தந்தையின் கடனைச் சுமக்கும் மகன்! - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/son-who-bears-fathers-debt-prasanna-astrologer-i-anandi-0

சென்ற இதழ் தொடர்ச்சி...

ரு ஜாதகர் தந்தையால் பயன்பெற்றால் வம்சாவளியாக, வாழையடி வாழையாக திரிகோணம் வலிமைபெற்ற குடும்பம் என்பதை உணரலாம். தலை சரியில்லாமல்- அதாவது குடும்பத்தலைவர் சரியில்லாவிட்டால் வம்சாவளியாக ‘"ஏதோ பிறந்தோம்... வாழ்ந்தோம்...'’ என தந்தை முன்னோர் களைப்போல பிறந்து, வாழ்ந்து, பிறந்ததற் கான தடயத்தை விட்டுச்செல்லாமல் தலை முறையே முடிந்துவிடுவது.

தடயம் என்றால் எந்தத் துறையிலாவது நான்குபேரின் பாராட்டைப் பெறுவது. மறைந்த நமது ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறிய ஒரு வாசகம்- “"நமது பிறப்பு ஒரு சம்பவ மாக இருக்கலாம். ஆனால் நமது இறப்பு ஒரு சரித் திரமாக இருக்க வேண்டும்' என்பது. ஒரு மனித ஆன்மா உலகைவிட்டுச் செல்லும் போது சரித்திரத்தில் ஏதாவது ஓரிடத்தில் இடம் பிடிக்க முயற்சிசெய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.

பெற்றோர்கள், முன்னோர்களால் எந்த வழிகாட்டலும், உதவியு மின்றி, கஷ்டத்தைப் பார்த்து சிறுவயதுமுதல் சாதிக்கவேண்டும் என்ற வெறியோடு சாதனையாளராக மாறி சரித் திரத்தில் இடம்பிடித் தவர்களின் பட்டியல் பெரியது என்பது நாமனைவரும் அறிந்ததே.

"நான் முன்னேற எனக்கு யாரும் உதவவில்லை. என் வாழ்க்கை முடிந்துவிட்டது. என் பிள்ளை சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழவேண்டும்.' என தன் பிள்ளையை சாதனை மனிதனாக மாற்ற தன் வாழ்வை அர்ப்பணிக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேபோல "பெற்றோர்கள் என் வளர்ச்சிக்கு உதவவில்லை. அதனால் அவர

சென்ற இதழ் தொடர்ச்சி...

ரு ஜாதகர் தந்தையால் பயன்பெற்றால் வம்சாவளியாக, வாழையடி வாழையாக திரிகோணம் வலிமைபெற்ற குடும்பம் என்பதை உணரலாம். தலை சரியில்லாமல்- அதாவது குடும்பத்தலைவர் சரியில்லாவிட்டால் வம்சாவளியாக ‘"ஏதோ பிறந்தோம்... வாழ்ந்தோம்...'’ என தந்தை முன்னோர் களைப்போல பிறந்து, வாழ்ந்து, பிறந்ததற் கான தடயத்தை விட்டுச்செல்லாமல் தலை முறையே முடிந்துவிடுவது.

தடயம் என்றால் எந்தத் துறையிலாவது நான்குபேரின் பாராட்டைப் பெறுவது. மறைந்த நமது ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறிய ஒரு வாசகம்- “"நமது பிறப்பு ஒரு சம்பவ மாக இருக்கலாம். ஆனால் நமது இறப்பு ஒரு சரித் திரமாக இருக்க வேண்டும்' என்பது. ஒரு மனித ஆன்மா உலகைவிட்டுச் செல்லும் போது சரித்திரத்தில் ஏதாவது ஓரிடத்தில் இடம் பிடிக்க முயற்சிசெய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.

பெற்றோர்கள், முன்னோர்களால் எந்த வழிகாட்டலும், உதவியு மின்றி, கஷ்டத்தைப் பார்த்து சிறுவயதுமுதல் சாதிக்கவேண்டும் என்ற வெறியோடு சாதனையாளராக மாறி சரித் திரத்தில் இடம்பிடித் தவர்களின் பட்டியல் பெரியது என்பது நாமனைவரும் அறிந்ததே.

"நான் முன்னேற எனக்கு யாரும் உதவவில்லை. என் வாழ்க்கை முடிந்துவிட்டது. என் பிள்ளை சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழவேண்டும்.' என தன் பிள்ளையை சாதனை மனிதனாக மாற்ற தன் வாழ்வை அர்ப்பணிக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேபோல "பெற்றோர்கள் என் வளர்ச்சிக்கு உதவவில்லை. அதனால் அவர்களைப் பார்க்கமாட்டேன்' எனக் கூறும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

"என் பெற்றோர்கள் எந்த நல்லதும் அனுபவிக் கவில்லை. அவர்களின் வாழ்வின் கடைசிக் காலத்தில் சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும்' என்பதை விரும்பும் சந்த தியினரும் இருக்கிறார்கள் .

பேச்சுவழக்கில் சொல்வார்கள்- "உன் வாரிசு களுக்கு புண்ணியம் சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, பாவம் சேர்த்துவைத்துச் செல்லக்கூடாது' என்று. பூமியில் பிறக்கும் அனைவரும், நான் இன்னாரின் வாரிசு என்று குல கௌரவத்தை நிலைநிறுத்தவே விரும்பு கிறார்கள்.

இனி ஜோதிடரீதியாக தந்தையால் பயன்பெறுபவர் யார் என்பதைப் பார்க்கலாம்.

9-ஆம் அதிபதி 6, 8, 12-ல் மறையாமல் ஆட்சியோ, உச்சமோ, நட்போ பெற்றிருந்தால் ஜாதகரின் அடிப்படைத் தேவைகள் மட்டும் தந்தைமூலம் நிறை வேற்றப்படும்.

9-ஆம் அதிபதி திரிகோண சம்பந்தம் பெற்றால் வம்சாவளியாக தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என வாழும் குடும்பம். இவர்களும், இவர்களுடைய வம்சாவளியும் குடும்ப கௌரவத்தைக் கட்டிக்காப்பார்கள். 1, 5, 9-ஆம் பாவகத் தோடு சூரியன் சம்பந்தம் பெற்றாலும் குல கௌரவத்தைக் கட்டிக்காப் பார்கள்.

லக்னாதிபதியும், ஒன்பதாமிடத்து அதிபதியும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் ஜாதகர் எல்லாவிதத்திலும் அதிர்ஷ்டமுள்ளவராக இருப்பார். 9-ஆம் அதிபதி 5-ல் இருந்தால் குழந்தை களால் முன்னேற்றம், உயர்கல்வி, தந்தைவழிச் சொத்தை அனுபவித்தல், அரசுப் பதவி, குலதெய்வக் கடாட்சம், ஆலயங்களை உருவாக்குதல் போன்ற பாக்கியங்கள் கிடைக்கப்பெறும்.

lakshmi

9-ஆம் அதிபதி 9-ல் இருந்தால் அதிகமான அதிர்ஷ்டம், ஒழுக்கம், அழகு, தந்தைக்கு தீர்க்கமான ஆயுள், உடன்பிறப்புகளால் இன்பம், தானதர்மம் செய்யும் பாக்கியம், மங்காத புகழ் கிடைக்கும். புண்ணிய பலத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்கள்.

ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும்- நல்லநிலையில் இருந்தால் தந்தை- மகன் அன்பு சிறக்கும்.

9-ல் சூரியன் சுபத் தன்மையோடு இருந்தால் தந்தை- மகன் அன்பாக, ஐக்கியமாக இருப்பர்.

9-ஆமிடமும், 10-ஆமிடமும் மிகவும் முக்கியமானதாகும். ஒன்பதிற்குப் பெயர் தர்ம ஸ்தானம். பத்திற்குப் பெயர் கர்ம ஸ்தானம். அந்த இரு இடங்களுக்குமுரிய வீட்டதிபர்களுக்குப் பெயர் தர்ம- கர்ம அதிபதிகள். அவர்களிருவரும் பரிவர்த்தனை யோகம் அல்லது சம்பந்தம் பெற்றிருந்தால் தர்மகர்மாதிபதி யோகம். இந்த யோகம் பெற்றவர் அதீதமான பொருளீட்டுவார். தலைமுறை தலைமுறையாக ஏராளமான தர்ம காரியங்களைச் செய்வார்கள். கோவில்களுக்குத் திருப்பணி செய்வது, இலவச மருத்துவமனைகள் கட்டுவது, பள்ளிகள், கல்லூரிகளைக் கட்டுவது, பெரியளவில் அடிக்கடி அன்னதானம் செய்வது, ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

10, 11-ஆமிட அதிபதி ஒன்பதில் அமர்ந்து, பத்தாமிட அதிபதியின் பார்வை பெற்றாலும்; 9-ஆம் அதிபதி 2-ல் அமர்ந்து, பத்தாம் வீட்டதிபதியின் பார்வை பெற்றாலும் ஜாதகருக்கும் தந்தைக்கும் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

தந்தையால் கடன், அவமானம் யாருக்கு என்பதைப் பார்க்கலாம்.

9-ல் சூரியன் சுபகிரக சம்பந்தமில்லாத நிலையில் பூர்வீக சொத்துப் பிரச்சினை, தந்தையுடன் இணக்க மின்மை ஏற்படும்.

9-ஆம் அதிபதி 6, 8, 12-ல் மறைந்தால்- நீசம், அஸ்தமனம் பெற்றால் தந்தையால் பயனற்றவர். சூரியன் 6, 8, 12-ல் மறைந் தாலும் தந்தையின் ஆதரவு கிட்டாது.

9-ஆம் அதிபதி 6-ல் இருந்தால் முன்னோர் சொத்தால் கடன், முன்னோர் சொத்து இழப்பு, எதிரித் தொல்லை, புகழுக்கு பங்கம், முன்னேற்றக் குறைவு, புத்திர தோஷம் ஏற்படும்.

9-ஆம் அதிபதி 8, 12-ல் இருந்தால் அதிர்ஷ்டக்குறைவு, விரயச்செலவு, ஏழ்மை, சொத்து பறிபோதல் ஆகியவை ஏற்படும்.

9-ஆம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால் ஜாதகர் துரதிர்ஷ்டமானவர்.

9-ல் சனி, ராகு- கேது அல்லது வக்ரம், நீசம், அஸ்தமனம் பெற்ற கிரகம் இருந்தால் தந்தை- மகன் ஒற்றுமை இருக்காது.

9-ல் சந்திரன்- சனி சேர்க்கை அல்லது சந்திரன்- சனியின் பார்வை பெற்றால், ஜாதகர் பலவிதமான துன்பங்களை அனுபவிக்கநேரும்.

ஜாதகத்தில் சூரியன்- சனி, ராகு, கேது அல்லது மாந்தியால் பாதிக்கப்பட்டால் ஜாதகரால் அவருடைய தந்தைக்குத் துன்பங்கள்தான் ஏற்படும்.

சூரியனுக்குத் திரிகோணத்தில் செவ்வாயும் அல்லது சந்திரனுக்குத் திரிகோணத்தில் சனியும் இருந்தால், ஜாதகர் அவருடைய பெற்றோரால் புறக்கணிக் கப்படுவார்.

சூரியன்- சனி எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும், எந்தவகையில் சம்பந்தம் பெற்றாலும் ஜாதகருக்குத் தன் தந்தை மற்றும் தன் குழந்தைகளுடன் பாசம் இருக்காது.

தந்தை- மகன் கருத்து வேறுபாட்டைவிட குடும்பச் சுமை- கடனை ஆண் வாரிசுகள்மேல் ஏற்றிவைக்கும் தந்தையை பல ஆண் வாரிசுகள் மன்னிக்கத் தயாராக இல்லை. தந்தையால் ஏற்பட்ட கடனால், குடும்ப பாரத்தால் தனக் கென்று குடும்ப வாழ்வை ஏற்படுத்தமுடியாமல் நடைப்பிணமாக வாழ் கிறார்கள். அதாவது சூரியனும், 9-ஆம் அதிபதியும், புதனும் ஆறாம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றால் தந்தையின் கடனை அடைக்க ஜாதகர் நிறைய கடனை வாங்கி மாட்டிக்கொள்வார்.

உதாரணம்:

10-7-1983, இரவு 8.50 மணிக்குப் பிறந்த இந்த ஆண் ஜாதகர் தந்தையால் ஏற்பட்ட குடும்ப பாரத்தால் வாழ்நாள் கடனாளி யாக இருக்கிறார். இவரின் 9-ஆம் அதிபதி புதன், 8-ஆம் அதிபதி சூரியனுடன் 6-ஆமிடத்தில் சம்பந்தம் பெற்றதால், வாழ்நாள் முழுவதும் தந்தையால்- குடும்ப உறுப்பினர்களால் 37 வயதுவரை திருமணமும் இன்றி, கடனிலிருந்து மீளமுடியாமல் மன உளைச்சலை சந்திக்கிறார். ஒருவர் வாழ்நாளில் சந்திக்கக்கூடாத பிரச்சினைகளுள் கடன் பிரச்சினையும் ஒன்று. தாய் குழந்தையைப் பத்து மாதம் மட்டுமே கருவில் சுமக்கிறாள்.

ஆனால், ஆண்மகன் வாழ்நாள் முழுவதும்- பிறப்புமுதல் இறப்புவரை குடும்ப பாரத்தை சுமக் கிறார்.

பரிகாரம்

குடும்பத்தில் தீராத கடன், வறுமை, தந்தை- மகன் கருத்து வேறுபாடு இருப்பவர்கள், 9-ல் சனி இருப்பவர்கள் சனிக்கிழமைதோறும் திருவண்ணாமலையில் கிரிவலம் வரவேண்டும்.

செல்: 98652 20406

bala151119
இதையும் படியுங்கள்
Subscribe