சாபங்கள் சுமக்கும் நட்சித்திரங்களும் கரை சேர்க்கும் பரிகாரங்களும் -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/star-images-carry-curses-and-remedies-bring-them-relief-melmaruvathur-s-0

காலங்களின் சுவடுகளில் கணிக்கப்பட்ட கணக்குகளில் ஜோதிடம் மானிடத்திற்கு கண்களைப் போன்றது என்பது அனைவரும் உணர்ந்த ஒன்றே. அதன்வழியில் பல்வேறுவிதமான நிலையில் ஜோதிடத்தை கையாண்டாலும், கர்மப் பதிவின்மூலம் கையாளும் பொழுது மானுடம் சுமந்துவந்த கர்மாவின் கணக்கை ஓரளவிற்கு கைக்கொள்ள முடிவது ஆச்சரியத்தி லும் ஆச்சரியம்தான்.

அந்தவழியில் விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களுக்கான கர்மப் பதிவும், சாபங்களும் என்னவென்று காணலாம்.

ss

விசாகம்

குருவின் நட்சத்திரமான விசாகம் போக காரகன் ராகுவின் கர்ம பதிவைகொண்ட நட்சத்திரமாகும். இது துலா ராசியில் மூன்று பாதங் களையும், விருச்சிகத்தில் தனது நான்காவது பாதத்தையும், பதித்து அற்புதமாக அமர்ந்துள்ளது.

கர்மப் பதிவை அளித்த ராகுவிற்கு வீடு இல்லாததால் ஜாதகத்தில் ராகு அமர்ந்த பாவகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்கும்.

குறிப்பாக ராகு பேராசை, குரு பெரும் பணம், இரண்டும் இணையும் சூழலானது பெரும்பணத்தை ஏமாறும் தன்மையை வழங்கும். ஆன்லைன்மூலம் இழப்பு, ஷேர் மார்க்கெட், கேம்லிங், போன்ற நிகழ்வுகளின்மூலம் பிரச்சினைகளைத் தொடர்வார்கள்.

இதில் ஒரு விஷயம் என்னவென்றால் இவர்கள் ஏமாறுவது இவர்களின் குடும்பத்திற்கு தெரியாது. எல்லாவற்றையும் இழந்த பின்னரே அறிவுரையும், ஆதரவும் இவர்களுக்கு கிடைக்கப்பெறும்.

குறிப்பாக ராகு தந்தைவழி பாட்டன், பூர்வபுண்ணியத்தை குறிகாட்டுவதால் தாத்தாவழி சொத்து பிரச்சினைகள், வில்லங்கம் ஏற்படும்.

ராகு உடலில் அமையப்பெற்ற தசை வலுவைக் குறிப்பதாகும். எனவே உடலில் தசையின் வலு குறைந்து காணப்படும். உதாரணமாக ஐந்தில் ராகு அமரும்பொழுது புத்திரத்தடை, புத்திரங்கள் இருந்தும் அவர்களால் சோகம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

எழில் அமரும் ராகுவானது திருமணத் தடையும், திருமணத்தால் சில அவமானங் களையும் அளிக்கும்.

நிச்சயமாக ராகு அமரும் இடத்தை பதம் பார்த்தே செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ராகுவின் காரகமான வயதானவர்கள் மற்றும் விதவைகளுக்கு உதவிசெய்வது ராகுவின் எதிர்மறையான விளைவுகளைத் தீர்க்கும்.

இவர்கள் திருநெல்வேலி திருமலையில் அமைந்துள்ள செங்கோட்டை முத்துக்குமார சுவாமி அவர்களை தாங்கள் பிறந்த மாதத்தில் சென்று வழிபடுவதோடு, உங்களின் வயது பூர்த்தியாகும் அடுத்த வயதிற்கு உண்டான எண்ணிக்கையில் தீபமிட்டு அன்னதானமும், தண்ணீர் தானமும், அளிப்பதோடு குருவின் இடமான ஆலங்குடி சென்று வழிபட்டுவருவதும் பிரச்சினைகளை வெகுவாக குறைக்க முற்படும்.

அனுஷம்

விருச்சிகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கர்மக்காரகன் சனியின் நட்சத்திர மான அனுஷம். நவகிரக நாயகன் சூரியனின் கர்மப் பதிவைகொண்ட நட்சத்திரமாகும்.

இங்கு சூரியன், சனி. இணைவு ஏற்படுவதால் தந்தை மகனுடனான உறவின் கலகம் தருவதோடு, தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.

இவர்களுக்கு சூரியன் பத்தாமிடத்திற்கு பாத்தியப் படுவதனால். தொழில் சார்ந்த நிறைவு என்பது கிடைக்கவே கிடைக்காது.பணியைவிட இவர்கள் தொழிலையே அதிகமாக விரும்பினா லும், தொழிலில் ஒரு வளர்ச்சியோ அல்லது தொழிலின்மூலம் ஒரு கௌரவமோ இவர்கள் அடைய பெறுவது கிடையாது.

அதேபோல் பணிக்குச் செல்லும் இடத்திலும் பல வருடங்கள் கடந்த பின்னரும் எந்த விதமான முன்னேற்றமும் அல்லாமல் நீடிக்கும் தன்மையை இது அளித்து விடும்.

இவர்களுக்கு முதுகுத் தண்டு, பாதம், மூட்டு போன்ற உடல் உறுப்பு களிலும் பாதிப்பை வழங்கும். வீட்டில் கழிவு நீர் செல்லும் பாதை மற்றும் பைப் லைன்களில் பிரச்சினையை ஏற்படுத் தும்.

தந்தைகாரகன் சூரியனின் சாபம் பெற்றதனால் தந்த இடம் நட்புணர்வு பாராட்டுவதும், பெரிதாக கோவப்படாமல் இருப்பதும், விட்டுக்கொடுத்து செல்வதும், இவர்களின் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான வழியை அளிக்கும்.

மயிலாடுதுறை திருநின்றியூரில் அமைந்துள்ள மகாலட்சுமி புரீஸ்வரர் ஆலயத்திற்கு நீங்கள் பிறந்த மாதத்தில் சென்று உங்களின் வயது பூர்த்தியாகும் அடுத்த வயதிற்கு உண்டான எண்ணிக்கை யில் தீபம் இடுவதோடு அன்னதானமும், தண்ணீர் தானமும் அளிப்பது சிறப்பைத் தரும்.

மேலும் சூரியனார்கோவில் சென்று வழிபடுவதும் இன்னலில் இருந்து விடுபட பெரும்பாதை அளித்து உங்களின் வாழ்வில் சுபிட்சத்தை அளிக்கும்.

கேட்டை

புதனின் இரண்டாவது நட்சத்திரமான கேட்டை, தாய்காரகமான சந்திரனின் கர்மப் பதிவைகொண்ட நட்சத்திரமாகும்.

சந்திரனின் சாபத்தை பெற்றதனால் தாய் மற்றும் தாயாதிவழி உறவுகளினால் பெரும் பாதிப்பை பெறக்கூடிய சூழலை இயல்பிலேயே பெற்றுவிடுகின்றது.

மேலும் விருச்சிகத்தில் நீசமாகும் சந்திரன் இதை ஆழமாக இவர்களின் வசம் சேர்க்கின்றது.

புதனின் நட்சத்திரமான கேட்டை கல்விக்கு பெரும் இடம் கொடுப்பதனால் இவர்கள் கற்ற கல்வி இவர்களுக்கு ஒரு மரியாதையோ பெரும் வருமானத்தையோ அளிப்பதை மறுக்கின்றது.

கல்விக்கான தொழிலோ அல்லது கல்வியின்மூலம் பெறும் சிறப்பையோ இவர்கள் கைக்கொள்ள ஒரு தடையாக இந்த சந்திரனின் சாபம் அமைந்துவிடுகின்றது.

அதோடு தாய்மாமன் வழியிலும் சிக்கலை அளிக்கும்.

நரம்பு, தோல், மெமரி பவர் போன்ற வழியிலும் சில விரும்பத்தகாத சூழலை அளிப்பதோடு ஒன்பதாம் இடமும் பாதிப்பை அடைவதனால் நம் சம்பாதனை பெரும்பாலும் நமக்கு உதவாமல் செல்கின்றது.

அதேபோல் 9-ஆமிடம் இஷ்ட தெய்வத்தை ஆழ்ந்து குறிகாட்டும் இடம் என்பதனால் இஷ்ட தெய்வத்தின் அனுகிரகமும் இவர் களுக்கு மறுக்கப்படுவது உண்மை.

இந்த இன்னலில் இருந்து தங்களை விடுபடுத்திக்கொள்ள தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி ஊரில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாளை நீங்கள் பிறந்த மாதத்தில் சென்று வழிபடுவதோடு உங்களின் வயது பூர்த்தியாகி அடுத்த வயதிற்கு உண்டான எண்ணிக்கையில் தீபமிட்டு உணவு தானமும், தண்ணீர் தானமும், வழங்கி ஆசியைப் பெறுவதோடு திங்களூர் சென்று வழிபடுவதும் வாழ்வில் அமைந்துள்ள அத்தனை இடஞ்சல்களுக்கும் பெரும்பாலம் அமைத்து சுபிட்சம் அளிக்கும்.

bala250425
இதையும் படியுங்கள்
Subscribe