Advertisment

சாபங்கள் சுமக்கும் நட்சித்திரங்களும் கரை சேர்க்கும் பரிகாரங்களும்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/star-images-carry-curses-and-remedies-bring-them-back-life-melmaruvathur-s-0

வ்வொரு மனிதனும், தனது ஜனனத்தை தீர்மானிப்பதும், அவரவர் பெற்றுவந்த கர்மாவே என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அதேபோன்றுதான் 27 நட்சத் திரங்களும் தான் பெற்றுவந்த கர்மாவின்மூலமாக நமது வாழ்வில் பல மாயாஜாலங்களை நிகழ்த்தி வருகின்றது. இதன் தன்மையை தொடர்ந்து பார்க்கலாம்.

பூரட்டாதி

ஆக, சிறந்த முழு சுபகரமான குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரம் ஆண்மகாரகன் சூரியனின் முழு சாபத்தை பெற்ற நட்சத்திரமாகும்.

இது காலபுருஷனுக்கு 11-ஆமிடமான கும்பத்திலும், 12-ஆமிடமான மீனத்திலும், பரவி பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது.

சூரியனின் சாபம் பெற்று 7-ஆமிடம் தொடர்புபெறுவதனால், கூட்டுத்தொழில், களத்திரம், சமூகம், அரசு, தந்தைவழி போன்ற சூழலை ஒரு கை பார்த்துவிட்டே செல்லும்.

Advertisment

ss

பார்ட்னர்ஷிப்பின்மூலம் தொடங்கப் படும் தொழில் பெருத்த நஷ்டத்தையும், மன உளைச்சலையும் அனுபவிக்கும் தன்மையை இவர்களுக்கு ஏற்படுத்தும்.

அதோடு மட்டுமல்லாமல் களத்திர வழியான மனைவி அல்லது கணவனுடன் கருத்து வேறுபாடு மேலோங்கி செல்வதற்கான அனைத்து விதமான சூழ்நிலையும் அமைத்துக் கொடுக்க

வ்வொரு மனிதனும், தனது ஜனனத்தை தீர்மானிப்பதும், அவரவர் பெற்றுவந்த கர்மாவே என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அதேபோன்றுதான் 27 நட்சத் திரங்களும் தான் பெற்றுவந்த கர்மாவின்மூலமாக நமது வாழ்வில் பல மாயாஜாலங்களை நிகழ்த்தி வருகின்றது. இதன் தன்மையை தொடர்ந்து பார்க்கலாம்.

பூரட்டாதி

ஆக, சிறந்த முழு சுபகரமான குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரம் ஆண்மகாரகன் சூரியனின் முழு சாபத்தை பெற்ற நட்சத்திரமாகும்.

இது காலபுருஷனுக்கு 11-ஆமிடமான கும்பத்திலும், 12-ஆமிடமான மீனத்திலும், பரவி பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது.

சூரியனின் சாபம் பெற்று 7-ஆமிடம் தொடர்புபெறுவதனால், கூட்டுத்தொழில், களத்திரம், சமூகம், அரசு, தந்தைவழி போன்ற சூழலை ஒரு கை பார்த்துவிட்டே செல்லும்.

Advertisment

ss

பார்ட்னர்ஷிப்பின்மூலம் தொடங்கப் படும் தொழில் பெருத்த நஷ்டத்தையும், மன உளைச்சலையும் அனுபவிக்கும் தன்மையை இவர்களுக்கு ஏற்படுத்தும்.

அதோடு மட்டுமல்லாமல் களத்திர வழியான மனைவி அல்லது கணவனுடன் கருத்து வேறுபாடு மேலோங்கி செல்வதற்கான அனைத்து விதமான சூழ்நிலையும் அமைத்துக் கொடுக்கும்.

திருமணத்திற்குபிறகு சமூகரீதியான தாக்கங்களை இவர்களுக்கு ஏற்படுத்து கின்றது. அரசு, அரசு சார்ந்த வழியிலும் இணக்கமற்ற தன்மையை வழங்கி தந்தைவழி உறவுகளுடன் இடர்பாடுகளையும் ஏற்படுத்திவிடும்.

அதோடு மீனத்தில் அமர்ந்த பூரட்டாதி 6-ஆம் பாவத்தோடு தொடர்புகொள்வத னால் கடன் சுமைகளின்மூலம் பிரச்சினையை வழங்கும்.

ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்து வேறு ஒரு கடன் உருவாகும் தன்மையையும், தீர்ந்துவிடாத தொடர்கின்ற கடனையும், சூரியனின் தசாபுக்தி காலங்களில் இவர்களுக்கு வழங்குகின்றது.

போட்டி தேர்வில் பெரும் முயற்சிசெய்தும் வெற்றிபெற முடியாத சூழலை இவர்களுக்கு அளிக்கும். மேலும் சின்ன பலமற்ற எதிரியிடம்கூட தோற்கும் தன்மையை இவர்களுக்கு வழங்கிவிடுகின்றது.

திருவையாறு திருக்காட்டுப்பள்ளி திருவானேஸ்வரர் ஆலயத்திற்கு இவர்கள் பிறந்த மாதத்தில் சென்று இவர்களின் வயது பூர்த்தியாகி அடுத்த வயதிற்கு உண்டான எண்ணிக்கையில் தீபம் இடுவதோடு அன்னதானமும், தண்ணீர் தானமும் வழங்குவது மேற்கூறிய அனைத்து இடர்பாடுகளில் இருந்து இவர்களை விடுவிக்கும் ஒரு மந்திர சாவி ஆகும்.

இந்தக் ஆலயம் மட்டுமல்லாது குருவின் ஆளுமைக்குரிய ஆலங்குடி சென்றுவருவதும் குருவிற்கு உண்டான தானியங்களின் மூலம் செய்யப்படும் பிரசாதங்களை பொதுஜனங் களுக்கு வழங்குவதும் இவர்களின் இன்னல் தீர்ந்து இன்பமான வாழ்வை பெரும் வழியாகும்.

உத்திரட்டாதி

கர்மகாரகன் சனியின் உத்திரட்டாதி நட்சத்திரம் தாய்வழி காரகமான சந்திரனின் சாபத்தை பெற்ற நட்சத்திரமாக திகழ்கின்றது.

மீனத்தில் அமையப்பெற்ற உத்திரட் டாதிக்கு 5-ஆமிடமாக சந்திரன் தொடர்பு பெறுவதனால் மனம் சார்ந்த பிரச்சினைகள் இவர்களை வாட்டி வதைக்கும் தன்மையில் இவர்கள் காணப்படுவார்கள்.

யாரோ கூறிய சிறு வார்த்தைகள்கூட இவர்களை மிகவும் காயப்படுத்தி அதன்மூலம் உடல் மற்றும் மனரீதியான நோயின் தாக்கம் இவர்களை எளிதில் பற்றிக்கொள்ளும்.

காதல், பூர்வீகச் சொத்து, தாய்வழி உறவுகளுடன் இருக்கின்ற இனக்கமற்ற தன்மை, எந்த ஒரு சூழலிலும் முடிவெடுக்க முடியாத திணறுகின்ற தன்மை போன்றவையை அளிப்பதோடு உயர் கல்வியின் மூலம் சிறப்பை எட்ட முடியாத தன்மையை இவர்களுக்கு வழங்கி விடுகின்றது.

அதோடு ஆன்மிகம், ஆழ்மனம் சார்ந்த பயிற்சி போன்றவற்றிலும் நிலைத்து நிற்க முடியாத தன்மையை இவர்களுக்கு வழங்கும். புதுக்கோட்டை, தீயதூர், சகஸ்ர லட்சுமி ஸ்வரர் இந்த ஆலயத்திற்கு சென்று தங்களின் வயது பூர்த்தியாகி அடுத்த வயதிற்கு உண்டான எண்ணிக்கையில் தீபமிடுவதோடு அன்னதானமும், தண்ணீர் தானமும், வழங்கி தங்களின் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளமுடியும்.

அதோடு சந்திரனின் திங்களூர் சென்று வழிபடுவதும் நெல் மற்றும் பச்சரிசி தானமும் இவர்களுக்கு பெரும் மாற்றத்தை வழங்குவதைக் கண்கூடாகக் காணமுடிகின்றது.

ரேவதி

கலைகளுக்கு எல்லாம் தலைமை வகிக்கும் ரேவதி, செவ்வாயின் சாபத்தைக்கொண்ட நட்சத்திரமாக விளங்குகின்றது.

இந்த செவ்வாய் மீனத்திற்கு 2 மற்றும் 9-ஆம் பாவகங்களுக்கு பொறுப்பேற்று தனம், ஆரம்பக் கல்வி, தந்தை தந்தைவழி வருமானம், வாக்கு போன்றவற் றில் பெரும் தாக்கத் தையும், வன்மத்தையும் செயல்படுத்திக் கொண்டிருக் கின்றது.

தந்தைவழி சொத்துகளை அனுபவிக்க முடியாத சூழலும் தந்தையின்மூலம் ஒரு பெரும் சுபிக்சத்தை அனுபவிக்கமுடியாத சூழலையும் இந்த செவ்வாயும் புதனும் இணைந்து நிகழ்த்துகின்றது.

குருதிக்கு காரகமான செவ்வாய் ஆரோகியத்திலும் ரத்தம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சில இடர்பாடை வழங்குகின்றது. இவர்களுக்கு கருப்பை சார்ந்த ஏதேனும் ஒரு சிகிச்சையை அனுபவிக்கும் தன்மை உருவாகிவிடும்.

மண், மனை போன்றவற்றின்மூலமும் வீடுகள் பூர்த்தி செய்ய முடியாத சூழலும் சொத்துகள் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத தன்மையும் இவர்கள் அனுபவிப்பதைக் காணமுடிகின்றது.

திருச்சி மாவட்டம் தாத்தையார் கோட்டை கைலாசநாதர் ஆலயத்திற்கு இவர்கள் பிறந்த மாதத்தில் சென்று இவர்களின் வயது பூர்த்தியாகி அடுத்த வயதிற்கு உண்டான எண்ணிக்கையில் தீபம் இடுவதோடு அன்னதானம் மற்றும் தண்ணீர் தானம் வழங்குவது பெரும் சிறப்பை அளிக்கும்.

மேலும் வைத்தீஸ்வரன் ஆலயம் சென்று தங்களின் வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது மண் சார்ந்த பிரச்சினைகள் உடனடியாக தீர்வை நோக்கி செல்வதை பல நேரங்களில் காணமுடிகிறது.

இந்த நட்சத்திரங்கள் ஏற்றுள்ள கர்மாக்கள் சார்ந்த பிரச்சினைகள்தான் நம் வாழ்வில் நிலவிக் கொண்டிருக்கின்றது என்பது 100 சதவிகிதம் உண்மை. இதன் பொருட்டே இந்த பதிவு வழங்கப்பட்டுள்ளது.

நன்றி

செல்: 80563 79988

bala160525
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe