Advertisment

சாபங்கள் சுமக்கும் நட்சித்திரங்களும் கரை சேர்க்கும் பரிகாரங்களும்! - மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/star-images-carry-curses-and-remedies-bring-relief-melmaruvathur-s-kalaivani

தோ ஒரு நோக்கத்தின் காரணமாக, புவியில் பிறப்பை தழுவிய ஜீவன்கள் சில கர்ம பதிவை தங்களின் கையேடுகளாக கொண்டுதான் வாழ்க்கையை வாழ்கின்றார்கள்.

அதற்கான மூலத்தை அறியும்பொழுது அது எவ்வகை வலியை சார்ந்தது என்றும், அந்த வலிக்கான மருந்து என்னவென்றும் கணக்கிடும்பொழுது தங்களின் வாழ்வியல் மகத்துவ மாக மாறுகின்றது.

இதற்கு துணைபுரியும் ஜோதிடத்தில் ஒரு வகையான கணக்காகிய கர்ம ஜோதிடம் சில அற்புதமான பாதையை அளித்து சிறப்பான வாழ்க்கையை வழங்கியிருக்கின்றது என்பது நிதர்சனம்.

அதன்பொருட்டு ரோகினி, மிருகசீரிஷம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களின் கர்ம பதிவுகளையும், அதற்கான நிவர்த்திகளையும் காணலாம்.

Advertisment

ss

ரோகிணி

ரிஷபத்தில் தன்னை நிலை நிறுத்தி பிரகாசிக் கும் தாய்மையை உணர்த்தும் சந்திரனின் நட்சத்திரமான ரோகினி, புதன் கிரகத்தின் சாபத்தை பெற்ற நட்சத்திரமாகும்.

இந்த ரோகிணியில் பிறந்தவர்களுக்கு புதனின் காரணமான தாய்மாமன், சார்ந்த பிரச்சினைகள் எப்பொழுதுமே தொடர்ந்து கொண்டேயிருக் கும். புராணங்களிலும் அதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம். இவர்களுடனான உறவு இணக்கமற்று இருக்கும். அதைத் தொடர்ந்து புதன் எடுத்துக்கொண்டுள்ள இயக்கமாகிய ஆவணங்கள், நரம்பு, உடலில் தோல் பகுதி மற்றும் பீனியல் சுரபி போன்றவற்றிலும் சில இடர்பாடுகளை ஏற்படுத்தும்.

Advertisment

அறிவு, திறமை, கல்வி,

தோ ஒரு நோக்கத்தின் காரணமாக, புவியில் பிறப்பை தழுவிய ஜீவன்கள் சில கர்ம பதிவை தங்களின் கையேடுகளாக கொண்டுதான் வாழ்க்கையை வாழ்கின்றார்கள்.

அதற்கான மூலத்தை அறியும்பொழுது அது எவ்வகை வலியை சார்ந்தது என்றும், அந்த வலிக்கான மருந்து என்னவென்றும் கணக்கிடும்பொழுது தங்களின் வாழ்வியல் மகத்துவ மாக மாறுகின்றது.

இதற்கு துணைபுரியும் ஜோதிடத்தில் ஒரு வகையான கணக்காகிய கர்ம ஜோதிடம் சில அற்புதமான பாதையை அளித்து சிறப்பான வாழ்க்கையை வழங்கியிருக்கின்றது என்பது நிதர்சனம்.

அதன்பொருட்டு ரோகினி, மிருகசீரிஷம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களின் கர்ம பதிவுகளையும், அதற்கான நிவர்த்திகளையும் காணலாம்.

Advertisment

ss

ரோகிணி

ரிஷபத்தில் தன்னை நிலை நிறுத்தி பிரகாசிக் கும் தாய்மையை உணர்த்தும் சந்திரனின் நட்சத்திரமான ரோகினி, புதன் கிரகத்தின் சாபத்தை பெற்ற நட்சத்திரமாகும்.

இந்த ரோகிணியில் பிறந்தவர்களுக்கு புதனின் காரணமான தாய்மாமன், சார்ந்த பிரச்சினைகள் எப்பொழுதுமே தொடர்ந்து கொண்டேயிருக் கும். புராணங்களிலும் அதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம். இவர்களுடனான உறவு இணக்கமற்று இருக்கும். அதைத் தொடர்ந்து புதன் எடுத்துக்கொண்டுள்ள இயக்கமாகிய ஆவணங்கள், நரம்பு, உடலில் தோல் பகுதி மற்றும் பீனியல் சுரபி போன்றவற்றிலும் சில இடர்பாடுகளை ஏற்படுத்தும்.

Advertisment

அறிவு, திறமை, கல்வி, புத்திசாலித்தனம் அனைத் தும் இருந்தும் இவர்களின் திறமையும், அறிவும் இவர்களை உயர்த்துவது இல்லை.

இவர்களிடம் ஆலோசனை கேட்பவர்கள் மிக விரைவில் தங்களின் லட்சியத்தை அடைவார்கள்.

ரிஷபத்திற்கு இரண்டு மற்றும் ஐந்தாம் இடத்திற்கு பொறுப்பேற்றுள்ள புதன் இவர்களின் வாழ்வில் குடும்பம் அமைவதிலும், கல்வி வழியிலும் சுணக்கத்தை ஏற்படுத்தும்.

இவர்களின் காதல் சார்ந்த பயணத்தில் வெற்றி என்பது மிகக் குறைந்த சதவிகிதம் தான்.

காதலைக் கடந்து திருமணம் என்கின்ற சூழலை தழுவிய பின்பும் அந்த குடும்பத்தில் நிம்மதியற்ற சூழலை உருவாக்கும் தன்மை இவர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது. மனதிற்கினிய வாழ்வு மற்றும் அதை சார்ந்த மகிழ்ச்சி அமைவது சற்று கடினமாகவே காணப்படுகின்றது.

கொடுத்த பணம் திரும்பாமல் செல்வதற்கு ஐந்தாம் பாவகம் பாதிப்பது ஒரு பெரும் காரணமாகும். மேலும் ரோகிணி நட்சத்திரத்தில் ஒரு கிரகம் அமரும்பொழுது அந்த கிரகம் ஏற்றுள்ள பாவகங்கள் சார்ந்த பிரச்சினைகள் இவர்களை பின்தொடர்வதை மிக எளிமையில் இனம் காணமுடிகின்றது.

இதிலிருந்து தங்களின் சூழலை மாற்றிக்கொள்ள காஞ்சிபுரம் பாண்ட தூதப் பெருமாள் கோவிலுக்கு சென்றுவருவதும், புதனின் ஆலயமான திருவெண்காட்டிற்கு சென்றுவருவதும் ஒரு நல்ல சூழலை அமைத்து தரும்.

அந்த ஆலயங்களில் தங்களின் பூர்த்தி யாகும் வயதிற்கு அடுத்த எண்ணிக்கையில் தீபமேற்றி புதன் மற்றும் சந்திரனின் தசா புக்திகளின் கூட்டுத் தொகையான 27 நபர்களுக்கு அன்னதானம் வழங்குவதும், இவர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் மிக வலிய பரிகாரமாகும்.

மிருகசீரிடம்

ரிஷபத்திலும், மிதுனத்திலும் தன்னை பகுத்து அளித்து பலன் அருளும் செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரம், அனைத்தையும் தன்வசம் சேர்க்கும் குருவின் சாபத்தை பெற்று நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு அமைவது குதிரை கொம்பு என்றே கூறலாம். அப்படி அமைந்தாலும் அவர்களின் மூலம் பெறுகின்ற நன்மை என்பது மிகக் குறைந்த சதவிகிதம்தான்.

இவர்கள் யார் சொல்வதையும் ஏற்கும் தன்மையற்றவர்களாக பயணிப்பதற்கு இந்த குருவின் சாபமே ஒரு காரணமாகும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க முடியாததும் இதைச் சார்ந்தது.

அறிவாற்றல், ஆன்மிகம், தங்கம், ஆசிரியர், குழந்தைகள் போன்றவற்றின்மூலம் இன்னலை அனுபவிக்கும் தன்மையை பெற்றிருப்பார்கள்.

தன்னை தாழ்த்திக்கொண்டு பணி விடைகள் செய்தாலும்கூட குருமார்களிடம் இருந்து ஒரு சிறப்பான நற்பெயரை இவர்களால் பெற்றுவிடவே முடியாது.

குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு பிரச்சினையோ அல்லது குழந்தைகள்மூலமாக அவமானமோ நிகழும் தன்மையை இதுவே உருவாக்குகின்றது.

பொருளாதாரத்தை பொறுத்தவரை குரு பெருமளவு பணத்தைக் குறிக்கும் கிரகமாகும்.

கையிருப்பை திரும்பபெற முடியாத இடங்களில் முதலீடுசெய்து ஏமாறும் தன்மை இவர்கள் இயல்பிலேயே பெற்றுவிடுவார்கள்.

ரிஷபத்திற்கும், மிதுனத்திற்கும், 2, 11 மற்றும் 7, 10 ஆகிய பாவகங்களை குரு தன்னகப்படுத்திய தால், ரிஷபத்திற்கு ஆசைகள் நிறைவேறாத தன்மை மற்றும் மூத்த சகோதரத்தால் பிரச்சினை, பொது இடங்களில் அவமானம், சில கண்டங்கள் போன்றவற்றையும், மிதுனத்திற்கு மனைவி அல்லது கணவன், தொழிற்சார்ந்த வழியில் பிரச்சினைகளையும் வழங்குகின்றது.

கௌரவத்திற்காக தொழில் நடத்தி ஏதும் லாபம் இல்லை என்கின்ற சூழல் இவர் களுக்கு இருக்கும். இவர்களுக்கு வழிகாட்டு தலுக்கும், மூத்தோர்களின் ஆசிர்வாதமும் கிடைப்பது கடினமாகும்.

இவர்கள் திருவாரூர் என் கண் முருகன் கோவில் சென்று வருவதும், குருவின் ஆலயமான ஆலங்குடி சென்றுவருவதும் சிறப்பை அளிக்கும்.

மேலும் ஜீவசமாதி வழிபாடு, ஆசிரியர் களிடம் வியாழக்கிழமைகளில் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது, பிரச்சினை யின் தீவிரத்தை குறைக்கும்.

அதேபோன்று குருவின் தசா வருடமான 16 வருடமும் செவ்வாயின் வருடமான ஏழு வருடங்களையும் இணைக்கும் பட்சத்தில் கிடைக்கும் 23 நபர்களுக்கு அன்னதானம் அளிப்பது சிறப்பு.

திருவாதிரை

காற்று ராசியாகவும், தொடர்பு ராசி யாகவும் அமையப்பெற்றுள்ள மிதுன ராசியில் ஆழமாக அமர்ந்திருக்கும் ராகுவின் நட்சத்திர மான திருவாதிரை, பெண்களையும், சுபிக்ˆத்தையும் குறிக்கும் சுக்கிரனின் சாபத்தை பெற்ற நட்சத்திரமாகும்.

இவர்களின் வம்சத்தில் பெண்களின் சூழலை உற்று நோக்கும் பொழுது சுக்கிரனின் சாபம் நமக்கு மிக எளிதில் புலப்படும். மேலும் பெண்களால் சில அவமானங்களை சந்திக்கும் சூழலும், தந்தையின் உடன்பிறந்த வர்களுடனான இணக்கமான உறவு அற்ற நிலையும் இவர்களுக்கு இருக்கும். மிதுனத் திற்கு ஐந்து மற்றும் 12-ஆம் இடத்திற்கு பொறுப்பேற்றுள்ள சுக்கிரன் காதல், குலதெய்வம், ஆழ்மனது, தியானம், ஆசை போன்ற அனைத்தையும் ஒரு கை பார்த்து விட்டே செல்லும்.

செய்யாத தவறுக்காக பெண்களின்மூலம் தண்டனை அனுபவிக்கும் சூழல் இவர்களை வந்தடையும்.

12-ஆமிடம் சிறைச்சாலையைக் குறி காட்டும் இடமாக அமைகின்றது.

ஒரு சிறு உரையாடலின்மூலம் பெண்களால் சிறை வரை செல்லும் ஜாதகங்களை ஆய்வு செய்யும்பொழுது இந்த திருவாதிரையும், சுக்கிரனும், பெரும் பங்கு வகிப்பதைக் காண முடிகிறது. இவர்கள் அதிராம்பட்டினம் அபய வைதீஸ்வரர் ஆலயத்திற்கு செல்வதும் சுக்கிரனின் தலமான ஸ்ரீரங்கம் சென்றுவருவதும் சிறப்பை அளிக்கும்.

மேலும் ராகு மற்றும் சுக்கிரனின் தசா வருடங்களான 38 நபர்களுக்கு அன்னதானம் அளிப்பது இவர்களின் வாழ்க்கையை சிறப் பின் வசம் இட்டுச் செல்லும்.

மேற்கூறிய நட்சத்திரங்களுக்கு அளிக்கப் பட்டுள்ள பரிகாரங்கள் நிச்சயமாக அவரவர் கள் பிறந்த மாதத்தில் சென்று செய்வது சிறப்பு.

அடுத்து: புனர்பூசம், பூசம், ஆயில்யம்

செல்: 80563 79988

bala210325
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe