Advertisment

தீராத கடன் பிரச்சினைகள் தீர்த்து வைக்கும் பரிகாரம்! -பண்டிட் எம்.ஜி.பி.

/idhalgal/balajothidam/solution-unsolvable-debt-problems

டன் என்றாலே முதலில் நாம் சந்திக்க வேண்டியது அவமானம். அவமானத்தில் கூனிக்குறுகி பிரச்சினையில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு சுலபமான பரிகாரம்.

நீங்கள் எதற்காகக் கடன் வாங்கி இருந்தாலும் சரி, அந்தக் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் மேலும் மேலும் கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்ட முடியாமல் ஊரைவிட்டு ஓடிப் போய்விடலாமா என்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்குக்கூட இந்தப் பரிகாரம் உடனே பலன் அளிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

Advertisment

ss

நாம

டன் என்றாலே முதலில் நாம் சந்திக்க வேண்டியது அவமானம். அவமானத்தில் கூனிக்குறுகி பிரச்சினையில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு சுலபமான பரிகாரம்.

நீங்கள் எதற்காகக் கடன் வாங்கி இருந்தாலும் சரி, அந்தக் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் மேலும் மேலும் கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்ட முடியாமல் ஊரைவிட்டு ஓடிப் போய்விடலாமா என்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்குக்கூட இந்தப் பரிகாரம் உடனே பலன் அளிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

Advertisment

ss

நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் பைரவரை நினைத்து செய்யப்போகும் சுலபமான பரிகாரம்தான் இது. முழு நம்பிக்கையோடு செய்துபாருங்கள். மூன்று மாதத்தில் நல்ல பலனை அடையமுடியும்.

உங்களுடைய வீட்டின் அருகிலிருக்கும் எந்த ஒரு கோவிலுக்கு வேண்டுமென் றாலும் நீங்கள் செல்லலாம். ஆனால், அந்தக்கோவிலில் பைரவர் சந்நிதி இருக்கவேண்டும். பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலும் பைரவருக்கு சந்நிதி இருக்கும் என்பது நாம் எல்லாரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

முதலில் தேய்பிறை- அஷ்டமியன்று செய்யவேண்டிய பரிகாரம்.

தொடர்ந்து இரண்டு தேய்பிறை அஷ்டமி திதியில் மாலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் பைரவர் சந்நிதி இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

பைரவரின் சந்நிதிக்கு முன்னால் இரண்டு அகல் தீபங்களை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, அந்த நல்லெண்ணெயில் இரண்டு சிட்டிகை இஞ்சி துருவலைச் சேர்த்து தீபத்தை ஏற்றவேண்டும்.

வீட்டிலேயே இஞ்சியை தோல் சீவி, துருவலில் துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.

அப்படி இல்லையென்றால் பொடிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிட்டிகை அளவு இஞ்சியை தீபம் ஏற்றும் நல்லெண்ணையில் போட்டால் போதும்.

தொடர்ந்து 2 தேய்பிறை அஷ்டமியன்று நல்லெண்ணையில் இஞ்சி சேர்த்து தீப மேற்றி வைத்துவிட்டு, அந்த தீப ஒளியை பார்த்து பைரவரிடம் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைக்கு விமோசனம் கிடைக்க வேண்டுமென்று மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் இரண்டு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு தீபமேற்றி வைத்துவிட்டீர்கள்.

மூன்றாவதாக - வளர்பிறை அஷ்டமி திதி.

பைரவருக்கு இரண்டு மண் அகல் விளக்கில் மஞ்சள் தடவி முதலிலேயே வீட்டில் உலரவைத்து விடுங்கள்.

அந்த தீபத்தை கோவிலுக்கு கொண்டுபோய், அதில் சுத்தமான பசு நெய் ஊற்றி, திரி போட்டு தீபமேற்றி வைத்துவிட்டு, பைரவருக்கு கதம்ப பூவை வாங்கிக்கொடுத்து, கடன்தீர வேண்டுமென்று அர்ச்சனை செய்துகொள்ள வேண்டும்.

இந்த மூன்று அஷ்டமி திதியில் நீங்கள் நம்பிக்கையோடு செய்யும் இந்த வேண்டுதல் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும்.

கடுமையான கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள சுலப மான தீர்வு இது.

செல்: 89035 51587

Advertisment
bala201224
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe