ருவர் ஜாதகத்தில் மூன்றாமிடத்து அதிபதியைக்கொண்டு அவரது தைரியத்தை அளவிடமுடியும். மூன்றாமிடத்திலுள்ள கிரகங்கள் அல்லது அந்த இடத்தைப் பார்க்கும் கிரகங்களைக்கொண்டு நிர்ணயம் செய்யலாம். தைரியம் புருஷ லட்சணம் என்பர். ஆணுக்கு ஓரளவு தைரியம்வேண்டும்.

Advertisment

அப்போதுதான் பிரச்சினைகளைப் பக்குவமாக எதிர்கொள்ளமுடியும். மாணவன் மிகுந்த பயத்தோடு இருந்தால் ஆசிரியரிடம் எந்த சந்தேகத்தையும் கேட்கமுடியாத நிலை ஏற்படும். கேள்வி கேட்டால்தான் பதில் கிடைக்கும்.

பெண்களுக்கும் தைரியம் வேண்டும். அப்போதுதான் குடும்பப் பிரச்சினைகளை எதிர்கொள்ளமுடியும். எனவே, பெண் கொடுக்கும்போது ஆண்- பெண் இருவரில் ஒருவராவது தைரியமானவரா என்று பார்க்கவேண்டும். இருவரும் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருந்துவிடக் கூடாது.

மூன்றாமிடத்தில் பாவகிரகங்களான சூரியன், செவ்வாய் பலம்பெற்றிருப்பின், அதிக தைரியமுள்ளவராக இருப்பார். மூன்றாம் வீட்டில் சுபகிரகங்கள் இருந்தால் கொஞ்சம் தைரியம் குறைந்தவ ராக வாழ்வார். மூன்றாம் வீட்டில் நீசம் முதலான வகையில் பலமிழந்த கிரகங்கள் இருப்பின் தைரியமில்லாத கோழையாக இருப்பார். மூன்றாம் இடத்தில் உச்சம் முதலான வகையில் பலம்பெற்றிருந்தால் தைரியமானவராக இருப்பார்.

Advertisment

pp

மூன்றாமிட அதிபதி நீசமடைந்து, ஐந்தாமிட அதிபதியும் சேர்ந்திருந்தால் எப்போதும் அவர் குழப்ப நிலையிலேயே வாழ்வார். அடிக்கடி தைரியம் குறையும். இதனால் மனக்குழப்பம் ஏற்படும். மேலும் ஐந்தாமிடத்து அதிபதி நீசம் பெற்று மூன்றாம் அதிபதியுடன் சேர்ந்திருந்தாலும் எவ்வளவுதான் தைரியசாலியாக இருந்தாலும் மனக் குழப்பத்தில் தைரியத்தை இழந்து விடுவார்.

பலமிழந்த மூன்றாமிட அதிபதி லக்னாதிபதியுடன் சேர்ந்திருந்தால் தைரியம் இருக்காது. உடம்பு வலுவாக இருக்காது. அவர் இரண்டாமிட அதிபதியுடன் சேர்ந்திருந்தால் பேச்சில் தைரியமிருக்காது. நான்காமிட அதிபதியுடன் சேர்ந்திருந்தால் தொழிலில் தைரியமிருக்காது. ஐந்தாமிட அதிபதியுடன் சேர்ந்திருந்தால் புத்தியில் தைரியமிருக்காது. ஆறாமிட அதிபதியுடன் சேர்ந்திருந்தால் எதிரி களிடம் கோழையாக நடந்து கொள்வார். ஏழாமதிபதியுடன் சேர்ந்திருந்தால் மனைவிக்கு பயப்படுபவராக வாழ்வார். எட்டாமிட அதிபதியுடன் சேர்ந் திருந்தால் எப்போதும் மரணபயம் உள்ளவர். ஒன்ப தாமிட அதிபதியுடன் சேர்ந்திருந் தால் தந்தையிடமும், பெரிய வர்களிடமும் பேசுவதற்குத் தயக்க முள்ளவர். பத்தாமிட அதிபதி யுடன் சேர்ந்திருந்தால் உத்தி யோகம் அல்லது செய்யும் தொழிலில் தைரியமில்லாதவர். பதினோறாமிட அதிபதி யுடன் சேர்ந்திருந்தால் நண்பர் களுக்கு பயப்படுவார். பன்னி ரண்டாம் அதிபதியுடன் சேர்ந் திருந்தால் அடிக்கடி வீட்டை விட்டு ஓடிவிடுவார். எனவே மூன்றாமிடத்து அதிபதியைத் தேர்வுசெய்து வரன் தேடவேண்டும். வரன் தேடிய வர்களும், தேடாதவர்களும், தைரியமில்லாதவர்களும் கீழ்க்கண்ட பரிகாரம் செய்து பலன்பெறலாம்.

பரிகாரம்-1

Advertisment

உங்கள் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சனேயரைத் தொடர்ந்து ஒன்பது சனிக்கிழமைகள் தரிசித்து, இரண்டு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடவேண்டும். ஆஞ்சனேயர் தைரியத்தைக் கொடுப்பார்.

பரிகாரம்-2

நல்லெண்ணெய் விளக்கேற்ற முற்படாதவர்கள் ஒன்பது சனிக் கிழமைகள் "தைரியம் புருஷ லட்சணம்' என்று, தனித்தனியாக 108 சிறு துண்டுத் தாள்களில் எழுதி, அதை ஆஞ்சனேயருக்கு மாலையாகப் போடவேண்டும். ஒன்பதாவது வாரம் வடைமாலை சாற்றிட பயம் விலகிப் போகும்.

செல்: 94871 68174