2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் கள் 2-ஆம் எண்ணைச் சேர்ந்தவர்கள். இது சந்திரனைக் குறிக்கு எண். சூரியனை மையமாகக்கொண்டு எல்லா கிரகங்களும் சுழலும்போது சந்திரன் பூமியை மையமாகக்கொண்டு சுழல்கிறது.
சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று சந்திரன் பிரகாசிப்பதுபோல, 2-ஆம் எண்ணின் ஆதிக்கத்துக்குட்பட்டவர் களும் பிறரின் உதவியால் வாழ்வர் என்று கூறலாம். இவர்கள் தங்களைத் தவிர்த்து ஏதோவொரு சக்தியின்மீது நம்பிக்கை வைத்தால் அதை முழுமையாகப் பின்பற்றி நன்மையடைவார்கள்.
பெரிய மகான்களாகவும், தீர்க்க தரிசிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், பற்றற்ற மெய்ஞ்ஞானிகளாகவும் திகழும் இந்த எண்காரர்கள் கற்பனை வளம் கொண்டவர்கள். யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள். எ
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் கள் 2-ஆம் எண்ணைச் சேர்ந்தவர்கள். இது சந்திரனைக் குறிக்கு எண். சூரியனை மையமாகக்கொண்டு எல்லா கிரகங்களும் சுழலும்போது சந்திரன் பூமியை மையமாகக்கொண்டு சுழல்கிறது.
சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று சந்திரன் பிரகாசிப்பதுபோல, 2-ஆம் எண்ணின் ஆதிக்கத்துக்குட்பட்டவர் களும் பிறரின் உதவியால் வாழ்வர் என்று கூறலாம். இவர்கள் தங்களைத் தவிர்த்து ஏதோவொரு சக்தியின்மீது நம்பிக்கை வைத்தால் அதை முழுமையாகப் பின்பற்றி நன்மையடைவார்கள்.
பெரிய மகான்களாகவும், தீர்க்க தரிசிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், பற்றற்ற மெய்ஞ்ஞானிகளாகவும் திகழும் இந்த எண்காரர்கள் கற்பனை வளம் கொண்டவர்கள். யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள். எப்போதும் யோசனை செய்துகொண்டிருப்பார்கள். எதிர்காலம் குறித்து கவலை கொள் வார்கள். சிறு பிரச்சினையைக்கூட பெரிதாக எண்ணி பெருமூச்சு விடுவார்கள். இயல்பான காரியங்களைக்கூட மற்றவர் களின் தூண்டுதலின் பேரில்தான் செய்து முடிப்பார்கள். தூக்கம் கலையாத முகத்து டனும், எப்போதும் ஒருவித ஏக்கத்து டனும் காணப்படுவர். தன்னிடம் அஞ்சு பவர்களை வீராப்பாக வம்பிழுப்பதும், தன்னை தட்டிக் கேட்பவர்களிடம் நழுவிச்சென்று விடுவதும் இயல்பான குணங்களாகும். இவர்களுக்கு மனபலம்தான் அதிகம். உடல் உழைப்புக்கு ஏற்றதாக அமையாது. ஆனால், திடமாக ஏதாவதொன்றில் நம்பிக்கை வந்துவிட்டால், வாழ்க்கை பிரகாசிக்க ஆரம்பிக்கும். அவ்வாறாயின் அவர் களைப் போன்று பிரசித்தி பெற்றவர்கள் யாரும் இருக்கமுடியாது.
கற்பனையைப் பயன்படுத்தும் கலைஞர்கள், குற்றங்களைக் கண்டுபிடிக்கும் தடயவியல் நிபுணர்கள், மனோத்துவ வல்லுனர்கள், வக்கீல்கள், கவிஞர்கள், ஆராய்ச்சி எழுத்தாளர்கள், ஊர் போற்றும் பேச்சாளர்கள் என உன்னதமான நிலையை அடைவார்கள். மற்றபடி விவசாயம், வியாபாரம், அழகு சாதனங்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல், தையற்கலை, சலவைத் தொழில், இறைப்பணி, வண்ணம் பூசுதல், ஓவியக்கலை, திரவ வடிவில் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் பொருட்கள் தயாரித்தல்- விற்பனை செய்தல், அழகுநிலையங்கள் அமைத்துப் பொருளீட்டுவது, போட்டோ ஸ்டுடியோ, அலங்கார வேலைப்பாடுகள், சினிமாத்துறையில் ஈடுபட்டு சிறிய அளவு முதலில், பெரிய அளவி லான புகழ், வருமானம் பெற்று வாழ்வர்.
நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி 2-10-1869-ல் பிறந்தவர். பெயர் எம்.கே. காந்தி என்பதன் கூட்டுத்தொகை 25. எனவே, இவரது எண்ணியல் சமன்பாடு 2-9/7 என அமையப் பெற்றிருந்தது. இதனால் இவர் கடைசிவரை சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவராகவும், தெய்வ நம்பிக்கையில் பிடிதளராமலும் வாழ்ந்து காட்டினார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 11-9-1882-ல் பிறந்தவர். இயற்பெயர் சி. சுப்ரமணியன். ஆனால், பின்னாளில் சி. சுப்பிரமணிய பாரதியார் என ஆயிற்று. இதன்படி இவரின் சமன்பாடு 2- 3/3 என்று அமைந்ததால், அவரிடம் மனோவலிமை அதிகமாகக் காணப்பட்டது. அதனால் எதற்கும், எவர்க்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் செயல் பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
2-ஆம் எண்காரர்கள் தங்களது விதி எண்ணுக்குப் பொருத்தமான எண்ணில் பெயர் அமைத்துக்கொண்டால் நன்மையளிக்கும். 2-ஆம் எண்ணுக்கு 7-ஆம் எண்காரர்கள் நண்பர்களாக இருப்பார்கள். ஆனால், 2-ஆம் எண்காரர்கள் முதலில் நண்பர்களாகவும், பின்னர் விரோதிகளாகவும் மாறக்கூடும். 1, 3, 4, 8 எண்காரர்களும் நண்பர்களாக இருப் பார்கள்.
இவர்களுக்குத் திருமண வாழ்க்கை பொதுவாக சிறப்பாக அமையாது என்றே கூறலாம். 7-ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் காதல் வசப்படுவர். 3, 6, 4, 8 தேதியில் பிறந்த வர்களைத் திருமணம் செய்துகொள்ளலாம். திருமணத் தேதி 1, 7, 10, 16, 19, 28, 25 மற்றும் கூட்டு எண். 1, 7-ஆக அமைந்தால் மிகவும் நலமாக இருக்கும். திருமணத் தேதியின் கூட்டு எண் 5, 8, 9 கண்டிப்பாக வரக்கூடாது.
செல்: 99400 78841