ஜாதகத்தில் லக்னத்திற்கு 11-ஆம் வீட்டிற் குரிய கிரகம் லாபங்களையும், வாக்கு வண்மையையும், மூத்த சகோதர- சகோதரி களுடைய பலத்தையும் குறிக்கும். லக்னத்திற்கு 11-ஆம் வீட்டிற்குரிய கிரகம் லக்னத்திலேயே இருந்தால், பெரிய படிப் பாளிகளாகவும், வாக்கு வண்மையுடையவர் களாகவும், சாதுர்யமாகப் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், லாபங்களைப் பெறுவார்கள். குடும்பம் செல்வத்துடனும், செல்வாக்குடனும் விளங்கும். மூத்த சகோதரர்கள் சௌகர் யங்களுடன் இருப்பார்கள்.

Advertisment

பதினோறாவது வீட்டிற்குரிய கிரகம் 2-ல் இருந்தால், சட்டங்களைப் பயின்று வழக் கறிஞர்கள் போன்று விளங்குவார்கள். நல்ல தேஜஸ், வருமானம், கௌரவம், செல்வாக்கு, அதிகாரம் முதலியன ஏற்படும்.

11

பதினோறாவது வீட்டிற்குரிய கிரகம் 3-ல் இருந்தால், மூத்த சகோதர- சகோதரிகள் நல்ல அந்தஸ்துடன் இருப்பார்கள். சகோதரர் களின் ஆதரவு கிட்டும்.

Advertisment

பதினோறாவது வீட்டிற்குரிய கிரகம் 4-ல் இருந்தால், குடும்பம் முழு பலத்துடன் விளங்கும். பணியாட்களுடனும், செல்வாக்குட னும் விளங்குவார்கள். தெய்வீக வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். நேர்வழியில் செல்பவர்களாக இருப்பார்கள். தாய், தாய்வழி ஆதரவைப் பெற்றிருப்பார்கள். லாபங்கள் ஏற்படும். நிலம், கட்டடங்கள், வாகனங்கள் இருக்கும். குடும்பம் மகிழ்ச்சியுடன் விளங்கும்.

பதினோறாவது வீட்டிற்குரிய கிரகம் 5-ல் இருந்தால், பிள்ளைகளால் குடும்பம் புகழுடன் விளங்கும். தகப்பனார் தொழிலைப் பிள்ளை களும் செய்து செல்வந்தர்களாக விளங்கு வார்கள். பெரிய மனிதர்கள் நட்பு, அரசாங்க ஆதரவு, அந்தஸ்து முதலியன ஏற்படும். குடும்பம் செல்வாக்குடன் விளங்கும்.

பதினோறாவது வீட்டிற் குரிய கிரகம் 6-ல் இருந்தால், வரும் லாபங்களெல்லாம் கடன்காரர்களுக்குக் கொடுக் கும்படி நேரிடும். செய் தொழிலில் எதிரிகள், வஞ்ச கர்கள் இருப்பார்கள். கடன் அதிகமாகும். சஞ்சலம் நிறைந்திருக்கும்.

Advertisment

பதினோறாவது வீட்டிற்குரிய கிரகம் 7-ல் இருந்தால், மனைவியின்மூலம் பாக்கியங்களை அடைவார்கள். திருமணமான நாள்முதல் செல்வம், செல்வாக்குடன் விளங்குவார்கள். லாபங்கள் பெருகும். பிள்ளைகளால் மேலும் குடும்பம் செழிப்படையும். ஸ்திர சொத்துகளும், வாகனங்களும் சேரும்.

அரசாங்கத்திலும், பொதுப்பணியிலும், தெய்வீக வழிபாடுகளிலும், சாஸ்திர ஆராய்ச்சிகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

பதினோறாவது வீட்டிற்குரிய கிரகம் 8-ல் இருந்தால், பற்பல தொழில்களில் மனம் ஈடுபடும். அதனால் கையிலிலிருக்கும் செல்வம் கரைந்துபோய், சஞ்சலத்துடன் காலம் கழிப் பார்கள். மூத்தோர் மரணம் உண்டாகும்.

பதினோறாவது வீட்டிற்குரிய கிரகம் 9-ல் (குழந்தை, பாக்கிய ஸ்தானம்) இருந்தால், தந்தையின் தொழிலை அபிவிருத்தி செய்து பெரிய லாபங்களைப் பெறுவார்கள். பிள்ளைகளால் குடும்பம் புகழ்பெறும். பூமி, கட்டடங்கள், மாடு, கன்று விருத்தியாகும். வாகனம் அமையும். அரசாங்கத்தில் நண்பர் களாலும், தெய்வீக அருளினாலும் உயர் பதவிகளைப் பெறுவார்கள். ஆனந்தத்துடனும் அதிகாரங்களுடனும் இவர்களது வாழ்வு அமையும்.

பதினோறாவது வீட்டிற்குரிய கிரகம் 10-ல் (ஜீவன ஸ்தானம்) இருந்தால், கௌரவமான உத்தியோகத்தில் இருந்து லாபங்களைப் பெறுவார்கள். ஆடம்பரங்களின்றி அமைதி யான குடும்பமாக அமையும். சுக சௌகர் யங்கள் நிறைந்து விளங்கும். தெய்வீக வழிபாடுகள் நிறைந்திருக்கும்.

பதினோறாவது வீட்டிற்குரிய கிரகம் 11-ல் ஆட்சியாக அமர்ந்தால், பெரிய லாபங்களை எதிர்பார்க்க முடியாது. சமப் பலன்களே ஏற்படும். கௌரவமான குடும்பமாக விளங்கும். தெய்வீக வழிபாடுகள் நிறைந்திருக்கும். பிற்காலத்தில் தனவந்தர்களாக விளங்குவார்கள். மூத்த சகோதர- சகோதரிகள் நிலையான அந்தஸ்துடனும், சுக சௌகர்யங்களுடனும் இருப்பார்கள். அவர்களுடைய ஆதரவும் சம அளவிலே இருக்கும்.

பதினோறாவது வீட்டிற்குரிய கிரகம் 12-ல் (விரய ஸ்தானத்தில்) இருந்தால், பொருள் விரயங்கள் ஏற்படும். கடன் தொல்லைகள், வியாதிகள் உண்டாகும். உணவு வசதிகளும், நித்திரை சுகங்களும் இருக்கும். ஆயினும் அமைதி குறைந்தே இருப்பார்கள்.

பரிகாரம்

சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவி லுக்குச் சென்று துளசி அர்ச்சனை செய்துவர லாபங்கள் பெருகும். ஏதாவது ஒரு சனிக் கிழமை வீட்டில் அவல் பாயசம் செய்து, பெருமாளை நினைத்து வணங்கி பசு மாட்டிற்குக் கொடுக்கவேண்டும். (பால், நெய் சேர்க்கக்கூடாது அவற்றைச் சேர்த்தால் பசு சாப்பிடாது.)

செல்: 94871 68174