Advertisment

இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (24) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-24

சுயம்வர மண்டபத்தில், இராமர் வில்லை ஒடித்தபோதே, இராமனும் சீதையும் மாலை மாற்றிக்கொண்டார் கள். சீதாகல்யாணம் அன்றே முடிந்து விட்டது. வசிட்டர் நாள் குறித்து நடந்தது திருமணமல்ல. அது திருமண வரவேற்பு நிகழ்ச்சியாகும். சீதையும் இராமரும் மாலை மாற்றிக்கொண்ட நாளே திருமண முகூர்த்த நாளாகும். இந்த நாள் பாவ- சாப- தோஷமுடைய நாளாகும். இந்த திருமண நாளின் பலனே இராமரின் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை அனுபவிக்க வைத்தது.

Advertisment

ஒவ்வொரு மனிதன் வாழ்விலும், அவன் பிறந்தநாளைப் போன்றே திருமணம் செய்துகொள்ளும் நாளும் முக்கியமானதாகும். மனிதன் வாழ்க்கை திருமணத்திற்குமுன்பு, திருமணத்திற்குப்பின்பு என, இரண்டு வகையான வாழ்க்கையாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

rra

திருமணத்திற்குமுன்பு பதவி, பணம், சொத்து, பெயர், புகழ், செல்வம், செல்வாக்குடன் வசதியாக வாழ்ந்தவர்கள் பலர், திருமணத்திற்குப்பின்பு அமையும் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து வறுமை நிலையை அடைவதற்குக் காரணம், அவரின் திருமண முகூர்த்தநாள் தீமை தரும் நாளாக இருந்ததுதான்.

திருமணத்திற்குமுன்பு சொத்து,

திருமணத்திற்குமுன்பு சொத்து, பூமி, பணம் என எந்த வசதியுமில்லாமல், வறுமையில் வாடி, அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்ந்தவர்கள், திருமணத்திற்குப்பின் அமையும் வாழ்வில் பணம், பதவி, சொத்து, பெயர், புகழ் என வசதியான வாழ்க்கையை அடைந்து வாழ்கிறார்கள். இந்த செல்வ நிலைக்கு இவர்கள் திருமணம் செய்துகொண்ட முகூர்த்தநாள் யோகம் தரும் நாளாக அமைந்து விட்டதுதான் காரணம்.

பணம் படைத்த செல்வந்தர்களை திருமணத்திற்குப்பிறகு அமையும் வாழ்வில் பரதேசியாக்குவதும், பரதேசியை பணக்காரனா கச் செய்வதும், குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை என அனைத்தையும் பெரிதாகத் தருவதும் அல்லது வறுமை, பகை, கணவன்- மனைவி பிரிவு, புத்திரக் குறை போன்ற பலன்களைத் தருவதும் அவரவர் திருமணம் செய்யும் நாளின் கிரகநிலையைப் பொருத்துதான் என்பது சித்தர்கள் வாக்காகும்.

இன்றையநாளில் திருமணம் செய்யும்போது, பஞ்சாங்கத்திலும் காலண்டரிலும், குறிப்பிட்டுள்ள முகூர்த்த நாட்களில் ஏதாவதொரு நாளிலும், இன்னும் சிலர் வளர்பிறை- தேய்பிறைக் காலம் பார்த்தும், இன்னும் சிலர் திருமண மண்டபம் கிடைக்கும் நாட்களிலும், விடுமுறை நாட்கள் பார்த்தும் தங்கள் சௌகரியம்போல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

வேதமுறை கணித ஜோதிடர்கள், திருமணம் செய்யும் முகூர்த்த நாட்களை லக்னம், லக்னத்திற்கு 7. 8- ஆமிடங்கள் சுத்தம், கண்ணுள்ள நாட்கள் என இது போன்று இன்னும் பலவற்றைக்கொண்டு, சில மாதங்களில் முகூர்த்த நாட்களையும், நேரத்தையும் கூறி, இந்தநாட்களில் அனைவரும் திருமணம் செய்யலாம் என்று பொதுவாகக் கூறிவிடுகிறார்கள். மேலும் சில குறிப்பிட்ட மாதங்களில் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்றும் கூறுகிறார்கள். இந்த முறையையே மக்கள் இன்று கடைப்பிடித்துத் திருமணம் செய்து விடுகிறார்கள்.

தமிழ்முறை சோதிடத்தை வகுத்தளித்த சித்தர் பெருமக்கள் இந்தத் திருமண முகூர்த்த நாள் முறையை ஒப்புக்கொள்வதில்லை. ஆதிகாலத்தில் தமிழ் மக்கள் கடைப்பிடித்த முகூர்த்தநாள் வழிமுறையை விளக்கமாக அறிவோம்.

திருமணம் செய்துகொள்ளும் ஆண்- பெண் இருவரின் பிறப்பு ஜாதகங்களை நன்கு ஆராய்ந்து, அவர்கள் ஜாதகத்திப் புத்திரதோஷம், பெண் சாபம், சகோதர சாபம், களத்திர தோஷம், தொழிலைக் கெடுக்கும் பாமர சாபதோஷம் போன்று இன்னும் ஏதாவது தோஷங்கள் உள்ளதா என்று அறிந்துகொண்டு, இவர்களின் திருமணத்திற்குப்பின்பு அமையும் வாழ்வில் இந்த தோஷங்கள் எந்த அளவு பாதிப்பைத் தரும் என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

திருமணம் செய்யும் முகூர்த்த நாளன்று, பிறப் பிலுள்ள தோஷங்களை அதிகப்படுத்தி குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகளைத் தரும் நிலையில் கிரகங்கள் உள்ளனவா அல்லது பிறப்பு ஜாதகத்திலுள்ள இந்த பாவ- சாப- தோஷங்களை நிவர்த்திசெய்து, திருமணத்திற்குப்பின்பு அமையும் வாழ்க்கையில் புத்திரன், கணவன்- மனைவி ஒற்றுமை, தொழில், பதவி, செல்வம், செல்வாக்கு என உயர்வான வாழ்க்கையைத் தரும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து, உயர்வு தரும் நாளில் முகூர்த்தநாள் அமைத்து திருமணம் செய்யவேண்டும். பொதுவாக ஏதாவதொரு நாளில் திருமணம் செய்யக்கூடாது என்பது சித்தர்கள் வாக்கு.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் திருமணம் முடிந்து நல்ல வாழ்க்கை வாழவேண்டு மென்ற எண்ணத்தில் பத்துப் பொருத்தம் பார்த்து, பல லட்சங்கள் செலவுசெய்து, வரதட்சணை, சீர்வரிசைப் பொருட்களைத் தந்து, ஜோதிடர்கள் கூறிய முகூர்த்தநாளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் தவறாமல் திருமணம் செய்துவைக்கிறார்கள். ஆனால் திருமணத்திற்குப்பின்பு, அவர்கள் வாழ்வில் ஏதாவது குறைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. கணவன்- மனைவி பிரிவு ஏற்பட்டுவிடுகிறது.

ஆண்கள்- பெண்களின் முற்பிறவி பாவ- சாப- தோஷங்களை அறிந்து, மாதம், நாள், வளர்பிறை- தேய்பிறை என பாராமல், பாவ- சாபங்களைத் தடுக்கும் கிரக அமைப்புள்ள எல்லா நாட்களிலும் எல்லா மாதங்களிலும் திருமணம் செய்துகொண்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும். பிறப்பிலுள்ள தோஷங்களைத் தடுத்துப் பரிகார நிவர்த்தி தரும் கிரக அமைப்புடன், இயற்கையே நமக்கு அளித்துள்ள நாள் திருமண முகூர்த்த நாளாகும்.

ஜீவநாடிமூலம் திருமணப் பொருத்தம், முகூர்த்த நாள் அமைத்துக்கொள்ள என்னிடம் வருபவர்களுக்கு சித்தர்கள் கூறிய முறையில், அவர்களின் பிறப்பு ஜாதகத்தை ஆய்வுசெய்து முகூர்த்தநாளை குறித்து, திருமணம் செய்துகொண்டவர்கள், சாப- தோஷ பாதிப்பில்லாமல் வாழ்வதை அனுபவத் தில் அறிந்துகொண்டேன். தமிழ்முறை சோதிடம் புதியதல்ல. சித்தர்களால் கூறப்பட்டு மக்கள் கடைப் பிடித்த மிகப்பழமையான முறையாகும்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala240622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe