"பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.'
"பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.'
வள்ளுவப் பெருமான் கூறியதுபோல், பருவத்திற் கும், நவீன காலங்களுக்கும் ஏற்ப பரிகாரங்களை முறையோடு செய்தால் கிரகநாதர்கள் நமக்கு நல்லதை வாரி வழங்குவர்.
உங்களுடைய ஜாதகத்தைப் பாருங்கள். மேஷம்முதல் மீனம்வரை பன்னிரண்டு ராசிக் கட்டம் தெரிவிக்கும் பின்னடைவுகளுக்கேற்ப தோஷப் பரிகாரம் செய்துகொண்டால் நிவாரணம் கிடைப்பதை நாம் உணர இயலும். கஷ்டங்கள், நஷ்டங்கள் மெல்ல மெல்ல மறைய கிரகநாதர்கள் அருள்புரிவார்கள்.
லக்னத்தில் சூரியன்
உங்கள் ஜாதகத்தில் சூரியன் 1-ல் இருந்தால், தந்தையின் பேராதரவை இழக்க நேரிடும். சுக்கிரன் 7-லும், சூரியன் லக்னத்திலும், செவ்வாய் 5-லும் இருந்தால் ஆண் குழந்தையை கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். சூரியன் லக்னத் திலும் சனி 8-லும் இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஜாதகத்தில் 7-ஆமிடம் சுத்தமாக கிரகங்கள் இல்லாமலிருந்தால் பெண்களுக்கு 24 வயதிற்குமுன்பே திருமணம் செய்தல் நன்று.
பரிகாரம்: நீங்கள் பூர்வீக வீட்டில் தங்கியிருந்தால், அங்கு வடகிழக்கில் ஒரு "ஹேண்ட் பம்பு' நிறுவுதல் மிக நல்ல பரிகாரம். வீட்டில் வடதிசை இறுதியில் ஒரு இருட்டான அறை இருத்தல் அவசியம். கணவன்- மனைவி சூரிய ஹோரையில் தயிருடன் இனிப்பு கலந்த லஸ்ஸி சாப்பிடுவது கூடாது.
2-ல் சூரியன்
தாய்- தந்தையைப் பேணும் நல்ல குணம், சுயமாக சிந்திக்கும் திறன், கடின உழைப்பு, செயல்திறன் அமையப்பெறும். இதில் சுணக்கம் காணப்பட்டால், சூரியனுக்குரிய பரிகாரமாக மாணிக்கம், சொர்ணம், தாமிரம், கன்றுடன் கூடிய பசு, சிவப்புப்பட்டு, சிவப்புத் துணி போன்றவற்றை தானம் செய்து, செந்தாமரைப்பூவால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழி பட்டால் நற்பலன்கள் சுலபமாகும். மேலும் சந்திரன் 6-ல் இருந்தால் நல்லது. கேது 8-ல் இருந்தால் மிக நம்பிக்கையானவர்கள். சூரியன் 2-ல், செவ்வாய் 9-ல் காணப்பட்டால். புகழ்மிக்க ஃபேஷன் டிசைனராகலாம். இத்தனை இருந்தும் சிலர் விரோதிகளை சரிக்கட்ட நேரிடும். கைரேகைரீதியாக சூரிய மேட்டில்- அதாவது மோதிர விரலின் கீழ்மேட்டில் கரும்புள்ளி காணப்பட்டால் வயோதிகத்தில் எவரிடமாவது ஏமாற நேரிடும்; கவனம் தேவை.
பரிகாரம்: தேங்காய், தேங்காய் எண்ணெய், பாதாம் பருப்பு ஆகியவற்றை ஆலயங்களுக்குத் தருதல் மிக நன்று. அசையா சொத்து வாங்குவது- விற்பது செவ்வாய்க் கிழமை யில் கூடாது. பிறரிடம் அரிசி, பால், வெள்ளி உலோகம் இலவசமாக வாங்குதல் கூடாது. பார்வையற்ற எட்டு நபர் களுக்கு சிறு உதவியாவது செய்தல்வேண்டும். பகல்வேளையில் தம்பதிகள் கூடுதல் கூடாது. 5-ல் ராகு இருந்தால் கெடுதல் மிகையாகும்.
3-ல் சூரியன்
கணித மேதையாகலாம். மூத்த சகோதரர் இருந்தால் அதிக உதவிகளை எதிர்பார்க்கலாம். அரசுசார்ந்த நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: புதுமணத் தம்பதிகள், வம்சவிருத்திக்கு காலம் தாழ்த்துவது கூடாது. நீண்டநாட்கள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றால் உரிய பாதுகாப்பு வேண்டும். தாயாரிடம் மனம் நோகும்படி நடப்பது கூடாது. பால், அரிசி தானம் மிக நல்ல பரிகாரம். பகலில் ஆண் குழந்தை பிறந்தால் ஜோதிட ரீதியாக ஏற்படும் பாதங்களை அறிந்து செயல்படவும். குழந்தையின் பிறந்தநாளில் கோதுமைப் பண்டங்கள் தானமாகத் தருதல் வேண்டும். கோதுமை அல்வா உசிதமானது.
4-ல் சூரியன்
இவர்கள் குடும்ப பாரம்பரிய தொழிலி-ருந்து மாறு பட்டுச் செயல்படுவார்கள். நல்வாழ்வு அமைந்துவிடும். மனை யாளைத் தவிர பிற மாதரோடு நட்பு கூடாது. மூளை பலத்தை அதிகம் உபயோகிப்பது மனச் சோர்வைத் தரும். லக்னத்திற்கு 7-ல் சனி, லக்னத்தில் சந்திரன் இருந்தால் தந்திர குணம் இருக்கப் பெறும். இவர்கள் மறைந்த பிறகும் புகழ் நிலைக்கும். சூரியன், சந்திரன் இணைந்து இருக்கப்பெற்றால் நவீன முறையில் தனம் சம்பாதிக்கலாம். புதன் 10 அல்லது 4-ல் இருந்தால் முதல்தர வியாபாரியாகலாம். குருவும் சூரியனும் 4-ல் இருந்தால், தங்கம், வெள்ளி உலோக வியாபாரம் செய்யலாம்.
பரிகாரம்: இரும்பு, மரவியாபாரம் கெடுதலை விளைவிக்கும். சூரியன் 4-ல், சனி 7-ல் இருந்தால், சிற்றின்பத் தாக்கம் குறையும். மலட்டுத்தன்மைக்கு வைத்தியம் செய்யும் நிலை வரலாம். தொடர்ச்சியாக ஐந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரியனை வணங்கவேண்டும்.
5-ல் சூரியன்
படிக்கும் காலத்திலேயே நல்ல மாணவனாகத் திகழலாம். அரசு உத்தியோகம் சுலபமாக அமையப் பெறும். குழந்தை பிறந்ததுமுதல் குடும்பத்தில் சுபிட்சம் அதிகமாகும். இவர்கட்கு ஆண் சந்ததி குறைவாகக் காணப்படும். குடும்ப பாரத்தை அதிகமாக ஏற்க நேரிடும். வாழ்வில் அதிக பயணங்கள், யாத்திரைகளை எதிர்கொள்ள நேரிடும். சூரியன் இருக்கும் இடம் பகை இடமென்றால் பலன் மாறுபடும். இவர்களுக்கு தந்திரம், பிறரை ஏமாற்றும் குணம் இருக்கப்பெறும். பருவகாலத்தில் நேர்மைக்கு எதிராக நடக்கும் சூழ்நிலை வந்துவிடும். முதல் குழந்தையால் கௌரவம் பாதிக்கும். குரு 10-ல் இருக்கப் பெற்றால் கௌரவம் பாதிக்கும். குரு 10-ல் இருக்கப்பெற்றால் இருதார அமைப்பு வந்துவிடும். குரு 9, 12-ல் இருந்தால் எதிரிகளை சமாளிக்க நேரிடும். ஆனால் குழந்தைகளால் அவை சீர்செய்யப்படும் 5-ல் சூரியன், 3-ல் சனி இருந்தால் குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
பரிகாரம்: வீட்டில், தென்கிழக்கில்தான் சமையல் கூடம் அமையவேண்டும். கிழக்கில் இருந்தால் புலால் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். 13 நாட்கள் நல்லெண்ணெய்யை நீரில் கலந்து வாசலில் தெளிப்பது நன்று. சிவப்புநிற முகம் கொண்ட ஆஞ்சனேயரை வணங்கவும். சூரியன் 5-ல், சந்திரன் 4-ல், குரு 9-ல் இருந்தால் ராஜயோகம். சூரியன் 5-ல், செவ்வாய், 3-ல் குரு 9 அல்லது 12-ல் இருந்தால் நிம்மதியான புகழுடன் வாழலாம்.
6-ல் சூரியன்
வியாபாரத்தில் ஈடுபடலாம். முதல் சந்ததி பிறந்ததும் வியாபாரம் வளர்ச்சியடையும். சூரியன் இருக்குமிடம் பகை இடமென்றால் கண் உபாதை வரும். தொழிற்சாலை ஊழியர்கள் ஆயுதங்களை கவனமுடன் கையாள வேண்டும். புதன் 12-ல் இருந்தால் ரத்த அழுத்த நோய் வரும் வாய்ப்புள்ளது. சனி 12-ல், செவ்வாய் 10-ல் காணப்பட்டால் குழந்தைகள்மேல் கவனம் வேண்டும். மாமனார் தரும் வேதனை கவலை யைத் தரும். எதிரிகளால் வழக்கு, நீதிமன்றம் என கால விரயத்தைத் தவிர்க்க இயலாது. சூரியன் 6-ல் இருந்து, அத்துடன் சுக்கிரன், சனி, ராகு அல்லது கேது இருக்கப்பெற்றால், அரசுசார்ந்த கவலையால் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும். சூரியன் 6-ல், சனி 12-ல் இருந்தால், திருமண காலத்தில் பொருத்தம் பார்த்து மணம்புரிதல் நன்று. மனைவியின் ஆரோக்கியம் வேதனை தரும்.
பரிகாரம்: புதன் பகவானை வணங்க வேண்டும். ஆற்று நீரை பாட்டிலில் அடைத்து, வீட்டின் வடகிழக்குப் பகுதியில் வைக்க வேண்டும். ஐந்து புதன்கிழமைகள் பெருமாள் கோவில் உண்டியலில் இயன்ற காணிக்கை செலுத்துவது நல்ல பலன்தரும். தந்தை நோய் வாய்ப்பட்டிருந்தால், ஐந்து சிவப்பு முள்ளங் கியை தூங்கும்போது தலையணையருகே வைத்து, அடுத்தநாள் அதனை மாட்டுக்குத் தருதல் நன்று.
7-ல் சூரியன்
மனைவி கௌரவமான குடும்பத்தில், குடும்பப் பாங்குடன் அமைவாள். சூரியன் இருக்குமிடம் பகை இடமென்றால் அரசு சலுகைகள் கிடைக்க தாமதமாகும். குடும்ப வாழ்க்கைமேல் அதிருப்தி ஏற்பட்டு, துறவறம் போக முயல்வார்கள். 25 வயதிற்கு முன்பாகத் திருமணம் செய்தால் பின்னடைவு வரும். சூரியன் 7-ல், சுக்கிரன் 1-ல் இருந்தால் மனைவியின் ஆரோக்கியம் கவலை தரும்.
பரிகாரம்: சிவப்புநிறப் பசுவுக்கு 4-ல் கீரை தருதல் நன்று. வெள்ளைநிறப் பசுவுக்கு உணவு தருதல் கூடாது. வீட்டு வாசலில் ஒரு சமச்சதுர செப்புத் தகடை பூமியில் புதைத்துவிடுதல் நன்று. எந்த வேலையும் ஆரம்பிக்கும் முன் சிறிது தண்ணீர் பருகவேண்டும். கொம்பில்லா பசுவுக்கு ஆகாரம் தருதல் மிகச் சிறப்பானது.
8-ல் சூரியன்
கட்டுக்கோப்பான உடலை ஆதவன் தந்துவிடுவார். வறுமையான சூழ்நிலையில் பிறந்தாலும் பின்னாளில் நல்ல செல்வந்த ராகிவிடலாம். அரசு வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறும். சிலருக்கு அயல்நாட்டு மனைவியைப் பெறவேண்டிய சூழ்நிலை உருவாகும். எந்த எதிரியும் இவர்களைப் பின்வாங்கச் செய்ய இயலாது. ஆனால் சூரியன் இருக்குமிடம் பகை இடமென்றால், தேவையற்ற கூடாநட்பு வாழ்வின் தரத்தை மாற்றிவிடும். உடல் ஆரோக் கியம் நடத்தையால் கெடும். வயோதிகத்தில் கண்பார்வை சீராக அமையாது. நோய் வாய்ப்பட்டு அல்லல்படும் ஒருவர் உயிருக்குப் போராடும்போது, இவர் பக்கத்திலிருந்தால் அந்த ஜீவன் உடலை விட்டுப்போகத் தயங்கும். எனவே இவர்கள் அங்கிருப்பது கூடாது.
பரிகாரம்: 800 கிராம் கோதுமை, 800 கிராம் இனிப்பு இரண்டையும் திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடல் நன்று. புதன் 2-ல் இருந்தால் பண நெருக்கடிகள் வரும். இவர்கள் பெயரில் முதலீடுகள் கூடாது. இவர்களுடைய குழந்தைகள் சாதகமாக செயல்படுவர். வீட்டில் வெள்ளை கார்ட்டன் தொங்கச் செய்வது வாஸ்துக் குறைகளை ஏற்படுத்தும். தெற்கு தலைவாசல் கெடுதல் தரும். எட்டு செம்பு சக்கரத்தை (வாஷர்) திருஷ்டி சுற்றி ஆலயக் குளங்களில் போடுவது நல்ல பரிகாரம். கருப்புநிற கொம்புள்ள பசுவுக்கு புல், ஆகாரம் தருதல் நல்ல பரிகாரம். வெள்ளைநிற நான்குகால் பிராணிக்கு உணவு தருதல் கூடாது.
9-ல் சூரியன்
உயர்குடியில் ஜனனம். சுயகௌரவம், குலகௌரவம் பார்க்கும் சுபாவம் காணப்படும். இவர்கள் வெள்ளி உலோகத்தை இனாமாகப் பெறுவது கூடாது. சந்திரன் 3 அல்லது 5-ல் காணப்பட்டால், மருத்துவர் மற்றும் சீப் செக்கரட்டரி போன்ற உத்தியோகம் நன்மை தரும். ராகு 3-ல் அல்லது 5-ல் இருந்தால், பதவிக் காலத்தில் கையூட்டு (லஞ்சம்) வாங்கும் குணம் மிகையாகும். நீண்ட ஆயுள் உண்டு. புதன் 5-ல் காணப்பட்டால் 34 வயதுக்குமேல் சுபிட்சமான வாழ்க்கை வந்துவிடும். சிலருக்கு 22 வயது முதலே வேலை வாய்ப்பு, வருமானத் திற்கான வழிவகை தெரியவரும். லக்னத் தில் புதன் இணைந்து காணப்பட்டால், 8 அல்லது 10-ல் குரு இருக்கப்பெற்றால், மருத்துவத்துறையில் புகழை நிலைநாட்டலாம். சூரியன் இருக்குமிடம் பகையிடம் எனின், இவர்கள் மதம் மாறும் குணம் தோன்றும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடுகள் மேன்மைக்கு வழிவகுக்கும்.
10-ல் சூரியன்
தந்தையின் பேராதரவு மிகையாகக் காணப்படும். அவர் சொத்து சுகம், வாகனம் என பொருளீட்டி இருந்தால் அத்தனையும் கிடைக்கப்பெறும். சுக்கிரன் 4-ல் இருந்தால் நிலை மாறுபடும். அனேகருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருக்கப்பெறும். பிறரை சந்தேகம் கொள்ளும் குணம் அமையும். சனி 4-ல் காணப்பட்டால் இளமையில் தந்தையின் ஆதரவு கிடைக்காது. 10-ல் சூரியன், 5-ல் சந்திரன் இருந்தால், ஆரோக்கியம் வாலிபத்திலேயே கேள்விக்குறியாகும். கருப்பு மற்றும் நீலநிற ஆடையைத் தவிர்க்க வேண்டும். லாகிரிப்பொருட்கள் உபயோகிப்பது கூடாது. சூரியன் 10-லும் நான்காமிடம் சுத்தமாகவும் காணப்பட்டால் கல்வியும், புத்திக்கூர்மையும் சீராக அமையாது.
பரிகாரம்: 40 அல்லது 43 நாட்கள் செம்பு உலோகத்துண்டை திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடல்வேண்டும். உள்ளங்கையில் சூரிய மேட்டில் செங்குத்தான ரேகை காணப்பட்டால் அரசியல் வாழ்வு மேன்மையடையும்.
11-ல் சூரியன்
இவர்களுக்கு காந்தப் பார்வை கண்ணழகுடன் அமைந்துவிடும். இவர் களுடைய நேர்மைக்காகப் பாராட்டப் படுவார்கள். அதிர்ஷ்டமான வேலையாட்கள், வாகனம், சுகம் சுலபமாகும். சந்திரன் 5-ல் இருந்தால் 12-ஆவது வயதில் சில ஆரோக்கியக் கெடுதல் வரும்.
பரிகாரம்: தூங்கும்போது ஐந்து சிவப்பு முள்ளங்கி அல்லது கேரட்டை தலையணை அடியில் வைத்துத் தூங்கி, அடுத்தநாள் அதனை மாட்டுக்குக் கொடுப்பது நல்லது. புலால் உணவைத் தவிர்த்தல் அதிக பலனைத் தரும். இவர்கள் இரும்பு உலோகப் பொருட்களை இலவசமாகப் பெறுவது கூடாது. சனியின் பாதிப்பு அதிகமாகும். 45 வயதில் சொந்த வீடு தெருவின் மூலையில் அமையும் என்கிறது ஜோதிடம்.
12-ல் சூரியன்
எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அயர்ந்து தூங்கும் சுபாவம் உள்ளவர்கள். தெய்வீக குணம் படைத்த பக்திமான்கள். வியாபாரம், மாதச் சம்பளம் என இருவகை யிலும் பணம் சம்பாதிக்கலாம். திருடர்கள் இவர்களை பயமுறச் செய்வார்கள். இவர்கள் மாமன், மைத்துனருடன் இணைந்து கூட்டு வியாபாரம் செய்தால் லாபத்தைப் பெற்றுத் தராது; தவிர்த்தல் நன்று! கேது 2-ல் இருந்தால் 24 வயதுமுதலே பொருள் ஈட்டலாம். கல்வித்துறை நன்மதிப்பைப் பெற்றுத் தரும். ராகு- கேது அல்லது சனி, சூரியனுடன் இணைந்து காணப்பட்டால் கடின உழைப்பு தேவை. பொய்சாட்சி கூறுதல் கூடாது. சூரியனுடன் சுக்கிரன், புதன் இணைந்து இருக்கப்பெற்றால் வியாபாரம் தன்னிறைவு தரும். 12-ல் சூரியன், லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் மங்காத புகழ்பெறுவார்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
செல்: 93801 73464