Advertisment

முற்பிறவி பாவ-சாபவம் இப்பிறவி நோய்!

/idhalgal/balajothidam/sins-previous-life-are-diseases-life

சுமார் 40 வயதுடைய ஒருவர் நாடியில் பலனறிய வந்தார்.

அவர் தான் ஒரு ஜோதிடர், ஜோதிடத் தொழில் செய்துவருகிறேன். எனக்கு ஒரு மனைவியும், ஒரு மகளும் இருக்கிறார்கள். என் மனைவிக்கு, அடிக்கடி ஏதாவதொரு நோயினால், பாதிப்படைகிறாள். உடல் நலிவடைந்துகொண்டே வருகிறது. சரியாக சாப்பிடவும் முடியவில்லை, தூக்கமும் இல்லாமல் மிகவும் சிரமப்படுகி றாள்.

"ஒரு கணித ஜோதிடரென்றும், பலருக்கு ஜோதிடம் பார்த்துப் பலன் கூறுகிறேன் என்கிறீர்கள். உங்கள் மனைவியின் இந்த நிலை பற்றி, வேத ஜோதிடம்மூலம் பலன் அறிந்துகொள்ளவில்லையா?''

"அவள் ஜாதக கிரகநிலை, தசாபுக்தி, அறிந்து பல கோவில்களில் பலவிதமான பரிகாரங்களைச் செய்தேன். யாராவது எதிரிகள் ஏவல், பில்லி, சூனியம் வைத்திருப்பார்களோ என்றெண்ணி மாந்தரீக முறையிலும் சில சாந்திகளைச் செய்தேன். ஆனால் பலன் தான் இல்லை. நோய்த்தாக்கம் தீரவில்லை. மருத்துவர் கள் தரும் மருந்து களாலும் பல னில்லை. இறுதியாக அகத்தியரை ந

சுமார் 40 வயதுடைய ஒருவர் நாடியில் பலனறிய வந்தார்.

அவர் தான் ஒரு ஜோதிடர், ஜோதிடத் தொழில் செய்துவருகிறேன். எனக்கு ஒரு மனைவியும், ஒரு மகளும் இருக்கிறார்கள். என் மனைவிக்கு, அடிக்கடி ஏதாவதொரு நோயினால், பாதிப்படைகிறாள். உடல் நலிவடைந்துகொண்டே வருகிறது. சரியாக சாப்பிடவும் முடியவில்லை, தூக்கமும் இல்லாமல் மிகவும் சிரமப்படுகி றாள்.

"ஒரு கணித ஜோதிடரென்றும், பலருக்கு ஜோதிடம் பார்த்துப் பலன் கூறுகிறேன் என்கிறீர்கள். உங்கள் மனைவியின் இந்த நிலை பற்றி, வேத ஜோதிடம்மூலம் பலன் அறிந்துகொள்ளவில்லையா?''

"அவள் ஜாதக கிரகநிலை, தசாபுக்தி, அறிந்து பல கோவில்களில் பலவிதமான பரிகாரங்களைச் செய்தேன். யாராவது எதிரிகள் ஏவல், பில்லி, சூனியம் வைத்திருப்பார்களோ என்றெண்ணி மாந்தரீக முறையிலும் சில சாந்திகளைச் செய்தேன். ஆனால் பலன் தான் இல்லை. நோய்த்தாக்கம் தீரவில்லை. மருத்துவர் கள் தரும் மருந்து களாலும் பல னில்லை. இறுதியாக அகத்தியரை நாடி வந்துள்ளேன். ஆசான்தான் என் மனைவி உடல் நலம்பெற வழி கூறவேண்டும்'' என்றார்.

Advertisment

ss

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப்படிக்கத் தொடங்கினேன்.

அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றிப் பலன்கூறத் தொடங்கினார்.

"இவன் மனைவியின் வம்ச முன்னோர்களில் பாட்டன்கள் இரண்டுபேர் இருந்தனர்.

இருவரில் மூத்தவன் நன்கு உழைத்து, பொருள்தேடி குடும்பத்தை உயர்த்திக் காப்பாற்றினான். அந்த மூத்த அண்ணனுக்கு மனைவியும், பெண் குழந்தையும் இருந்தார்கள். இவளின் பெரிய பாட்டன் ஒரு விபத்தில் இறந்தான். அதன்பிறகு சின்னபாட்டனும் அவன் மனைவியும், சொத்து, குடும்பப் பொறுப்புகளை நிர்வாகம் செய்தார். பெரியபாட்டனின் மனைவியையும், மகளையும் மிகவும் கொடுமைபடுத்தி வேலைக்காரியைப்போல் நடத்தினார் கள். குடும்ப சொத்துகளில் அவர்களுக்கு முறையாகச் சேரவேண்டிய பாகச் சொத்து களைப் பிரித்துத் தராமல் தாங்களே முழுவதையும் அனுபவித்தார்கள்.

இவளின் சின்னப் பாட்டன் மனைவி யால், பல துன்பங்களை அனுபவித்த அந்தத்தாய், மனம் வெறுத்து, வயி றெரிந்து, இளையவளுக்கு வாக்கு சாபமிட் டாள். "என்னையும், என் குழந்தையையும், இவ்வளவு கஷ்டப்படச் செய்யும், இவள் பிறக்கும் எல்லாப் பிறவிகளிலும், திருமணம் முடிந்து, ஒரு குழந்தை பிறந்தபின்பு நோயினாலும், மற்ற பலவைகளிலும், துன்பம் அடையவேண்டும். இவள் பெற்ற குழந்தை வளர, வளர, இவள் நடை குறைந்து முடங்கிவிடவேண்டும். எவ்வளவு செல்வம், சொத்து இருந்தாலும் அவற்றை அனுபவிக்கக்கூடாது, வாய்க்கு ருசியாக உணவுண்ண முடியாமல் போகட்டும்.

என் கணவருக்கு முறையாகப் பிரித்துத் தரவேண்டிய எங்களுக்குச் சேரவேண்டிய பாகச் சொத்துகளைத் தராமல் ஏமாற்றித் தானே அனுபவிக்கிறாள். இவள் எத்தனை பிறவியெடுத்தாலும், ஒருவனைத் திருமணம் செய்தபின்பு, அவள் கணவன் வீட்டில், உறவுகளுடன் சேர்ந்து வசிக்க முடியாமல், வாழவந்த வீட்டிலிருந்து வெளியேறி, இவர்கள் தனித்தே வசிக்கவேண்டும். மேலும் இவள் கணவனுக்குக் கிடைக்வேண்டிய குடும்பச் சொத்துகளை கணவனுக்குத் தராமல், இவர்களே கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்து வாழவேண்டும்' என்று தான் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் அனைத் தையும், இவள் அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவித்து வாழவேண்டுமென்று சாபமிட்டாள்.

முற்பிறவியில், இளைய பாட்டன் மனைவியாக இருந்து, பல பாவங்களைச் செய்து, சாபம் பெற்றுவள்தான், இப்பிறவியில் இவன் மனைவி. இதேபோன்று பெரிய பாட்டனின் மகளாகப் பிறந்து பல கஷ்டங்களை அனுபவித்த அந்தப்பெண் குழந்தைதான் இந்தப் பிறவியில், இவர்களுக்கு மகளாகப் பிறந்துள்ளாள்.

முற்பிறவி பெண் சாபத்தினால், இவளைத் திருமணம் செய்த பின்பு, இவன் பெற்றோரை விட்டுவிலகி தனியே வசிக்கத் தொடங்கினான். இன்றுவரை இவன் குடும்பத்தினர் இவனுக்குத் தரவேண்டிய பாகச் சொத்துகளைப் பிரித்துத் தரவில்லை. இவனே உழைத்து சம்பாதித்து வாழ்கிறான்.

இவளுக்கு மகள் பிறந்தவுடன் சாபம் செயல்படத் தொடங்கியது. மகள் பெரியவளாக வளர வளர, நோய்த்தாக்கம் ஏற்பட்டு, இவள் நல்ல ஆடை, ஆபரணங்கள் அணியமுடியாமல், வாய்க்கு ருசியாக உணவுண்ண முடியாமல், நடைகுறைந்து, படுக்கையில் முடங்கிவிடச் செய்துவிட்டது. மருத்துவச்செலவு, தண்டச்செலவு, விரயச் செலவைத் தந்துகொண்டே இருக்கிறது.

கர்மவினை சாபம் நோயாக செயல் படுகிறது. இவள் நோய்க்கு காரணத்தை எந்த மருத்துவமுறையிலும் கண்டு, தெரிந்துகொள்ளமுடியாது. முற்பிறவியில் செய்த பாவத்திற்குண்டான தண்டனையைத்தான் அனுபவித்துக்கொண்டு இருக்கி றாள்'' என்று கூறிய அகத்தியர், வம்சத்தில் பெண்விட்ட சாபம் நிவர்த்தியாக பல வழிமுறைகளையும், சாபமிட்ட ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகளையும் கூறிவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார்.

முற்பிறவிகளில் குடும்ப உறவுகளுக்குச் செய்த பாவம், அடுத்த பிறவி வாழ்க்கையில், பல சிரமம், தடைகளைத் தரும், பாவ- சாபத் தாக்கத்தை இறைப் பரிகாரங்களால் தீர்க்கமுடியாது என்பதை நானும் தெரிந்து கொண்டேன்.

செல்: 99441 13267

Advertisment
bala131224
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe