Advertisment

கேட்டதெல்லாம் கிடைக்கச் செய்யும் நத்தைசூரி மூலிகை ரகசியம்! -கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/snail-herbal-secret-all-asked-k-kumara-sivacharya

லியுகத்தில் பூர்வபுண்ணியம் இருந்தாலே அரிய மூலிகைகளின் ரகசியங்களை அறிந்து வெற்றி காணமுடியும்.

Advertisment

ஒரு அரியவகை மூலிகையின் சக்தியை வெளிக் கொண்டு வரவேண்டும் என்றால், அதற்குச் சிவ புண்ணிய க்ஷேத்திரத்தில் பூஜை செய்தல்வேண்டும். சித்தர் முறைப்படி சிவாகம மந்திரங்களைக் கூறி ஆவாகன- சக்தி ஊட்டும் மந்திரங்களைச் சொல்லி வழிபட வேண்டும்.

ஆன்மிக உலகத்தோரும், ஜோதிடச் சான்றோர் களும் வியக்கும்வகையில் பல மூலிகைகள் தெய்வ வடிவங்களாகவே சில தலங்களில் வளர்கின்றன. எல்லாமே ஒரே பெயருக்குள் "சிவனார் மூலி' என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் நத்தைசூரி என்னும் காயகற்ப மூலிகையின் தெய்வத்தன்மை பற்றி பலருக்குத் தெரியாமல் உள்ளது.

எதைக் கேட்டாலும் அருளும் நத்தைசூரி

நத்தைசூரி மிகவும் சுத்தமான மணற்பாங்கான இடத்தில் வளரும். வெடிச்சூரி, நத்தை விராலி என்ற விசேடப் பெயர்களும் வழக்கத்தில் உள்ளன. மேலும் சித்தர் பாடல் களில் குழிமீட்டான் தரணி, கடுகம், நத்தைச் சுரண்டி, தொலியா கரம்பை ஆகிய பெயர்களால் வர்ணித்துச் சொல்லப்படுகிறது.

Advertisment

இதன் தண்டு செவ்வகமாகவும், ஒவ்வொரு இலைக்கும் தண்டுக்கும் இடையில் விதையுடன் பழம் தோல் மூடியவாறும் இருக்கும். நத்தை அருகில் வந்தால் அதன் ஓடு விலகி கீழே விழும். இம்மூலிகையின் சாற்றைப் பிழிந்து நத்தைமேல் விட்டால் அது வெடித்து தசை வேறு ஓடு வேறாக விலகிவிழும்.

தாவரவியல் துறையின் வகைப் பட்டியலில் Borterina Hispida என்றும் Spermacose Hispida என்றும் அழைக்கப் படுகிறது. பூண்டு வகையைச் சேர்ந்த இந்த மூலிகையின் போலிகள் அதிக மாக நடமாட்டத்தில் பயன்படுத்து வதால், இதன் பயன் கிடைக்கா மல் போய்விட வாய்ப்புள்ளது.

அமானுஷ்ய சக்தி மூலிகை

கருவூரார் பாடல் திரட்டு என்ற சித்தர் பாடல் வரிசையில், பொன் வரிகளாய்க்

லியுகத்தில் பூர்வபுண்ணியம் இருந்தாலே அரிய மூலிகைகளின் ரகசியங்களை அறிந்து வெற்றி காணமுடியும்.

Advertisment

ஒரு அரியவகை மூலிகையின் சக்தியை வெளிக் கொண்டு வரவேண்டும் என்றால், அதற்குச் சிவ புண்ணிய க்ஷேத்திரத்தில் பூஜை செய்தல்வேண்டும். சித்தர் முறைப்படி சிவாகம மந்திரங்களைக் கூறி ஆவாகன- சக்தி ஊட்டும் மந்திரங்களைச் சொல்லி வழிபட வேண்டும்.

ஆன்மிக உலகத்தோரும், ஜோதிடச் சான்றோர் களும் வியக்கும்வகையில் பல மூலிகைகள் தெய்வ வடிவங்களாகவே சில தலங்களில் வளர்கின்றன. எல்லாமே ஒரே பெயருக்குள் "சிவனார் மூலி' என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் நத்தைசூரி என்னும் காயகற்ப மூலிகையின் தெய்வத்தன்மை பற்றி பலருக்குத் தெரியாமல் உள்ளது.

எதைக் கேட்டாலும் அருளும் நத்தைசூரி

நத்தைசூரி மிகவும் சுத்தமான மணற்பாங்கான இடத்தில் வளரும். வெடிச்சூரி, நத்தை விராலி என்ற விசேடப் பெயர்களும் வழக்கத்தில் உள்ளன. மேலும் சித்தர் பாடல் களில் குழிமீட்டான் தரணி, கடுகம், நத்தைச் சுரண்டி, தொலியா கரம்பை ஆகிய பெயர்களால் வர்ணித்துச் சொல்லப்படுகிறது.

Advertisment

இதன் தண்டு செவ்வகமாகவும், ஒவ்வொரு இலைக்கும் தண்டுக்கும் இடையில் விதையுடன் பழம் தோல் மூடியவாறும் இருக்கும். நத்தை அருகில் வந்தால் அதன் ஓடு விலகி கீழே விழும். இம்மூலிகையின் சாற்றைப் பிழிந்து நத்தைமேல் விட்டால் அது வெடித்து தசை வேறு ஓடு வேறாக விலகிவிழும்.

தாவரவியல் துறையின் வகைப் பட்டியலில் Borterina Hispida என்றும் Spermacose Hispida என்றும் அழைக்கப் படுகிறது. பூண்டு வகையைச் சேர்ந்த இந்த மூலிகையின் போலிகள் அதிக மாக நடமாட்டத்தில் பயன்படுத்து வதால், இதன் பயன் கிடைக்கா மல் போய்விட வாய்ப்புள்ளது.

அமானுஷ்ய சக்தி மூலிகை

கருவூரார் பாடல் திரட்டு என்ற சித்தர் பாடல் வரிசையில், பொன் வரிகளாய்க் காணப்படும் இதன் மகிமை பற்றி அறிந்து வழி பட்டால் இக்கலியுகத்தில் ராஜயோக வாழ்க்கையைப் பெற இயலும்.

ராஜவசியம், மனோவசியம், ஜனவசியங்களை எளிதில் நிகழ்த்த வல்லதுதான் இந்த மகாமூலிகை. முதலில் இதைக் கண்டுபிடிப்பதே மிகக் கஷ்டமான காரியம். நத்தைசூரி போன்றே காட்டுப் பூண்டுகள் அதிகமாக இருக் கின்றன. அவற்றை எடுத்துவந்து வழிபாடு செய்தால் எந்தப் பயனும் கிடைக்காது. இந்தச் செடி தரையில் 32 சென்டிமீட்டர் உயரத்திற்குமேல் வளராது. பக்கவாட்டில் 150 சென்டிமீட்டருக்கு அப்பால் பரவாது. சுத்தமான இதன் விதையைப் பொடிசெய்து தினமும் காலை- மாலை ஒரு ஸ்பூன் எடுத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து உட்கொண்டுவந்தால் ஆயுட்காலம் 400 ஆண்டுகள்வரை நீடிக்கும் என்று சித்தர் பாடல் தகவல்கள் சொல்கின்றன. ஆனால் இக்கால உணவுப் பழக்கங்களால் அதற்கு சாத்தியக்கூறுகள் குறைவுதான்.

வணங்கி வளம் பெறும் ரகசியங்கள்

சித்தர்களால் சாபங்களைப் பெற்றுள்ள தெய்வ மூலிகைகளைக் குறிப்பிட்ட மந்திரப் பிரயோகங்களால் சாபநிவர்த்தி செய்தால், அவை தன் சக்திகளை வெளிப்படுத்தும் என்பது உண்மை. ஆனால் மாபெரும் சக்தி கொண்ட நத்தைசூரிக்கு சாபநிவர்த்தி வேண்டாம் என்று கருவூரார் பாடல் உரைக்கிறது. அகத்தியரும், போகரும், தேரையரும், கோரக்கரும், சட்டைநாதரும் உரைத்த நல்வாக்கில், நத்தைசூரியே ஆனா லும், அதன் வித்தைகளைக் காண (மூலிகைப் பலன்கள்) சாபநிவர்த்தி தேவை என்று கூறியுள்ளனர்.

இந்த மூலிகையை ஞாயிற்றுக் கிழமையன்று கன்னி நூல் செய்து, சித்தர் பூஜை விதி கொண்டு பூஜை செய்து, வேர் அறுகாமல் பிடுங்கும்போது, "ஓம் வஜ்ஜிர ரூபி சூரி சூரி மகாவீரி ஸ்வாஹா. உன் ஜீவன் உன்மீதிருந்து பலன் தரவேணும் மகாமூலி, ஜீவமூலி, சிவமூலி சர்வஜனவஸ்யமூலி சுவாஹா என்று 32 முறை சொல்லி விபூதி தெளித்து எடுக்க வேண்டும்.

sss

"நொறுக்கலாம் விதை எடுத்து தினமும் கொண்டால்

நூறூழி அளவு வரை இருக்கலாகும்

நொறுக்கலாம் எந்தெந்தத் தொழில்கள் தானும்

நோக்காதே மற்றுமொரு கற்பமேனும்

நொறுக்கலாம் சத்துருவும் வியாதி தானும்

நுணுக்கமே உலகத்தோர் காணா ரப்பா...

நொறுக்கலாம் இம்மூலி சிரசில் வைக்க

நோக்காதே தேவதைகள் போற்றும் பாரே!'

என்னும் கருவூர் சித்தரின் செய்யுளின் உட்கருத்தை கவனித்தால், ஆயுள் தீர்க்கமாகி நீண்ட ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். நாம் செய்கிற கலைகளும் தொழில் களும் மக்களால் வசீகரிக்கப்பட்டு தனவளமும் பொருட்சேர்க்கையும் அபரிமிதமாக- எதிர் பாராத அளவிற்குச் சேர்த்துக்கொண்டு செம்மை யாக வாழ வழிசெய்திடும். ஒரு செய்தொழிலை நூறாண்டு காலத்திற்குமேல் வளமுடன் செய்ய அருள்புரியும் என்றும் விளக்குகிறது.

இந்த அமானுஷ்ய சக்தியுடைய நத்தைசூரி மூலிகை வேரை வீட்டில் 48 நாட்கள் விதிமுறைப் படி விரதம் காத்து சிவபஞ்சாட்சர பூஜையுடன் சித்தர்களையும் நினைத்து வழிபட்டுவந்தால் சத்துருக்கள் எனப்படும் வாழவிடாத எதிரிகளும் நம்மைவிட்டு விலகிவிடுவார்கள்.

உடலில் நோய் ஏற்பட்டு நலிவு ஏற்பட்டால், அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

தெய்வங்கள் போற்றும் தேவ மூலிகை

கருவூராரின் கடைசிவரிகளில் சொன்ன கருத்தை நன்றாக கவனிக்க வேண்டும்.

"நொறுக்கலாம் இம்மூலி சிரசில் வைக்க

நோக்காதே தேவதைகள் போற்றும் பாரே!'

அதிசயங்களை நிகழ்த்துகிற இம்மூலிகையின் வேரை பூஜைசெய்து, சக்தி கொடுத்து இறைவடிவங்களின் தலையில் வைத்து, அதன் பத்திரத்தை (இலைகளை) அவர்களின் மூலமந்திரங்களால் அர்ச்சித்து வணங்கிவந்தால், அந்த தெய்வங்கள் நமக்குத் தரவேண்டிய வரங்களைத் தந்து, நம்மை உலகோர் வந்து போற்றும் அளவிற்கு உயர்த்திவிடும் என்று உறுதிபடக் கூறுகிறார். உதாரணமாக, அரசியலில் காலடி எடுத்துவைத்து உயர்ந்த பதவிகளுக்குச் சென்று அமரவும், அதிகாரமுள்ள அரசுப் பணிகளுக்கும் போட்டிகளுக்கு இடையில் வெற்றி காணவும், இந்த மகாசிவ மூலிகையின் பத்திரங்களும், வேரும் அதற்கு உண்டான தெய்வங்களைப் போற்றிவருவதால் கிடைக்கக் காணலாம்.

உதாரணமாக, அரசியல், அரசாங்கப்பதவி வெற்றிகளுக்கு இந்திரனையும், செல்வயோகத் திற்கு குபேர லட்சுமியையும், நோய்கள் அகல்வதற்கு அமிர்த மிருத்யுஞ்சய மூர்த்தியையும், எதிரிகளை வீழ்த்த கட்கராவண மூர்த்தியையும், வெளிநாடு யோகம்பெற நீலசரஸ்வதியான தாராசக்தியையும், கிருஹ தோஷங்கள் அகல நவநாயகர்களையும், ஜோதிடம் மற்றும் வானசாஸ்திரங்களில் புகழ்பெற ரிஷபராஜ மூர்த்தியையும், கற்கும் கலைகளில் நல்ல ஸ்திதிக்கு உயர்ந்திட ராஜமாதங்கியையும் இந்த மூலிகா தந்திர சாஸ்திரத்தைப் பயன்படுத்தி வணங்கி பிரார்த்தனை செய்து வரவேண்டும்.

மருத்துவ முறையில் வெல்லும் சக்தி மூலிகை!

சித்தர்கள் பதினெட்டு பேர்களின் வாக் கினால் மகாமூலி என்று புகழப்படுகிற நத்தை சூரி ஆன்மிகம், ஜோதிடத்துறையினருக்கு மட்டுமின்றி, மருத்துவத்திலும் உயர்ந்த தாகப் பணிசெய்கிறது. உடல் பருமன் குறைய, வயிற்றுப்போக்கு, சீதபேதி நீங்க, ஆண்மை பலம்பெற, பெண்களுக்குத் தாய்ப்பால் பெருக, உதிரப்போக்கு நிற்க, ரத்தம் சுத்திகரிக்க, மெலிந்த உடல் தேறிவர, உடல் சூடு, கல்ல டைப்பு அகல இதன் விதையை அரைத்துப் பசும்பாலில் நெல்லி அளவு கலந்து சாப்பிட வேண்டும்.

வேரை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட ஆண்மை பலம் பெருகும். விதையைச் சுத்தம் செய்து வறுத்துப் பொடி செய்து பாலில் கலந்து பருகிவந்தால் இல்லறத்தில் தாம்பத்திய இன்பம் கூடும். வேரை முறைப்படி காப்புக்கட்டி பூஜைசெய்து வெள்ளி, தாமிரம், தங்கத் தாயத்தில் உள்வைத்து வலது கையில் கட்டிக் கொள்ள வியாபார, மனோவசியம், அரச வசியம் கைகூடும் என்பது சித்தர் வாக்கு.

யோகங்கள் அறிந்து செய்தால்

நத்தைசூரியால் அதிர்ஷ்ட யோகங்களைப் பெற அவரவருக்கு ஜனன ஜாதகத்தில் பணக் காரராகும் யோகம், பதவிசுகம் அனுபவிக் கின்ற யோகம் வேண்டும். இந்நிலை இல்லா விட்டால் விருட்சப் பரிகார முறையைச் செய்து ஜாதகத்தில் யோகம் பெறுவோம்.

தனஸ்தானத்தை பாக்கியாதிபதியும் லாபஸ் தானாதிபதியும் பார்த்தால், வாழ்நாளின் இடைக்காலத்தில்- நீண்டநாள் அனுபவிக்கும் செல்வங்கள் வரும்.

லக்னத்திற்கு 6-ல் ராகு நிற்க, குரு ஏதேனும் ஒரு கேந்திரத்தில் நின்றால் பணவசதியுடன் பதவி யோகமும் கூடும்.

சனி ஜென்ம லக்னத்தில் இருக்க, லக்னத்திற்கு 4-ல் சந்திரனும், 7-ல் செவ்வாயும், 10-ல் சூரியன், புதன், குரு, சுக்கிரனும் கூடியிருந்தால், பெரும் செல்வத்துடன்- பதவி, அதிகாரத்துடன் வாழ்வார்கள்.

சந்திரனும் குருவும் உச்சம் பெற்று, செவ்வா யும் புதனும் 7-ல் நிற்க, சனி மகரத்தில் ஆட்சி பெற்றிருக்க ராஜயோகம் உண்டாகும்.

1, 4, 7, 10 ஆகிய கேந்திரங்களின் அதிபர் களும், திரிகோண அதிபர்களும் கூடி கேந்திர வீட்டிலேயே இருக்கப் பிறந்தவர்கள் அரசனுக்கு நிகரான யோகத்தைப் பெறுவார்கள்.

பிருகத் சாதகம் என்னும் ஜோதிட தத்துவ விதிநூலில் 180 ராஜயோகங்கள் மூலிகை, கர்ம வித்தைகளால் வருமென்று சொல்லப் பட்டுள்ளன. மூலிகைகளால் யோக வாழ்வ டைய முயற்சிப்போர் அனைவருமே வெற்றி அடைவதில்லை. காரணம், மூலிகைகளுக்கு சாப நிவர்த்தி செய்து பூஜை செய்பவர்கள், யோக பங்கம் உண்டாகியிருந்தால் அதற்கும் பரிகாரம் தேடவேண்டும். புதிய தொழிற் சாலையில் பூட்டிய சில மோட்டார்கள் ஓடவில்லை. இதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் திணற, சாதாரண பணியாள் வந்து சுவிட்ச் போடவில்லை என்றார்.

அதுபோல யோகங்கள் பெற ஜாதக ஆய்வும் செய்வது நல்லது. நத்தைசூரி எல்லா நலமும் தரட்டும்.

செல்: 91765 39026

bala041019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe