Advertisment

சாபங்கள் சுமக்கும் நட்சித்திரங்களும் கரை சேர்க்கும் பரிகாரங்களும்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/star-images-carry-curses-and-remedies-bring-them-back-life-melmaruvathur-s

பிறவியின் நோக்கத்தை நமக் குள் புதைத்து சிந்தனையின் சிறகு களால்மூடி வழிநடத்திக் கொண்டிருக்கும் காலச்சக்கரம் ஆங்காங்கே ஒரு அற்புதமான பூட்டை பூட்டி சாவியை நம்வசம் ஜோதிடவியலின்மூலம் அளித் துள்ளது.

அதன்வழியில் கர்ம ஜோதி டத்தின் வாயிலாக பொதிந்துள்ள பொக்கிஷம் என்ன என்பதை கணக்கிடும் சூட்சமத்தை நம் கைவசம் சேர்த்துள்ளது. இதனை கைக்கொண்டு அடுத்த நட்சத்திரங் களுக்கான சாபத்தையும், அதற் கான பரிகாரத்தையும் காணலாம்.

மூலம்

காலபுருஷனுக்கு தர்மஸ்தானமான ஒன்பதாம் பாவகத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட மூல நட்சத்திரம், செவ்வாயின் சாபத்தைகொண்ட நட்சத்திர மாகும்.

இயல்பிலேயே செவ்வாய் ஏற்றுள்ள ஆதிக்கங்களான கோபம், ஆத்திரம், பொறுமை யின்மை, மண்மனை, அடிதடி, இளைய சகோதரன் ஆகிய வற்றில் ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கும் செவ்வாய் வாழ்வில் முன்னேற்றத்தைத் தடுக்கும் வழியாகவும், மேல் கூறிய பாதையைதான் தேர்ந்தெடுத்து வழிநடத்துகின்றது.

Advertisment

ss

தனுசில் அமைந்த கேதுவின் மூலம், இயற்கையாகவே தன்னை ஆளுமையுடன் வெளிக்காட்டிக்கொள்ளும்.

Advertisment

அதனுடன் செவ்வாயின் கர்மபதிவும் இணையும் பட்சத்தில் 5, 12-ஆம் பாவகத்தின் கூட்டும் இவர்களின் நிலையில் தடுமாற்றத்தை அளிக்கும்.

ஐந்து ஆழ்மனது, காதல், பூர்வபுண்ணியம், குழந்தைகள், உயர்கல்வி, குலதெய்வம் என்று மனிதவாழ்வின் ஒட்டுமொத்த உயிர் முடிச்

பிறவியின் நோக்கத்தை நமக் குள் புதைத்து சிந்தனையின் சிறகு களால்மூடி வழிநடத்திக் கொண்டிருக்கும் காலச்சக்கரம் ஆங்காங்கே ஒரு அற்புதமான பூட்டை பூட்டி சாவியை நம்வசம் ஜோதிடவியலின்மூலம் அளித் துள்ளது.

அதன்வழியில் கர்ம ஜோதி டத்தின் வாயிலாக பொதிந்துள்ள பொக்கிஷம் என்ன என்பதை கணக்கிடும் சூட்சமத்தை நம் கைவசம் சேர்த்துள்ளது. இதனை கைக்கொண்டு அடுத்த நட்சத்திரங் களுக்கான சாபத்தையும், அதற் கான பரிகாரத்தையும் காணலாம்.

மூலம்

காலபுருஷனுக்கு தர்மஸ்தானமான ஒன்பதாம் பாவகத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட மூல நட்சத்திரம், செவ்வாயின் சாபத்தைகொண்ட நட்சத்திர மாகும்.

இயல்பிலேயே செவ்வாய் ஏற்றுள்ள ஆதிக்கங்களான கோபம், ஆத்திரம், பொறுமை யின்மை, மண்மனை, அடிதடி, இளைய சகோதரன் ஆகிய வற்றில் ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கும் செவ்வாய் வாழ்வில் முன்னேற்றத்தைத் தடுக்கும் வழியாகவும், மேல் கூறிய பாதையைதான் தேர்ந்தெடுத்து வழிநடத்துகின்றது.

Advertisment

ss

தனுசில் அமைந்த கேதுவின் மூலம், இயற்கையாகவே தன்னை ஆளுமையுடன் வெளிக்காட்டிக்கொள்ளும்.

Advertisment

அதனுடன் செவ்வாயின் கர்மபதிவும் இணையும் பட்சத்தில் 5, 12-ஆம் பாவகத்தின் கூட்டும் இவர்களின் நிலையில் தடுமாற்றத்தை அளிக்கும்.

ஐந்து ஆழ்மனது, காதல், பூர்வபுண்ணியம், குழந்தைகள், உயர்கல்வி, குலதெய்வம் என்று மனிதவாழ்வின் ஒட்டுமொத்த உயிர் முடிச்சையும் தன்னகப்படுத்தி வைத்துள்ளது.

இவையனைத்தையுமே உரசிவிட்டு செல்லும் இந்த செவ்வாயின் சாபம் காதல் பிரச்சினையும், குழந்தைகள் பிரச்சினையும், நிச்சயமாக கடந்துவரும் சூழலை அமைத்துத் தந்துவிடும்.

காதல் திருமணம் முடிந்தாலும், குழந்தைகள் பிறந்தபிறகு குடும்பத்தில் சில தேவையற்ற சலசலப்பை தரும். பாட்டன்வழி சொத்து, ஆன்மிக அருள் ஆகியவற்றை புறந் தள்ளி இடரளித்துவிடும்.

இவர்களின் கோபத்தினாலும், அவசரத்தினாலும், அற்புதமான சில வாய்ப்பு களை இழக்க நேரிடும். மனக்குழப்பம், தெளிவற்ற முடிவுகளும் இவர்களுக்கு இருக்கும். செவ்வாயின் சாபத்தை தனதாக்கிக்கொண்ட கேதுவின்மூலம் ரத்த ஓட்டத்தில் ஒரு தடையும், ரத்தம் சார்ந்த சத்து குறைபாடும் அளிக்கும்.

மேலும் செவ்வாய் இளைய சகோதரத்தைக் குறிகாட்டுவதால் சகோதர இசைவும் இவர்களுக்கு ஒரு நெருடல் ஆகவே நிற்கும்.சென்னை பூந்தமல்லியிலுள்ள சிங்கீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபடுவதோடு, தங்களின் வயது பூர்த்தியாகி அடுத்த வயதுக்குரிய தீபத்தை ஏற்றுவதோடும், தண்ணீர் தானமும், அன்னதானமும், தருவது பிரச்சினைகளை எளிதில் தீர்க்கும் ஒரு மந்திர சாவி ஆகும்.

அதோடு செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபடுவதும், இவர்களுக்கு பெரும் ஆசிர்வாதத்தை அளிக்கும்.

பூராடம்

தனுசு ராசியில் அமைந்துள்ள சுக்கிரனின் பூராடம் புதனின் சாபத்தை ஏற்று பயணிக்கும் நட்சத்திரமாகும். புதனின் காரகமான தாய்மாமன்வழி உறவுகள் சார்ந்த இணக்கமும், வரவுகளும் இவர்களுக்கு தடைப்படும்.

அதோடு தோல் சார்ந்த சில அலர்ஜிகளும், நரம்புரீதியான குறைபாடுகளும், குறிப்பாக வெரிகோஸ் வெயின் மற்றும் நரம்பு இழுக்கும் சூழல் இவர்களை ஆளுமை செய்யும். தனுசு ராசிக்கு 7 மற்றும் 10-ஆமிடத்திற்கு பொறுப்பேற்றுள்ள புதன், திருமணம் மற்றும் தொழில் விஷயத்தை கையாளும், இதனால் இவர்களுக்கு நல்லதொரு தொழில் அமைந்தால் திருமணத்தில் தடையும், திருமண வாழ்வில் சில தேவையில்லாத தன்மையும் அளிக்கும்.

சிறப்பான ஒரு களத்திரம் அமைந்து விட்டால் தொழில் அமையாத சூழலை இவர்கள்வசம் சேர்த்துச்செல்லும். கல்வியின் தன்மையைகொண்ட புதன் தாங்கள் நினைத்த கல்வியைக்கூட கற்கமுடியாத சூழலை இவர்களுக்கு அமைத்துக் கொடுத்து விடும்.

அதோடு படித்த கல்விக்கான தொழிலோ அல்லது பணியோ இவர்களுக்கு கிடைக்க முடியாத வண்ணம் சில இடர்பாடுகளையும் அளிக்கும்.

நண்பர்கள், கூட்டாளிகள், கூட்டுத் தொழில் போன்றவற்றின் மூலம் பெரும் பாதிப்பையும், நஷ்டத்தையும் இவர்களுக்கு ஏற்படுத்துவதோடு அதைவிட்டு விலக முடியாத தன்மையையும் இவர்களுக்கு அளித்துவிடும்.

பெரும்பாலும் பூராடத்திற்கு திருமணத் தடையும், திருமணத்தில் பிரச்சினைகளையும் இருப்பதைக் கண்கூடாக காண முடிகின்றது.குறிப்பாக புதன் தசா புக்தி, அந்தர காலங்களில் கணவன்- மனைவி யிடையிலான பிரச்சினைகளைச் சந்திக்கும் சூழலை இவர்களுக்கு உருவாக்கிவிடுகின்றது.

இவர்கள் திருவையாறு திருக்காட்டுப் பள்ளி ஆகாசபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபடுவதோடு, தங்களின் வயது பூர்த்தியாகிய அடுத்த வயது நிரம்புகின்ற எண்ணிக்கையில் தீபம் ஏற்றுவதும், அன்னதானமும், தண்ணீர் தானமும் அளிப்பதும் சிறப்பைத் தரும்.

அதோடு புதனின் ஆதிக்கம் நிறைந்த திருவெண்காடு சென்று வழிபடுவதும் இவர்களுக்கு பெரும் சிறப்பை அளிக்கும்.

உத்திராடம்

தனுசு மற்றும் மகரத்தில் தன்னை பகுத்து அளித்துக்கொண்ட உத்திராடம், சுப கிரகம் என்று போற்றப்படும் குருவின் சாபத்தை கொண்ட நட்சத்திரமாகும்.

குருவின் சாபத்தை ஏற்பதனால் எந்தவிதமான வழிகாட்டியோ, அல்லது வாழ்வில் நல்ல வழிக்கு இட்டுச்செல்லும் துணையோ, இவர்களுக்கு அவ்வளவு எளிதில் அமைந்துவிடுவதே கிடையாது.

இவர்கள் தன்னை ஒரு விஷயத்தில் நிலை நிறுத்திக்கொள்வதற்காக படாதபாடுபட வேண்டிய சூழல் இருக்கும். மனித உடலின் ஒட்டுமொத்த கொழுப்புக்கும் காரகமான குரு உடலில் கொழுப்பு சம்பந்தப்பட்ட நோயை தீவிரமாக அளிக்கும் தன்மை இவர்களுக்கு வழங்கும்.

தொழில், திருமணம், சொத்து ஆகிய வழியில் நிலையான ஒரு தன்மை இல்லாத சூழல் இவர்களுக்கு இறுதிவரை இருப்பதைக் காணமுடிகின்றது.

தனுசு ராசிக்கு 1 மற்றும் 4-க்கு பொறுப்பேற்கும் குரு தாய், தாயாதிவழி சொத்து, வீடு ஆகியவற்றில் தன் வேலையை சிறப்பாக முடித்து சென்றுவிடுவதைக் காணமுடிகின்றது.

வீடு கட்டி சில காலங்கள் கடந்தும் அந்த வீட்டில் குடியேற முடியாத சூழலை இந்த நட்சத்திரக்காரர்களுக்கு வெகுவாக அளித்துச் செல்கின்றது.

கட்டிய வீடு பூர்த்தியாகாத தன்மை, வீட்டில் சுபிட்சம் இல்லாத தன்மை போன்றவற்றையும் அளிக்கின்றது.

மனையில் சல்லிய தோஷங்களும், மனை சார்ந்த பிரச்சினைகளையும் இவர்கள் அனுபவிப்பதைக் காணமுடிகின்றது. தாயாரின் உடல்நிலையில் சரி இல்லாத தன்மையும், அவர்களுக்காக சிகிச்சையை மேற்கொள்ளக்கூடிய தன்மையும் இவர்களுக்கு அளித்து வாழ்வில் சில இடர்களை அளிக்கின்றது.

இவர்கள் கட்டிய வீட்டிற்கு சென்றபிறகு வேல இழப்பு, தாயாரின் உடல்நிலையில் பிரச்சினை, குழந்தை வழிகளில் ஆரோக்கியமற்ற நிலை போன்றவற்றையும் அளிக்கும்.

மகர ராசிக்கு 3 மற்றும் 12-ஆமிடத்திற்கு பொறுப்பேற்கும் குரு, வெளிநாடு, வெளிமாநிலம் போன்றவற்றில் தொழில் மற்றும் கல்வியைத் தொடர அவர்களுக்கு இணக்கமற்ற ஒரு தன்மையைத் தரும்.

சிவகங்கை மாவட்டம், ஒக்கூர், பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று உங்களின் வயது பூர்த்தியாகி அடுத்த எண்ணிக்கையில் தீபமிட்டு, உணவு மற்றும் தண்ணீர் தானம் வழங்கிவிட்டு, குருவின் ஆதிக்கம் நிறைந்த ஆலங்குடி அல்லது தென்குடி திட்டை போன்ற ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதும் வாழ்வில் சுபிக்சத்தை அளிக்கும்.

செல்: 80563 79988

bala020525
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe