடுத்த வயதிற்கு உண்டான எண்ணிக்கையில் தீபம் இடுவ தோடு புதனின் ஆளுமைக்குரிய இடமான திருவெண்காடு சென்று வழிபட்டுவருவதும் வாழ்வில் பெரும் சுபிக்சத்தை தருமென்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அவரவர் பிறந்த மாதத்தில் இந்தப் பரிகாரத்தை மேற்கொள்வது சிறப்பு.

அடுத்து:

(அஸ்தம், சித்திரை, சுவாதி)

செல்: 80563 79988

Advertisment
bala110425
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe