சென்ற இதழ் தொடர்ச்சி

சூரியன் + ராகு- கேது

சூரிய தசை நடந்தால் ராகு- கேது தசை நடப்பவரைத் திருமணம் செய்யக்கூடாது. இந்த கிரக சம்பந்தம் கிரகண தோஷம். இது ஆண், பெண் இருவருக்கும் பிரச்சினைகளைத் தரும். கௌரவத்தைக் குறைக்கும். ஊர்உலகத் திற்காக வாழநேரும். அரசுவகை ஆதரவைத் தடைசெய்யும். ஆண் வாரிசு குறையும்.

பரிகாரம்

Advertisment

கிரகண காலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும்.

சந்திரன் + புதன்

ஜனனகால ஜாதகத்தில் சந்திரன், புதன் சம்பந்தமிருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். இந்த கிரக சம்பந்தம் புதன், சந்திரன் வீடுகளில் இருந்தால் நரம்பு, தோல் சம்பந்தப்பட்ட நோய் உண்டு. மனநோயாளி. மன அழுத்தம் தரும்.

Advertisment

திருமணத்திற்குப் பிறகு ஆண், பெண் இருவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தவறான நட்பை ஏற்படுத்தும். மனசஞ்சலத்தால் எளிதில் கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரும்.

பரிகாரம்

pp

திருவெண்காடு புதன் ஸ்தலம் சென்று வழிபாடு செய்யவேண்டும்.

புதன்கிழமை சக்கரத்தாழ்வாரை 108 முறை வலம் வரவேண்டும்.

சந்திரன் + சுக்கிரன்

சந்திரன் மாமியார்; சுக்கிரன் மருமகள்.

இந்த கிரகச் சேர்க்கை உள்ள ஆண், பெண் இருவருக்கும் மாமியார் டார்ச்சர் உண்டு.

சந்திரன் வலிமை குறைந்திருக்கும் பெண்களை மாமியார்கள் பிறந்த வீட்டிற்கு அனுப்ப எந்தப் பழியையும் சுமத்தத் தயங்குவதில்லை. சுக்கிரன் வலிமை படைத்த பெண்கள் மாமி யாரை வீட்டுவேலை செய்யும் அடிமையாகப் பயன்படுத்து கிறார்கள். ஆண்கள் மனை வியின் அன்பிற்காக மாமி யாரை அனுசரித்து வாழும் நிலையை ஏற்படுத்தும். பிடிக்காத மாமியாருக்காக மனைவியைப் புகுந்த வீட்டிற்கே அனுப் பாமல் இருக்கும் கணவரும் உண்டு.

பிறந்த வீட்டுப் பெண்ணுக்கும், புகுந்த வீட்டுப் பெண்களுக்கும் மனஸ்தாபம் ஏற்படுத்தும். இதனால் கணவன்- மனைவி உறவில் விரிசல் ஏற்படும். பண இழப்பு மிகுதியாகும்.

பணம் வரும் வழியும் தெரியாது; போகும் வழியும் தெரியாது.

பரிகாரம்

திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்குமேல் பச்சரிசி மாவில் மாவிளக்கு தீபமேற்றி மாரியம்மனை வழிபாடு செய்யவேண்டும்.

சந்திரன் + சனி

சந்திர தசை, சனி தசை நடக்கும் ஜாத கத்தைப் பொருத்தக்கூடாது. ஆண், பெண் இருவரையும் திருமணத்திற்கு முன்- பின் பாதிக்கும். வாழ்க்கையில் தடை, தாமதத்தைத் தரும். காலாகாலத்தில் எதுவும் நடக்காது.

எல்லாம் காலதாமதமாகவே நடக்கும். தாமதத் திருமணம், மன உளைச்சல், நிம்மதியின்மை, தாயார்வழி விரயம், வியாதி, அடிக்கடி தொழில், வேலையை மாற்றுதல் இருக்கும். கால்சிய சத்துக் குறைவு, மூட்டுத் தேய்மானம் போன்ற அவஸ்தையைத் தரும்.

பரிகாரம்

சனிக்கிழமைகளில் பசுவுக்கு பச்சரிசி, அகத்திக்கீரை உண்ணத் தரவேண்டும்.

சந்திரன் + ராகு- கேது

சந்திர தசை நடப்பவர்களுக்கு ராகு- கேது தசை நடக்கும் ஜாதகத்தையோ, ராகு- கேது தசை நடப்பவர்களுக்கு சந்திர தசை நடக்கும் ஜாதகத்தையோ இணைக்கக் கூடாது. இந்த கிரகச் சேர்க்கை ஆண், பெண்களை மனமொன்றி வாழவிடுவதில்லை. தீராத மன உளைச்சல், மனநோய் மிகுதியாக உள்ளவர்கள். குடும்ப வாழ்க்கையை வெறுத்து தனிமைப்படுத்தும் கிரகச் சேர்க்கை. சட்ட ரீதியாக விவாகரத்து பெற்றவர்களுக்கு இந்த கிரக சம்பந்தம் இருக்கும். இவர்களின் பிரிவினைக்குக் காரணமே இருக்காது.

முறையான திருமணப் பொருத்தம் செய்தால் மட்டுமே திருமண வாழ்க்கை நீடிக்கும்.

பரிகாரம்

சர்ப்பமுள்ள புற்றுக்குச் சென்று நெய் தீபம் இடவேண்டும்.

தேங்காய், எலுமிச்சையில் அஷ்டமி நாட்களில் திருஷ்டி கழிக்கவேண்டும்.

செவ்வாய் + புதன்

செவ்வாய், புதன் பகை கிரகங்கள் என்பதால், இந்த கிரகங்களின் தசை நடக்கும் ஜாதகங்களை சேர்க்கக்கூடாது. அத்துடன் திருமணத்திற்குப் பிறகும் இந்த கிரகங்களின் தசை சந்திப்பு இருக்கக்கூடாது. அப்படியிருப்பின், தைரியமான- தவறான நட்பை திருமணத்திற்குப் பிறகு சிலருக்கு ஏற்படுத்திவிடும். 7-ஆம் பாவகம் வலிமை பெற்றவர்களை பாதிக்காது.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு செய்யவேண்டும்.

செவ்வாய் + சனி

திருமணத்திற்கு முன்னும் பின்னும் செவ்வாய், சனி தசை சந்திப்பு ஆண், பெண் இருவருக்கும் இருக்கக்கூடாது. திருமணத் தடையை ஏற்படுத்தும் பகை கிரகங் களின் சேர்க்கை. பெண் ஜாதகத்தில் இந்த கிரகச் சேர்க்கை இருந்தால், கணவருக்கு தொழில் நெருக்கடி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த கிரகச் சேர்க் கைக்கு குரு சம்பந்தமிருந்தால் வாழ்வில் எல்லா சுகபோகங்களும்தேடிவரும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை சிவப்பு துவரை தானம் தரவேண்டும்.

சனிக்கிழமைகளில் பருப்பு சாதத்தை தானம் செய்யவேண்டும்.

செவ்வாய் + ராகு- கேது

செவ்வாய் தசை நடப்பவருக்கு ராகு- கேது தசை நடப்பவருடன் திருமணம் செய்யக் கூடாது. ஆண்களுக்கு உடன்பிறந்தவர் களுடனும், பெண்களுக்கு கணவருடனும் மனவேதனையை ஏற்படுத்தும். பல பெண்களுக்கு திருமணத்தை நடத்துவதில் சிரமத்தைத் தரும்.

திருமணம் நடந்தபிறகு திருமணம் செய்யாமலே வாழ்வைக் கழித்திருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படியான பகை கிரகச் சேர்க்கை.

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று, கணவரை கௌவரப்படுத்தி சமுதாயத்தில் வலம்வர முயன்று மனநோயை வரவழைக்கும் பெண்களே அதிகம். பெண்களை கடுமையாக பாதித்து, கணவரிடமிருந்து பிரிக்கும் கிரக இணைவில் செவ்வாய் + ராகு- கேதுக்களே முதலிடம் வகிக்கின்றன. கணவனை பாம்பு என்று தாண்டவும் முடியாமல், பழுது என்று நினைத்து மிதிக்கவும் முடியாமல் வாழவைக் கிறது.

பரிகாரம்

மாதவிடாய் நின்ற சுமங்கலிப் பெண் களிடம் ஆசிபெற வேண்டும்.

வீட்டில் அடிக்கடி கணபதி ஹோமம் செய்யவேண்டும்.

சுக்கிரன் + கேது

சுக்கிரன், கேது தசை நடக்கும் ஜாதகங்களை இணைக்கக்கூடாது. ஆண்களுக்கு சாதகமற்ற, பகை கிரகச் சேர்க்கை. சுக்கிரன் + ராகு இரண்டும் போகத்தைத் தரும் நட்பு கிரகம் என்பதால், பெரிய பாதிப்பைத் தராது.

பல ஆண்களுக்கு திருமணத்தையே நடத்தித் தராத கிரகச் சேர்க்கை. திருமணத் திற்குப் பெண் தேடியே திருமணத்தில் வெறுப்பை ஏற்படுத்தும். திருமணம் நடந்தபிறகு குடும்பப் பிரச்சினைக்காக பஞ்சாயத்திற்கு அலைந்தே வாழ்கை முடிந்துவிடும்.

கணவன், மனைவி விரோதியாகவே வாழ்வார்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்யவேண்டும்.

வீட்டின் பூஜையறையில் நல்லெண்ணெய் தீபமேற்றி அதில் இரண்டு டயமன்ட் கற்கண்டு போடவேண்டும்.

செல்: 98652 20406