திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது பழமொழி. திரவியம் என்றால் பொருள். கடல் கடந்து சென்றாவது பொருள் ஈட்டவேண்டுமென்பது இதன் பொருள். பொருள் இல்லாதவர்களுக்கு இந்த பூமியில் மதிப்பில்லை.
இன்றைய வாழ்க்கைச் சூழலில் பணமே மனிதனை இயக்கும் சக்தியாக இருக்கிறது. பணத்தைச் சேர்க்கப் போராடும் மனிதர் களே அதிகம். ஏன், பணத்தைத் தேடி ஓடாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை என்றும் கூறலாம்.
பணத்தை சம்பாதிப்பதும், அதனை நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது.
இந்த பணத்தை சிலர் அசால்டாக உட்கார்ந்த இடத்திலிருந்து சம்பாதித்துக் குவிக்கிறார்கள். பலர் காலை, மாலை, இரவு, மழை, வெய்யில், குளிர் என நேரம் காலம் பார்க்காமல் அலைந்து திரிந்து சொற்பமான பணத்தை மட்டுமே சம்பாதிக்கிறார்கள். பிறப்புமுதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்டவை என்றாலும், அதிர்ஷ்டம் என்ற அளவு கோலே எல்லா இடங்களிலும் முன்வந்து நிற்கிறது. அதனால்தான் அதிர்ஷ்டமற்றவர்கள் கடுமையாக உழைத்தும் குறைந்த பணமே கிடைக்கிறது. அதிர்ஷ்டம் நிரம்பிய வர்கள் கணிசமான பணத்தை உட்கார்ந்த இடத்திலிருந்து சம்பாதித்து விடுகிறார் கள்.
சிலருக்கு அதிர்ஷ்டமென் பதே இருக்காது. ஒரு வேலைக்கு ஆயிரம் முறை அலைந்து திரிவார் கள். ஆனால், அந்த வேலை முடிந்த பாடாக இருக் காது. மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் அதிர்ஷ் டத்தின் மேல் நம்பிக்கை, ஆர்வம் உண்டு. மாடமாளிகை யில் வாழ்பவர்கள் முதல் பிளாட் பாரத்தில் வசிப்ப வர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி விருப் பம்... தனி மரியாதை...
தனி கவனம் உண்டு அதிர்ஷ்டம் இல்லாதவர் களால் எந்த சாதனையையும் செய்யவும் முடியாது. கொரோனாவால் அடிப்படைப் பொருளாதாரத் திற்கே திண்டா டும் பல வாசகர் களின் விருப்பத் திற்காக இந்த கட்டுரையில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கச் செய்யும் சில எளிய பரிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அதிர்ஷ்டம், அதிர்ஷ்டக் குறைவு ஆகிய இரண்டிற்கும், அவரவர் வினையில் பதிவாகி யிருக்கும் கர்மாவே காரணம். பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்கள் ஏற்பட ஜனன கால ஜாதகம் சாதகமாக இருக்க வேண்டும்.
அத்துடன் கோட்சார கிரக நிலையும், பொருளாதாரரீதியாக யோகத்தையும் ஏற்றத்தையும் தரக்கூடிய கிரகங்களின் தசா புக்தியும் நடக்கவேண்டும்.
கோட்சாரரீதியாக ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்க

கோட்சாரரீதியாக ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கச் செய்வதில் வருட கிரகங்களான குரு, சனி, ராகு, கேதுக்களின் பங்கு அளப்பரியது.
அந்த வகையில் சனியும், கேதுவும் வினைப்பதிவை மீறிய சுபப் பலன்களைத் தரும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் ஒரு மனிதன் தான் வாழும் காலத்தில் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கேற்ப திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத பணவரவு ஆகியவற்றைத் தருவதில் முன்னிலை வகிப்பவர்கள் குருவும் ராகுவும் மட்டுமே. உலகப் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்பவர் குரு பகவான். 20-11-2020 முதல் குரு மகரத்தில் நீசம்பெறுகிறார். சனியுடன் இணைவதால் நீசபங்கமாகி, நீசபங்க ராஜயோகத்தைத் தரவிருக்கிறார்.
ரிஷபத்தில் நிற்கும் கோட்சார ராகுவுக்கு குருவின் ஐந்தாம் பார்வை கிடைக்கப் போகிறது. குரு தான் நின்ற இடத்தைவிட பார்க்குமிடத்தை பிரம்மாண்டப்படுத்துவார்.
குருவிற்கு 5, 7, 9 என மூன்று சிறப்புப் பார்வைகள் உண்டு.
குருவின் ஐந்தாம் பார்வைக்கு வலிமை மிக அதிகம்.
கோட்சாரத்தில் ஒருவருக்கு அதிர்ஷ்டத் தைத் தரும் குருவுக்கும், பேரதிர்ஷ்டத்தைத் தரும் ராகுவுக்கும் திரிகோண சம்பந்தம் ஏற்படுகிறது. பொதுவாக ராகு தான் நின்ற பாவகப் பலனை பிரம்மாண்டப்படுத்தும் சக்தி படைத்தவர். கோட்சார குருவும், ராகுவும் பன்னிரண்டு ராசியினருக்கு வழங்கப்போகும் அதிர்ஷ்டத்தைப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு தன ஸ்தானமான இரண்டாமிடத்தில் ராகு நிற்கிறார். பத்தாமிடத்தில் நிற்கும் குருபகவான் 2, 4, 6-ஆமிடங்களைப் பார்க்கிறார். குரு மற்றும் ராகுவின் இணை வினால் கடன் தொல்லை குறையும். பொன், பொருள் சேர்க்கை, வீடு வாகனயோகம் போன்ற அதிர்ஷ்டம் உண்டாகும்.
பரிகாரம்: அதிர்ஷ்டத்தை மேலும் அதிகரிக்க இரண்டு இலவங்கத்தைப் பொடிசெய்து பச்சைநிறத் துணியில் முடிந்து பச்சை நூலால் கட்டி மணி பர்சிலோ சட்டைப் பையிலோ எப்பொழுதும் வைத்துக் கொள்ள, அதிர்ஷ்ட தேவதை உங்களுடன் உலாவருவாள்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு ராசியில் ராகு நிற்கிறார்.
ஒன்பதாமிடத்தில் நிற்கும் குருபகவான் 1, 3, 5-ஆமிடங் களைப் பார்வையிடுகிறார்
ஆயுள், ஆரோக்கியம் சீராகும், பூர்வீகச் சொத்து கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும். லாட்டரி, இன்சூரன்ஸ், உயில், சொத்து, பங்குச் சந்தை ஆகியவைமூலம் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது.
பரிகாரம்: செல்வவளம் பெருகி நிலைக்க இளம் பச்சை வெற்றிலைகள் இரண்டு, கொட்டைப்பாக்கு இரண்டு, ஒரு ரூபாய் நாணயம் என்று இந்த மூன்றையும் குலதெய்வத்தைப் பிரார்த்தித்து, அனைத்து சுபகாரியங்கள், பணம் சம்பந்தமான விஷயங்கள் போன்றவற்றுக்கு உடன் வைத்துக்கொள்ளும்போது காரியசித்தி கிட்டும். பணவருவாய் பலவகையிலும் பெருகும்.
மிதுனம்
ராசிக்கு பன்னிரன்டில் ராகுவும் எட்டில் குருவும் நிற்கிறார்கள். குருவின் பார்வை 2, 4, 12-ஆமிடங்களுக்கு இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். சுப விரயங்கள் மிகுதியாகும். ஆடை, ஆபரணங்கள், சொத்து சுகம், கால்நடை பாக்கியங்கள் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை இரண்டு கைகளிலும் ஏந்தியபடி, உங்கள் தேவையினை மனமார வேண்டி- அந்த காசுகளை சேமித்து வந்து, மாதக் கடைசியில் உங்கள் குலதெய்வக் கோவிலில் சமர்ப்பிக்கவும். மற்றும் வெள்ளிக்கிழமை மஞ்சள் வாழைப்பழம் வாங்கி பசுமாட்டிற்குத் தர அதிர்ஷ்டம் எட்டிப் பார்க்கும்.
கடகம்
ராசிக்கு பதினொன்றில் ராகுவும் ஏழில் குருவும் இருக்கி றார்கள். குருவின் பார்வை 1,3,11-ஆமிடங்களுக்குக் கிடைப்பதால். ஆயுள், ஆரோக் கியம் சீராகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
பதினொன்றாமிடத்தில் நிற்கும் ராகுவும், குருவின் ஒன்ப தாம் பார்வையும் இணைந்து வாழ்நாள் முழுவதற்கும் தேவையான பொருளாதா ரத்தை வழங்கப் போகிறார்கள்.
பரிகாரம்: பாக்கியப் பலனை மேலும் அதிகரிக்க பணப்பெட்டியை தென் மேற்கு மூலையில் வைத்து, அதில் மல்லிகைப்பூ போட்டு வைக்கவேண்டும்.
சிம்மம்
ராசிக்கு பத்தாமிடத்தில் ராகுவும் ஆறா மிடத்தில் குருவும் நிற்கிறார்கள். குருவின் சிறப்புப் பார்வை 2, 10, 12-ஆமிடங்களுக்கு இருக்கிறது. இதனால் நிலையான, நிரந்தரமான தொழில், எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வறுமை நீங்கும். நஷ்டம் குறையும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அதிர்ஷ்டம் வாசல் கதவைத் தட்டும்.
பரிகாரம்: செல்வவளம் பெருகி நிலைத் திருக்க பணப்பெட்டியில் பெரிய தொகை களை வைக்கும்போது, ஆறு வெற்றிலைகள், மூன்று பாக்குகள் சேர்த்து வைக்க அதிர்ஷ்டம் உங்களுடன் உறவாடும்.
கன்னி
ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் ராகுவும் ஐந்தாமிடத்தில் குருவும் இருக்கிறார்கள்.குருவின் பார்வை 1, 9, 11-ஆமிடங்களுக்கு இருப்பதால், ஜாதகருக்கு மன உளைச்சல் குறைந்து நிம்மதி பெருகும். பாக்கிய ஸ்தானம் வலிமை பெறும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வாராக் கடன் வசூலாகும்.
பரிகாரம்: அதிர்ஷ்ட தேவதை உங்கள் அருகில் இருக்கும் இந்தக் காலத்தில் முன்னோர்களை நினைத்து முறையாக திதி, தர்ப் பணம், பூஜை, வழிபாடு, தானம், தர்மம், அன்னதானம் செய்வதால், எத்தனை தலைமுறைக்கு முன்னரோ ஏற்பட்ட பித்ரு சாபமோ பித்ரு தோஷமோ விலகி வாழ்வில் முன்னேற்றம், நன்மை கிடைக்கும்
துலாம்
ராசிக்கு எட்டில் ராகுவும் நான்கில் குருவும் இருக்கிறார்கள். குருவின் பார்வையால் 8, 10, 12-ஆமிடங்கள் பலம்பெறுகின்றன. ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும்.
இதனால் தடைப்பட்ட தொழில் துளிரும். விபரீத ராஜ யோகத்தால் சொத்து தொடர்பான வழக்குகள் சாதகமாகும். சுப விரயங்கள் போன்ற சுப அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும்.
பரிகாரம்: மகாலக்ஷ்மி படத் திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கேற்றி, வீடு, அலுவல கம் முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது அதிர்ஷ்டத்தை அதிகரித்து பண விஷயத்தில் தன்னிறைவு கிடைக்கச் செய்யும்.
விருச்சிகம்
ராசிக்கு ஏழாமிடத்தில் ராகுவும் மூன்றாமிடத்தில் குருவும் நிற்கிறார்கள். குருவின் பார்வை 7, 9, 11-ஆமிடங்களில் பதிவதால், கூட்டுத் தொழில்மூலம் பெரும் பணவரவு ஏற்படும். பாக்கிய ஸ்தான வலிமை மேலும் அதிகரிக்கும். மகாலக்ஷ்மி உங்களுக்கு ஆதரவு தரும் நேரம்.
பரிகாரம்: அதிர்ஷ்ட லக்ஷ்மி உங்கள் வீட்டில் நிலைத்திருக்க, வம்சத்தைக் காத்து வாழையடி வாழையென தழைக்கச் செய்யும் முன்னோர்கள் வழிபாடு மிகவும் அவசியம். இஷ்ட, குலதெய்வ வழிபாடு செய்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் முன்னோர்கள் வழிபாடும் முக்கியம்.
தனுசு
ருண, ரோக, சத்ரு ஸ்தானமான ஆறா மிடத்தில் ராகுவும், தன ஸ்தானமான இரண்டாமிடத்தில் குரு பகவானும் சஞ்சாரம் செய்கிறார்கள். குருவின் பார்வை 6, 8, 10-ஆமிடங்களுக்குப் பதிவதால் கடன் தீரும், வழக்குகள் சாதகமாகும். இழுத்து மூடிய தொழில் மீண்டும் வளரும். அதிர்ஷ்டக் காற்று தொழில் ரூபத்தில் வரும்.
பரிகாரம்: பணப்பெட்டி சந்தனப் பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும்.
வசதி இல்லையேல் பச்சைநிறப் பட்டுத் துணியில் பணப்பை செய்து, அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றைப் போட்டு பணம் வைக்க அதிர்ஷ்டம் நிலைத்து நிறைந்திருக்கும்.
மகரம்
ராசியில் நிற்கும் குருவும் ஐந்தாமிடத்தில் நிற்கும் ராகுவும் பிரம்மாண்டமான, நினைத்துப் பார்க்கமுடியாத தடைப்பட்ட அனைத்து நற்பலன்களையும் தருவார்கள். குருவின் பார்வை 4, 6, 8-ஆமிடங்களுக்கு இருப்பதால் பூர்வபுண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் வலிமையடந்து, பல வருடங்களாக எதிர் பார்த்த அனைத்து சுபப் பலன்களும் அதிர்ஷ்ட மாகத் தேடிவரும்.
பரிகாரம்: முன்னோர்கள் வழிபாட்டைக் குறைவின்றி யாரெல்லாம் செய்கிறார்களோ அவர்கள் வீட்டில் கஷ்டமோ நஷ்டமோ பிரச்சினைகளோ இதுவரை இருந்தாலும், அவையனைத்தும் நீங்கிவிடும். தடைகள் விலகி காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
கும்பம்
சுகஸ்தானத்தில் நிற்கும் ராகு மற்றும் விரய ஸ்தானத்தில் நிற்கும் குருவின் பார்வை படும் 4, 6, 8-ஆமிடங்கள் மூலம் அதிர்ஷ்டத் துடன், பேரதிர்ஷ்டத்தையும் ஒருங்கே பெறப் போகிறீர்கள். இதுவரை தடைப் பட்ட வீடு, வாகன யோகத்தைத் தருவார்கள். சொத்துகள்மீதான கடன், வழக்குகள் சாதக மாகும். நமக்கு அதிர்ஷ்டம் உண்டா என்று வியக்கும் வகையில் அனைத்தும் நடக்கும்.
பரிகாரம்: செல்வவளம் பெருகி நிலைக்க, சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண் கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங் கள் நீங்கி தொழில் முன்னேற்றமடையும், மகாலக்ஷ்மி நடமாடுவாள்.
மீனம்
முயற்சி ஸ்தான ராகுவும், லாப ஸ்தான கோட்சார குருவும் இரட்டை அதிர்ஷ்டத்தை வழங்கப் போகிறார்கள். குருவின் பார்வையால் 3, 5, 7-ஆமிடப் பலன்கள் சாதகமாகும். தொட்டது துலங்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமைபெற்று, அனைத்து வகையான செல்வங்களையும், அதிர்ஷ்டத்தையும் பெற்றுத் தரும்.
பரிகாரம்: செல்வவளம் பெருகி நிலைக்க, வருமானத்தில் ஐந்து சதவிகிதத்தை தானத் திற்கென எடுத்து வையுங்கள். மாதம் ஒருநாள் அதிலிருந்து ஏழை எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த அளவு தான தர்மம், அன்னதானம் வழங்குங்கள். உடை, போர்வை, செருப்பு, குடை வாங்கிக் கொடுங்கள். நீங்களும் உங்கள் குடும் பமும் சிறப்பாக இருப்பீர்கள். உங்கள் வம்சம் செழிக்கும். அதிர்ஷ்டம் நிலைத்திருக்கும்.
பலமுறை முயற்சித்தும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காதவர்களுக்கு இந்தப் பரிகாரங்கள் நல்ல பலனைத் தரும். நீங்கள் செல்லும் காரியம் கட்டாயமாக வெற்றியடை யும். அதிர்ஷ்டம் உங்களை அரவணைக்கும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் உங்களுடைய காரிய வெற்றிக்குத் தேவையான முயற்சிகள் அனைத்தையும், நீங்கள் சரியாக செய்திருக்க வேண்டும். எந்த முயற்சியையும் செய்யாமல், பலனை எதிர்பார்ப்பவர்களை அதிர்ஷ்டம் தேடி வராது.
செல்: 98652 20406