Advertisment

இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (25) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-25-siddhardasan-sundarji-jeevanadi-observational

திருமண முகூர்த்தநாளன்று அமையும் கிரகங்களின் நிலை, திருமணத்திற்குப்பின் அமையும் வாழ்க்கையில் தரும் பலன்களை அறிவோம்.

Advertisment

உதாரணமாக, இராமர் ஜாதகத்தில் மேஷத்தில் சூரியன் (தந்தை, மகன்) உள்ளது. இதற்கு 7-ஆமிடமான தூலத்தில் சனி (தொழில், ஜீவனம்) உள்ளது. 9-ஆமிடமான தனுசுவில் ராகு (பாவதோஷம்) உள்ளது. இந்த கிரக நிலை, தந்தை- மகனிடையே பிரிவு, பகை, அற்பாயுள் புத்திரன், அரசகோபம், பெற்றவர்களால் புறக்கணிக்கப் படுதல், பூர்வீக சொத்துகள், பூர்வீக சொந்தங்களால் நன்மையில்லாத நிலை போன்ற பலன்களைத் தரும்.

இராமர் வில்லை ஒடித்து சுயம்வர மண்டபத்தில் சீதைக்கு மாலையிட்டு மணம்புரிந்த நாளில், பிறப்பின்போது உண்டான இந்த கர்மவினை தோஷங்களை நிவர்த்திசெய்யும் நிலையில் அன்று கிரகங்கள் அமைந்திருக்கவில்லை. இந்த தோஷ பாதிப்புப் பலன்களை அதிகப்படுத்தி, உடனடியாக அனு பவிக்கும் நிலையில் சூரியனுக்கு 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் சனி, ராகு இருந்திருக்கும். அதனால் தான் தோஷ

திருமண முகூர்த்தநாளன்று அமையும் கிரகங்களின் நிலை, திருமணத்திற்குப்பின் அமையும் வாழ்க்கையில் தரும் பலன்களை அறிவோம்.

Advertisment

உதாரணமாக, இராமர் ஜாதகத்தில் மேஷத்தில் சூரியன் (தந்தை, மகன்) உள்ளது. இதற்கு 7-ஆமிடமான தூலத்தில் சனி (தொழில், ஜீவனம்) உள்ளது. 9-ஆமிடமான தனுசுவில் ராகு (பாவதோஷம்) உள்ளது. இந்த கிரக நிலை, தந்தை- மகனிடையே பிரிவு, பகை, அற்பாயுள் புத்திரன், அரசகோபம், பெற்றவர்களால் புறக்கணிக்கப் படுதல், பூர்வீக சொத்துகள், பூர்வீக சொந்தங்களால் நன்மையில்லாத நிலை போன்ற பலன்களைத் தரும்.

இராமர் வில்லை ஒடித்து சுயம்வர மண்டபத்தில் சீதைக்கு மாலையிட்டு மணம்புரிந்த நாளில், பிறப்பின்போது உண்டான இந்த கர்மவினை தோஷங்களை நிவர்த்திசெய்யும் நிலையில் அன்று கிரகங்கள் அமைந்திருக்கவில்லை. இந்த தோஷ பாதிப்புப் பலன்களை அதிகப்படுத்தி, உடனடியாக அனு பவிக்கும் நிலையில் சூரியனுக்கு 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் சனி, ராகு இருந்திருக்கும். அதனால் தான் தோஷம் வலிமைபெற்று, திருமணம் முடிந்த கொஞ்ச காலத்தில் செயல்பட்டு, பல சிரமங்களைத் தந்து ஆயுள்வரை அவரை அனுபவிக்கச் செய்தது.

tam

Advertisment

இராமர் ஜாதகத்தில், மனைவி கிரகமான சுக்கிரன் மீனத்தில் உள்ளது. அதற்கு 5-ஆமிடமான கடகத்தில், அவரின் தாயைக் குறிப்பிடும் சந்திரன் உள்ளது. சந்திரன், சுக்கிரன் ஒரே நட்சத்திர மண்டலத்தில் இருப்பது தோஷமாகும்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் (மனைவி) இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 12-ல் சந்திரன் (தாய்) இருந்தால், திருமணத்திற்குப்பிறகு அவன் தாய்க்கும், மனைவிக்குமிடையே ஒற்றுமை இருக்காது. மாமியார்- மருமகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்துகொண்டே இருக்கும். ஜாதகன் வாழ்க்கை நிம்மதியற்றதாகி விடும். இவன் தாய்ப் பேச்சைக் கேட்டால், மனைவியை விட்டுப் பிரிந்து தாயுடன் சேர்ந்துவாழ்வான். மனைவி பேச்சைக் கேட்டால் தாயைவிட்டுப் பிரிந்து மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்று விடுவான்.

இராமரின் திருமணநாளில், அவரின் பிறப்பு ஜாதகத்தில் உள்ளதுபோல் சந்திரன், சுக்கிரன் இணைந்திருந்ததால், திருமணம் முடிந்த சிறிது நாளிலேயே தாயைவிட்டுப் பிரிந்து மனைவி சீதையுடன் வனவாசம் சென்றுவிட்டார்.

இந்த சந்திரன், சுக்கிரன் இணைவு ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால், இந்தப் பெண்ணும் மாமியாரும், அவள் கணவனுடன் ஒரே வீட்டில் வசிக்க முடியாது; நிம்மதியாக வாழமுடியாது. முகூர்த்த நாளை இந்த தோஷ பாதிப்பு தராத- தடுக்கக்கூடிய நாளாகப் பார்த்துத் திருமணம் செய்து இந்த தோஷப்பலனைத் தடுத்துக் கொள்ளவேண்டும்.

இராமரின் பிறப்பு ஜாதகத்தில் குரு (ஜாதகன்) கிரகத்திற்கு 9-ஆமிடமான மீனத் தில் சுக்கிரன் (மனைவி) என இரண்டு கிரகங்களும் ஒரே நட்சத்திர மண்டலத்தில் இருப்பதால், இவர் தன் பூர்வ ஜென்ம மனைவியை விருப்பப்பட்டு போராடி மணம்புரிந்தாலும், இவரின் பிறப்பு ஜாத கத்தில் ராகு- கேது அச்சிற்கு ஒருபுறம் குருவும், அதற்கு எதிர்ப்புறமான மீனத் தில் சுக்கிரனும் இருப்பதால் இராமர்- சீதையிடையே பிரிவைத் தந்துவிட்டது.

இராமர்- சீதை இருவரும் முன் ஜென்மத்தில் இணைந்து வாழமுடியாமல் போன மீதி நாட்களை, கணவன்- மனைவி யாக சேர்ந்து வாழ்ந்து அனுபவித்துத் தீர்க்கவேண்டிய தாம்பத்திய உறவுக் கணக்கினை அனுபவித்துத் தீர்த்து முடித்தவுடன் இருவரும் பிரிந்து விட்டார் கள். அதன்பிறகு இராமரும் சீதையும் ஒன்றுசேர்ந்து வாழவே இல்லை.

அவதார புருஷர்களானாலும், அன்றாடங்காய்ச்சி மனிதர்களானா லும், முகூர்த்தநாளில் உள்ள கிரகங்களின் அமைப்பு நிலையைப் பொருத்தே திருமணத் திற்குப்பின் அமையும் வாழ்க்கைப் பலன் களை அனுபவிக்க வேண்டும்.

திருமண நாளன்று சூரியன், சனி, ராகு- கேது கிரகங்கள் சம்பந்தம் பெற்றிருந்தால், தந்தை- மகனிடையே பிரிவு, கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பித்ரு தோஷ பாதிப்புள்ள ஆண் குழந்தைகள் பிறப் பார்கள். பூர்வீக சொத்துகளை அடையவும், அனுபவிக்கவும் தடைகள் உண்டாகும். பெற்றவர்கள், உறவினர்கள் ஆதரவில்லாமல் புறக்கணிக்கப்படுவார்கள்.

முகூர்த்த நாளன்று சனி, செவ்வாய் தொடர்புபெற்றிருந்தால் திருமணத்திற்குப் பின்வரும் வாழ்வில் உடன்பிறந்த சகோதர- சகோதரிகளிடையே ஒற்றுமை, பாசம் குறையும். ரத்த சம்பந்தமான உறவுகளிடையே பகை உண்டாகும். சொத்து, பூமி, நிலம், சம்பந்தமான தகராறு உண்டாகும். சரியான தொழில், வருமானம் இராது. பல தொழில் செய்யநேரும். கடன்தொல்லை இருந்துகொண்டே இருக்கும்.

திருமண முகூர்த்தநாளன்று சனி, ராகு சம்பந்தம் பெற்றிருந்தால், திருமணத்திறகுப்பிறகு பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட நேரிடும். சட்டத்திற்குப் புறம்பான செயல்களை, தொழில்களைச் செய்து வாழ நேரிடலாம். தீயவர்கள் நட்பு உண்டாகலாம். துஷ்ட தேவதைகளால் பாதிப்பு உண்டாக லாம். பிறரிடம் அடிமைபோல் சேவகம் செய்து வாழ நேரிடும்.

முகூர்த்தநாளன்று சனி (தொழில்) கேதுவுடன் தொடர்புபெற்றிருந்தால், தொழிலில் தடை, தாமதம், முடக்கம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகும். கடன் தொல்லை இருக்கும். மனதில் விரக்தி உண்டாகும். இவர்கள் கடன் வாங்கி தொழிலை ஆரம்பித்து செய்தால், அந்தத் தொழிலில் நஷ்டம்தான் உண்டாகும்.

bala010722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe