Advertisment

இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (5) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-5

"முந்த சன்மமாம் புண்ணியம்

மிகுந்திடின் முக்கிய முண்டாகும்

பிந்திய சன்மமாம் பாவமே

மிகுந்திடின் பெரியதோர் துயராகும்

அந்த ரண்டையும் தடுத்திட

அறிவு கழற்றுணை யாகும்

பந்தமான தோர்புராண வேதமும்

படைத்ததை யறிவாயே.'

இந்தப் பழமையான தமிழ்ப்பாடலில், தெய்வங் கள், தேவர்கள், கிரகங் கள், மனிதர்கள் என யாராக இருந்தாலும், இம்மண்ணுல கில் ஒருமுறை அவதாரம் எடுத்துப் பிறந்து, அப் பிறவியில், நன்மையான செயல்களைப் பிறருக்குச் செய்திருந்தால், அவர் பூமியில் பிறக்கும் அடுத் தடுத்த பிறவி வாழ்வில், முற்பிறவி புண்ணியத்தால் பதவி, புகழ், செல்வம் என அடைந்து, முக்கியமான மனிதராகப் பெருமையாக வாழ்வார்.

Advertisment

முற்பிறவிகளில் தன் குடும்பத்தினருக்கும் மற்றவர் களுக்கும் தீமைகள், பாவங் களைச் செய்தவர்கள், அடுத் தடுத்த பிறவிகளில் முந்தைய பிறவி பாவங்களுக்குரிய தண்டனையாக சிரமம், வறுமை, நோய், குடும்பத்தினரால் ஒதுக்கப்படுதல், பிறர் ஆதரவின்மை, செயல்களில் தடை, தாமதம் என ஏதாவது ஒரு குறையுடனேயே பெருந் துயருடன் வாழ்வார்கள்.

ra

இன்றைய நாளில்கூட ஒருவர் கடவுள் பக்தி உள்ளவராக, பிறருக்குத் தீமைகள் செய்யாமல், பொய், திருட்டு, ஏமாற்று குணமில்லாமல் நல்லவராக இருப்பவர்கள் வாழ்வில், சிரமம், தடை, வறுமை, பிறர் ஆதரவில்லா நிலை, கஷ்டம் தீர வேண்டுதல் நிறைவேறாமல் இருப்பதற்குக் காரணம், முற்பிறவிகளில் பாவங்களைச் செய்து, அதற்குண்டான தண்டனையாக இப்பிறவி யில் கஷ்

"முந்த சன்மமாம் புண்ணியம்

மிகுந்திடின் முக்கிய முண்டாகும்

பிந்திய சன்மமாம் பாவமே

மிகுந்திடின் பெரியதோர் துயராகும்

அந்த ரண்டையும் தடுத்திட

அறிவு கழற்றுணை யாகும்

பந்தமான தோர்புராண வேதமும்

படைத்ததை யறிவாயே.'

இந்தப் பழமையான தமிழ்ப்பாடலில், தெய்வங் கள், தேவர்கள், கிரகங் கள், மனிதர்கள் என யாராக இருந்தாலும், இம்மண்ணுல கில் ஒருமுறை அவதாரம் எடுத்துப் பிறந்து, அப் பிறவியில், நன்மையான செயல்களைப் பிறருக்குச் செய்திருந்தால், அவர் பூமியில் பிறக்கும் அடுத் தடுத்த பிறவி வாழ்வில், முற்பிறவி புண்ணியத்தால் பதவி, புகழ், செல்வம் என அடைந்து, முக்கியமான மனிதராகப் பெருமையாக வாழ்வார்.

Advertisment

முற்பிறவிகளில் தன் குடும்பத்தினருக்கும் மற்றவர் களுக்கும் தீமைகள், பாவங் களைச் செய்தவர்கள், அடுத் தடுத்த பிறவிகளில் முந்தைய பிறவி பாவங்களுக்குரிய தண்டனையாக சிரமம், வறுமை, நோய், குடும்பத்தினரால் ஒதுக்கப்படுதல், பிறர் ஆதரவின்மை, செயல்களில் தடை, தாமதம் என ஏதாவது ஒரு குறையுடனேயே பெருந் துயருடன் வாழ்வார்கள்.

ra

இன்றைய நாளில்கூட ஒருவர் கடவுள் பக்தி உள்ளவராக, பிறருக்குத் தீமைகள் செய்யாமல், பொய், திருட்டு, ஏமாற்று குணமில்லாமல் நல்லவராக இருப்பவர்கள் வாழ்வில், சிரமம், தடை, வறுமை, பிறர் ஆதரவில்லா நிலை, கஷ்டம் தீர வேண்டுதல் நிறைவேறாமல் இருப்பதற்குக் காரணம், முற்பிறவிகளில் பாவங்களைச் செய்து, அதற்குண்டான தண்டனையாக இப்பிறவி யில் கஷ்டப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த பிறவியில் ஒருவர், பிறரை ஏமாற்றிப் பொய் சொல்லிப் பிழைத்தல், பிறர் பொருளை அபகரித்தல், கொள்ளையடித்தல், வஞ்சக குணத்துடன் இருந்தாலும், அவர் பதவி, செல்வம், சொத்து, புகழ் என வாழ்ந்தால், அவர் முந்தைய பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பலனை இந்தப் பிறவியில் அனுபவிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

உதாரணமாக, இராமாயணக் காவிய நாயகன் இராமன் மிகவும் நல்லவராக சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளார். ஆனால் அவர் வாழ்வில் பதவி, குடும்பம், சொத்து, உறவுகள் என அனைத்தையும் இழந்து, பிறர் உதவியின்றி, அளவில்லாத துன்பங்களை அனுபவித்தார்.

இராமனின் இந்த துன்பங்களுக்குக் காரணம், மகாவிஷ்ணு தன் முந்தைய அவதாரங்களில் பிறருக்குச் செய்த செயல்களால் உண்டான கர்மவினைகள்தான்.

ஒருவர் இந்தப் பிறவியில் நல்லவராக வாழ்ந்தால், அதற்குண்டான புண்ணியப் பலன்களை இந்தப் பிறவியில் அனுபவிக்க முடியாது. அடுத்த பிறவியில்தான் அனுபவிப்பான். கெட்டவனாக வாழ்ந்தால், அதற்கான கஷ்டம், சிரமம் இந்தப் பிறவியில் வராது. ஆனால் அடுத்த பிறவியில், தண்டனை களை அனுபவித்து சிரமம் அடைவார். நல்லவர்கள் கஷ்டப்படுவதற்கும், கெட்டவர் கள் சுகமாக வாழ்வதற்கும் இதுதான் காரணம்.

முற்பிறவிகளில் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்தால் தீருமா? இன்றையநாளில் வேத ஜோதிடர்கள் சிலர் ஒருவரின் வாழ்வில் உண்டாகும் சிரமம், தடைகளுக்கு நவ கிரகங்கள்தான் காரணம் எனக்கூறி, தடைகள் விலக பலவிதமான ஹோமம், யாகம், பிரார்த்தனை, பரிகாரங்களை செய்யும்படி கூறுகிறார்கள். பரிகாரங்களைச் செய்த பின்பும் நல்ல பலன் கிடைப்பதில்லை. இதற்கு பிருகு ரிஷி கூறும் காரணத்தை அறிவோம்.

ஒருவரின் இப்பிறவி வாழ்க்கையில் உண்டாகும் நன்மை- தீமைகள் அவரின் முற்பிறவி பாவ- சாப- புண்ணிய செயல் களால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் சிரமங்களுக்குக் காரணம் என்று ஜோதிடம் கூறும் கிரகங்கள்கூட, தாங்கள் செய்த பாவங்களுக்கு உண்டான தண்டனைகளை பூமியில் வந்து அனுபவித்து தீர்த்து, அதன்பின் சாப விமோசனம் பெற்றதாக இதிகாச, புராண கதைகளில் கூறுப்படுகிறது.

ஒரு மனிதன் தன் வாழ்வில் உண்டாகும் தடை, சிரமம், தோல்விகளுக்கு முற்பிறவி பாவ- சாபப் பதிவுகளைத் தன் அனுபவ அறவினால் கிருஷ்ணரைப்போல் அறிந்து, நடைமுறை செயல்கள்மூலம் விதியைத் தடுத்து, பாவ- சாப நிவர்த்திபெற்று, நல்வாழ்வை அமைத்துக்கொள்ளவேண்டும்.

18 புராணங்களும், இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்கள் அனைத் தும், ஒருவரின் முற்பிறவி கர்மவினைப் பதிவு களுக்கும், இப்பிறவி வாழ்க்கை நிகழ்வுக்கும் உள்ள பந்தத்தையும், காரண காரியத்தையும் அறிந்துகொள்ள- கர்மவினைகளைத் தடுத்துக்கொள்ள வழிகாட்டும் மகாஜோதிட நூல்களாகும்.

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன், ஜாதகரின் தாயைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும். புதன் இளைய உறவுகள், வித்தை, கல்வி, தாய்மாமன், கட்டிய வீடு, நண்பர்களைக் குறிக்கும்.

சுக்கிரன் அவரின் மனைவி போகம், ஆடம்பரவாழ்வு, ஆபரணம் இவற்றைக் குறிக்கும்.

கேது வயது முதிர்ந்தவர், சந்நியாசி, சாபம், தடைகளைக் குறிக்கும் கிரகம்.

இராமரின் ஜாதகத்தில் சூரியன் (தந்தை) புதனுடன் சேர்ந்திருப்பது இவர் வம்சம் மகாவிஷ்ணு- பெருமாளை வழிபாடு செய்த குடும்பம். வைணவ சம்பிரதாயத்தைக் கடைப் பிடித்து வாழ்ந்த குடும்பம். ஒருவர் ஜாதகத்தில் சூரியன், புதன் சேர்ந்திருந்தால், அவர்கள் முன்னோர்கள் பெருமாள் வழிபாடு செய்தவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். குலதெய்வம் தெரியாதவர்கள் பெருமாள் வழிபாடு செய்யலாம்.

ஒருவர் ஜாதகத்தில், சூரியன், புதன் சேர்ந்து ஒரு ராசியில் இருந்தால் அவர்கள் தந்தை வழி முன்னோர்கள், இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்து வாழ்ந்திருப்பார்கள். அல்லது மனைவி அல்லாது, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்புவைத்து இருந்திருப் பார்கள். ஒருசிலரின் தந்தையே இரண்டு தாரம் திருமணம் செய்திருக்கலாம். அல்லது வேறு ஒரு பெண்ணிடம் உறவு வைத்திருக்க லாம்.

ராகு- கேது அச்சிற்கு ஒருபுறம் சூரியனும், மறுபுறம் சந்திரனும் இருந்தால் அவரின் தாய்- தந்தையிடம் பிரிவு, கருத்து வேறுபாடு இருக்கலாம். சந்திரன் என்பது முதல் மனைவியைக் குறிக்கும். அந்த ஜாதகரின் வம்ச முன்னோர்கள் காலத்தில் முதல் மனைவியை ஒதுக்கிவைத்து, அவளை மனம் வருத்தி வாழும்படி செய்து, இரண்டாம் தாரம் திருமணம் செய்து வாழ்ந்திருப்பார்கள். இதனால் பாதிக்கப்பட்ட முதல் மனைவி விட்ட பெண் சாபம், இந்த குடும்பத்தில் வாழ வந்த பெண்ணுக்கும், குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கும் நிம்மதியான வாழ்வைத் தராது. பெண் சிரமப்படுவாள். இராமரின் ஜாதகத்தில் இதுபோன்ற கிரக அமைப்பு, அவருக்குண்டான பெண் சாபத்தைத் தெளிவுபடுத்துகிறது.

Advertisment

rra

இந்த கிரக அமைப்பினால்தான் இராமரின் தந்தை தசரதன் தன் இளைய மனைவி கைகேயியின் பேச்சைகேட்டார். மூத்த மனைவி கோசலையை மதிக்கவில்லை.

ராகு- கேது அச்சிற்கு ஒருபுறம் சூரியனும் புதனும் இருந்து, எதிர்புறம் குரு இருந்தால், பெற்ற தந்தை தன் இளைய மனைவி, மகன், மகள்களுக்கும் அல்லது இவரின் தம்பி, தங்கைகளுக்கும் தன் சொத்துகளைத் தருவார். ஜாதகனை தந்தை கவனிக்கமாட்டார். புறக் கணித்துவிடுவார்.

இந்த கிரக அமைப்பினால்தான் தசரதன் தன் இளைய மனைவியின் மகனும், இராமனுக்குத் தம்பியுமான பரதனுக்கு அயோத்தி மன்னனாக முடிசூட்டி, இராமனை காட்டிற்கு அனுப்பினார்.

குரு, சந்திரன் சேர்ந்த ஜாதகர்கள் பூர்வீகத்தில் வசிக்கமுடியாது. பரதேசம் செல்வார்.

இராமன் தன் வாழ்க்கையில், தாய், சிற்றன்னை, மனைவி, வேலைக்காரி, கூனி மாற்று இனப்பெண்ணான சூர்ப்பநகை போன்ற பெண்களால் பல சிரமங்களை அடைந்தார். இராமன் தன் முந்தைய அவதாரங்களில் பெண்களுக்குச் செய்தவை என்ன? அடுத்த அவதாரமான இராமவதாரத்தில், அந்த சாபப் பதிவுகள் தொடர்ந்தது எப்படி என்பது பற்றிய விளக்கத்தை குரு பிருகு ரிஷி கூறுவதை அடுத்த இதழில் அறிவோம்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala110221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe