Advertisment

இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (9) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-9

ராமர் தன் வாழ்வில் அனுபவிக்காத துன்பம், துயரம், குறைகள் என எதுவுமில்லை. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும், இராமர் தன் வாழ்வில் பட்ட கஷ்டங்களில் ஏதாவதொன்றை அனுபவித்துக்கொண்டு தான் இருப்பார்கள் என்பதே உண்மை.

Advertisment

இராமாயணத்தை எழுதிய வால்மீகி மகரிஷி, இராமரின் முந்தைய அவதாரச் செயல்களைக் கணக்கிட்டு அவரின் ஜாதகத் தில் கிரகங்களை அமைத்துள்ளார். ஒன்பது கிரகங்களில் புதன், ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களைத் தவிர மற்ற ஆறு கிரகங் களையும் ஆட்சி, உச்ச நிலையில் அமைத்துள்ளார். ஆறு கிரகங்கள் பலம்வாய்ந்த நிலையிலிருந்தும், அவரின் வாழ்வில் எந்த விதமான நன்மைகளையும் இந்த கிரகங்கள் செய்யவில்லை. இதனை ஆய்வு செய்தபோது, மனித வாழ்வில் கிரகங்கள் நன்மை- தீமை, உயர்வு- தாழ்வினை உண்டாக்க முடியாது என்ற உண்மையை அறியமுடிந்தது. கிரகங் கள் குடும்ப உறவுகளுக்கு உதாரணமாகத்தான் கூறப்பட்டுள்ளது. பலனறிய அல்ல.

rr

வாசகர்கள் உங்கள் ஜாதகத்தில், சூரியன் முதல் சனிவரையுள்ள ஏழு கிரகங்கள், ராசிக் கட்டத்தில் எந்த ராசியில் இருந்தாலும் சரி- அந்த கிரகங்கள் முற்பிறவி பாவச் செயல் களைக் குறிப்பி

ராமர் தன் வாழ்வில் அனுபவிக்காத துன்பம், துயரம், குறைகள் என எதுவுமில்லை. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும், இராமர் தன் வாழ்வில் பட்ட கஷ்டங்களில் ஏதாவதொன்றை அனுபவித்துக்கொண்டு தான் இருப்பார்கள் என்பதே உண்மை.

Advertisment

இராமாயணத்தை எழுதிய வால்மீகி மகரிஷி, இராமரின் முந்தைய அவதாரச் செயல்களைக் கணக்கிட்டு அவரின் ஜாதகத் தில் கிரகங்களை அமைத்துள்ளார். ஒன்பது கிரகங்களில் புதன், ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களைத் தவிர மற்ற ஆறு கிரகங் களையும் ஆட்சி, உச்ச நிலையில் அமைத்துள்ளார். ஆறு கிரகங்கள் பலம்வாய்ந்த நிலையிலிருந்தும், அவரின் வாழ்வில் எந்த விதமான நன்மைகளையும் இந்த கிரகங்கள் செய்யவில்லை. இதனை ஆய்வு செய்தபோது, மனித வாழ்வில் கிரகங்கள் நன்மை- தீமை, உயர்வு- தாழ்வினை உண்டாக்க முடியாது என்ற உண்மையை அறியமுடிந்தது. கிரகங் கள் குடும்ப உறவுகளுக்கு உதாரணமாகத்தான் கூறப்பட்டுள்ளது. பலனறிய அல்ல.

rr

வாசகர்கள் உங்கள் ஜாதகத்தில், சூரியன் முதல் சனிவரையுள்ள ஏழு கிரகங்கள், ராசிக் கட்டத்தில் எந்த ராசியில் இருந்தாலும் சரி- அந்த கிரகங்கள் முற்பிறவி பாவச் செயல் களைக் குறிப்பிடும் ராகுவுடன் சம்பந்தம் பெற்றிருந்தால், அந்த கிரகம் குறிப்பிடும் பாவ செயல்களைச் செய்திருப்பீர்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

முற்பிறவி சாபங்களைக் குறிப்பிடும் கேதுவுடன் சம்பந்தம் பெற்றிருந்தால், செய்த பாவங்களால் உண்டான சாபங் களை அனுபவிக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். உங்கள் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம்பெற்று எத்தனை கிரகங்கள் இருந்தாலும், எந்த தசை, புக்தி வந்தாலும், கோட்சார நிலையில் நல்ல ராசிக்குப் பெயர்ச்சியாகி வந்தாலும் நன்மை தராது. இதுபோன்ற பல காரணங்களை ஆய்வின்மூலம் அறிந்துதான், உங்கள் விதியை நீங்களே அறிந்துகொள்ள இராமர் ஜாதகத் தினைத் தேர்ந்தெடுத்தேன்.

ஒருவரின் ஜாதகத்தில் தாய், மாமியார், மூத்த சகோதரி, அண்ணி, வயது முதிர்ந்த பெண்களைக் குறிப்பிடும் உதாரண கிரகம் சந்திரன்.

ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகள் அல்லது ஒரே நட்சத் திர மண்டலத்தில் கேது இருந்து சம்பந்தம் பெற்றுவிட்டால், குடும்ப உறவுப் பெண் களால் சாபம் பெற்றவர் என்பதை அறியவும்.

இவரின் முற்பிறவியிலோ அல்லது வம்ச முன்னோர்கள் வாழ்விலோ கர்ப்பிணிப் பெண்ணை கவனியாமல் கைவிட்டது, வயது முதிர்ந்த தாய் மற்றும் தன் மனைவி, தான் பெற்ற குழந்தைகளை கவனியாமல் தவிக்கவிட்டு தன் விருப்பம்போல் வாழ்ந்தது; இரண்டு மனைவிகளில் மூத்த மனைவியை ஒதுக்கிவிட்டு, இரண்டாவது மனைவி, பிற பெண்களிடம் சுகம் அனுபவித்து வாழ்ந்தது; வம்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீரில், விஷத்தில் என ஏதாவதொரு வகையில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோன நிகழ்வு; விதவைப் பெண்ணுக்கு செய்த துரோகம்; தன் பூர்வீக சொத்துகளைப் பங்காளிகளிடம் இழந்து, பாதிக்கப்பட்டு இறந்துபோன பெண்விட்ட சாபம் என இதுபோன்று பலவகைகளில் பெண்களை பாதிப்படையச் செய்தவர்கள் இவர்கள்.

இந்த பெண் சாபம் உடையவர்கள் வாழ்வில் தாய்ப்பாசம் பெரிதாகக் கிடைக்காது அல்லது தாயுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். மூத்த சகோதரி, குடும்பத்தில் வயது முதிர்ந்த பெண்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். மனக் குழப்பம் இருக்கும். நேரத்திற்கு உணவுண்ண முடியாத நிலை இருக்கலாம்.

இராமரின் ஜாதகத்தில் தாய், பெண்களைக் குறிப்பிடும் சந்திரன், புனர்பூச நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் கடக ராசியில் உள்ளது. இந்த நட்சத்திரம் அவரின் ஜென்ம நட்சத்திரமாகும். சாப கிரகமான கேது புனர் பூச நட்சத்திரம் 3-ஆம் பாதம், மிதுன ராசியில் உள்ளது.

சந்திரன், கேது வெவ்வேறு ராசிகளில் இருந்தாலும் ஒரே நட்சத்திரத்தில் இருப்பது, சந்திரன், கேது இணைவாகும். இது இராமருக்குள்ள பெண் சாபத்தை உறுதிப்படுத்துகிறது.

இராமரின் பிறப்புக்குப்பிறகு, அவரின் தாய் கோசலைக்கு கணவன் தசரதன் பாசம் பெரிதாகக் கிடைக்கவில்லை. அவள் பட்டத்து ராணியாக இருந்தாலும், அதற்குரிய அதிகாரம் இல்லாமலும், கட்டிய கணவனால் பெரிய கவனிப்பு இல்லாமலும், ஒரு சந்நியாசிபோல வாழ்ந்தாள். இராமரின் ஜாதகத்தில் ராகு, கேதுவுக்கு ஒருபுறம் சூரியன் (தந்தை, மகன்), எதிர்ப்புறம் சந்திரன் (தாய்) இருப்பதால், இவரின் தாய், தந்தை பிரியவேண்டிய நிலை ஏற்பட்டது.

இராமரும் தன் தாய், தந்தை பராமரிப்பில் நீண்டநாள் வாழவில்லை. இளம் வயதிலேயே விசுவாமித்திர முனிவருடன் காட்டிற்குச் சென்றார். சீதையை மணம் முடித்து அயோத்தி வந்தபின்பும், நீண்டநாள் தாயுடன் வாழவில்லை. தந்தையின் கட்டளையை ஏற்று, 14 ஆண்டுகள் வனவாசம் சென்றுவிட்டார். இராமருக்கு தாய்ப் பாசமும் கிடைக்கவில்லை.

இந்த பெண் சாபம், இராமரின் வம்ச முன்னோர்களில் ஒருவரான அரிச்சந்திரன் காலத்தில் உருவானது. லவன், குசன் காலம்வரை வம்சத்தைத் தொடர்ந்தது எனலாம். அரிச்சந்திர மன்னன் தன் மனைவியும் பட்டத்தரசியுமான சந்திரமதியை விலைபேசி விற்றார். பாதிக்கப்பட்ட சந்திரமதியின் சாபம், தசரதன் இரண்டாவது மனைவி கைகேயி யிடம் பாசம் கொண்டு, மூத்த மனைவி கோசலைக்கு முக்கியத்துவம் தரவில்லை.

இந்த சாபத்தின் தாக்குதலால், இராமனும், தன் மனைவியும் பட்டத்தரசியுமான சீதையை கர்ப்பிணி என்றும் எண்ணாமல் காட்டுக்கு அனுப்பினார். வம்ச முன்னோ ரான அரிச்சந்திரன், தன் வீட்டில் வாழவந்த பெண்ணுக்கு செய்த பாவம்தான் இந்த நிகழ்வுகளுக்குக் காரணம்.

இந்த பெண் சாபம் வீட்டில் வாழவந்த முதல் மனைவியையே அதிகம் பாதிக்கும். இந்த பெண் சாபம் கணவன் வீட்டில் உண்டானது என்பதால், அது அந்த வீட்டிற்கு வாழவந்த பெண்ணையே பாதிக்கும். வம்சத்தில் தன் வீட்டிற்கு வாழவந்த மருமகளுக்கு, மனைவிக்கு ஒருவர் செய்யும் பாவம், அந்த வம்சத்து வாரிசுகள் வாழ்விலும் தொடரும். இந்த சாபம், அந்த வீட்டில் பிறந்த பெண் திருமணம் முடிந்தபின்பும் அவள் வாழ்க்கையிலும் நிம்மதியைத் தராது.

(தொடரும்)

செல்: 99441 13267

bala110322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe