Advertisment

கண்டாந்த தோஷம் தீர்க்கும் பரிகாரம்! பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/solving-continuous-thing-prasanna-astrologer-i-anandi

"அரிது அரிது மானிடராதல் அரிது. அதனினும் கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது' என்ற ஔவையார் பாடல் வரிகளி லிருந்து, மனிதப் பிறவி மிக உயர்வானது என அறியமுடிகிறது.

Advertisment

மனித வாழ்வில் ஜோதிடத்தின் பங்கு அளப்பரியது. ஜோதிடம் என்பது ஜோதி இருக்கிற இடமாகும்.

ஒரு ஆன்மாவின் பயணத்தை எளிமை யாக்கி, தனது பிறப்பின் நோக்கத்தை அறியச்செய்து, ஆன்மாவின் இலக்கையடைய உதவும் உயர்ந்த சாஸ்திரம் ஜோதிடம். வானில் சூரியனைச் சுற்றிவரும் கிரகங்களுக்கும் மனித வாழ்க்கையில் உண்டாகும் மாற்றங் களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கு வது ஜோதிட சாஸ்திரமாகும். ஜோதிடத் தின்மூலம் ஒரு மனிதனுடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கப் போகிற சம்பவங்களை எளிதாக அறிய முடியும். அதற்கு ஜாதகம் மிகவும் அவசியம்.

மனிதனுக்கு, பொருள் தேடும் விஷயத் திற்கு உதவியாகவும், ஆபத்துக் காலத்தையறிய உதவும் கலங்கரை விளக்கமாகவும், எதிரி களிடமிருந்து வெற்றியடைய விரும்பும் சமயங்களில் ஒரு நல்ல மதிநுட்ப மந்திரி யாகவும் ஜோதிடம் திகழ்கிறது. இத்தகைய சிறப்புடைய ஜோதிட சாஸ்திரம் பலருடைய வாழ்க்கையில் பல நல்ல திருப்புமுனைகளைத் தந்துள்ளது. வெகுசிலருக்கு, ஜோதிடம் என்ற பெயரைக் கேட்டாலே மனவருத்தம் வருகிறது.

இந்த கருத்து வேறுபாட்டிற்கான காரணத்தை விளக்குவதே இந்தக் கட்டுரை.

Advertisment

ஜோதிடரீதியாக, ஒருவரது ஜாதகத்தின் முக்கிய அங்கமாக விளங்குவது ராசியும் நட்சத்திரமும்தான். மனித வாழ்வின் விதியை நிர்ணயிப்பதில் நட்சத்திரம் பெரும்பங்கு வகிக்கிறது. நட்சத்திரங்கள் ராசி மண்ட லத்தில் நின்ற நிலையே தனிப்பட்ட குணா திசயங்களைமீறி நன்மை, தீமை எனும் பலன் களை வழங்கும் சக்தியை அடைகின்றன. மொத்த நட்சத்திரங்கள் 27. 360 பாகைகள் கொண்ட ராசி மண்டலத்தில், ஒவ்வொரு நட்சத்திரமும் 13 பாகை, 20 கலைகள் கொண்டதாகும்.

மொத்த ராசிகள்– 12.

மொத்த நட்சத்திரங்கள்– 27.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்– 4 பாதங்கள்.

மொத்த நட்சத்திரப் பாதங்கள்.– 108 (27 நட்சத்திரங்கள் ஷ் 4 பாதங்கள்).

ஜோதிடத்தில் பலன் மாறுவதற்கான காரணங்கள் பல இருந்தாலும், மூன்றுவிதமான காரணங்களைப் பிரதானப்படுத்தலாம்.

1. லக்ன சந்தியில் குழந்

1. லக்ன சந்தியில் குழந்தை பிறப்பது.

2. நட்சத்திர சந்தியில் குழந்தை பிறப்பது.

3. கண்டாந்த தோஷம்.

1. லக்ன சந்தியில் குழந்தை பிறப்பது

லக்னம் என்பது சூரிய ஒளியின் பயணம். அதாவது சூரியன் உதயமான நேரத்திலிருந்து, தோராயமாக இரண்டு மணி நேரம்வீதம் சூரியஒளி ஒரு ராசியில் பயணிக்கும். குழந்தை பிறக்கும் நேரத்தில் சூரியஒளி நின்ற புள்ளியே குழந்தையின் ஜென்ம லக்னமாகும். ஜென்ம லக்னம் என்பது ஒரு ஆன்மாவின் உயிர். லக்ன சந்தி என்பது ஒரு லக்னம் முடிந்து அடுத்த லக்னம் தொடங்கும் நேரமாகும். அதாவது இரண்டு லக்னங்களும் சந்திக்கும் குறிப்பிட்ட நேரத்தை லக்ன சந்தி என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

2. நட்சத்திர சந்தியில் குழந்தை பிறப்பது

குழந்தை பிறந்த நேரத்தில் சந்திரன் நின்ற நட்சத்திரமே ஜென்ம நட்சத்திரமாகும். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு நட்சத்திரத்தின் நான்காவது நட்சத்திரப் பாதம் முடியும்போதும், அடுத்த நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆரம்பமாகும்போதும் குழந்தை பிறந்தால், அது நட்சத்திர சந்தியாகும்.

3. கண்டாந்த தோஷம்

ssv

கண்டாந்தம் என்றால் கண்டம் + அந்தம். ஒரு நட்சத்திரம் முடியும்போதுள்ள இரண்டு நாழிகை, ஒரு நட்சத்திரம் ஆரம்பமாகும்போதுள்ள இரண்டு நாழிகை ஆகிய இரண்டும் கண்ட நாழிகை எனப் படும். இந்த இரண்டும் சேர்ந்த நான்கு நாழிகையானது கண்டாந்த நாழிகை எனப் படும். இந்த கண்டாந்த தோஷமானது ரேவதி- அசுவினி, ஆயில்யம்- மகம், கேட்டை- மூலம் ஆகிய மூன்று ஜோடி நட்சத்திரங்களுக்கு மட்டுமே உண்டு.

அசுவினி, மகம், மூல நட்சத்திரத்தில் 1-ஆம் பாதமும், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் 4-ஆம் பாதமும் கண்டாந்த தோஷம். கண்டாந்த வேளைகளில் பிறந் தவர் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. மேலும் ஜாதகரை மட்டுமன்றி, அவரது பெற்றோர், உறவினரைக்கூட பாதிக்கவல்லது.

ஜென்ம லக்னம் மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத ஜாதகர்களின் மனவருத்தம் ஜோதிடத்தின்மீது நம்பிக்கைக் குறைவைத் தருகிறது. லக்ன- நட்சத்திர சந்தியில் பிறப்பவர்களின் ஜாதகப் பலனை நிர்ணயிப்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான்.

ஒரு குழந்தையின் ஜென்ம நட்சத் திரத்திற்கும் ஜென்ம லக்னத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. நட்சத்திரம் என்பது உடல். லக்னம் என்பது ஆன்மா; உயிர்ப் புள்ளி. உடலும் உயிரும் இணைந்ததே ஒருவருடைய வாழ்க்கை. உயிரில்லாத உடலால் தனித்தியங்கமுடியாது. அத்துடன் ஒருவரின் வாழ்க்கைச் சம்பவங்கள் தசா புத்தியைக்கொண்டே முடிவு செய்யப் படுகின்றன. நட்சத்திரப் பாதம் தவறாகும் போது தசாபுக்தி கணிதத்திலும் மாற்றம் ஏற்படும்.

ஒரு உடலை இரண்டு உயிர் இயக்கினால், உடலால் செயல்படமுடியாது. உதாரணமாக, மேஷ ராசி முடிந்து ரிஷப ராசி ஆரம்பிக்கும்போது அல்லது மேஷ லக்னம் முடிந்து ரிஷப லக்னம் ஆரம்பிக்கும்போது ஒருவர் பிறந்திருந்தால், அவருடைய ஜாதகப் பலன் இரண்டு ராசி- இரண்டு லக்னப் பலன்களுடன் இணைந்தே இருக்கும். இதுதான் ஜோதிடருக்கு "செக் பாயின்ட்'. தவறினால் ஜோதிடப் பலன்கள் ஜாதகரின் வாழ்க்கையோடு பொருந்தாமல் போகலாம். இதுபோன்ற லக்ன- நட்சத்திர சந்தியை முறைப்படுத்தாத ஒரு ஜாதகத்தைக்கொண்டு ஒருவருக்கு வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்யும்போது, அது தவறாக அமைந்து ஜாதகரின் வாழ்க்கையே தடம் புரண்டு விடும்.

எது எப்படியிருந்தாலும், இதுபோன்ற அமைப்பில் பிறந்தவர்களுக்குத் தீர்வு கிடைக்கச்செய்ய முடியுமா என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பெரும்பாலும் வாக்கியம்- திருக்கணிதம் என இரண்டு பஞ்சாங்கங்கள் நடைமுறையில் இருப்பதே இந்த நட்சத்திர- லக்ன சந்திக்கு முதல் காரணமாகிறது. வாக்கியப் பஞ்சாங்கம் சிறந்ததா? திருக்கணிதப் பஞ்சாங்கம் சிறந் ததா என்று ஆய்வுசெய்தால், ஒரு ஜாத கருக்கு இந்த ஜென்மம் முழுவதும் தீர்வு கிடைக்கச்செய்ய முடியாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இரண்டு மாறு பட்ட முரண்பாடான கருத்து இருப்பது உலக இயல்பு. அதனால், ஜோதிடர்கள் சுய அனுபவத்தில் எந்தப் பஞ்சாங்க முறை சரியாகவருகிறதோ அதைப் பயன்படுத்தலாம். சர்ச்சைக்குரிய விஷயத்திற்குத் தீர்வுகாண முயல்வது காலம், நேரத்தை வீணாக்கும் செயலாகும்.

நாம் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்ட மேஷ- ரிஷப லக்ன, நட்சத்திர சந்தியில் பிறந்த ஒருவரின் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு கொடுக்கமுடியுமென்று பார்க்கலாம்.

ஒருவர் மேஷ லக்னத்தில் பிறந்திருந்தால் தலை அல்லது முகத்தில் காயம்பட்ட தழும்பு அல்லது மச்சம் இருக்கும். உஷ்ண தேகம் உடையவராக இருப்பார். எடுத்த காரியத்தை இறுதிவரை போராடி முடிக்கவேண்டு மென்ற உறுதியான எண்ணமுடையவராக இருப்பார்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் அழகாக இருப்பார்கள். லௌகீக வாழ்வில் அதிக நாட்டமுடையவர்கள். பிறருடன் இனிமை யாக- முகம் சுளிக்காமல் பழகுவார்கள். கல்வி, கலைத்திறமை, இசைஞானம், நடனமாடுதல், நடிப்பு, ஓவியம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப் பார்கள்.

ஒரு லக்னத்திற்கும் அடுத்த லக்னத் திற்குமுள்ள குணாதிசயங்களைக் கொண்டு, ஒருவரின் லக்னம் தொடர்பான பிரச் சினையை மிக எளிமையாக முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம். இதேபோல் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி இயல் புண்டு. ஜாதகரின் குண இயல்புகள் எந்த நட்சத்திரத்தோடு பொருந்திவருகிறதோ, அந்த நட்சத்திரத்தை அடிப்படை யாகக்கொண்டு ஜாதகரின் நடை, உடை, பாவனை, கடந்தகால, நிகழ்கால நிகழ்வுகள் ஆகியவற்றை தீர்மானித்துப் பலன் கூறினால் தீர்வு கிடைக்கும்.

ராசி, நட்சத்திரம், லக்னத்தை குணா திசயத்தோடு ஒப்பிட்டுத் தீர்வு கிடைக்கச் செய்வது, காதைச்சுற்றி மூக்கைத் தொடு வதற்கு ஒப்பாகும். ஒரு பிரச்சினையைத் தரும் பிரபஞ்சம் அதற்கு எளிதான தீர்வையும் தந்திருக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ராசி, லக்னம் மாறினாலும், 99 சதவிகிதத்தினருக்கு குரு, சனி, ராகு- கேதுக்கள் நிற்குமிடம் மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த நான்கு, வருட கிரகங்களைக்கொண்டே ஜாதகருக்குத் தீர்வு கிடைக்கச்செய்ய முடியும். இதற்கும்மேல் ஜாதகர் வந்த நேரத்தைக்கொண்டு பிரசன்னம் பார்த்தும் தீர்வுகொடுக்க முடியும்.

மேலும், உளவியல்ரீதியாக இந்தப் பிரச்சினையை ஆராய்ந்தால், ஒவ்வொரு வரும் அவரவர் செய்த கர்மாவின் அடிப் படையில், வாழ்வில் லாப- நஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள். சாதகமான பலன்கள் நடைபெறும்போது மனது மகிழ்ச்சி யாக உள்ளது. சில அசுபப் பலன்களை சந்திக்கும்போது மன சஞ்சலம் மிகுதியா கிறது.

காலச்சக்கரப் பிடியில் சிக்கிக்தவிக்கும் மனிதர்கள் விதியின் பிடியிலிருந்து விடுபட்டு வெற்றிபெற வேண்டுமென்ற ஆவலில், தான் அனுபவிக்கவிருக்கும் பலன்களைமீறி சில திட்டமிடுதலைச்செய்து, அவற்றையடைய முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் மனித வாழ்க்கை உள்ளது. அந்த முயற்சியில் சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சங்கடங்களையும் சந்திக்கநேருகிறது. வெற்றி கிடைக்கும்போது தன் திறமையை நினைத்துப் பெருமைப்படும் மனிதன், தோல்வியை சந்திக்கும்போது தன் கவனத்தை ஜோதிடத்தின் பக்கம் திருப்புகிறான்.

ஜோதிடத்தின்மூலம் தனது விதிப்பயனை மாற்றும் பரிகாரம் செய்து, வாழ்வில் வளம்பெற முடியுமென்ற எண்ணம் மிகுதியாகிறது. வேதாகம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில பூஜைமுறைகளை மேற்கொள்ளும்போது சில பலன்கள் மாற்றியமைக்கப்படலாம் என்றாலும், அது வெகுசிலருக்குத் தற்காலிகத் தீர்வைத் தருகிறது.

ஒருவர், தன் வாழ்வில் சந்திக்கிற அத்தனை அனுபவங்களுக்கும் காரணத்தை ஆராய்ந்தால், அவர்களுடைய ஊழ்வினையே முன்வந்து நிற்கும். இதைத்தான் நமது முன்னோர்கள் "தீதும் நன்றும் பிறர் தர வாரா', ‘"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்' என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி யென்றால், இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தீர்வே கிடையாதா என்ற ஆதங்கக் கேள்வி எழும். இதுபோன்ற தீராத பிரச்சினைகளால் ஏற்படும் மனவுளைச்சலுக்கு, ஜோதிடத்தில் எளிமையாகத் தீர்வு தரமுடியும். கோட்சார குருவுக்கும் ஜனனகால சனிக்கும் சம்பந்தம் ஏற்படும்போது அல்லது கோட்சார சனி, ஜனனகால குருவுக்கு சம்பந்தம் ஏற்படும்போது செய்யப்படும் வழிபாடு நிரந்தரத் தீர்வு தரும் என்ற உண்மை தெரியாமல், ஜோதிடத்தின்மேல் பழிசுமத்துகிறார்கள். உண்மையான பக்தி மற்றும் சரணாகதி ஒரு ஆன்மாவின் கர்ம வினையை இல்லாமல் செய்துவிடும். நிச்சய மாக, ஜோதிடத்தின்மூலம் எதிர்கால வாழ்க்கையை நிம்மதியாகவும், ஒளிமய மாகவும் அமைத்துக்கொள்ளலாம்.

பரிகாரம்

லக்ன- நட்சத்திர சந்தியில் ஒரு ஜனனம் நிகழ்வது கர்மவினை தோஷமே. உலக மக்கள்தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இதுபோன்ற லக்ன- நட்சத்திர சந்திப் பிரச்சினை ஏற்படுகிறது. இது சஞ்சித கர்மாவின் விளைவு. தினமும் மாலை 4.30 மணிமுதல் 6.00 மணிவரையிலான பிரதோஷ வேளையில், சிவபுராணம் படித்துவர கர்ம வினை குறைந்து காரியசித்தி கிட்டும்.

கண்டாந்தத்தில் குழந்தை பிறந்தால், நவகிரக சாந்தி ஹோமங்கள் செய்து கொள்வது நல்லது.

செல்: 98652 20406

bala060320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe