Advertisment

விரும்பிய மங்கையைக் கொன்ற பாவம்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-killing-loved-one-chithardasan-sunderji-jeevanadi-corruption-study

சுமார் 45 வயதுடைய ஒருவர், ஜீவநாடியில் பலன் கேட்க வந்தார். அவர் "இதுவரை எனக்கு சரியான தொழில் அமையவில்லை; திருமணமும் தடையாகிக்கொண்டே வருகின்றது. ஜோதிடர்கள் கூறிய அனைத்து பரிகாரங்களையும் செய்தேன். போகாத கோவில் இல்லை; குளிக்காத குளம் இல்லை; வேண்டாத தெய்வமில்லை. எனக்குத் திருமணம் நடக்குமா? சரியான தொழில் அமையுமா? இந்த நிலைக்கு காரணம் என்ன? இதை அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்தேன்'' என்றார்.

ஜீவ நாடி ஓலையைப் படிக்கத் தொடங்கினேன்.

Advertisment

அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றி அவரின் வாழ்க்கை குறைகளுக்கு எழுத்து வடிவாக பதில் கூறத் தொடங்கினார்.

ag

"முற்பிறவியில் இவன் கோவில் பணி செய்து வாழ்ந்தான். அப்போது தங்களின் பாவங்கள் தீர்வதற்காக மக்கள் இறைவனுக்குத் தந்த காணிக்கையான பணம், பொருட்கள் என அனைத் தையும் கொஞ்சம், கொஞ்சமாக திருடி சுகமாக வாழ்ந்தான். மக்கள் செலுத்திய பணம்- அவர்கள் பாவ- சாபம் தீர்க்க தந்த பாவ- சாபம் பெற்ற பணம்- அதை எடுத்தால், அவர்கள் பாவ- சாபம

சுமார் 45 வயதுடைய ஒருவர், ஜீவநாடியில் பலன் கேட்க வந்தார். அவர் "இதுவரை எனக்கு சரியான தொழில் அமையவில்லை; திருமணமும் தடையாகிக்கொண்டே வருகின்றது. ஜோதிடர்கள் கூறிய அனைத்து பரிகாரங்களையும் செய்தேன். போகாத கோவில் இல்லை; குளிக்காத குளம் இல்லை; வேண்டாத தெய்வமில்லை. எனக்குத் திருமணம் நடக்குமா? சரியான தொழில் அமையுமா? இந்த நிலைக்கு காரணம் என்ன? இதை அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்தேன்'' என்றார்.

ஜீவ நாடி ஓலையைப் படிக்கத் தொடங்கினேன்.

Advertisment

அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றி அவரின் வாழ்க்கை குறைகளுக்கு எழுத்து வடிவாக பதில் கூறத் தொடங்கினார்.

ag

"முற்பிறவியில் இவன் கோவில் பணி செய்து வாழ்ந்தான். அப்போது தங்களின் பாவங்கள் தீர்வதற்காக மக்கள் இறைவனுக்குத் தந்த காணிக்கையான பணம், பொருட்கள் என அனைத் தையும் கொஞ்சம், கொஞ்சமாக திருடி சுகமாக வாழ்ந்தான். மக்கள் செலுத்திய பணம்- அவர்கள் பாவ- சாபம் தீர்க்க தந்த பாவ- சாபம் பெற்ற பணம்- அதை எடுத்தால், அவர்கள் பாவ- சாபம் நம்மையும் பற்றிக் கொள்ளும் என்பதை சாஸ்திரம், வேதம் படித்த இவன் அறிந்தும், அந்தச் செயலைச் செய்து பாவத்தை சேர்த்துக்கொணடான்.

(இன்றைய நாளிலும் கோவில் திருவிழாக்களில் பலர் ஏழைகளுக்கு அன்னதானம் செய்கின்றேன் என்று கூறி சோறு வழங்குகின்றார்கள். இவர்கள் பலவிதமான பாவங்களைச் செய்து, பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து, அந்த பாவங்கள் தீர அந்த பாவப் பணத்தில் கொஞ்சம் எடுத்து அன்னதானம் செய்தால் அந்த பாவம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் செய்கின்றார்கள். இந்த சோறு பாவச்சோறு, இதனை வாங்கி தின்பவர்களுக்கும் பாவத்தில் பங்கு சேரும்.)

இவன் தொழில் புரிந்த கோவிலுக்கு இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களில், செல்வந்தர்களை மதித்து, மரியாதை செய்தும், வசதி இல்லாத ஏழை, பாமர மக்களை அலட்சியப்படுத்தியும், துவேஷம் பாராட்டியும் தீட்டு, தோஷம் என்று கூறி, கோவிலில், இறைவன் சந்நிதியில், பக்தர்களிடையே, பாகுபாடு பார்த்து செயல்பட்டான். இதனால் பக்தர்கள் உண்டு என்று நம்பும் இறைவனின் கோப- சாபத்திற்கு ஆளானான். கோவில் பணி செய்து வெந்த சோற்றையும், வந்த பொருளையும் கொள்ளையடித்தாலும், ஆலயத்தில் எல்லாரும் சமம் என்று நினைக்காமல், செயல்பட்டு வாழ்ந்தா லும் இப்பிறவியில் சரியான தொழில் அமையால் இறைவனின் சாபம் தடுத்து வருகின்றது. இவன் தொழில் தெய்வ சாபத்தால் தடுக்கப்பட்டு தடையாகி வருகிறது.

இவன் முன்பிறவியில் யாரை? எப்படி கொலை செய்தான் என்பதையும் கூறுகின்றேன். இவன் பணிபுரிந்த ஆலயத்திற்கு, தன் வாழ்வின் கஷ்டம், சிரமம் தீர, கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஒரு விதவைப் பெண் அடிக்கடி வருவாள். அப்போது அவளிடம் சில கோவில் வேலைகளைச் செய்யச் சொல்வான். அவளும் செய்வாள். பிறர் ஆதரவில்லாத அந்த விதவைப் பெண்ணிடம் நைச்சியமாகப் பேசி அவளை தன் இச்சைக்கு இணங்க வைத்துவிட்டான்.

இவன் கூறிய ஆசை வார்த்தையை நம்பி, அவளும் இணங்கிவிட்டாள். இருவரும் பிறர் அறியாமல் சுகத்தை அனுபவித்து வாழ்ந்தார்கள். இவன் உறவால், அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தாள். இவனிடம் தான் கர்ப்பம் அடைந்ததைக் கூறி, தன்னைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறினாள். இவன் கர்ப்பத்தை கலைத்து விடலாம் என்று கூறியதற்கு அவள் மறுப்பு தெரிவித்து, திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று பிடிவாதம் செய்தாள்.

இந்தப் பெண்ணை திருமணம் செய்தால், சமுதாயத்தில் தனது மதிப்பு, மரியாதை, கௌரவம் போய்விடும் என்று எண்ணி, அவளை கொலை செய்யத் துணிந்தான். அவளை ஒரே தடவையில் கொலை செய்யக்கூடாது என்று திட்டமிட்டு, கோவில் தீர்த்தத்தில் விஷமூலிகை சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொடுத்தான். இந்த விஷம் அவள் உடம்பில் கலந்து சிறிது நாட்களிலேயே அவள் நோயுற்றது இறந்துபோனாள்.

இவனை விரும்பிய மங்கையை- ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும், அவள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையையும் கொன்றதால் பெண் சாபமும், களத்திர தோஷமும் பற்றியது கர்ப்பத்தில் இருக்கும் தன் குழந்தையைக் கொன்றதால் புத்திர சாபமும், கொலை செய்த தால் கொலை பாவமும் (பிரம்மஹத்தி தோஷம்) இவனைப் பற்றியது. தாயையும், குழந்தையையும் கோன்றதால் உண்டான களத்திர தோஷம் இப்பிறவியில் ஒரு கன்னியைக் கரம்பற்ற முடியாமல் தடைசெய்து வருகின்றது.

இவன் எந்த கோவிலுக்குச் சென்றதாலும், எத்தனை குளத்தில், புண்ணிய தீர்த்தங்களில் குளித்தாலும் பாவ- சாபம் தீராது. பிரார்த்தனை பலிக்காது. தண்ணீர் உடலிலும், ஆடையிலும் பொருட்களின் மேல் படிந்த கரை, அழுக்கை நீக்குமே தவிர, ஒரு ஆன்மா செய்த, முற்பிறவி கர்மவினையை கழுவி நீக்காது'' என்று கூறிவிட்டு, முன்பிறவியில் இவன் நடை முறை செயல்களில் செய்த பாவத்தை, இப்பிறவியில் வாழ்வின் நடைமுறை செயல்கள் மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி, எப்படி வாழ வேண்டும் என்றும் சில பிரார்த்தனைகளையும் கூறிவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார் அகத்தியர்.

அகத்தியர் கூறியதைக் கேட்ட அவர், "ஐயா, எனது வாழ்வில் உண்டான குறைகளுக்குக் காரணத்தை அறிந்து கொண்டேன். அகத்தியர் கூறியபடியே பாவ- சாப நிவர்த்திகளைச் செய்து, அகத்தியர் அடையாளம் காட்டிய பெண்ணை மணந்து, தொழிலைச் செய்து வாழ்வேன்'' என்று கூறி விடை பெற்றுச் சென்றார்.

செல்: 99441 13267

bala061023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe