இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (4) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-4

யோத்தியின் சக்கரவர்த்தியான தசரதன் தன் மகன் இராமன் திருமணம் முடிந்து அயோத்திக்கு வந்தபின்பு, அவருக்கு அரசராக முடிசூட்ட எண்ணியபோது, தசரதனின் இளைய மனைவியான கைகேயி தடுத்ததால், மன்னர் இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல கட்டளையிட்டார். இராமன் காட்டிற்குச் செல்ல கைகேயி காரணமில்லை. இராமரின் முந்தைய அவதாரங்களில் செய்த செயல்களால் உண்டான பெண் சாபமே கைகேயி, கூனியைக் காரணமாக்கி செயல்பட்ட வைத்ததே உண்மை.

தசரத மன்னர் இராமனை, காட்டிற்குச் செல்லச் சொன்னபோது, இராமனின் தாய் கோசலை, சகோதரர்களான பரதன், சத்ருக்னன், அமைச்சர்கள், சத்திரிய இனத் தைச் சேர்ந்த மற்ற அமைச்சர்கள், இராமனால் யாகம் காப்பாற்றப்பட்டு நலமடைந்த விசுவாமித்திரர், குலகுரு வசிட்டர் என ஒருவர்கூட, "இராமனுக்குத்தான் பட்டம் சூட்டி அரசனாக்க வேண்டும்; இதுதான் சத்திரியர்களின் அரச தர்ம முறை' என்று இராமனுக்காகப் பரிந்து பேசவில்லை; தசரதனைத் தடுக்கவில்லை. குடும்பத்தினர் ஆதரவும், தன் இனத்தினர் ஆதரவும் இல்லாமல் போனது. சீதையின் தந்தை ஜனக மகாராஜாவின் ஆதரவும் கிடைக்க வில்லை. பிறர் ஆதரவின்றி இராமனும் சீதையும் மட்டுமே தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள்.

ramayanam

வனவாசத்தில் சுக்ரீவன், அனுமன் போன்ற தன்னைவிட கீழானவர்களின் உதவிதான் கிடைத்தது.

சூரியன், ராகு சம்பந்தம்பெற்ற ஜாதகர்களின் இப்பிறவி வாழ்க்கையில் அவர்களின் திருமணத்திற்குப்பிறகு யாருடைய உதவியும் கிடைக்காது! பிறரை நம்பி வாழக்கூடாது.

யோத்தியின் சக்கரவர்த்தியான தசரதன் தன் மகன் இராமன் திருமணம் முடிந்து அயோத்திக்கு வந்தபின்பு, அவருக்கு அரசராக முடிசூட்ட எண்ணியபோது, தசரதனின் இளைய மனைவியான கைகேயி தடுத்ததால், மன்னர் இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல கட்டளையிட்டார். இராமன் காட்டிற்குச் செல்ல கைகேயி காரணமில்லை. இராமரின் முந்தைய அவதாரங்களில் செய்த செயல்களால் உண்டான பெண் சாபமே கைகேயி, கூனியைக் காரணமாக்கி செயல்பட்ட வைத்ததே உண்மை.

தசரத மன்னர் இராமனை, காட்டிற்குச் செல்லச் சொன்னபோது, இராமனின் தாய் கோசலை, சகோதரர்களான பரதன், சத்ருக்னன், அமைச்சர்கள், சத்திரிய இனத் தைச் சேர்ந்த மற்ற அமைச்சர்கள், இராமனால் யாகம் காப்பாற்றப்பட்டு நலமடைந்த விசுவாமித்திரர், குலகுரு வசிட்டர் என ஒருவர்கூட, "இராமனுக்குத்தான் பட்டம் சூட்டி அரசனாக்க வேண்டும்; இதுதான் சத்திரியர்களின் அரச தர்ம முறை' என்று இராமனுக்காகப் பரிந்து பேசவில்லை; தசரதனைத் தடுக்கவில்லை. குடும்பத்தினர் ஆதரவும், தன் இனத்தினர் ஆதரவும் இல்லாமல் போனது. சீதையின் தந்தை ஜனக மகாராஜாவின் ஆதரவும் கிடைக்க வில்லை. பிறர் ஆதரவின்றி இராமனும் சீதையும் மட்டுமே தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள்.

ramayanam

வனவாசத்தில் சுக்ரீவன், அனுமன் போன்ற தன்னைவிட கீழானவர்களின் உதவிதான் கிடைத்தது.

சூரியன், ராகு சம்பந்தம்பெற்ற ஜாதகர்களின் இப்பிறவி வாழ்க்கையில் அவர்களின் திருமணத்திற்குப்பிறகு யாருடைய உதவியும் கிடைக்காது! பிறரை நம்பி வாழக்கூடாது. தன் வாழ்வின் தேவைகளைத் தானே அமைத்துக்கொண்டு முன்னேறவேண்டும் என்பதே இராமாயணம் நமக்குக் கூறும் ஜோதிடப் பலனாகும்.

தனுசு ராசியில் ராகு உள்ள ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்தில், உறவினர் களிடையே உதவி செய்யப்போய், ஏதாவது ஒருவகையில் பிரச்சினைகள், போராட்டங்கள் இருந்துகொண்டே இருக்கும். வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு பிரச்சினையை சந்தித்துக்கொண்டே இருப்பார்கள்.

இராமன் தன் வம்ச முன்னேர்களால் உருவாக்கப்பட்ட, அவருக்கு உரிமையுள்ள பூர்வீக சொத்துகளை- பதவியை அனுபவிக்க வில்லை. ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், ராகு சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு பூர்வீக சொத்துகளால் நன்மை கிடைக்காது.

சூரியன், ராகு சம்பந்தம்பெற்ற ஜாதகர்கள், தான் சம்பாதித்து தன் தாய்- தந்தைக்கு சோறு போடமுடியாது. தன் குழந்தைகள் சம்பாதித்ததை அனுபவிக்க முடியாது. தந்தை அல்லது மகன் இறப்பின்போது அருகில் இருக்கமுடியாது.

மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில்- மகாபலி மன்னனைக் கொன்று, அவனை முழுமையாக அரசனாக இருக்கமுடியாமல் செய்ததால் உண்டான பாவம், சாபத்தின் காரணத்தால், இராமன் முழுமையாக தன் பெற்றோர், குடும்பத்தாருடன் அயோத்தியில் ஒன்றாக வாழமுடியவில்லை. இராமன் இளம் வயதிலேயே விசுவாமித்திரரின் வேண்டுகோளை ஏற்று, அவர் செய்யும் யாகத்திற்கு அரக்கர்கள் தந்த இடையூறைத் தடுக்க அவருடன் காட்டிற்குச் சென்றார்.

விசுவாமித்திரர் இராமனை சீதையின் சுயம்வரத்திற்கு அழைத்துச்சென்று, சிவதனுசை முறிக்கச் செய்து இராமனுக்கு சீதையை மணம் செய்துவைத்து அயோத்திக்கு அழைத்துவந்தார். அயோத்திக்கு இராமன் வந்த சில நாட்களில், தசரதனின் கட்டளைக் கிணங்க தன் மனைவி சீதையுடன் மறுபடியும் காட்டிற்குச் சென்றார்.

14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, அயோத்திக்கு வந்த சிறிது காலத்தில், தன் குடிமகன் சீதையைப் பற்றித் தவறாகக் கூறியதால், சீதையை காட்டிற்கு அனுப்பி விட்டு தான் மட்டும் தனியாக வசித்தார். சத்திரிய வம்ச சட்டப்படி மனைவியில்லாத ஒருவர் முழுமையான அரசனாக முடியாது என்பதால், அயோத்தி அரசை நிர்வாகம் செய்யும் நிர்வாகியாக மட்டுமே இருந்தார்.

வால்மீகி முனிவர் பாதுகாப்பில் வசித்த சீதை, மகன்கள் லவன், குசன் என தனது மனைவி, மகன்களுடன் இராமன் ஒரு குடும்பமாக ஒரு நாள்கூட சேர்ந்து வாழவில்லை. இறுதியில் சீதை தன் மகன்களை இராமரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்தபின்பு, லவன், குசன் இருவரையும் அயோத்திக்கு அழைத்துவந்து, தன் மூத்த மகனான லவனுக்கு பட்டம் சூட்டி மன்னனாக்கிவிட்டு, சரயு நதியில் இறங்கி, சராசரி மனிதனைப்போல் இறந்து அவதாரத்தை முடித்துக்கொண்டார்.

இராமாவதாரத்தில் இராமர் தன் பெற்றோர், தன் மனைவி, குழந்தை என குடும்பத்தாருடன் முழுமையாக வாழவில்லை. இராமருக்கு மனைவி இருந்தபோது மகன்கள் இல்லை. மகன்கள் இருந்தபோது மனைவி இல்லை. முழுமையான குடும்ப வாழ்வு இல்லை.

சூரியன், ராகு இணைவு, சம்பந்தம் ஜாதகத்தில் இருந்தால் கிரகண தோஷமாகும். இந்த தோஷம் குடும்ப வாழ்வில் ஏதாவது ஒரு குறையைத் தந்துவிடும்.

சூரியன்+சனி (பித்ரு, புத்திர துவேஷம்)

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் (தந்தை) இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 7, 12-ஆவது ராசிகளில் சனி (தொழில், கர்மவினை) இருந்தால், அவருக்குள்ள பித்ரு, புத்திர துவேஷத்தைக் (பகை) குறிப்பிடுகிறது.

சூரியன், சனி சம்பந்தம்பெற்ற ஜாதகர்களுக்கு தந்தையின் பாசம் பெரிதாகக் கிடைக்காது. தந்தை- மகனிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். அரசு, அரசு அதிகாரிகள் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், அரசியல்வாதிகளால் தொல்லைகள், பிரச்சினைகள் உண்டாகும். இவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும். ஆனால் தாமதமாகப் பிறக் கும். தொழில்வகையில் தொல்லைகள் இருக்கும். பிள்ளைகள் தந்தைக்கு எதிராகவோ அல்லது தந்தை பிள்ளைகளுக்கு எதிராகவோ செயல் படுவார்கள்.

தந்தையும் மகனும் பிரிந்து வாழநேரிடும். பிள்ளைப் பாசமும் குறையும். செய்யும் தொழிலில் தடை, தாமதம் உண்டாகும். அரசாங்கம், அரசியல், அரசுப் பதவிகளில் சுமுகமான நிலை இராது. அடிமை போன்று தொழில் செய்ய நேரிடும்.

இராமரின் ஜாதகத்தில் சூரியன் (தந்தை) நேர்எதிர் ராசியான 7-ஆவது ராசி துலாமில் சனி (தொழில்) உள்ளது. இராமருக்கு சூரியன், சனி சேர்க்கையினால் உண்டான பலன்களையும், அதற்குண்டான கர்மவினை காரணத்தையும் அறிவோம்.

இரண்யகசிபு மன்னனுக்கும், அவன் மகன் பிரகலாதனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், தந்தை மகனுக்கிடையே உண்டான பிரச்சினையில், மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து, இரண்யகசிபுவைக் கொன்றார். சிறுவன் பிரகலாதனுக்கு தந்தையின் பாசம் கிடைக்காமல், தாயின் அரவணைப்பில் மட்டுமே வாழ்ந்தான். இந்த அவதாரத்தில் தந்தையையும் மகனையும் பிரித்ததனால் உண்டான வினைப்பதிவால், இராமன் அதிககாலம் தன் தந்தையுடன் சேர்ந்து வாழவில்லை.

இராமனும் தன் மனைவி சீதையின் கர்ப்பத்தில் தன் குழந்தைகள் இருக்கும்போதே, தன் மனைவியைக் காட்டிற்கு அனுப்பி, தன் குழந்தைகளைப் பிரிந்தார். இராமரின் குழந்தைகள் தங்கள் தந்தையைப் பார்க்காமல், தந்தைபாசம் இல்லாமல், தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்தார்கள்.

இராமரின் மகன்கள் இருவரும், இராமனின்யாகக் குதிரையை கவர்ந்து கொண்டதை அறிந்த இராமன், தன் மகன்கள் என்று தெரியாமல், அவர்களை பகைவர்களாக நினைத் துப் போர்புரிந்தார். சீதை இறந்தபின்புதான், இராமனும் தன் மகன்களுடன் சேர்ந்து சிறிது காலம் மட்டுமே வாழ்ந்தார்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், சனி இணைவு, சம்பந்தம் இருந்தால், அவர்களுக்கு ஆண் குழந்தை தாமதமாகப் பிறக்கும். இராமனுக்கு திருமணம் முடிந்து, 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து, மறுபடியும் அயோத்திக்கு வந்த பின்புதான் சீதை கர்ப்பம் தரித்தாள்; ஆண் குழந்தைகள் பிறந்தன.

இராமரின் வாழ்க்கையில் பித்ரு, புத்திர சாப தோஷம் எப்படி உண்டானது, அதனால் இராமர் வாழ்க்கையில் அடைந்த பலன்களை அறிந்தோம். அடுத்த இராமரின் வாழ்வில், பெண்களால் உண்டான சிரமங்களையும், அவருக்கு தாய் சாபம், பெண் சாபம் உண்டான காரணத்தையும் அறிவோம்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala040222
இதையும் படியுங்கள்
Subscribe