சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் சுகமாக வாழ முயற்சிக்கிறான்.
ஆனால், சிலர் வசதிவாய்ப்புகளுடன் செல்வந்தர்களாக வாழ்கிறார்கள். பலர் வறுமை, சிரமம், காரியத் தடை என கஷ்டத்து டன் வாழ்கின்றனர்.
வாழ்வில் உண்டாகும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் விதிதான் காரணமென சிலரும், கிரகம்தான் காரணமென சிலரும் கூறுகிறார் கள். உண்மையில் மனித வாழ்க்கையில் ஏற்படும் உயர்வு- தாழ்வுக்குக் காரணம் விதியா? கிரகங்களா? விதிப்படிதான் மனிதன் வாழ்வில் எல்லாம் நடக்குமெனில், அந்த விதி எப்படி உருவாகி றது? விதியை உருவாக்குபவர் யார்?
கிரகங்கள்தான் காரணமெனில், வானில் உலவும் கிரகங்கள் தன் கதிர்வீச்சுகளால் ஒவ்வொரு மனிதன் வாழ்வில் நன்மை- தீமைகளைச் செய்யுமா? பாதிப்பைத் தரும் கிரகங்களுக்கு பரிகாரம் செய்தால் நல்ல பலன் கிட்டுமா? இதற்கு சித்தர்கள் கூறும் விளக்கத்தை அறிவோம்.
விதி
இந்த பூமியில் தோன்றும் ஒவ்வொரு மனிதனும், உயிரினமும் தன் இனத்தின் ஆண்- பெண் சேர்க்கையால்தான் கருவுற்றுப் பிறக்கமுடியும் என்பது பொதுவான விதி. தாவரங்கள் மகரந்தச் சேர்க்கையால் இன விருத்தி செய்யவேண்டும் என்பதும் விதி.
உயிரினங்களும் தாவரங்களும் மண், நீர், காற்று, சூரிய ஒளி ஆகியவற்றை ஆதார மாகக்கொண்டே வாழவேண்டும்- தழைக்க வேண்டும் என்பதே விதி.
உலகிலுள்ள உயிரினங்கள் அனைத் துக்கும் சுவாசம், பசி, தாகம், தூக்கம், மரணம் என அனைத்தும் உண்டென்பது விதி. சுவாசத்தை காற்றினால் அடையவேண்டும். பசியை மண்ணில் விளையும் தானியங்களால் தீர்த்துக்கொள்ள வேண்டும். பசிக்குப் பரிகாரம் உணவு. தாகத்தை நீரினால் தணித்துக்கொள்ள வேண்டும். தாகத்திற்குப் பரிகாரம் நீர். இந்த பூமியில் பிறக்கும் அனைத்து உயிரினங்களும் மரணமடைய வேண்டும் என்பது விதி. மரணத்தை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது.
இந்த விதியென்பது, மனிதன், உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவானது. இயற்கையால் பொதுவாக நிர்ணயித்து வைக்கப்பட்டது. இந்த பொதுவிதியைத் தவிர, ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி விதி கிடையாது. எனவே மனித வாழ்க்கையில் உண்டாகும் உயர்வு- தாழ்வு, சிரமம், தடைகளுக்கு விதி காரணமல்ல என்கிறார்கள் சித்தர் பெருமக்கள்.
சூரியன், சந்திரன் போன்ற அனைத்து கிரகங் களும் தங்களின் இயல்பான உஷ்ணம், குளிர்ச்சி என அனைத்தையும் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பாகுபாடின்றி சமமாகவே தந்து அனுபவிக்கச் செய்கிறது. எனவே, மனித வாழ்வில் உண்டாகும் உயர்வு- தாழ்வுக்கு கிரகங்கள் காரணமல்ல எனக் கூறுகிறார்கள் சித்தர்கள்.
வாழ்வில் உண்டாகும் உயர்வு- தாழ்வுக்கு கிரகங்கள் காரணமல்ல எனில், எதுதான் காரணம்? இந்த கேள்விக்கு சைவத் தமிழ்ச் சித்தர்கள் தமிழ்முறை ஜோதிடத்தில் தெளிவான விளக்கத்தைக் கூறியுள்ளனர்.
ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் உண்டாகும் நன்மை- தீமை, உயர்வு- தாழ்வு, வெற்றி- தோல்வி, வறுமை போன்றவற்றைத் தீர்மானித்து நிர்ணயிப்பது அவரவர் நடைமுறைச் செயல்களால் உண்டாக்கிக் கொள்ளும் வினைப்பதிவுகள்தான்.
ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தினருக்கும், தன்னை நம்பியிருப்பவர்களுக்கும், சார்ந்திருப்பவர்களுக்கும் செய்யும் நன்மை யான செயல்கள் நல்வினையாகவும், புண்ணியப் பதிவுகளாகவும் செயல்படுகிறது. ஒரு மனிதன் மற்றவர்களுக்குச் செய்யும் துரோகம், சிரமம், பாதிப்பு போன்றவை தீவினை- பாவ வினைகûளாகின்றன.
மனிதன் ஒரு பிறவியில் செய்யும் புண்ணியப் பதிவுகள், அவன் இந்த பூமியில் அடுத்தடுத்து பிறக்கும் ஒவ்வொரு பிறவியிலும் அவன் வாழ்வில் நன்மைகளையும், உயர்வுகளையும் தந்துவரும். ஒரு பிறவியில் பிறருக்குச் செய்த தீமைகள் அந்த பாவம் நிவர்த்தியடையும்வரை தடைகளைத் தந்து அனுபவிக் கச் செய்து வரும்.
வாழ்வில் உண்டாகும் நன்மை- தீமைக்கு அவரவர் முன்வினைப் பதிவுகளே காரணமென்கிறார்கள் சித்தர்கள்.
ஒரு மனிதனின் முற்பிறவி பாவ- புண்ணியப் பதிவுகள்தான் அடுத்த பிறவி வாழ்வில் நன்மை- தீமைகளைச் செய்யுமெனில், இப்போது செய்யும் புண்ணியச் செயல்களால் இப்பிறவி வாழ்வில் நன்மை உண்டாகுமா? பாவச் செயல்களால் சிரமம் உண்டாகுமா? உண்டாகாதா என்பது அடுத்த கேள்வி.இதற்கு சித்தர்கள் கூறியுள்ள பதிலை அறிவோம்.
ஒருவர் இந்தப் பிறவியில் நல்லவராக புண்ணியங்களையே செய்து வாழ்ந்தாலும், அதற்குண்டான நல்ல பலன்களை இந்தப் பிறவி யில் அனுபவிக்கமுடியாது. அதேபோன்று, பிறரை ஏமாற்றிப் பொருள் பறித்து கெடுதல் களைச் செய்து வாழும் ஒருவன், அதற்குண்டான பாவப் பலன்களை இப்பிறவியில் அனுபவிக்க மாட்டான்.
இந்த உண்மையை பட்டினத்தார்-
"பின் செய்த தீவினை யாதொன்றுமில்லை
பிறப்பதற்கு
முன்செய்த தீவினையே இங்ஙனே வந்து
மூண்டதுவே'
என்கிறார்.
முற்பிறவியில் செய்த நன்மை- தீமைதான் இப்பிறவி வாழ்வின் பலனாகும். இப்பிறவியில் செய்யும் பரிகாரம், தானம், தர்மம், நன்மையான செயல்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இதனால்தான் நல்லவர்கள்கூட முற்பிறவியில் செய்த பாவத்தால் இப்பிறவியில் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். தீயவர்கள் முற்பிறவியில் செய்த புண்ணியப் பலனால் இந்தப் பிறவியில் வசதியுடன் சுகமாக வாழ்கிறார்கள்.
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் முற்பிறவி புண்ணிய- பாவப் பதிவுக்குத் தகுந்த நிலையில், அவற்றைக் குறிப்பிடும் உதாரண கிரகங்கள் அமைந்திருந்திருக்கும். இப்போது பாவ கர்த்தரி யோக நிலை கிரக அமைப்பையும் பலன்களையும் அறிவோம்.
உதாரண ஜாதகத்தில், சனி தொழில், ஜீவனம், சம்பாத்திய வழிமுறையைக் குறிக்கும் உதாரண கிரகம். செவ்வாய் சகோதரன், பங்காளியைக் குறிக்கும் உதாரண கிரகம். சந்திரன் தாய், மூத்த சகோதரியைக் குறிக்கும் உதாரண கிரகம்.
இந்த சனி, செவ்வாய் அமைப்பு இந்த ஜாதகருக்கு முற்பிறவியில் உண்டான சகோதரி- பங்காளி சாபத்தைக் குறிக்கிறது. இவருக்கு சகோதரர்களால் எந்த நன்மையும் இராது. ரத்த சம்பந்தமான உறவினர்களுடன் பகையுண்டாகும். சரியான தொழில், உத்தியோகம் அமையாது. பல தொழில் செய்யநேரும். நிரந்தரமான தொழில் அமைவது சிரமம். அப்படியே அமைந்தாலும் அதில் தடை, சிரமம் உண்டாகும். இவர் எதைச் செய்தாலும் அது பிறரால் குற்றமாகவே கருதப்படும்.
இவரின் யோகப் பலன்களை சகோதரர்கள் அனுபவிப்பார்கள். சகோதரர்கள் நல்ல தொழில், உத்தியோகம் அமைந்து செல்வந்தர்களாக வாழ்வார்கள். அவர்கள் காரியத்துக்கு இவரைத் தேடிவருவார்கள்.
இவருக்கு வாழ்நாள் முழுவதும் கடன் தொல்லையிருக்கும். பணவிரயம் உண்டாகும். சம்பாதிக்க வேண்டிய வயதில் தன் வாழ்வின் உயர்வு பற்றி பெரிதாக எண்ணமாட்டார். 55 வயதுக்குமேல்தான் தன் வாழ்க்கை, குடும்பம் பற்றி சிந்திப்பார். கடவுள் பக்தியுடையவராக இருப்பார். ஆனால், இவரின் வேண்டுல், பிரார்த்தனைகள் பலிக்காது.
தாயிடம் கருத்து வேறுபாடுண் டாகும். தாய்ப் பாசம் குறையும். இவரின் திருமணத்துக்குப் பிறகு, தாய், சகோதரர்கள் ஒரு குழுவாகவும்; இவரும் இவர் குடும்பமும் தனியாகவும் இருக்கும்.
பொதுவாக, சனி, செவ்வாய், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் இதைப் போன்று அடுத்தடுத்து இருந்தாலும், சனிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தாலும் முற்பிறவி சகோதர சாபத்தால் இதுபோன்ற பலன்களை அடைந்து வாழ்வார்.
ஒருவரின் பிறப்பு ஜாதகத்திலுள்ள கிரக நிலைமூலம் முற்பிறவி பாவம், இப்பிறவியில் அனுபவிக்கச் செய்யும் பலன்களைத் துல்லியமாக அறியலாம். இதற்கு பாவ நிவர்த்தி முறை ஒன்றே நல்ல தீர்வைத் தரும்.
செல்: 99441 13267