Advertisment

இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (23) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-23-siddharthasan-sundarji-jeevanadi-observational

ராமரின் ஜாதகத்தினை, சித்தர்கள் கூறிய தமிழ் ஜோதிட முறையில் ஆய்வு செய்ததில், இராமர் சீதையைத் திருமணம் புரிந்தநிலை, திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்வில் அடைந்த சிரமங்கள், இராமர்- சீதை பிரிவு போன்ற இன்னும் பலவற்றுக்கு சித்த ஜோதிட விதிப்படி பலன்கள் சரியாகப் பொருந்தி வருவதை அறிந்துகொள்வோம்.

Advertisment

இராமர் ஜாதகத்தில் குரு (ஜாதகர்) கடக ராசியில் உள்ளது. இதற்கு 9-ஆவது ராசியான மீனத்தில் சுக்கிரன் (மனைவி) உள்ளது. வைகுந்த வாசனான மகாவிஷ்ணுவுக்கு ஸ்ரீதேவி, பூதேவி என்ற இரண்டு மனைவி கள் உள்ளதாக புராணங்களில் கூறப்பட் டுள்ளது. மகாவிஷ்ணு இராமராகவும், பூதேவி சீதையாகவும் இந்த பூமியில் பிறந்து, இராமரும் சீதையும் திருமணம் புரிந்துகொண்டனர் என இராமாயணக் கதையில் கூறப்படுகிறது. இதுபோன்று குரு, சுக்கிர சம்பந்தமுள்ள ஆண்கள் தனது பூர்வ ஜென்ம மனைவியையே மணம்புரிவர் என சித்த ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது சரியாகவே உள்ளது.

dd

குரு கடக ராசியில் பூச நட்சத்திரத்

ராமரின் ஜாதகத்தினை, சித்தர்கள் கூறிய தமிழ் ஜோதிட முறையில் ஆய்வு செய்ததில், இராமர் சீதையைத் திருமணம் புரிந்தநிலை, திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்வில் அடைந்த சிரமங்கள், இராமர்- சீதை பிரிவு போன்ற இன்னும் பலவற்றுக்கு சித்த ஜோதிட விதிப்படி பலன்கள் சரியாகப் பொருந்தி வருவதை அறிந்துகொள்வோம்.

Advertisment

இராமர் ஜாதகத்தில் குரு (ஜாதகர்) கடக ராசியில் உள்ளது. இதற்கு 9-ஆவது ராசியான மீனத்தில் சுக்கிரன் (மனைவி) உள்ளது. வைகுந்த வாசனான மகாவிஷ்ணுவுக்கு ஸ்ரீதேவி, பூதேவி என்ற இரண்டு மனைவி கள் உள்ளதாக புராணங்களில் கூறப்பட் டுள்ளது. மகாவிஷ்ணு இராமராகவும், பூதேவி சீதையாகவும் இந்த பூமியில் பிறந்து, இராமரும் சீதையும் திருமணம் புரிந்துகொண்டனர் என இராமாயணக் கதையில் கூறப்படுகிறது. இதுபோன்று குரு, சுக்கிர சம்பந்தமுள்ள ஆண்கள் தனது பூர்வ ஜென்ம மனைவியையே மணம்புரிவர் என சித்த ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது சரியாகவே உள்ளது.

dd

குரு கடக ராசியில் பூச நட்சத்திரத்திலும், சுக்கிரன் மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தி லும் உள்ளன. குரு (ஜாதகர்) இருக்கும் சனியின் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரத்தில் (ரேவதி) சுக்கிரன் உள்ளதால் இராமர் தன் பூர்வஜென்ம மனைவியான சீதையை, தானே தேடிச்சென்று மணம் புரிந்துகொண்டார்.

குரு இருக்கும் ராசியான கடகத்திற்கு 2-ஆவது ராசியான சிம்மத்தில் எந்த கிரகமும் இல்லை. 12-ஆவது ராசியில் கேது உள்ளது. கேது கிரகம் சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், விநாயகர், அனுமன், ஞானிகளைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும். இராமரின் பெற்றோரது ஒப்புதல் இல்லாமல், மூன்றாம் மனிதரான விசுவாமித்திர முனிவர், இராமரை சீதையின் சுயம்வரத்திற்கு அழைத்துச்சென்றார். அத்துடன் அவரது வேலை முடிந்துவிட்டது.

விசுவாமித்திரர் இராமரை சுயம்வரத்திற்கு அழைத்துச்சென்றதற்கும் ஒரு காரணமுண்டு. இராமரின் வம்சமுன்னோர்களில் ஒருவனான அரிச்சந்திரன் வாழ்க்கையில், அவன் மனைவி சந்திரமதியையும், மகன் லோகி தாசனையும் அவனைவிட்டுப் பிரித்து, குடும்பத்தைக் குலைத்து பெரும் பாவத்தைத் தேடிக்கொண்டார். அதைப்போக்க அரிச்சந்திரன் வம்சத்தில், வாரிசாகப் பிறந்த இராமனுக்கு சீதையை மணம்முடித்து, ஒரு குடும்பத்தை உருவாக்கிவைத்து, தான் செய்த பாவத்தை நடைமுறை செயலில் நிவர்த்தி செய்துகொண்டார்.

இராமருக்கு அவரது பெற்றோர்கள், குடும்பப் பெரியோர்கள் பெண் பார்த்து, பொருத்தம் பார்த்து, நல்ல சுபமுகூர்த்த நாள், நேரம் பார்த்துத் திருமணம் செய்து வைக்கவில்லை. அவரே தன் சுயமுயற்சியால், தன் பூர்வ ஜென்ம மனைவியைக் கண்டுபிடித்து திருமணம் செய்துகொண்டார்.

Advertisment

ff

இராமர் சீதையை சுலபமாகத் திருமணம் செய்துகொள்ளவில்லை. சீதையுடன் தோன்றிய வில்லை எடுத்து நாணேற்றுபவர்களே சீதையை மணக்கமுடியும் என்னும் போட்டி சுயம்வரத்தில் வைக்கப்பட்டது. இராமர் வில்லை ஒடித்து போட்டியில் வென்றுதான் சீதையை மணந்தார். இதற்கு இராமரின் பிறப்பு ஜாதகத்தில் தனுசுவிலுள்ள ராகுதான் காரணம். இராமர் வாழ்வில் திருமணம் மட்டுமல்ல; பதவி, பட்டம், புத்திரர், உறவு என அனைத்தையும் தன் வாழ்வில் போராடித்தான் அடைந்தார். இராமரின் வாழ்க்கை முழுவதும் எல்லாவற்றிலும் போராட்டம்தான்.

ஆண்கள், பெண்கள் ஜாதகத்தில் தனுசுவில் ராகு உள்ளவர்கள், தங்கள் வாழ்க்கையில் நியாயமாக அடையவேண்டிய அனைத்தையும் போராடித்தான் அடையவேண்டும். எதுவும் சுலபமாகக் கிடைத்துவிடாது. இவர்கள் போராட்டம், தடைகளைக் கண்டு அஞ்சி சோர்ந்து போகக்கூடாது. தன் சுய அறிவு, முயற்சி கொண்டு செயல்பட்டு அடையவேண்டும். இறுதி வெற்றி இவர்களுக்குத்தான்.

இறங்கி செயல்பட்டால் எல்லாமும் வெற்றி தான்.

ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில், குருவுக்கு 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் சுக்கிரன் இருந்து, திருமணம் தடையாகிக்கொண்டே இருந்தால் அவரின் பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவுகள் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கமுடியாது. அந்த ஜாதகரேதான் தான் விரும்பிய பெண்ணையோ அல்லது தன்னை விரும்பும் பெண்ணையோ தன் சுயமுயற்சியால் திருமணம் செய்துகொள்ளவேண்டும். இவர்கள் பத்து பொருத்தம் பார்க்கக்கூடாது. ஆண்- பெண் இருவருக்கும் மனப்பொருத்தம் இருந்தால் போதும்.

சீதையின் தந்தையும், சகல சாஸ்திரங்களையும் அறிந்தவரும், மகா ஞானியுமான ஜனக மகாராஜன், இராமரின் தந்தையும், அறுபதினாயிரம் மனைவிகளை மணந்து, தன் ஆயுள்வரை அனைவருடனும் வாழ்ந்தவருமான தசரதமன்னன், வசிட்டர் வாயால் பிரும்மரிஷி பட்டம் பெற்ற விசுவாமித்திரர் ஆகியோரின் முன்னிலையில், வசிட்டர் திருமண முகூர்த்த நாள், நேரம் குறித்துக்கொடுத்த நேரத்தில், வேதம் முழங்க சாஸ்திர, சம்பிரதாயங்களுடன், மும்மூர்த்திகள், இந்திராதி தேவர்கள், முனிவர்கள் ரிஷிகள் ஆசி கூற சீதா கல்யாணம் நடந்தது என இராமாயணக் கதையில் கூறப்பட்டுள்ளது.

மாபெரும் சக்திவாய்ந்த ரிஷி, முனிவர்கள், மும்மூர்த்திகளின் ஆசியுடன் கல்யாணம் நடந்தும், திருமணத்திற்குப்பின்பு, பட்டம், பதவி, குடும்ப உறவுகளை இழந்து, இருவரும் வனவாசம் சென்றார்கள். இராமரும் சீதையும் பிரிந்தார்கள். இதற்குக் காரணத்தையும் அறிவோம்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala170622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe