வைகுந்த வாசனான மகாவிஷ்ணு இராமாவதாரத்திற்குமுன்பு மச்சம், கூர்மம் வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன் என ஆறு அவதாரங்களை எடுத்து இப்பூமிக்கு வந்தார். முந்தைய ஆறு அவதாரங்களுக்கும் இராமாவதாரத்திற்குமுள்ள வேறுபாட்டைப் பற்றி பிருகுரிஷி கூறுவதை அறிவோம்.
மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் ஆகிய நான்கு அவதாரங்களை பிராணிகள், விலங்குகள் வடிவில் ஏன் எடுத்தார்?
இந்தப் பூவுலகில் உயிரினங்கள் எங்கு? எப்படித் தோன்றின?
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியினால் மனிதன் எப்படி உருவானான் என்பதை இந்த நான்கு அவதாரங்கள்மூலம் ரிஷி நமக்குத் தெளிவு படுத்துகிறார்.
இந்த பூமியில், முதன்முதலில் உயிரினங்கள் நீரில்தான் தோன்றின என்பதை குறிப்பிடுவது மச்சாவதாரம் ஆகும். கைகள், கால்கள் இல்லா மல் கண், வாய், செவிகள் மட்டுமேயுள்ள நீண்ட உடலமைப்பு உடையது மீன் ஆகும். இதற்கு வெளிச்சத்தையும், சப்தத்தையும் மட்டுமே அறியும் திறனுண்டு. நீர்வாழ் பிராணி களுக்கும், மீன்களுக்கும் பூமியிலுள்ள காற்றை சுவாசித்து உயிர் வாழமுடியாது. நீரில் மட்டுமே வாழமுடியும்.
இரண்டாவது கூர்ம (ஆமை) வடிவத்தில் அவதாரமெடுத்து பூமியில் தோன்றினார்.
இந்த அவதாரத்தில் கண்கள், காதுகள், வாய் இவற்றுடன் நான்கு கால் களுடான உருவ அமைப்பு. ஆமை நீரிலும் வாழும்; குறிப்பிட்ட நேரம் நிலத்தி லும் வாழும். நிலத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, பின் நீரில் உணவுதேடி உயிர்வாழும் பிராணி இது. நீரிலும் நிலத்திலும் வாழும் பரிணாம வளர்ச்சி நிலை.
மூன்றாவது வராகம் (பன்றி). இந்த விலங்கு பூமியில் மட்டுமே வாழும். இந்த அவதாரத்

மூன்றாவது வராகம் (பன்றி). இந்த விலங்கு பூமியில் மட்டுமே வாழும். இந்த அவதாரத்தில் கண், காது, வாய், செவிகள் இவற்றுடன் நான்கு கால்கள், வால், உரோமங்கள் கொண்ட, தோலால் மூடப்பட்ட உயரமான உடலமைப்பு, எதிர்ப்புணர்ச்சி, குரலால் சப்தம் செய்வது என, பூமியில் மட்டுமே உள்ள காற்றை சுவாசித்து வாழும் நிலை கொண்ட பரிணாம வளர்ச்சி.
நான்காவது சிம்மம் (சிங்கம்). இது மனிதனுமில்லாத மிருகமுமில்லாத உருவத் தோற்றம். இரண்டு கைகள், இரண்டு கால்கள், கண், காது, நல்ல உயரமான தோற்றத் துடன்கூடிய மனித உடலமைப்பு. ஆனால் முகம் மட்டும் சிங்கமுகம். கோபம், வேகம், மூர்க்க குணம். மூளைப்பகுதி மிருக மூளையை ஒத்த நிலை. மனித உருவம்; மிருகத்தின் செயல்பாடு.
ஐந்தாவது வாமன (குள்ளன்) அவதாரம்.
இது குட்டையான மனித உருவம். மூளை வளர்ச்சிபெற்று, முழுமையான சக்தியைப் பெற்று, மனித முகத்துடன், பேசும் திறன் பெற்ற முழுமனிதன் நிலை. ஆனால் தர்மம், நியாயம் பாராமல் பிறரை ஏமாற்றும் குணம். (மகாபலியை அடக்க எடுத்த வடிவமெனினும் வாமனரின் செயல் காரிய வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது.)
ஆறாவது பரசுராம அவதாரம். ஒரு ஆண்- பெண் உறவால், தாயின் கர்ப்பத்தில் வளர்ந்து, இயற்கையின் விதிக்கு உட்பட்டு, இம்மண்ணுலகில் ஒரு குழந்தையாகப் பிறந்து உணவுண்டு உடல் வளர்த்த நிலை. இதில் சுயமாக சிந்திக்காமல், பிறர் சொல்வதைக்கேட்டு, மிகுந்த கோபத்துடன் எதையும் செய்வது.
ஏழாவது இராமாவதாரத்தில்தான் தாய்- தந்தை, சகோதரர், மனைவி, குழந்தை, நட்பு, எதிரி, நோய், துஷ்ட சக்திகள் பாதிப்பு, தர்மம், நியாயம், குடும்ப வாழ்வு, பிறப்பு- இறப்பு என சராசரி மனித நிலையில், முந்தைய அவதாரங் களில் செய்த செயல்களால் உண்டான கர்ம வினைகளை அனுபவித்து வாழ்ந்து, பூவுலகை விட்டகன்று வைகுந்தம் சேர்ந்த அவதாரம்.
இராமாவதாரத்திற்கு முந்தைய அவதார மான பரசுராமர் அவதாரமும், மனிதப் பிறவி நிலைதான். ஆனால் அவருக்கு ஏன் முந்தைய அவதார கர்மவினை பாதிப்புகள் எதுவும் உண்டாகவில்லை? இராமர் வாழ்வில் மட்டும் அந்த பாதிப்புகளால் பல கஷ்டங்களை ஏன் அனுபவித்தார் என்ற சந்தேகக் கேள்விக்கு பிருகு முனிவர் கூறிய விளக்கத்தை அறிவோம்.
பரசுராம அவதாரத்தில் அவருக்கு மனைவி, குடும்பம், குழந்தை என ஏதுமில்லாமல், அவர் தனி மனிதனாகவே வாழ்ந்தார். பரசுராமர் பூமியில் மனிதனாகப் பிறந்தாரே தவிர, அவருக்கு மரணமில்லை. இராமாவதாரத்திலும் அவர் உயிருடன் இருந்தார். இராமருக்கு மனைவி, குழந்தை, குடும்பம் என அமைந்திருந்தது. ஆசாபாசமுள்ள மனித நிலை. அதனால் இராமருக்கு இறுதி உண்டு.
ஒரு மனிதன் ஒரு பெண்ணை மணந்து, அவனுக்கென்று ஒரு குடும்பம் அமைந்த பின்புதான் முழு மனிதனாகிறான். இல்லறம் உள்ளவனுக்கு மட்டுமே முற்பிறவி கர்மவினை பாதிப்புகளைத் தரும். இல்லறம் இல்லாத பரசுராமருக்கு அதனால்தான் கர்மவினை பாதிப்புகள் இல்லை. ஆனால் பரசுராமர் அவதாரத்தில் அவர் பல கொலைச் செயல்களைச் செய்து சாபங்களைப் பெற்றார்.
அயோத்தி மன்னர் தசரத சக்ரவர்த் திற்கு மூத்த மகனாகப் பிறந்து, மன்னராக அனைத்து தகுதிகளும் இருந்தும், நாட்டு மக்களால் பெரிதும் போற்றி விரும்பப்பட்ட இராமன், தன் தந்தைக்குப்பிறகு மணி முடிதரித்து அயோத்திக்கு அரசனாக முடியாமல் போனதற்கு, அவரின் முந்தைய அவதாரங்களில் செய்த செயல்களின் வினைப்பதிவுதான் காரணமானது.
மகாவிஷ்ணுவின் முதல் அவதாரமான மச்சாவதாரத்தில், இரண்யாட்சன் என்ற மன்னன் ரிக், யஜுர், சாமம், அதர் வணம் என்ற நான்கு வேதங்களைக் கவர்ந்து சென்று சமுத்திரத்தில் மறைத்து வைத்தான். மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரமெடுத்து கடலுக்குள் சென்று, இரண்யாட்சனைக் கொன்று வேதங் களை மீட்டுவந்தார். உண்மையில் இரண் யாட்சனுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் எந்தப் பகையுமில்லை. பிறர் நன்மைக்காக தனக்கு சம்பந்தமில்லாத செயலில் ஈடுபட்டு ஒரு அரசனைக் கொன்றதால் உண்டான பாவம் அரச சாபமாகித் தொடர்ந்தது.
நரசிம்மாவதாரத்தில் "ஓம் நமோ நாராயணா' என்று தன் பெயரை உச்சரிப் பதில் இரண்யகசிபு மன்னனுக்கும், அவர் மகன் பிரகலாதனுக்கும் உண்டான கருத்து வேறுபாட்டில், மனித உடலும் சிங்கமுகமும் உடைய உருவமெடுத்து, இரண்யகசிபு மன்னனைக் கொன்றதால் ராஜதுவேஷம் உண்டாகித் தொடர்ந்தது.
வாமன அவதாரத்தில் தனது பக்தன் பிரகலாதனின் பேரனான மகாப- மன்னனை தந்திரமாக ஏமாற்றி பூமியில் காலால் அழுத்திக்கொன்றார். உண்மையில் மகாப- மன்னனுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் எந்த நேரடி பகையும் கிடையாது. ஒரு அரசனைக் கொன்ற பாவம் சூழ்ந்தது.
பரசுராமாவதாரத்தில், தன் தந்தையை ஒரு அரசன் கொன்றதால், "இந்த பூமியில் சத்திரிய வம்சத்தில் பிறந்த அனைத்து அரசர் களையும், அவர்களின் புத்திரர்களையும் கொன்று சத்ரிய வம்சத்தை அழிப்பேன்' என்று சபதமிட்டு, ஏராளமான மன்னர் களைக் கொன்றதால் உண்டான பாவம்.
மகாவிஷ்ணு ஒவ்வொரு அவதாரத்திலும், தனக்கு சம்பந்தமே இல்லாத பல அரசர் களைக் கொன்றதால் உண்டான முற்பிறவி கர்மவினை, அனைத்துத் தகுதிகளும் இருந்தும், அயோத்தி மன்னனாக வேண்டிய இராமனை அரசனாக விடாமல் தடுத்தது.
இதுபோன்ற பல அவதாரங்கள் எடுத்து, பலரைக் கொன்றதற்கு அவதார நோக்க மென்று காரணங்களைக் கூறினாலும், கொல்லப்பட்டவர்கள் கெட்டவர்களாகவே இருந்தாலும், தனக்கு சம்பந்தம் இல்லாத வர்களைக் கொலைசெய்தது- ஒரு ஆன்மாவை அழித்த பாவம் அரச சாபமாக, ராஜதுவேஷமாக வளர்ந்து, உயர்ந்த நிலை வாழ்விற்கு பாதிப்பைத் தரும். கிருஷ்ணா வதாரத்தில்கூட, கிருஷ்ணர் துவாரகைக்கு மன்னராகாமல், தன் அண்ணன் பலராமனை மன்னராக்கினார்.
இன்றைய நாளிலும் பலர் தகுதி, திறமை இருந்தும் அரசியல், அரசுவகையில் உயர்ந்த பதவியை அடையமுடியால் போவதற்கு இதுபோன்ற முற்பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம் என புரிந்துகொள்ளலாம். இன்றும் பணம், பதவி, செல்வாக்கு உள்ளவர்கள் தனக்கு வேண்டியவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறிக்கொண்டு, மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிட்டு, தனக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு தன்னையறிமலேயே தீமைகளைச் செய்து பாவத்தைத் தேடி சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பிறவிகளில் செய்யும் பாவத்திற்கு உண்டான தண்டனைகளை அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவித்துத் தீர்ப்பார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் சூரியனுக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் ராகு இருந்தால் பிறர் உதவி, ஆதரவு வாழ்க்கையில் கிடைக்காது. பிறரை நம்பி, சார்ந்து வாழக்கூடாது. தன் வாழ்க்கைக்குத் தேவையான வீடு, திருமணம், தொழில், சொத்துகள் என அனைத்தையும் அவனேதான் தேடி, சம்பாதித்து அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே கர்மவினையால் உண்டாக்கப்பட்ட விதிக்கணக்கு. இராமரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை அடுத்து அறிவோம்.
(தொடரும்)
செல்: 99441 13267