சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ண்- பெண்களுக்குத் திருமணக் காலத்தில் பத்துப் பொருத்தங்கள், நட்சத்திரப் பொருத்தம் பார்த்தால் மட்டும் போதாது. அவர்கள் ஜாதகத்திலுள்ள கிரகச்சேர்க்கை, கிரகங்கள் 12 ராசிகளிலும் அமர்ந்துள்ள நிலையை ஆராய்ந்து, அவர்களது முன் ஜென்ம பாவ- சாப வினைப்பதிவுகள் தரும் தீமையான பலன்கள், அதற்குக் காரணம் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து, அதற்கான சரியான சாபநிவர்த்தி செய்துவிட்டு, அதன்பிறகு திருமணம் செய்துவைத்தால் சாபப்பதிவுகளால் உண்டாகும் பாதிப்புகள் இல்லாமல், குடும்ப வாழ்வு மகிழ்ச்சியாக அமையுமென்பது தமிழ்முறை ஜோதிடத்தில் சித்தர்கள் வாக்காகும்.

தமிழ்முறை ஜோதிடத்தில் அவரவர் விதி, வினையைக் கூறி, அவை வாழ்வில் சிரமம் தராமல் தடுத்துக்கொள்ளும் வழிமுறைகள் மட்டுமே கூறப்பட்டுள்ளது. நம்பிக்கையும் நம்பிக்கை சார்ந்த செயல்களும் பாவ- சாபத்தைத் தீர்க்காது. நடைமுறையில் நம்மையறிந்து, நாம் செய்யும் செயல்களே வாழ்வை உயர்த்தும்; மகிழ்ச்சியாக வாழவைக்கும். எல்லாரும் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறலாம். ஆனால் வினையைத் தீர்த்து வாழ்வில் உயரும் நடைமுறை வழிகளைக் கூறமுடியாது.

பணமுள்ளவர்கள் தங்கள் பாவ- சாபப் பதிவுகள் தீர பரிகாரம், பூஜை, ஹோமம், அபிஷேக ஆராதனைகள் என செய்துகொள்ளலாம். ஆனால் உழைத்து வாழும் ஏழைமக்கள் சித்தர்கள் கூறியுள்ள எளிமையான வழிமுறையில் பாவ- சாபநிவர்த்தி வழிகளைக் கடைப்பிடித்து மகிழ்ச்சியான வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.

Advertisment

siva

ஆண்- பெண்களின் பிறப்பு ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள சில நிலைகளையும், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் தீமையான பலன்களையும் சுருக்கமாக இங்கு காண்போம்.

ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில், சுக்கிரன் வேறெந்த கிரங்களுடனும் சேர்ந்திராமல் தனித்து ஒரு ராசியிலிருந்து, அந்த சுக்கிரன் இருக்கும் ராசிக்கு முன்பின் ராசிகளான 2, 12-ஆவது ராசிகளில் எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால், அவர் திருமணம் புரிந்து மனைவியாக வரும் பெண் வீட்டிற்கு ஒரே மகளாக இருப்பாள். பெரும்பாலும் உடன்பிறந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். யாராவது உறவுகள் இருந்தாலும் அவர்களால் இந்தப் பெண்ணுக்கு எந்த உதவியும் கிடைக்காது. திருமணத்திற்குப்பிறகு இந்த ஜாதகருக்கு மனைவி வீட்டாருடன் எந்த உறவும் தொடர்பும் பெரிதாக இல்லாமல் போய்விடும்.

ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் வேறெந்த கிரகத்துடனும் சேர்ந்திராமல் தனித்திருந்து, அந்த செவ்வாய்க்கு முன்பின் ராசிகளான 2, 12-ஆவது ராசிகளில் எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால், அவளைத் திருமணம் புரியும் கணவன் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருப்பார். பெரும்பாலும் அவருக்கு உடன்பிறந்தவர்கள் இருக்கமாட்டார்கள். உறவென்று யாராவது இருந்தாலும் பெரிதாக உதவி செய்யமாட்டார்கள். திருமணத்திற்குப்பிறகு இந்த ஜாதகிக்கு கணவன் வீட்டாருடன் பெரிதாக எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விடும்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவி கிரகமான சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9 -ஆவது ராசிகளிலோ அல்லது சுக்கிரன் இருக்கும் ராசியிலோ அவளது மாமியாரைக் குறிக்கும் உதாரண கிரகமான சந்திரன் இருந்தால், மாமியார்- மருமகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். தாய்க்கும் மனைவிக்கும் உண்டாகும் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாமல் தவிப்பார். ஜாதகரின் பெற்றோர் தங்கள் எதிர்கால நலன்கருதி உறவிலேயே பெண்ணெடுத்து மகனுக்குத் திருமணம் செய்துவைத்திருந்தாலும் இந்தப் பலன்தான் நடக்கும்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் உதாரண கிரகமான சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 12-ஆவது ராசியில் குறைந்தது மூன்று அல்லது நான்கு கிரகங்கள் இருந்தால், அவரைத் திருமணம் புரிந்துவரும் மனைவிதான் அந்த குடும்பத்தில் நல்லது- கெட்டது என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுச் செயல்படுவாள். நிம்மதியாக வாழமுடியாது. அந்த வீட்டுக்கு இவளைப் போல் வாழவந்த மற்ற மருமகள்கள் எந்தப் பொறுப்புமில்லாமல், குடும்பத் தைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பார் கள். இந்த ஜாதகரின் மனைவி குடும்பத் திற்காக எவ்வளவு பாடுபட்டாலும் அவளை மதிக்கமாட்டார்கள்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு முந்தைய ராசியான 12-ஆவது ராசியில் எந்த கிரகமும் இல்லாமல் வெறுமையாக இருந்தால், அவருக்கு மனைவியாக வரும் பெண் எந்தவிதமான குடும்பப் பொறுப்பும், குடும்பச் சுமையுமில்லாமல் நிம்மதியாக வாழ்வாள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் உதாரண கிரகமான செவ்வாய்க்கு முந்தைய ராசியில்- அதாவது 12-ஆவது ராசியில் மூன்று அல்லது நான்கு கிரகங்கள் இருந்தால், அந்தப் பெண்ணை மணம் புரியும் கணவன்தான் அவனது குடும்பத்திலுள்ள நல்லது- கெட்டது என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுச் செய்வான். கணவனின் சகோதரர்கள் குடும்பப் பொறுப்பில்லாமல் சுகமாக இருப்பார்கள். இந்தப் பெண்ணின் கணவன் குடும்பத்திற்காக எவ்வளவு பாடுபட்டாலும் குடும்பத்தினரிடையே நல்ல பெயர் இருக்காது; மதிக்கமாட்டார்கள்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் அடுத் தடுத்த ராசிகளில் இருந்தால், திருமணத் திற்குப்பின்பு தன் மாமியார் வீட்டில், வீட்டோடு மாப்பிள் ளையாக வசிக்கநேரும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயு டன் புதன் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தால், அவளது கணவன் வேறு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டு அவள் வீட்டிலேயே வசிப்பான். அதே போல ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு 1, 2, 5, 9 ஆகிய ராசிகளில் புதன் இருந்தாலும் அந்தப் பெண்ணின் கணவன் வேறொரு பெண்ணுடன் உறவு கொள்வான்.

ஒரு ஆணின் ஜாதகத்திலுள்ள 12 ராசிகளில், ராகு- கேதுவுக்கு ஒருபுறமுள்ள ஏழு ராசிகளில் ஒன்றில் குரு இருந்து, அடுத்துள்ள ஏழு ராசிக் கட்டங்களில் சுக்கிரன் இருந்து- அதாவது குரு, சுக்கிரன் இருவரும் ராகு- கேதுவால் பிரிக்கப்பட்டிருந்தால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிவு, விவாகரத்து உண்டாகலாம். அல்லது கணவன்- மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டுடன் மகிழ்ச்சியில்லாமல் அவரவர் விருப்பம்போல் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

இதேபோன்று ஒரு பெண்ணின் ஜாதகத் தில் ராகு- கேது நின்ற ராசிக்கு ஒருபுறம் செவ்வாயும் மறுபுறம் சுக்கிரனும் இருந்தால், அவர்கள் குடும்ப வாழ்வில் கணவன்- மனைவி யிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிவு, விவாகரத்து உண்டாகக்கூடும். அல்லது கணவன்- மனைவி இருவரும் மகிழ்ச்சி யில்லாமல் அவர்களது எண்ணப்படி வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் குரு வக்ரம் பெற்றிருந் தால் அவன் தன் மனைவியைவிட்டுப் பிரிந்து சென்று விடுவான். சுக்கிரன் வக்ரம் பெற்றிருந்தால் அவனது மனைவி இவனைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவாள்.

ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் பெற்றிருந்தால் அவளது கணவன் இவளைவிட்டுப் பிரிந்து சென்றுவிடு வான். சுக்கிரன் வக்ரம் பெற்றிருந்தால் இந்தப் பெண் தன் கணவனை விட்டுப் பிரிந்து சென்று விடுவாள்.

ஆண்- பெண் குடும்ப வாழ்வில் இது போன்று ஏற்படும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அவரவரின் பூர்வஜென்ம பாவ- சாபப் பதிவுகள்தான் காரணமே தவிர கிரகங்கள் காரணமல்ல. இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தேடித்தேடிப் பரிகாரம் செய்வதைவிட்டு, சித்தர்கள் கூறியுள்ள நிவர்த்திகளைச் செய்துகொள்வதே சிறப்பு.

செல்: 99441 13267