Advertisment

இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana

"நரசன்மம் தனையெடுத்து இப்புவி தன்னில்

நழுவியா திவ்வண்ணமே திரமதாக ஈசன்

உத்தரவினிற் செய்வர் புண்ணிய மென்றே

நரமுடைத்த நல்வியாச ருஞ்செய் தனரே

வழங்கிடு மதனாலே பரவடியை யுறு

முத்தர்களிரு வினைப் பற்றறப் பார்த்தாரே.'

கயிலையில் சிவபெருமான், ஒருநாள் வியாச முனிவரை அழைத்து, "ரிஷியே, மும்மூர்த்திகள், இந்திரன் முதலான தேவர்கள் மற்றும் வானவர்கள், மனிதர்கள் என அனைவரும் தங்களது செயல்களால் எப்படி தனக்குத்தானே பாவ- சாப- புண்ணியப் பதிவுகளை உருவாக்கிக்கொள்கின்றார்கள்- அவற்றுக்குரிய பலன்களை, அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவித்து வாழ்கின்றார்கள்-

Advertisment

rr

இறுதியில் முற்பிறவி கர்மவினைகளை எவ்வாறு தீர்த்து பிறவியை முடித்து மோட்சம் அடைகிறார்கள் என்று- எனது மைந்தன் விநாயகனை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொண்டு, இந்த மண்ணுலகில் பிறப்பவர் களின்

"நரசன்மம் தனையெடுத்து இப்புவி தன்னில்

நழுவியா திவ்வண்ணமே திரமதாக ஈசன்

உத்தரவினிற் செய்வர் புண்ணிய மென்றே

நரமுடைத்த நல்வியாச ருஞ்செய் தனரே

வழங்கிடு மதனாலே பரவடியை யுறு

முத்தர்களிரு வினைப் பற்றறப் பார்த்தாரே.'

கயிலையில் சிவபெருமான், ஒருநாள் வியாச முனிவரை அழைத்து, "ரிஷியே, மும்மூர்த்திகள், இந்திரன் முதலான தேவர்கள் மற்றும் வானவர்கள், மனிதர்கள் என அனைவரும் தங்களது செயல்களால் எப்படி தனக்குத்தானே பாவ- சாப- புண்ணியப் பதிவுகளை உருவாக்கிக்கொள்கின்றார்கள்- அவற்றுக்குரிய பலன்களை, அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவித்து வாழ்கின்றார்கள்-

Advertisment

rr

இறுதியில் முற்பிறவி கர்மவினைகளை எவ்வாறு தீர்த்து பிறவியை முடித்து மோட்சம் அடைகிறார்கள் என்று- எனது மைந்தன் விநாயகனை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொண்டு, இந்த மண்ணுலகில் பிறப்பவர் களின் பாவ- சாப நிவர்த்தி சூட்சும ரகசியங்களை, மக்கள் நல்வாழ்வை அடைவதற்குரிய வழிமுறைகளைக் கூறுங்கள்'' என்று உத்தரவிட்டார். அதற்கேற்ப வியாசரும் இன்னும் பல ரிஷி, முனிவர்களும் பாவ- சாப நிவர்த்தி முறைகளை 18 புராணங்களாக- இராமாய ணம், மகாபாரதம் போன்ற நூல்களாக எழுதிவைத்தனர்.

18 புராணங்களும் இராமாயணமும், ஒரு மனிதன் செய்யும் செயல்களால் அவனுக்கு பாவ- சாபப் பதிவுகள் எப்படி உண்டாகின்றன? அதை எப்படி அனுபவித்து நிவர்த்தி செய்கிறான் என்பதை விளக்கமாகக் கூறும் நூல்களாகும்.

மகாபாரதம், ஒருவன் தன் முற்பிறவி பாவ- சாப வினைப்பதிவுகளை எவ்வாறு தீர்த்து, இம்மண்ணுலகில் பிறவியில்லாத மோட்ச நிலையை அடையவேண்டும் என்பதற்கு வழிகூறும் நூல்.

இந்த பூமியில், மனித (நரன்) ஜென்மம் எடுத்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திராதி தேவர்கள், வானவர்கள் என யார் அவதார மெடுத்துப் பிறந்தாலும், அவர்கள் ஒரு பிறவியில் செய்த பாவத்தை அனுவித்துத் தீர்த்து முடிக்கும் வரை திரும்பத்திரும்ப இம்மண்ணுலகில் பிறந்துகொண்டே இருப்பார்கள் என புராணங்கள் கூறுகின்றன. இந்த உண்மையை மகாவிஷ்ணுவின் பத்து அவதாரக் கதைகள்மூலம் அறியமுடிகிறது.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான இராமாவதாரத்தில், அயோத்தி மன்னர் தசரதனின் மகனாப் பிறந்த இராமன்,

தன் இளமைப் பருவத்தில் ரிஷிகள், முனிவர்கள் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிசெய்து, தாய்- தந்தையாலும், மற்றவர்களாலும் மிகவும் விரும்பப்பட்டு, புகழ்ந்து பேசப்பட் டார். சீதையை மணந்தபின்பு, பிற்கால வாழ்க்கையில் சொல்லமுடியாத துயரங்களை அடைந்து வாழ்ந்தார். இதற்குக் காரணம் என்ன?

குரு பிருகு ரிஷி என் உள்ளுணர்வில் உதித்து, ஜீவநாடி ஓலையில் ஒளியாகத் தோன்றி இராமனின் வாழ்க்கை நிகழ்வு களுக்குக் காரணம் பற்றி உரைத்த உண்மை களை, இராமனின் ஜாதகத்திலுள்ள, கிரக நிலைகளைக்கொண்டு ஆய்வுசெய்து அறிந்தவற்றை இக்கட்டுரைத் தொடர்மூலம் அறிவோம்.

வைகுந்த வாசனான மகாவிஷ்ணு, இராமாவதாரத்திற்குமுன்பு, மச்சம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனன், பரசுராமன் என ஆறு அவதாரங்கள் இந்த பூமியில் எடுத்துவந்து பல செயல்களைச் செய்துள்ளார். ஏழாவது இராமாவதாரம் எடுத்து இப்புவியில் அவதரித்தார். முந்தைய ஆறு அவதாரங்களுக்கும், ஏழாவதான இராமாவதாரத்திற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் அறிவோம்.

மச்சம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனன் ஆகிய ஐந்து அவதாரங்களும், ஒரு செயலை செய்யவேண்டிய நேரத்தில் பூமியில் தோன்றி, அந்த செயலை முடித்தவுடன் பூமியைவிட்டுச் சென்றுவிடும் நிலையில் எடுக்கப்பட்ட அவதாரங்கள். இந்தப் புவியில் தாய்- தந்தையின்மூலம் பிறந்து வாழ்ந்து இறவாத நிலை அடைதல் என இயற்கை விதிக்கு உட்படாத அவதாரப் பிறவிகள்.

ஆறாவது அவதாரமான வாமனர் அவதா ரம்தான் ஒரு தாய், தந்தைக்கு குழந்தையாகப் பிறந்து வாழ்ந்த முதல் அவதாரம்.

ஏழாவது இராமாவதாரம்தான், இந்த மண்ணுலகில் தாய்- தந்தை சகோதரன், மனைவி, குழந்தைகள், தர்மம், நியாயம், எதிரி, துர்சக்திகள் பாதிப்பு என, ஒரு சாதாரண மனித நிலையில் குடும்ப வாழ்வில் நன்மை- தீமைகளை அனுபவித்து வாழ்ந்து மண்ணில் இருந்து மறைந்த அவதாரம்.

இராமாவதாரத்திற்கு முந்தைய அவதாரங் களில் செய்த செயல்களால் உண்டான கர்மவினைகள் பாவப் பதிவுகளாகி, அவற் றைத் தீர்த்து முடிக்கவே மகாவிஷ்ணு மீண்டும் அவதரித்து பல துன்பங்களை அனுபவிக்கச் செய்தது. குரு பிருகு மகரிஷி கூறும் உண்மைகளை அடுத்தடுத்த இதழ்களில் காண்போம்.

(தொடரும்)

செல்: 99441 13267

Advertisment
bala140122
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe