Advertisment

ஆறாம் பாவமும் ஆரோக்கியமும்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/sixth-sin-and-health-s-vijayanarasimhan

ஷ்டாம்ச பிரிவுக் கட்டம், ஜாதகரின் உடல் ஆரோக்கியத்தை அலசப் பயன்படும் கட்டமாகும். ராசிக்கட்டத்தில் 6-ஆம் பாவம், அதன் பாவ காரகர்கள், சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றைப் பலன்காண பயன்படுத்தவேண்டும். ஆரோக்கியம் என்பது மனித வாழ்க்கைக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு மனிதனின் உடலைப் பரிசோதிக்காமலேயே புற்றுநோய் போன்ற மிகக்கொடிய நோய்களைக்கூட, ஜாதகருக்கு அந்த நோய் எப்போது ஏற்படும்- தீருமா- தீராதா போன்ற விவரங்களை ஜோதிட விஞ்ஞானத்தினால் அடையாளம் காணமுடியும்.

Advertisment

மனித சமுதாயத்திற்கு தெய்வீக ஜோதிட விஞ்ஞானத் தால் அளிக்கப்பட்ட வரமே மருத்துவ ஜோதிடமாகும். இந்த ஜோதிடத்தில் கர்மா என்பது, நாம் முன்ஜென்மத்தில் செய்த வினைகளுக்கான பலன்களை இப்பிறவியில் நம் ஆன்மா அனுபவிப்பதேயாகும். கர்மா 10-ஆம் பாவத்தின் மூலமாகவும், பாவ காரகர்களான சூரியன், குரு மற்றும் 5-ஆம் பாவத்தின் மூலமும் அறியப்படுவதாகும். ஒரு ஜாதகர் எந்த சூழ்நிலையில் எதற்காகப் பிறந் தார் என்பதை நிர்ணயிக்க 9-ஆம் பாவத்தின்

ஷ்டாம்ச பிரிவுக் கட்டம், ஜாதகரின் உடல் ஆரோக்கியத்தை அலசப் பயன்படும் கட்டமாகும். ராசிக்கட்டத்தில் 6-ஆம் பாவம், அதன் பாவ காரகர்கள், சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றைப் பலன்காண பயன்படுத்தவேண்டும். ஆரோக்கியம் என்பது மனித வாழ்க்கைக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு மனிதனின் உடலைப் பரிசோதிக்காமலேயே புற்றுநோய் போன்ற மிகக்கொடிய நோய்களைக்கூட, ஜாதகருக்கு அந்த நோய் எப்போது ஏற்படும்- தீருமா- தீராதா போன்ற விவரங்களை ஜோதிட விஞ்ஞானத்தினால் அடையாளம் காணமுடியும்.

Advertisment

மனித சமுதாயத்திற்கு தெய்வீக ஜோதிட விஞ்ஞானத் தால் அளிக்கப்பட்ட வரமே மருத்துவ ஜோதிடமாகும். இந்த ஜோதிடத்தில் கர்மா என்பது, நாம் முன்ஜென்மத்தில் செய்த வினைகளுக்கான பலன்களை இப்பிறவியில் நம் ஆன்மா அனுபவிப்பதேயாகும். கர்மா 10-ஆம் பாவத்தின் மூலமாகவும், பாவ காரகர்களான சூரியன், குரு மற்றும் 5-ஆம் பாவத்தின் மூலமும் அறியப்படுவதாகும். ஒரு ஜாதகர் எந்த சூழ்நிலையில் எதற்காகப் பிறந் தார் என்பதை நிர்ணயிக்க 9-ஆம் பாவத்தின் பலத்தையும், நடப்பு தசா காலத்தையும் ஆராயவேண்டும்.

Advertisment

கடவுளின் கருணையால் தங்கள் வாழ்க்கையின் பலவகையான இன்னல் களைத் தீர்ப்பதற்கான ஜோதிட ஆலோசனைகள், அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. மற்ற அனைத்து இன்னல்களையும்விட, ஆரோக்கியக் குறைவென்பது மனித மனங்களையும் உடலையும் மிக மோசமாக பாதிக்கக்கூடிய ஒன்றா கும். அதையறிந்து முன்னெச்சரிக் கையாக நடந்துகொள்ள உதவுவதே மருத்துவ ஜோதிடமாகும். இதைப் பற்றி நமது பாரம்பரிய ஜோதிட நூல்கள் கூறுவதைக் காண்போம்.

பிருஹத் ஜாதகம்: சந்திரன் 8-ல் உள்ள ஜாதகரின் உடல்நிலை எப்போதும் மாறுபட்ட ஆரோக் கிய நிலையை உடையதாக இருக்கும்.

சூரியன் மகரத்திலிருந்து, சந்திரன் பாபகர்த்தாரியில் இருந்தால் ஜாதகருக்கு ஆஸ்துமா, வயிற் றில் புற்றுநோய் ஏற்படும். குடிகார ராகவும் இருப்பார். சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் சனி ஆகியவை 2, 6, 8 மற்றும் 12-ஆம் வீடுகளை எந்தவிதத்திலாவது தொடர்புகொண்டால் பார்வை இழப்பை ஏற்படுத்தும். அசுப கிரகங்கள் 9, 5, 11 மற்றும் 3-ஆம் வீட்டில் இடம்பெற்றால் காது கேளாமையை ஏற்படுத்தும்.

சாராவளி: ஓளி கிரகங்கள் சிம்மத்தை லக்னமாகக்கொண்டு, சனி மற்றும் செவ்வாயால் பார்க்கப்பட்டால் ஜாதகர் பிறவியிலேயே பார்வையற்றவராக இருப்பார். சூரியன், சனி மற்றும் செவ்வாய் இணைந்தால் உருக்குலைந்த கால்களையும், மாறாத நோயையும் கொடுக்கும். சூரியன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைந்தால் கண்நோய் தருகிறது. 2, 12, 6 மற்றும் 8 ஆகிய வீடுகள் சூரியன், சந்திரனின் பாதிப்புக்குள்ளானால் அது கண் பார்வைக்கு அவயோகமாக அமைகிறது. அதைப்போலவே காதுகளுக்கும் அவயோகத்தை அளிக்கிறது.

dd

சூரியன்- புற்றுநோய் மற்றும் காய்ச்சல்.

செவ்வாய்- வீக்கம், ரத்த நாளங்களில் நோய், அடிபடுதல், காயங்கள்.

புதன்- மஞ்சள் காமாலை, பித்தநீர் சம்பந்தமான நோய்கள்.

குரு- நல்ல ஆரோக்கியம் தருகிறது.

சுக்கிரன்- காமக் கூட்டுகளால் ஏற்படும் நோய்கள்.

சனி- காற்றால் பரவும் நோய்கள், கீல் வாதம், மூட்டுவலி, பக்கவாதம் ஆகியவை.

ராகு- கீழின மனிதர்களால் ஏற்படும் அபாயங்கள்.

கேது- தொப்புள் பகுதியில் ஏற்படும் நோய்கள்.

சந்திரன்- நீரில் மூழ்குதல், இருமல், காசநோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள்.

இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு ஜாதகத்தை ஆராய பாரம்பரிய வழிமுறைகள் இல்லை யெனினும், நமது முன்னோர்கள் முறையான ஆய்வுக்கு வழிகாட்டுகின்ற னர். அவையாவன: காரகரோடு பாதிக்கப் பட்ட பாவமானது, அதன் வலுவற்ற வீட்டு அதிபதி களின் மற்றும் வலுவற்ற கிரகங்களின் தசாபுக்திக் காலங்களில் எவ்விதமான நோய் ஏற்படும் என்பதையும், அதன்காரணமாக என்ன கஷ்டங்கள் ஏற்படும் என்பதையும் குறிகாட்டுகின்றன. இந்த பாதிக்கப்பட்ட வீடுகள், பாதிக்கப்பட்ட கிரகங்களால் வரும் நோய்களை குறிகாட்டுகின்றன.

அடுத்து, நோயைக் கண்டறிவது எங்ஙனம் என்ற கேள்வி எழுகிறது. பலமிழந்த அல்லது பாதிக்கப்பட்ட வீடுகள் அல்லது கிரகங்கள் அதன் காரகங்களுக்குரிய நோய்களைத் தருகின்றன. இந்த விதியின்மூலமாக நாம் நோய்களை அனுமானிக்கவும், அதற்கான பரிகாரங்களைக் கூறவும் முடியும். உதாரணமாக, வலுவிழந்த சுபரோடு தொடர்புடைய லக்னாதிபதி ஜாதகருக்கு சக்தியற்ற தேகத்தையும், தனது தசாபுக்திக் காலங்களில் தீவிர நோயையும் தந்து விடுகிறார்.

பொதுவாக சந்திரன் இருக்கும் வீடு மற்றும் ராசி வலுவிழக்கிறது. கிரகங்களின் பலமானது, சம்பந்தப்பட்ட வர்க்கக் கட்டங்களைக்கொண்டு அதன் லக்னத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து அளவிடப்படவேண்டும். அதன்பின்னரே கிரகங்கள் தரும் நோயின் தன்மையை நாம் அனுமானிக்க முடிகிறது. உதாரணமாக, வலுவிழந்த- பாதிக்கப்பட்ட புதன் நரம்பு சம்பந்தமான நோய்களையும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களையும் அல்லது மூச்சுப் பிரச்சினைகளையும் கொடுக்கிறது. இந்த நோய்கள் தற்காலிகமானதா? அல்லது நிரந்தரமானதா என்பது பாதிப்படைந்த கிரக நிலைகளைப் பொருத்ததாகும்.

பாதிப்படைந்த கிரகம் சனி மற்றும் ராகுவானால் நீடித்த நோய்களையும், செவ்வாய், சூரியன் மற்றும் கேதுவானால் அவை நோயால் அதிகக் கஷ்டங்களைக் கொடுத்தாலும், அதற்கு இணையாக நோயிலிருந்து விடுபடவும் வைக்கின்றன. வலுவான, பாதிப்படையாத கிரக நிலைகளைக்கொண்ட ஜாதகர், நல்ல ஆரோக்கியமான உடல்நிலையைப் பெற்று இன்பமாக வாழ்கிறார்.

செல்: 97891 01742

bala190822
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe