வாக்கு ஸ்தானம் பலம் பெற்றிருந்தால்தான் நல்ல படிப்பு வரும். வாக்கு வண்மை வரும். லக்னத் துக்கு இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானமென அழைக்கப்படுகிறது. இரண்டாம் இடத்து அதிபதியும், புதனும் ஒருவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மட்டுமே நல்ல பலன்கள் ஏற்படும். இல்லையென்றால் வாக்கு ஸ்தானம் வலுவிழந்துவிடும்.
பொதுவாக இரண்டாம் இடம் பாதிக்கப்பட்டிருந்தாலோ, புதன் பலமிழந்திருந்தாலோ, இரண்டாம் இடத்தை பாவகிரகங்கள் பார்த் தாலோ, இரண்டாம் அதிபதியுடன் புதன் சேர்ந்து 6-ஆமிடத்தில் இருந் தாலோ அல்லது இவ்விரண்டு கிரகங் களும் பலமிழந்திருந்தாலோ
வாக்கு ஸ்தானம் பலம் பெற்றிருந்தால்தான் நல்ல படிப்பு வரும். வாக்கு வண்மை வரும். லக்னத் துக்கு இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானமென அழைக்கப்படுகிறது. இரண்டாம் இடத்து அதிபதியும், புதனும் ஒருவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மட்டுமே நல்ல பலன்கள் ஏற்படும். இல்லையென்றால் வாக்கு ஸ்தானம் வலுவிழந்துவிடும்.
பொதுவாக இரண்டாம் இடம் பாதிக்கப்பட்டிருந்தாலோ, புதன் பலமிழந்திருந்தாலோ, இரண்டாம் இடத்தை பாவகிரகங்கள் பார்த் தாலோ, இரண்டாம் அதிபதியுடன் புதன் சேர்ந்து 6-ஆமிடத்தில் இருந் தாலோ அல்லது இவ்விரண்டு கிரகங் களும் பலமிழந்திருந்தாலோ வாக்கில் அல்லது பேச்சில் சிக்கல் ஏற்படும். கிரக பாதிப்பு அதிக அளவில் இருந் தால் பேச்சு வராது. குறைந்த அளவிருந்தால் பொய் சொல்லுதல், கோள் சொல்லுதல், தட்டுத் தடுமாறிப் பேசுதல் அல்லது பேச்சில் தடை ஏற்படும். புதன் பகவான் இரண்டாம் அதிபதியோடு சேர்ந்து ஆறாம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகர் ஊமையாகத்தான் இருப்பார்.
லக்னாதிபதியும் மூன்றாம் இடத்து அதிபதியும் சேர்ந்து பலம்பெற்று அமைந்தால், அந்த ஜாதகர் குறைவான பேச்சுடையவர். புதனும் இரண்டாம் அதிபதியும் சேர்ந்து லக்னத்திலோ, மூன்றாம் இடத்திலோ, ஆறாம் வீட்டிலோ இருந்தால் அதிகமாக பேச்சு வராது. மேற்கண்ட கிரக நிலையோடு எந்த கிரகம் சேர்கின்றதோ அந்த காரகரும் அமைதிகாத்து வருவார்.
ஒருவர் ஜாதகத்தில் புதன் உச்சம் முதலான வகைகளில் பலம்பெற்றிருந்தால் பேச்சு தாராளமாக வரும். தடை, தாமதம் ஏற்படாது. புதனும் இரண்டாம் அதிபதியும் சேர்ந்து ஆறாம் இடத் திலோ எட்டாம் இடத்திலோ அல்லது பன்னிரண்டாம் இடத்திலோ இருந்தால் வாக்கு வண்மையற்றவராக வாழ்வார். சுக்கிரன் ஆறாம் இடத்திலோ எட்டாம் இடத்திலோ பன்னிரண்டாம் இடத்திலோ இருந்தாலும் வாக்கு வண்மை இல்லாதவர்களாக இருப்பார்கள்.
அஸ்தம், கேட்டை, மூலம், திருவோண நட்சத் திரங்களில் ராகு இருந்தால் அவர்கள் கோள் சொல்வார்கள். அப்படிப்பட்ட குணமுள்ள வர்களின் இரண்டாம் வீட்டில் கேதுவோ ராகுவோ இருந்தால் அவர்கள் நிரந்தர வாக்குள்ளவர்கள். அவர்களின் வாயில் நாம் விழக்கூடாது. இதுவரை சொல்லப்பட்ட தீய அமைப்பு நிலைகளை சுபகிரகம் பார்த்தலோ சேர்ந்திருந்தாலோ மேற்கூறிய தீய பலன்கள் வராது.
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாம் இடம் சிறப்பாக இருந்தால் அவர் சொன்னது நடக்கும். கல்வியில் உயர்வார். சொன்ன சொல் மாறாதவர். 2-க்குரியவர் குருவாக இருந்து, அவர் எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஜாதகர் கேன்சர் சம்பந்தப் பட்ட உயர்கல்வி கற்பார். இரண்டாம் வீட்டிற் குரிய கிரகம் சனியாக இருந்து எட்டாம் வீட்டில் அமர்ந்தால் சிலர் நீதிபதியாவார்கள்.
அல்லது ஐபிஎஸ் ஆவார்கள். எனவே இரண்டாம் வீடு சிறப்பாக அமைந்திட பரிகாரம் செய்துகொள்ளவேண்டும்.
பரிகாரம்-1
பெருமாள் ஆலயம் சென்று ஹயக்ரீவரை வணங்கிவர படிப்பும் உயர்வு பெற்று, வாக்கு ஸ்தானமும் உயர்வு பெறும்.
பரிகாரம்-2
முடியாதவர்கள் அரை ஸ்பூன் வெந்தயம் எடுத்து வெள்ளைத் துணியில் முடிந்து, அதை தலையணைக்குள் வைத்து நிரந்தர மாகத் தைத்துவிடுங்கள். புதன் படிப்பை யும், வாக்குவண்மையும் தருவார்.
செல்: 94871 68174