னிதர்களின் நிகழ்கால மற்றும் எதிர் காலத் தேவைகளுக்கான அனைத்துத் தகவல்களுக்கும் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களே ஆவணங்கள்.

ஒரு நாட்டின் குடிமகனாகப் பிறந்தது முதல் வாழ்நாள் இறுதிவரை பல்வேறு விதமான ஆவணங்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. உதாரணமாக ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, வங்கி காசோலை, பாஸ்புக், ஏ.டி.எம் கார்டு, பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட், சொத்துப் பத்திரம், உயில், பட்டா, ஆர்.சி புக், ஜாமின் பத்திரம் போன்ற அனைத்தும் ஆவணங்களே. ஒருவரின் பெயர் எழுதிப் பதிவுசெய்யப்பட்ட அனைத் தும் ஆவணங்களே.

perumal

ஜோதிடரீதியாக ஒருவரின் ஆவணங்களைப்பற்றிக் கூறுமிடம் லக்னத்திற்கு மூன்றாமிடம் என்றாலும், ஆவணங்களுக்கான காரக கிரகம் காலபுருஷ மூன்றாம் அதிபதியான புதன் பகவான். ஒருவரின் ஜனனகால ஜாதகத் தில் மூன்றாமிடம் என்பது உபஜெய ஸ்தானம், சகாய ஸ்தானம், முயற்சி ஸ்தானம், தைரிய, வீரிய ஸ்தானம், ஞாபக சக்தி மற்றும் வாழ்வில் ஏற்படக்கூடிய மாற்றத்தைப்பற்றிக் கூறுமிடம்.

லக்ன பாவத்தின் பாவாத்பாவமான மூன்றாமிடம் ஒருவருக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் பாவகம். ஆக, ஒருவர் வாழ்வில் அனைத்துவிதமான சகாயமும் பெற்றிட மூன்றாமிடம் பலமாக இருப்பது மிக அவசியம்.

மூன்றாம் அதிபதி மற்றும் மூன்றில் நின்ற கிரகங்களின் வலிமையைப் பொருத்தே ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான சாதக, பாதகங்கள் நிகழ்கின்றன.

ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான அனைத்தும் சுபப்பலனாக நடைபெற புதனும் மூன்றாமிடமும் வலிமை பெறவேண்டும். மூன்றாமிடமும் புதனும் வலிமை குறைந்து, ராகு- கேதுக்களின் சம்பந்தம் பெறும்போது ஆவணங்களால் ஏற்படும் அசுபப் பலன்கள், மன உளைச்சலை சற்று மிகைப்படுத்தலாகவே தருகிறது.

இனி மூன்றாமிடத்தில் நிற்கும் கிரகங்க ளால் ஏற்படும் ஆவணங்கள் தொடர்பான பலன்களையும், அதற்கான தீர்வையும் காணலாம்.

சூரியன்

மூன்றில் சூரியன் நிற்பவர்கள் விடாமுயற்சி உடையவர் கள். தனித்த சூரியனால் பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. சூரியனுடன் புதன் சம்பந்தம் பெறும்போது அரசின் சட்ட, திட்டங்களுக்கான முக்கிய, முறையான ஆவணங்களைத் தவறவிடுவார்கள்.

புறம்போக்கு நிலங்களைப் பட்டா போட்டு வாங்க, விற்க முயற்சிப்பவர்கள். நிலத்தை அடமானம் வைத்துப் பணம் பெறுபவர்கள். சிலருக்கு அசலும் வட்டியும் கட்டியும் நிலத்தைக் கடனுக்காக இழக்கும் சூழ்நிலையும் உருவாகிறது.

இதுபோன்ற அமைப்பு ஜாதகத்தில் இருப்பவர் கள் சுய ஜாதக அமைப்பையறிந்து நிலத்தை அடமானம் வைக்க வேண்டும். சூரியன், புதன், ராகு சம்பந்தம் பெறும்போது, அரசின் ஆவணங்களில் தானே திருத்தம்செய்து பயன்படுத்துவார்கள். பட்டா, பாஸ்போர்ட், பள்ளிச் சான்றிதழ்கள்களைத் தங்களுக்கு சாதகமாகத் திருத்திக்கொள்வார்கள். இந்த கிரகச் சேர்க்கை 8-க்கு 8-ஆமிடமான 3-ஆமிடத்தில் இருப்பதால், குறைந்தது ஒன்பது ஆண்டுகள் அரச தண்டனையை அனுபவிப்பார்கள்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை புதன் ஓரையில் காலை 8.00-9.00 மணிக்குள் சிவனுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்துவர பூரணநலம் உண்டாகும்.

சந்திரன்

மூன்றில் சந்திரன் நின்றால் அடிக்கடி வீடு மாற்றம், ஊர் மாற்றம் செய்துகொண்டே இருப்பார்கள். பயணத்தில் ஆவணங் களைத் தொலைப்பார்கள். அல்லது வைத்த இடம் மறந்துபோகும். அல்லது ஆவணங்களில் திருத்தம் இருக்கும். சிலர் எப்பொழுதும் ஒரேமாதிரியாக கையெழுத்திடாமல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியாகக் கையெழுத்திட்டுப் பிரச்சினையை சந்திப்பார்கள். சிலருக்கு ஆவணங்களில் பெயரில் எழுத்துப்பிழை இருக்கும். சந்திரனுடன் புதன் சம்பந்தம் பெறும்போது, தாய்மாமனுடன் சொத்தில் உரிமை மாற்றம் செய்யும்போது கருத்து வேறுபாடு வரும். சந்திரனுடன் புதன், ராகு சம்பந்தம் பெறும்போது ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகளால் மனநோய் ஏற்படுகிறது.

பரிகாரம்

திங்கட்கிழமை நண்பகல் 12.00-1.00 மணிக்குள் புதன் ஓரையில் தயிர்சாதம், நீர்மோர், பால் போன்ற உணவுப் பொருட்களை தானமாகக் கொடுத்துவர, பெரும் வாழ்வியல் மாற்றம் உண்டாகும்.

செவ்வாய்

மூன்றில் செவ்வாய் இருந்தால் உடன்பிறந்த சகோதரர்களுக்கு சொத்தை ( விட்டுக்கொடுத்து) மாற்றி எழுத நேரும். செவ்வாய்க்கு புதன், ராகு சம்பந்தம் இருக்கும்போது சொத்தில் அல்லது பத்திரத்தில் அல்லது சொத்தை மாற்றி எழுதுவ தில் வில்லங்கம் ஏற்படும். இதனால் சகோதர- சகோதரிக்குள் ஒற்றுமைக்குறைவு ஏற்படும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை மாலை 3.00-4.30 மணிவரையிலான ராகு வேளையில் துர்க்கை யம்மனுக்குப் பச்சைப் புடவை சாற்றி, எலுமிச்சை மாலை அணிவித்து, குங்கும அர்ச் சனை செய்து வழிபட, சுமுகமான தீர்வும் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமையும் ஏற்படும்.

புதன்

மூன்றில் புதன் இருப்பவர்களுக்கு அடையாள அட்டையில் இருக்கும் முகவரியும், குடியிருக்கும் முகவரியும் ஒன்றாக இருக்காது. ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வைத்திருப்பார்கள். அல்லது அடிக்கடி வங்கிக் கணக்கை மாற்றிக்கொண்டிருப்பார்கள். அல்லது பராமரிக்காத வங்கிக் கணக்கு வைத்திருப்பார்கள். பெற்றோர்கள் வைத்த பெயரை மாற்றுவார்கள். திருமணப் பத்திரிகை யில் பிழை இருக்கும். அடிக்கடி பள்ளிக் கூடத்தை மாற்றிக்கொள்வார்கள். செல்போன் நம்பரை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். பத்திரப் பதிவில் பிரச்சினை இருக்கும். புதனுக்கு ராகு சம்பந்தம் இருப்பவர்கள் நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால், ஜாமின் பத்திரத் தாள் அல்லது ஒப்பந்தப் பத்திரத்தாள் வகையில் ஏமாற்றப்படுகிறார்கள்.

இந்த கிரகச் சேர்க்கை இருக்கும் சில திருமண மாகாத மற்றும் திருமணமான இளம் பெண்கள் தவறான நட்பில் கடிதங்கள் அல்லது போட்டோக்கள் மற்றும் நட்பிற்கு அடையாள மான ஆவணங்களால் மிரட்டப்படுகிறார்கள்.

பரிகாரம்

புதன்கிழமை பகல் 1.00-2.00 மணிவரை யிலான புதன் ஓரையில் பிரத்தியங்கரா தேவியை வழிபட தீர்வு தேடிவரும்.

குரு

மூன்றில் குரு இருப்பவர்கள் ஆவணங்களை முறையாக, கவனமாகப் பாதுகாப்பவர்கள். கோவில் மற்றும் தர்ம ஸ்தாபனங்களின் ஆவணங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள். மாமனாரின் ஆவணங்களைப் பாதுகாப்பவர்கள். குருவுடன் புதன், ராகு சம்பந்தம் இருப்பவர்கள் பேராசையில் நிர்வாகக் கணக்கு வழக்கில் முறைகேடு செய்து கெட்டபெயரைத் தேடிக்கொள்வார்கள்.

பரிகாரம்

வியாழக்கிழமை காலை 10.00-11.00 வரையான புதன் ஓரையில் சித்தர்களின் ஜீவசமாதிக்குச் சென்று நெய்தீபம் ஏற்றி மனதார வழிபட்டுவர கைமேல் பலன் உண்டாகும்.

சுக்கிரன்

மூன்றில் சுக்கிரன் இருப்பவர்கள் நகைச் சீட்டு மற்றும் ஏலச்சீட்டு கட்டிய ரசீதைத் தொலைப்பவர்கள். சுக்கிரனுக்கு புதன், ராகு சம்பந்தம் இருப்பவர்கள் போலி கௌரவம் மற்றும் ஆடம்பரத்திற்காக வருமானத்திற்கு சம்பந்தமில்லாத பெரும்கடனை வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திட்டு வாங்குதல், மதிப்புமிக்க நகைகளை நண்பர்கள்மூலம் அடமானம் வைத்து ஏமாறுதல் போன்றவற்றால், வெளியே சொல்லவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவிக்கிறார்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை காலை 7.00-8.00 மணி வரையிலான புதன் ஓரையில் மகாவிஷ்ணு வையும், மகாலட்சுமியையும் துளசியால் அர்ச்சனைசெய்து வழிபட பூரண நிம்மதி கிடைக்கும்.

சனி

மூன்றில் சனி இருப்பவர்கள் சம்பந்தமில் லாத பழைய ஆவணங்களை எல்லாம் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். முன்னோர் களின் முக்கியமான ஆவணங்களை வைத்த இடத்தை மறப்பவர்கள். வேலைக்கான நேர்காணல் அட்டையை, அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை தவறவிடுபவர்கள். சனிக்கு புதன், ராகு சம்பந்தம் இருப்பவர்கள் தொழில் கூட்டாளிகளால், ஜாமின் போடுதல் மற்றும் போலி ஆவணங்களால் ஏமாற்றப் படுகிறார்கள். தொழில் போட்டியாளர்கள் விரிக்கும் மாயவலையில் சட்டச்சிக்கலை சந்திக்க நேர்கிறது. தொழிலுக்காக வெற்றுக் காசோலை கொடுப்பது, வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை கொடுத்து வம்பில் சிக்கி மன உளைச்சலை சந்திப்பது போன்ற இன்னல்களை அடைகிறார்கள்.

பரிகாரம்

சனிக்கிழமை காலை 11.00-12.00 மணி வரையான புதன் ஓரையில் சக்கரத் தாழ்வாருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபட மன உளைச்சல் நீங்கும்.

ராகு

மூன்றில் ராகு இருப்பவர்கள் ஆவணங்களில் சட்டத்திற்குப் புறம் பாகத் திருத்தம் செய்பவர்கள். ஒருசிலர் சட்டத்திற்குப் புறம்பாக ஏலச்சீட்டு நடத்துதல், தவறான பணப் பரிமாற்றம், பணத்தைப் பன்மடங் காகப் பெருக்கிக் தருதல், ஏ.டி.ம் கார்டு இல்லாமல் மற்றவர்கள் கணக்கிலுள்ள பணத்தை "ஸ்வாகா' செய்வது போன்ற ஆதாரமில்லாத தொழில்செய்து சட்டத்திடம் சிக்குபவர்கள். நல்வர் களாக நடித்துப் பிறரை ஏமாற்று பவர்கள். ஒரு குடும்பத்தை வாழவிடா மல் செய்பவர்களுக்குப் பரிகாரம் சொன்னால் பிரபஞ்சம் ஏற்றுக் கொள்ளாது.

கேது

மூன்றில் கேது உள்ள ஜாதகருக்கு ஆவணங்களால் சட்டச்சிக்கல் மற்றும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. கேது விற்கு புதன் சம்பந்தம் இருந்தால் வங்கியில் வாங்கிய கடனைத் திரும்ப செலுத்தமுடியாத சிக்கல் போன்ற சட்ட ரீதியான சிக்கலை சந்திக்க நேர்கிறது.

பரிகாரம்

வங்கியால் சட்டச்சிக்கலை சந்திப்ப வர்கள் பிரச்சினை தீரும்வரை தினமும் மாலை 4.30-6.00 மணிவரையிலான பிரதோஷ வேளையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட்டுவர பொருளா தாரம் உயரும். சட்டச்சிக்கல் தீரும். மேலே கூறியவற்றிலிருந்து நாம் ஒன்றைத் தெளிவாக உணரமுடிகிறது. அதாவது மூன்றாமிடத்தில் நிற்கும் தனித்த கிரகம் ஏற்படுத்தும் பாதிப்பை விட புதன் மற்றும் ராகு இணைவதால் ஏற்படும் பாதிப்பு ஜாதகருக்கு போராட் டமான வாழ்க்கையைத் தருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406