இயற்கையன்னை உலகிற்களித்த மிகப் பெரிய வரம் மரங்கள் எனலாம். மனித சமுதா யத்திற்கு மரங்களால் விளையும் பலன்களும் பயன்களும் கணக்கிலடங் காது.
அவரவர் பிறந்தநாள் நட்சத்திரத்தில், அதற்குரிய குறிப்பிட்ட விருட்சங்களை நட்டு, வளர்க்க வேண்டு மென்று வரையறுக்கப் பட்டுள்ளது.
அஸ்வினி- எட்டி
பரணி- நெல்லி
கிருத்திகை- அத்தி
ரோகிணி- நாவல்
மிருகசீரிடம்- கருங்காலி
திருவாதிரை- செம்மரம்
புனர்பூசம்- மூங்கில், கொய்யா
பூசம்- அரசு
ஆயில்யம்- புன்னை
மகம்- ஆலமரம்
பூரம்- பலாசு
உத்திரம்- அலரி
அஸ்தம்- அத்தி, வேலம்
சித்திரை- வில்வம்
சுவாதி- மருதம்
விசாகம்- விளா
அனுஷம்- மகிழம்
கேட்டை- பராய்
மூலம்- மாமரம்
பூராடம்- வஞ்சி
உத்திராடம்- பலாசு
திருவோணம்- எருக்கு
அவிட்டம்- வன்னி
சதயம்- கடம்பு
பூரட்டாதி- தேமா
உத்திரட்டாதி- வேம்பு
ரேவதி- இலுப்பை
இத்தகைய மரங்களில் உயர்ந்து பரந்து நிற்கும் அரசமரம் மரங்களின் அரசன் எனப்படுகிறது. கிருஷ்ண பகவான் கீதையில், "அஸ்வத்த சர்வ வ்ருஷானாம்' என்கிறார். அதாவது "மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்' என்கிறார். அரசமரத்தில் மும்மூர்த்திகளும் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது..
"மூலதோ ப்ரஹ்மரூபாய; மத்யதோ விஷ்ணுரூபிணே; அக்ரத:
சிவரூபாய வ்ருஷராஜதே நம:' "வேர்ப்பாகத்தில் பிரம்ம தேவரும், மத்தியில் மகாவிஷ்ணுவும், கிளை, இலைகளில் சிவபெரு மானும் வாசம்செய்யும் அரசமரத்திற்கு வணக்கம்' என்பது இதன்பொருள்.
இந்த அரச மரத்தடியில் விநாயகப்பெருமான் உருவச் சிலையும், நாகர் சிலைகளும் இருப்பதைக் காணலாம். அரசமரத்தை வலம்வந்து வணங்குவது ஒரு மிகச்சிறந்த சகல தோஷநிவர்த்திப் பரிகாரம். இதனால் பலப்பல நன்மைகள் உண்டாகும். அபசகுனங்கள், கெட்ட கனவுகள், தீமையின் கொடுமை, ஆயுள் மற்றும் நோய் பற்றிய பயம், பேய், பிசாசு பயம், காரணம் புரியாத பயம், ஆரோக்கியக் குறைவு, மனக்கோளாறுகள் ஆகியவை அகன்றுவிடும்.
வலம்வரும்போது வேகமாக நடப்பது கூடாது. மௌனமாக வலம் வரவேண்டும். குறைந்தது ஏழுமுறையாவது வலம்வருவது நல்லது. 45 தினங்கள் தொடர்ந்து இவ்வாறு வணங்க. தீராத கடன், கிரகப் பீடைகள், பயம் போன்றவை நீங்கும்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் வலம்வந்தால் நோய்கள் அகலும்.
திங்கட்கிழமை- மங்களங்கள் பெருகும்.
செவ்வாய்க்கிழமை- வெற்றிகள் கிட்டும்.
புதன்கிழமை- செல்வம் பெருகும்; வியாபாரம் செழிக்கும்.
வியாழக்கிழமை- கல்வி வளரும்; அறிவு விருத்தியடையும்.
வெள்ளிக்கிழமை- லட்சுமி கடாட்சம் கிட்டும்.
சனிக்கிழமை வலம்வர துக்கம், குறை, கஷ்டங்கள் நீங்கும்.
திங்கட்கிழமையும், சனிக்கிழமையும் அரசமர வலம் விசேஷமாகக் கருதப்படு கிறது. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அரச மரத்தைத் தொடாமல் வலம்வர வேண்டும். திங்கட்கிழமை அமாவாசை திதியாக வந்துவிட்டால் பிரதட்சண அமாவாசை என்று மேலும் சிறப்பு பெறும்.
அரச மரத்தை வழிபட்டால் எல்லா காரியங்களும் தடையின்றி நிறைவேறும் என்று பிரம்மதேவர் நாரதருக்கு உபதேசித்த தாகப் புராணங்கள் கூறுகின்றன.
முன்னோர் சொன்னதைக் கருத்தில் கொண்டு, அரச மரத்தை முறையாக வழிபட்டு தோஷங்கள் நீங்கி வளமாக வாழ்வோம்.
செல்: 95510 64188