2018-ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ‘"இரும்புத்திரை.'’இதில் தந்தை ஏற்படுத்திய கடனைச் சுமக்கும் மகனின் மனநிலையை இயக்குநர் பி.எஸ். மித்ரன் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பார். அதில், தகவல் தொடர்பைப் பயன்படுத்தி நாட்டில் சிலர் பணமோசடி செய்வதையும் அருமையாக விளக்கியிருப்பார்.
நாட்டு நிலவரம்போல வீடுகளிலும் தந்தை யின் கடனைச் சுமக்கமுடியாமல் சுமக்கும் மகன்களும் இருக்கிறார்கள்; தள்ளாத வயதிலும், பெற்ற கடனுக்காக- மகனின் கடனைச் சுமக்கும் தந்தையும் இருக்கிறார்கள். இதுபோல பல இடங்களில் தந்தைக் கும் மகனுக்கும் மிகுதியான கருத்து வேறுபாடு; ஒரே வீட்டில் இருந்தும் பல வருடங்களாகப் பேசாத அப்பா- மகன்களும் இருக் கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய் அப்பாவை எதிரியாக மகன் நினைப்பதும், மகனை எதிரியாக தந்தை நினைப்பதும் நடக்கின்றன.
ஜாதகம் பார்க்க வரும் பல பெண் களின் ஆதங்கமாக தந்தை- மகன் கருத்து வேறுபாடு இருந்துவருகிறது. பல குடும்பங்களில் தந்தை- மகன் பிரச்சினை ஏன் என்பதைப் பார்க்கலாம்.
விதி- மதி- கதி
விதி என்பது லக்னம். ஜோதிடரீதியாக லக்னம் என்பது விதியாக, ஒருவரின் தலை யெழுத்தாக அமைகிறது.
மதி என்பது சந்திரன். 5- ஆமிடம் எனும் பூர்வபுண்ணிய பலத்தால் விதிக்கப்பட்டதை மதியால் எப்படி சாதகமாக மாற்றியமைப்பது என்பதைக் காட்டுகிறது.
கதி என்பது சூரியன். 5-ஆமிடம் எனும் பூர்வபுண்ணிய பலம் மதியால் மாற்றி யமைக்கப்பட்டதை 9-ஆமிடம் எனும் பாக்கிய பலத்தால் சாதகமாகக் கிடைக்க வழிவகை செய்யப்படுவதைக் குறிக்கிறது. 9-ஆம் பாவக காரகரும் சூரியனே. ஒருவரின் ஜாதகத்தில் சூரியனை வைத்து தந்தையின் நிலையைக் கூறமுடியும்.
வாழ்வில் விதி, மதி, கதி நன்கு அமைந்தவர் களுக்குதான் சகலவெற்றிகளும் கூடிவரு கின்றன. சாதாரணமாக இருப்பவர்கள்கூட மிகப்பெரிய சாதனை மனிதராக மாறுவது இத்தகைய அமைப்பினால்தான். விதி, மதி, கதி- இந்த மூன்றுமே ஒரு மனிதனின் வாழ்வை பிறப்புமுதல் இறப்புவரை வழிநடத்துகின்றன. இதை ஜோதிடம் 12 பாவங்களாகப் பிரித்துப் பலன் கூறுகிறது.
திரிகோணம்:
திரிகோணம் என்றால் 1, 5, 9-ஆம் பாவகங்கள்.
லக்ன பாவகம்- ஜாதகர் லக்னத்தைக் கொண்டு இந்த நாளில், இந்த நேரத்தில், இந்த வம்சத்தில், குலத்தில் பிறந்த ஜாதகரின் உயிர், உருவம், உடலமைப்பு, நிறம், குணம், திறமை மற்றும் எப்போதும் மாறாத தன்மை கொண்ட உறவுகளான தாய்- தந்தை, பூர்வீகம், குலம், கோத்திரம் ஆகியவற்றை அறியலாம். அதாவது ஒருவரின் பிறப்பின் தன்மையை அறியும் பாவகம்.
ஐந்தாம் பாவகம்- குழந்தைகள், பாட்டன் (தந்தையின் தந்தை) பூர்வ புண்ணியத்தின் வலிமையால்- இந்த ஜென்மத்தில் இவருக்குப் பிறக்கப்போகும் குழந்தையால் பெறப்போகும் நன்மை- தீமைகளைக் கூறும் பாவகம். அத்துடன் ஜாதகரின் பாட்டன், முப்பாட்டன் வழிபட்ட தெய்வம் (குலதெய்வம்), முன்னோர்கள் புண்ணியம் செய்தவர்களா? பாவம் செய்தவர்களா? முன்னோர்களின் பாவ புண்ணியத்தால் இந்த ஜென்மத்தில் ஜாதகர் அனுபவிக்கப்போவது நல்வினையா? தீவினையா என்பதை உணர்த்தும் பாவகம்.
ஒன்பதாம் பாவகம்- தந்தை பெற்ற தந்தை யார்? உடம்பிலுள்ள "உசஆ' யாரிட மிருந்து கிடைக்கப்பெற்றது? குலம், ஜாதி, மதம் எது? புண்ணிய பலத்தால் நம்மைப் பெற்றாரா? பாவ பலத்தால் நம்மைப் பெற்றவரா? நம்மால் தந்தை கௌரவம் கிடைக்கப் பெறுவாரா? அல்லது தந்தையால் நாம் கௌரவம் கிடைக்கப் பெறுவோமா? முன்னோர்களின் சொத்துகள் உழைப்பால் வந்ததா அல்லது அநீதியாக வந்ததா? அந்த சொத்து, சுகத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவரா? நம் பிறப்பின் நோக்கமென்ன? நான் ஏன் பிறந் தேன் போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் விடைதரும் பாவகம்.
ஒருவரின் ஜாதகத்தில் திரி கோண பாவக பலத்தை அவர வரின் விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்க இயலாது. இந்த மூன்றுமே (விதிக்கப்பட்டது) தலைவிதி; நிர்ணயிக்கப்பட்டது. இந்த மூன்று பாவகங்களும் ஜாதகங்களில் கெட்டுப் போயிருந்தால் நிவர்த்தி செய்ய முடியாது. ஏதாவது பரிகாரங்கள் செய்து முன்னோர் களையும், தந்தையையும் மாற்றமுடியுமா?
1, 5, 9 என்ற திரிகோணாதிபதிகள் இணைந்தே ஒரு ஜாதகத்தை இயக்குவார்கள். திரிகோணத்தில் லக்னம் பலவீனமடைந்து 5, 9 பலம்பெற்றால், ஜாதகருக்கு சுயசிந் தனை சிறப்பாக இருக்காது. 5, 9-ஆம் பாவகப் பலனை அனுபவிக்கும் எண்ணமிருக்காது. அடுத்தவருடைய கட்டுப்பாட்டில் இயங்குவார். லக்னம் வலிமை பெற்று 5, 9 பாவகங்கள் பலவீனமடைந்தால், முன்னேற்றத் திற்கான பாதையைத் தேடியே வாழ்க்கை முடிந்துவிடும். ஆக, 1, 5, 9 என்ற திரிகோணாதி பதிகளும் வலிமை பெற்றாலே ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கேந்திரம்
கேந்திரம் என்றால் 1, 4, 7, 10-ஆம் பாவகங்கள்.
நான்காம் பாவகம்- தாய், வீடு, வாகனம், சொத்து, சுகம் ஒரு மனிதன், தான் எத்தகைய தாய்க்குப் பிறக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கமுடியாது. (விதியே தீர்மானிக்கும்). ஆனால், தனக்கு அமையும் வீடு, வாகனம் எப்படி இருக்கவேண்டுமென்பதைத் தன் விருப்பத்திற்கேற்ப (மதியால்) அமைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
7-ஆம் பாவகம்- களத்திரம்
"இன்னாருக்கு இன்னார்' என்று பிரபஞ்சம் எழுதிவைத்திருக்கும் என்றா லும், தன் விருப்பத்திற்கு, மனதிற்குப் பிடித்த துணையைக் கரம்பிடிக்கமுடியும்.
விதியால் அமைந்த துணையாக இருந் தால்கூட தன் மதியின் உதவியால், தன் விருப்பத்திற்கேற்ற துணையாக மாற்றி வாழமுடியும்.
10-ஆம் பாவகம்- தொழில் ஸ்தானம்
தன் மதிநுட்பத்தால், தான் விரும்பும் தொழிலை முடிவுசெய்து, தன் ஜீவனத் தையும், தன் எதிர்காலத்தையும் வளமு டையதாக மாற்றமுடியும். கேந்திர ஸ்தானங்கள் விதிப்படி அமைந்தாலும், மதிநுட்பத்தால் முறையான வழிபாட்டு முறை, சரணாகதி அடைதல்மூலம் சீர்செய்யமுடியும்.
மறைவு ஸ்தானங்கள்
மறைவு ஸ்தானங்கள் என்றால் 6, 8, 12-ஆம் பாவகங்கள். 6-ஆம் பாவகம்- ருணம், ரோகம், சத்ரு ஸ்தானம் ருணம்- கடன்.
ரோகம்- நோய்.
சத்ரு - எதிரி.
ஒருவருக்கு பூர்வஜென்ம பாவ- புண்ணி யத்தால் ஏற்படும் கடன், நோய்த் தாக்கம், எதிரித் தொல்லைகளைக் குறிக்கும்.
8-ஆம் பாவகம்
அவமானம், ஆயுள் ஸ்தானம், சிறை தண்டனை போன்றவற்றைக் குறிக்கும்.
6, 8-ஆம் பாவக சம்பந்தம் கடன், சத்ரு, அவமானம், சிறை தண்டனையைத் தரும்.
6, 8-ஆம் பாவக சம்பந்தம் நோய், ஆயுள் பங்கத்தை ஏற்படுத்தும்.
12-ஆம் பாவகம்
தலைமறைவு, விரயம் போன்றவற்றைக் குறிக்கும்.
6, 8, 12-ஆம் பாவக சம்பந்தம் கடன், தலைமறைவு வாழ்வை ஏற்படுத்தும்.
6, 8, 12-ஆம் பாவக சம்பந்தம் நோய், உலக வாழ்விலிருந்து விடுதலை கிடைக்கச் செய்யும்.
6, 8, 12 பாவகங்கள் வலுக்குறை வாக இருப்பதே நல்லது. இவை ஜனனகால ஜாதகத்தில் பலம்பெற்று தசை நடத் தினால் வினைப்பயன் மிகுதியாக இருக்கும். இந்த காலகட்டங்களில் இஷ்ட, குல, உபாசனை தெய்வ வழிபாட்டால்- மதியின் உதவியால் விதியின் பிடியிலிருந்து விடுபடமுடியும்.
பணபர ஸ்தானம்
2, 11-ஆம் பாவங்கள் தனம் எனும் பணவரவைப் பற்றிக் கூறும். இந்த ஸ்தானங் கள் விதியால் பலம் குன்றியிருந்தால் மதிநுட்பம்- வழிபாட்டுமுறையால் சரிசெய்ய முடியும்.
உபஜய ஸ்தானம்-3
இதை சகாய ஸ்தானம் என்றும் கூறலாம். 2, 3, 11 ஆகிய பாவகங்களையும் ‘விதி, மதி, கதி’ எனும் மூன்றும் சேர்ந்தே இயங்கச் செய்யும்.
ஆக, ஒரு ஜாதகத்தின் 12 பாவகங்களையும் 1, 5, 9 என்ற திரிகோணாதிபதிகளே இயக்குவார்கள். 1, 5, 9 என்ற திரிகோணாதிபதிகள் வலிமை பெற் றாலே ஒருவருடைய வாழ்கை சிறப்பாக இருக்கும். தலைவிதி சிறப்பாக அமைந்தால் மட்டுமே வாழ்க்கையின் சுவையை மனிதனால் உணரமுடியும்.
செல்: 98652 20406