ருவர் பலசாலியாக இருக்க விரும்புவார். நல்ல உடல்பலத்துடன் செயலாற்ற ஆசைப்படுவார். பலர் உடல் பலத்தை வைத்தே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார்கள். சிலர் உடல் பலத்தை வைத்து பிறரை மிரட்டிக்கொண்டிருப்பார்கள். அதே நேரத்தில் பலர் உடல் பலமில்லாமல் பல சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.

Advertisment

ஒருவர் பலசாலியாக இருக்க அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்னாதிபதி, லக்னத்திலோ மூலத்திரிகோணத்திலோ இருக்க வேண்டும். லக்னாதிபதி குருவால் பார்க்கப்பட்டால் ஜாதகர் பலசாலியாக இருப்பார். லக்னாதிபதியும் குருவும் சேர்ந்து லக்னம், 3, 5, 9, 11 போன்ற இடங்களில் இருந்தால் ஜாதகர் பலசாலியாக இருப்பார்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் செவ்வாயுடன் சேர்ந்திருந்தால், அவர் பலசாலியாக இருப்பார். ஆனால் அந்த சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருக்க வேண்டும்.

சந்திரன் செவ்வாயால் பார்க்கப்பட்டாலும், அந்த ஜாதகர் பலசாலியாக இருப்பார். சந்திரன், செவ்வாய் குருவால் பார்க்கப்பட்டால் அல்லது குருவுக்கு கேந்திரத்தில் இருந்தால் அந்த மனிதர் பலசாலியாக இருப்பார்.

Advertisment

hanumanஜாதகத்தில் லக்னாதிபதி, சந்திரன், சூரியன் ஆகியோர் குருவால் பார்க்கப்பட்டால் அவர் பலசாலியாக இருப்பார்.

லக்னத்தில் குரு இருந்தாலும் பலசாலியே.

லக்னத்தில் இருக்கும் குரு 5 அல்லது 9-ல் இருக்கும் சந்திரனைப் பார்த்தால், அந்த ஜாதகர் மிகவும் பலசாலியாக இருப்பார்.

லக்னத்தில் சூரியன், செவ்வாய், குரு இருந்தால், அவர் பலசாலி. சூரியன், சந்திரன் வலுவாக இருந்து குரு பார்த்தால் அவர் பலசாலியாக இருப்பார். எதையும் தைரியமாகச் செய்வார்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக அல்லது அஸ்தமனமாக இருந்தால் அவருக்கு நோய்கள் வரும். அவருக்குஎதைச் செய்வதற்கும் தைரியமிருக்காது. ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால் ஜாதகருக்கு துணிச்சல் இருக்காது. நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கும்.

லக்னாதிபதி, பாவ கிரகத்துடன் சேர்ந்து 6, 8, 12-ல் இருந்தால் அவர் அடிக்கடி நோயால் பாதிக்கப்படுவார். எதைச் செய்வதற்கும் துணிவிருக்காது.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியும் சந்திரனும் பலவீனமாக இருந்தால் உடலில் பலமே இருக்காது. நோயால் பாதிக்கப்படுவார். 6-ல் சனி இருந்தால் உடலில் பித்தம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக வயிற்றில் பிரச்சினைகள் உண்டாகும். தலைவலி வரும். சரியாக சாப்பிட மாட்டார். அதனால் உடல் பலவீனமாகக் காணப்படும்.

ஜாதகத்தில் 8-ல் சுக்கிரன் இருந்து பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால், அவருக்கு உணவு சரியாக ஜீரணமாகாது. வயிறு சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும்.

12-ல் ராகு, சூரியன் அல்லது சூரியன், சந்திரன், செவ்வாய் இருந்தால், அவர் எப்போதும் சிந்தனையில் மூழ்கிக் காணப்படுவார். அதனால் நோயின் பாதிப்பு உண்டாகும். செவ்வாய், சுக்கிரன், ராகு 6, 8, 12-ல் இருந்தால், அவருக்கு உடலில் ஏதாவது பிரச்சினை இருக்கும்.

ஒரு ஜாதகத்தில் 2-ல் செவ்வாய் பலவீனமாக இருந்தால், அவர் எதையும் தைரியமாகச் செய்யமாட்டார். ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்.

பரிகாரங்கள்

சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அவரது மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைப் பாராயணம் செய்வது சிறந்தது. லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.

"அனுமன் சாலிசா' படித்து ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றி வந்து வழிபடவேண்டும்.

வீட்டில் தேவையற்ற குப்பைகளை நீக்கிவிடவேண்டும். வடகிழக்கில் படுக்கக்கூடாது. வீட்டில் பச்சை வண்ணத்தைத் தவிர்க்கவும்.

உடலில் நோய் வராமலிருக்க, சனிக்கிழமை அரச மரத்திற்கு ஒரு தீபமேற்றி வழிபடவேண்டும்.

செல்: 98401 11534