Advertisment

நலம் தரும் நட்சத்திரம்! 9 மிருகசீரிடம்

/idhalgal/balajothidam/star-brings-good-luck-9-animals

"நிரந்தர நடையனாகும் தேச மெய் பொருளும் வல்லான்

அருந்தவத்தோர்க்கு ன் நல்லான் ஆயுதம் பிடிக்க வல்லோன்

நிரம்பிய கல்வி கற்கும் நினைத்தது முடிக்க வல்லான்

வருந்தியே க்ருமஞ்செய்யும் மான் தலை நாளினனே''.

-விரும கண்டிகை

பொருள்: மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர் செய்யும் காரியங்களை திட்டமிட்டு செய்யக்கூடியவர். அவருக்கு கடுமையான முயற்சியால் வெற்றி உண்டாகும்.

மரங்களில் பழுத்த இலைகள் உதிர்ந்து, தளிர் இலைகள் துளிர்கின்றன.

பறவைகள் பழைய இறகுகளை இழந்து, தன்னை புதுப்பித்துக் கொள்கின்றன. காலம், ஆண்டுகளை மணித்துளிகளாகக் கரைத்து விட்டு எதிர்காலத்தை நோக்கி பய

"நிரந்தர நடையனாகும் தேச மெய் பொருளும் வல்லான்

அருந்தவத்தோர்க்கு ன் நல்லான் ஆயுதம் பிடிக்க வல்லோன்

நிரம்பிய கல்வி கற்கும் நினைத்தது முடிக்க வல்லான்

வருந்தியே க்ருமஞ்செய்யும் மான் தலை நாளினனே''.

-விரும கண்டிகை

பொருள்: மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர் செய்யும் காரியங்களை திட்டமிட்டு செய்யக்கூடியவர். அவருக்கு கடுமையான முயற்சியால் வெற்றி உண்டாகும்.

மரங்களில் பழுத்த இலைகள் உதிர்ந்து, தளிர் இலைகள் துளிர்கின்றன.

பறவைகள் பழைய இறகுகளை இழந்து, தன்னை புதுப்பித்துக் கொள்கின்றன. காலம், ஆண்டுகளை மணித்துளிகளாகக் கரைத்து விட்டு எதிர்காலத்தை நோக்கி பயணமாகிறது. உலகம், தன்னை எப்போதும் புதுப்பித்துக் கொள்கிறது. இதையே, ஜனன ஜாதகத்தில் தசாபுக்தியாக வரையறுக்கப்படுகிறது. சந்திரன் வெவ்வேறு நட்சத்திரங்களில் அமர்ந்து தசை நடத்தும்போது, மனதில் மாற்றம் உண்டாகிறது.

பொதுவான குணம்: செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமானதால் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு வீரமும், தர்ம சிந்தனையும் அதிகமுண்டு. எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருப்பார்கள். முயற்சிகளை சரியாக திட்டமிட்டு விரைவாக செய்து முடிப்பார்கள். 25 வயதுமுதல் 40 வயதுவரை போராட்டமான காலம்.

Advertisment

ss

மிருகசீரிட நட்சத்திரம் (ஆண்)

* குணம்: மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மன உறுதியும், எதிலும் உறுதியான நம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள். யாருக்கும் பயப்படாத குணமும் இருக்கும்.

Advertisment

* குடும்பம்: இரக்க சுபாவம் மிகுந்தவர் களாக இருப்பதால், குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனாலும், குடும்பத்தினர் இவர் பேச்சிற்கு கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று விரும்புவார்கள்.

* கல்வி: சிறு வயதிலேயே ராகு தசை வருவதால் கல்வியில் அவ்வளவாக ஆர்வமிருக் காது. கல்வியில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும், பொது அறிவை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார் கள். விளையாட்டுத் துறையில் ஈடுபாடு உண்டாகும்.

* தொழில்: விஞ்ஞானம், அரசியல், பொது மேலாண்மை, சட்டம் போன்ற துறைகளில் கவனம் செலுத்துவார்கள்.

* திருமணப் பொருத்தம்: சித்திரை, அவிட்டம், மகம் ஆகிய நட்சத்திரப் பெண்களைத் தவிர்த்து மற்ற நட்சத்திரக் காரர்களை திருமணம் செய்துக்கொள்ளலாம். அனுஷ நட்சத்திரத்தில் மணப்பெண் அமைந்தால் சிறப்பு.

* திருமண வாழ்க்கை: இளமையிலேயே இவர்களின் திருமணம் அமைந்துவிடும்.

* ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கி யம் நல்ல நிலையிலிருக்கும். ஆனால் குரு தசை செவ்வாய் புக்தி நடக்கும் காலத்தில், அடிபடுதல், விபத்து போன்றவை ஏற்படலாம்.

ss

மிருகசீரிட நட்சத்திரம் (பெண்)

* குணம்: மிருகசீரிஷத்தில் பிறந்த பெண் புத்திசாலியாகவும், நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்டவளாகவும் இருப்பாள். முன்கோபத்தால் பகை வளர்பாள்.

* குடும்பம்: பிறருக்கு அடங்கிப் போகாத தன்மையால், குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம்.

* திருமணப் பொருத்தம்: சித்திரை, அவிட்டம், ஆயில்யம், மகம், பூரம் ஆகிய நட்சத்திரங்களைத் தவிர்த்து மற்ற நட்சத்திரக் காரர்களை திருமணம் செய்துக்கொள்ளலாம்.

* ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக் கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் 30 வயதிற்குமேல், கழுத்து மற்றும் முது கெலும்பு பிரச்சினைகளால் தொல்லை உண்டாகலாம்.

வரும் இதழிலும் தொடரும்!

செல்: 63819 58636

bala270625
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe