சென்னை அலுவலகத்திற்கு, ஜீவநாடியில் பலன்காண ஒரு தம்பதியர் வந்திருந்தனர்.
அவர்கள் எதற்காக வந்துள்ளார்கள் என்பதையறிய பிரசன்ன நாடி ஓலையைப் படித்துப் பார்த்தேன். புத்திரன், வீடு, திருமணம் சம்பந்தமாக பலன்காண வந்துள்ளார்கள் என்று பதில் வந்தது.
"ஆமாம், ஐயா. எனது மகனுக்கு இப்போது 36 வயதாகிறது. எவ்வளவு முயற்சி செய்தும் திருமணம் தடையாகிக்கொண்டே வருகிறது. ஜோதிடர்கள், எங்கள் மகன் ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுள்ளது; அதனால் இதுபோன்று செவ்வாய் தோஷமுள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டும். இல்லையென்றால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இராது என்று கூறி சில சாந்திப் பரிகாரங்களையும், கோவில் பிரார்த்தனைகளையும் கூறினார்கள். அவர்கள் கூறியமுறையில் அனைத் தையும் செய்து முடித்துவிட்டோம்.
இப்போதும் பெண் பார்க்கும் போது

இப்போதும் பெண் பார்க்கும் போது, பெண் வீட்டாரிடம் எங்கள் மகன் ஜாதகத்தைக் கொடுத்தால், இது செவ்வாய் தோஷ ஜாதகம் என்று கூறி பெண் தரமறுத்து விடுகிறார்கள். அதனால்தான் ஜீவநாடியில் ஏதாவது வழி கிடைக்குமென்று அகத்தியரை நாடி வந்துள்ளோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர், "இவன் விதியை நம்பி வாழ்பவன். கடவுளை வணங்கினால் கர்மவினைப்பதிவுகள் தீர்ந்துவிடும் என்பவன்.
இவன் மகனுக்கு எல்லா ஜோதிடர் களும் செவ்வாய் தோஷம் உள்ளது என கூறிவிட்டார்கள். ஆனால் ஆண்களுக்கு செவ்வாய் தோஷமில்லை.இவன் மகனுக்கு வம்சத்தில் உண்டான சகோதர சாபத்தால்தான் திருமணம் தடையாகிவருகிறது.
காவேரி நதி பாயும் பகுதியில், ஒரு கிராமத்தில் இவனது முன்னோர்கள் வசித்தார்கள். அங்கு வீடு, நிலம் என வசதியாக வாழ்ந்தார்கள். இவன் தகப்பன் கல்வி பயின்று, அரசுப் பணிசெய்து சம்பாதித்து வாழ்ந்தான். தன் பூர்வீக சொத்துகளை விற்றுவிட்டு, தான் உத்தியோகம் செய்த ஊரில் சொந்தமாக வீடு வாங்கி வசித்தான்.
இவன் தகப்பனுக்கு இவனது அண்ணன், அக்காள், இவன் என மூன்று குழந்தைகள். இவன் தந்தை, தனது சொத்துகளை இவனுக்கும் இவன் அண்ணனுக்கும் கொடுத்துவிட்டான். இவர்கள் குடியிருக்கும் வீட்டை இவர்கள் மூன்று பேருக்கும் பங்கிட்டுக்கொடுத்துவிட்டு இறந்துவிட்டான்.
இவன் அண்ணனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஆண் வாரிசு இல்லை.
அதனால் அவன் வீட்டில் தன் பங்கிற்குரிய பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான். இவனோ, தன் அக்காளுக்கு வீட்டின் பங்கையோ அதற்குரிய பணத்தையோ கொடுக்காமல் ஏமாற்றிவிட்டான். அவளும் பலமுறை தன் பங்கைக் கேட்டும், இன்றுவரை தரவில்லை.
பூர்வீக சொத்தை இழந்த இவன் அக்காள் மனம் வெறுத்து, "நான் பிறந்து வளர்ந்த, எனக் கும் உரிமையுள்ள இந்த வீட்டில் இனி எந்தப் பெண்ணும் வந்து வாழக்கூடாது. இந்த வீட்டில் விளக்கேற்ற பெண் இல்லாமல் போகட்டும்' என்று வாக்குவிட்டுள்ளாள். இவன் வசிக்கும் வீடு சாபசொத்து. இவன் மகன் திருமணத்தை இந்த சகோதர சாபம்தான் தடை செய்துவருகிறது.
இந்த உலகில் ஒருசிலருக்கு வம்சத்தில் உண்டான சாபம் இப்பிறவி வாழ்வில் பாதிப்பு தரும். பலருக்கு முற்பிறவியில் செய்த பாவம் இப்போது சிரமம் தரும்.
ஆனால் இப்பிறவியில் இவன் செய்த பாவமும், அதனால் உண்டான சகோதர சாபமும் இவன் மகன் திருமணத்தைத் தடைசெய்து இவனை வருத்துகிறது. சகோதரி சாபம் தீர்ந்தால் திருமணம் கூடும்.
இவன் மகனுக்கு வரப்போகும் மனைவி நல்ல குணவதி; அதிபுத்திசாலி; கண்ணியமானவள்; இளமையான தோற்ற முடையவள்; இனிமையாகப் பேசிக்கூடிய வள்; குடும்பம் நடத்துவதில் திறமையானவள். அவள் லட்சுமி சம்பந்தமான பெயர் உடையவள். அவள் பிறந்த ஊர் தெற்கு திசையில் 10 மைல் தொலைவில் உள்ளது. அவள் பிறந்த வீடு தெற்கு- வடக்கு வீதியில், கிழக்கு- மேற்கு முன்வாசல் உள்ள வீடு. இவன் குடும்பத்தைவிட பொருளாதாரத்தில் குறைவானவர்கள். மகனுக்கு அவளைத் திருமணம் செய்துவைக்கச் சொல்'' என்று கூறிய அகத்தியர், இவர் அக்காள் விட்ட சாபம் நிவர்த்தியாக வழிமுறைகளைக் கூறிவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார்.
இன்றைய நாளில் செவ்வாய் தோஷம் என ஏராளமான ஆண்- பெண்களின் திருமணம் தடைப்பட்டு, வாழ்கின்றார் கள். உண்மையான செவ்வாய் தோஷம் பற்றியும் அந்த தோஷத்தால் உண்டாகும் பலன்களையும் ஆய்வுசெய்து, அனுபவத்தில் அறிந்ததை, அடுத்தடுத்த இதழ்களில் அறிவோம்.
செல்: 99441 13267