உறவு முறைகளைக் குறிக்கும் பாவகங்கள்! -பண்டிட் எம்.ஜி.பி.

/idhalgal/balajothidam/sins-represent-relationships

ருவருடைய லக்னம் என்பது ஜாதகரை குறிக்கும்.

ஒருவருடைய லக்னத்தில் இருந்து ஒன்பதாம் பாவகம் தந்தை.

ஒருவருடைய லக்னத்தில் இருந்து நான்காம் பாவகம் தாய்.

ஒருவருடைய லக்னத்தில் இருந்து ஏழாம் பாவகம் மனைவி.

ஒருவருடைய லக்னத்தில் இருந்து பதினோராம் பாவகம் மூத்த சகோதரன்- சகோதரி.

ஒருவருடைய லக்னத்தில் இருந்து மூன்றாம் பாவகம் இளைய சகோதரன்- சகோதரி.

ஒருவருடைய லக்னத்தில் இருந்து ஐந்தாம் பாவகம் ஜாதகருடைய பிள்ளை.

இவையனைத்தும் ஜாதகருடைய லக்னத் திற்கு நேரடி தொடர்பையுடைய உறவுகளின் பாவகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

ஆனால்....

அதேசமயம்

உப உறவுகளான தாத்தா- பாட்டி, மாமனார்- மாமியார், தாய்மாமா, பெரியப்பா- சித்தப்பா, சித்தி, அத்தை, அத்தை மகள், அத்தை மகன் மற்றும் அக்கா மகன், அக்கா மகள், தங்கை மகன், தங்கை மகள், தம்பி மகன், தம்பி மகள் போன்ற உறவுகளை நேரடி பாவகமாக வராமல் உப பாவகமாக வரும்.

அதாவது உதாரண

அதாவது உதாரணமாக....

ஒருவருடைய லக்னத்திலிருந்து, தாயைக் குறிக்கக்கூடிய நான்காம் பாவகத்திற்கு, மூன்றாம் பாவகமாக அதாவது ஜாதகரு டைய லக்னத்திற்கு ஆறாம் பாவகமாக வரும்.

dee

இது...

தாயாருடைய உடன்பிறப்பு, அதாவது...

ஜாதகருக்கு தாய்மாமா எனும் உறவை குறிக்கும்.

அதேபோல சித்தியையும் குறிக்கும்.

மேலும்...

ஜாதகருடைய.... தந்தையைக் குறிக்கக்கூடிய

அதாவது...

லக்னத்திற்கு ஒன்பதாம் பாவகத்திலிருந்து... ஒன்பதாம் பாவகமானது ஜாதகருடைய லக்னத்திற்கு ஐந்தாம் பாவகமாக வரும்.

இது...

தந்தையின் தந்தையான ஜாதகருடைய தாத்தாவை குறிக்கும்.

ஜாதகருடைய தாயின் தாயான, தாய்வழி பாட்டியை தாய் பாவகத்திற்கு நான்காம் பாவகமான ஜாதகருடைய லக்னத்திற்கு 7-ஆம் பாவகமாக வரும்.

தந்தையின் பாவகத்திலிருந்து நான்காம் பாவகம் ஜாதகரின் லக்னத்திற்கு 12-ஆம் பாவகமாக வரும்.

இது...

தந்தையைப் பெற்ற தாயான ஜாதகரு டைய பாட்டியைக் குறிக்கும்.

கூடுதலாக.. தாயின் பாவகத்திலிருந்து ஒன்பதாம் பாவகம் தாயின் தந்தையைக் குறிக்கும்.

மேலும் இதுவும் ஜாதகரின் லக்னத்திற்கு 12-ஆம் பாவகமாக வரும்.

எனவே இந்த பாவகம் தாயின் தந்தையான தாய்வழி தாத்தாவையும் குறிக்கும்.

தந்தையின் பாவகத்திலிருந்து பதினோராம் பாவகம் தந்தையின் உடன்பிறந்த சகோதரர் களைக் குறிக்கும் என்பதால், அது ஜாதகரு டைய பெரியப்பா சித்தப்பாவை குறிக்கும்.

மேலும் அது...

ஜாதகருடைய லக்னத்திலிருந்து ஏழாவது பாவகமாக வரும் என்பது குறிப் பிடத்தக்கது.

மேலும்...

அவர்களுடைய பிள்ளைகளை ஏழாம் பாவகத் திற்கு ஒன்பதாம் பாவக ரீதியில் கணக் கிட்டால்...

நம்முடைய லக்னத்திற்கு மூன்றாம் பாவகமாக வரும்.

அதாவது பெரியப்பா- சித்தப்பா பிள்ளைகளின் பாவகமும் ஜாதகருக்கு சகோதர- சகோதரிகள் எனும் உறவு முறைகளைக் குறிக்கும் பாவகமாக வரும்.

தந்தையின் பாவகத்திலிருந்து மூன்றாம் பாவகம், ஜாதகருடைய லக்னத்திற்கு பதினோ ராம் பாவகத்தைக் குறிக்கும்.

இது...

தந்தையின் சகோதரிகளைக் குறிக்கும்.

அதாவது ஜாதகருடைய அத்தையைக் குறிக்கும்.

மேலும்...

அவர்களுடைய பிள்ளைகளைக் குறிக்கக்கூடிய, பதினோராம் பாவகத்திற்கு ஒன்பதாம் பாவகம் என்பது, ஜாதகருக்கு ஏழாம் பாவகமாக அதாவது களத்திர பாவக மாக திருமணம் செய்வதற்கு உரிமையுள்ள அத்தை மகன், அத்தை மகள் போன்ற உறவு களைக் குறிக்கும்.

அதேபோல...

அக்கா மகள் என்பது ஜாதகருடைய லக்னத்திற்கு நேரடி 11-ஆம் பாவகத்திற்கு ஒன்பதாம் பாவகம். ஜாதகருடைய லக்னத் திற்கு ஏழாம் பாவகமாகவும் இதுவும்... களத்திர பாவகமாகவும், திருமணம் செய்ய உரிமையுள்ள அக்கா மகள் எனும் உறவு களைக் குறிக்கும் பாவமாக வரும்..

தங்கை மகள் அல்லது தங்கை மகன் என்பது ஜாதகருடைய லக்னத்திற்கு மூன்றாம் பாவகத்திற்கு ஐந்தாம் பாவகம்.

இதுவும் ஜாதகருடைய லக்னத்திற்கு ஏழாம் பாவமாக வரும் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால் அதேசமயம் அண்ணன் மகள்- அண்ணன் மகன் போன்ற உறவுகள் ஜாதகரு டைய லக்னத்திற்கு நேரடியாக பதினோராம் பாவகத்திற்கு, ஐந்தாம் பாவகமாக கணக் கிட்டால் லக்னத்திற்கு மூன்றாம் பாவகமாக அதாவது ஜாதகருக்கு ரத்த சம்பந்த தொடர்புடைய சகோதர- சகோதரிகள் எனும் உறவு முறைகளைக் குறிக்கும் பாவகமாக வரும்.

அதுபோலவே....

தம்பி மகள் அல்லது தம்பி மகன் போன்ற உறவுகள் மூன்றாம் பாவகத்திற்கு ஒன்பதாம் பாவகமாக கணக்கிட்டால், ஜாதகருடைய லக்னத்திற்கு பதினோராம் பாவகமாக அதாவது இதுவும் ஜாதகருக்கு ரத்த சம்பந்த தொடர்பையுடைய சகோதர- சகோதரிகள் எனும் உறவுமுறைகளைக் குறிக்கும் பாவகமாக வரும்..

மாமனார்- மாமியாரை குறிக்கும் பாவகம். அதாவது மனைவியின் ஏழாம் பாவகத்தி லிருந்து நான்காம் பாவகம் ஜாதகருடைய பத்தாம் பாவகம். இது மாமியாரைக் குறிக்கும்.

பத்தாம் பாவகத்திற்கு ஏழாம் பாவகம். மாமியாரின் கணவர் அதாவது ஜாதகரின் மாமனாரை குறிக்கும் பாவகமாக வரும்.

செல்: 89035 51587

bala271224
இதையும் படியுங்கள்
Subscribe