ஓர் அரசியல்வாதி முடிவெடுக்க முடியாமல், எப்பொழுதும் குழப்பத்துடன் காணப்படுகிறார் என்றால், அதற்குக் காரணம்- அவரின் ஜாதகத்திலிருக்கும் லக்னாதி பதியும், 3-க்கு அதிபதியான கிரகமும்தான்.
ஓர் அரசியல்வாதியின் ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்தால், அவர் வாழ்வில் எந்த முடிவையும் எடுக்கமாட்டார். எல்லாவற்றுக்கும் பயப்படுவார். ஆனால், தான் மிகவும் தைரியமாக இருப்பதைப்போல காட்டிக்கொள்வார்.
ஓர் அரசியல்வாதியின் ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால், அவர் எவ்வளவு உயர்வான பதவியிலிருந்தாலும், தான் செய்யும் எந்த விஷயத்திலும் அவருக்கு நம்பிக்கை இருக்காது. அவர் எல்லாரையும் தன் பகைவர்களாகவே பார்ப்பார். தன்னை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்களைப் பார்த்து பயப்படுவார். தான் எந்தச் செயலைச் செய்தாலும், தனக்கு மேலே இருப்பவர் கூறுவதையே ஓர் அடிமையைப்போல கேட்டு செயல்படுவார்.
6-ஆம் பாவத்தில் பலவீனமான சனி பகவான் இருந்தால், அவருக்கு சரியாகத் தூக்கம் வராது. எப்பொதும் எதையாவது சிந்தித்துக்கொண்டேயிருப்பார். மற்ற அனைவரையும் விரோதி யாகவே பார்ப்பார். அவருக்கு "விபம்பர விகாரயோகம்' உண்டாகும்.
அதன்மூலம் அவருக்கு மனநோய், பித்தம் உண்டாகும். எந்தக் காரியத்தைச் செய்தாலும் தைரியமாக செய்யமாட்டார். யாரைப் பார்த்தாலும் பயப்படுவார்.
ஓர் அரசியல்வாதியின் ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்து, அதை சனி பார்த்தால், அவர் வயிற்று நோயால் பாதிக்கப் படுவார். அவருக்கு மனநோய் உண்டாகும். எந்தச் செயலைச் செய்தாலும் ஒருவிதக் குழப் பத்துடனே இருப்பார். எந்த முடிவையும் எடுக்கத் தெரியாது.
துணிச்சல் என்பதே இருக்காது.
ஓர் அரசியல்வாதியின் ஜாதகத்தில் சந்திரனிலிருந்து 8-ஆவது பாவத்தில் சனி இருந்தால், அவர் முக்கியமான பதவியில் அமர்ந்திருக்கும்பொழுது, தான் எதைச் செய்தாலும் அது ஒழுங்காக நடக்குமா, நடக்காதா எனும் சந்தேகத்துடனேயே இருப்பார். அதனால் எந்த முடிவையும் உரிய நேரத்தில் எடுக்கமாட்டார்.
3-ஆவது பாவத்தில் பாவகிரகம் இருந்து, அந்த 3-ஆம் பாவாதிபதி 2-ஆம் பாவத் திலிருந்தால், அவர் எந்தக் காரியத்தைச் செய்தா லும் தனக்குக்கீழே உள்ளவர்களின் ஆலோசனைகளைக் கேட்டே செயல்படுவார். தான் செய்யும் செயலை முடிப்பதா, வேண் டாமா என்னும் தடுமாற்றத்துடனே இருப்பார்.
யார் எதைக் கூறினாலும் அதற்கு "சரி' என தலையை ஆட்டிக்கொண்டிருப்பார். சுயமாகத் தீர்மானமெடுக்கும் ஆற்றல் இருக்காது.
ஓர் அரசியல்வாதியின் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி இருந்தால், அவர் பிறருடன் வீண்விவாதங்களைச் செய்துகொண்டிருப்பார். மற்றவர்களைப் பார்த்து, தான் எதையும் செய்யலாமென நினைப்பார். அதே ஜாதகத்தில் 8-ல் ராகு இருந்தால், நல்ல முறையில் முடியக்கூடிய ஒரு காரியத்தை இறுதி நேரத்தில் அவர் கெடுத்துவிடுவார்.
லக்னத்திற்கு 12-ல் சனி, செவ்வாய் இருந்தால், அவர் எல்லாரிடமும் ஆவேசமாகவும் கோபமாகவும் பேசுவார். அதனால், யாரும் அவருடன் நட்புடன் பழகமாட்டார்கள். அவர் அனைவருடனும் ஏமாற்றும் எண்ணத்துடனேயே பழகுவார்.
ஓர் அரசியல்வாதியின் ஜாதகத்தில் செவ்வாய், சனி, சூரியன் 4, 7 அல்லது 10-ஆம் பாவத்தில் இருந்து, அவர் வெளிநாடு அல்லது வெளிமாநிலத்துடன் உறவு வைத்திருந்தால் அதைக் கெடுத்துக்கொள்வார். யாருடனா வது கூட்டாளியாக இருந்தால், தன்னுடன் இருப்பவரை ஒழிப்பதிலேயே எப்பொழுதும் குறியாக இருப்பார். பொதுவாக அவரால் மாநிலத்திற்கோ நாட்டிற்கோ எந்தப் பயனும் இருக்காது.
ஓர் அரசியல்வாதியின் ஜாகத்தில் சூரியனும் 6-ஆம் பாவாதிபதியும் பலவீனமாக இருந்தால், அவர் எந்த பதவியிலும் நிரந்தரமாக இருக்க மாட்டார். திடீரென அவருக்கு பதவி கிடைத்தாலும், அதில் அவர் நீண்டகாலம் நீடித்திருக்கமாட்டார்.
லக்னத்தில் சூரியன், 6-ல் சனி, 10-ல் ராகு இருந்தால், அவர் தான் எடுக்கும் முடிவே சரியென்னும் பிடிவாதத்துடன் எப்பொழுதும் இருப்பார். அவருக்கு ராகு தசை நடக்கும்பொழுது பதவி கிடைக்கும். அதே ராகு தசையில் பதவியிலிருந்து இறங்கிவிடுவார். பதவியில் இருக்கும்பொழுது எந்த விஷயத்திலும் அவர் தெளிவாக முடிவெடுக்க மாட்டார்.
லக்னத்தில் செவ்வாய், 4-ல் சூரியன், 7-ல் சனி இருந்தால், அவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும், எந்த விஷயத்திலும் முடிவெடுக்கத் தெரியாமல் இருப்பார்.
தன் வாய்ப்பேச்சால் விரோதிகளை உண்டாக்கிக்கொள்வார். அதன் காரணமாக சீக்கிரமே தன் பதவியை இழந்துவிடுவார்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி விரய ஸ்தானத்தில் இருந்து, 7-ல் செவ்வாய், 8-ல் ராகு இருந்தால், அவர் எப்பொழுதும் குழப்பத்துடன் இருப்பார். முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கத் தெரியாமல் தடுமாறுவார். தன் ஆணவம் கலந்த பேச்சால் நண்பர்களுடன் சண்டை போட்டு அவர் களைப் பகைவர்களாக்கிக் கொள்வார். அதன் காரணமாகப் பதவியை இழக்கநேரிடும்.
இத்தகைய அரசியல்வாதிகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் ஜாதகத்தில் இதுபோன்ற கிரக நிலைகள் நிச்சயமாக இருக்கும்.
செல்: 98401 11534