Advertisment

இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (19) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-19

ராமர் ஜாதகத்தில் குருவுக்கு எதிர்பகுதியில் இருந்த கிரகங்களின் பலனை கடந்த இதழில் கண்டோம்.

Advertisment

இனி குரு இருக்கும் பகுதியில், குருவுடன் இணைந்த கிரகங்கள் தந்த பலன்களை அறிவோம்.

குருவுடன் தாயைக் குறிப்பிடும் கிரகமான சந்திரன் ஒரே ராசியில் உள்ளது. ஆனாலும் பெற்ற தாயாலும் இராமனுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

குரு, சந்திரன் ஆகிய இரண்டு கிரகங் களுக்கும் எதிர்புறம் தந்தை கிரகமான சூரியன், இளைய மனைவி கைகேயியைக் குறிப்பிடும் கிரகமான புதனுடன் இணைந் துள்ளது. இளைய மனைவிமீது கொண்ட அதிக மோகத்தால், மூத்த மனைவி கோசலையை தசரதன் ஒதுக்கி வைத்து விட்டான். மூத்த மனைவி பட்டத்திற்குரிய மகாராணியாக இருந்தாலும், பதவி, அதிகா

ராமர் ஜாதகத்தில் குருவுக்கு எதிர்பகுதியில் இருந்த கிரகங்களின் பலனை கடந்த இதழில் கண்டோம்.

Advertisment

இனி குரு இருக்கும் பகுதியில், குருவுடன் இணைந்த கிரகங்கள் தந்த பலன்களை அறிவோம்.

குருவுடன் தாயைக் குறிப்பிடும் கிரகமான சந்திரன் ஒரே ராசியில் உள்ளது. ஆனாலும் பெற்ற தாயாலும் இராமனுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

குரு, சந்திரன் ஆகிய இரண்டு கிரகங் களுக்கும் எதிர்புறம் தந்தை கிரகமான சூரியன், இளைய மனைவி கைகேயியைக் குறிப்பிடும் கிரகமான புதனுடன் இணைந் துள்ளது. இளைய மனைவிமீது கொண்ட அதிக மோகத்தால், மூத்த மனைவி கோசலையை தசரதன் ஒதுக்கி வைத்து விட்டான். மூத்த மனைவி பட்டத்திற்குரிய மகாராணியாக இருந்தாலும், பதவி, அதிகாரம் என எதுவும் இல்லாமல் போனது.

Advertisment

ff

குரு, சந்திரன் இருக்கும் பகுதிக்கு எதிர்புறம் சூரியன் இருப்பதால், தாயும் மகனும் ஒருபுறமும், தந்தை ஒருபுறமும் பிரிந்திருந்தார்கள். இராமனின் பிறப்பிறகுப்பிறகு, அவரின் ஜாதகப் பலன், கிரக அமைப்பு, தாய் கோசலையையும், தந்தை தசரதனையும் ஒன்றுசேர்ந்து வாழவிடாமல் பிரித்துவைத்தது. கோசலை கணவனைப் பிரிந்து, சந்நியாசிபோல் வாழ்ந்தாள். அதனாலும், தாயாலும் இராமனுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. குரு, சந்திரன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு, அவர்களின் தாய்- தந்தையிடம் பிரிவு, கருத்து வேறுபாடு அல்லது ஒற்றுமை யில்லாத நிலை ஏற்பட்டுவிடும். கணவன்- மனைவியிடையே பிரச்சினை, பிரிவு ஏற்படுவது, அவர்கள் பெற்ற குழந்தை களின் ஜாதக பாதிப்பினாலும் நிகழலாம்.

பரசுராம அவதாரத்தில், பெற்ற தாயைக் கொன்று தாயின் சாபம் பெற்றதால், இராமாவதாரத்தில் இளம் வயதிலேயே தாயைவிட்டுப் பிரிந்து, விசுவாமித்திர முனிவரு டன், அவர் செய்த யாகத்தை காவல் செய்ய இராமன் காட் டிற்குச் சென்றார். அதன்பிறகு சீதையை மணம்புரிந்து அயோத்தி வந்தபின்பும், அயோத்திக்கு அரசனாக முடியாமல், மனைவி சீதையை அழைத்துக்கொண்டு, 14 ஆண்டுகள் வனவாசம் சென்றுவிட்டார்.

பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் குருவுக்கு 1, 5, 9, 2, 7, 12-ல் சந்திரன் இருந்தால், வேத முறை கணித ஜோதிடத்தில். குருச் சந்திர யோகம், கஜகேசரி யோகம் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள். ஆனால் இந்த கிரக அமமைப் பினை குருச்சந்திர தோஷம் என்று சித்தர்கள் கூறுவார்கள்.

குரு, சந்திரன் சேர்க்கை உள்ளவர்கள் வாழ்வில் தாய், மகனிடையே கருத்து வேறுபாடு, தாய்ப்பாசம், ஆதரவு குறைவு, பெண்களால் பிரச்சினைகள், அவமானம், தொலைதூரப் பயணம் அல்லது அலைச்சல், அகால போஜனம், அம்மன், பெண் தெய்வ வழிபாடு, பிரார்த்தனைகள் நிறைவேறாமல் போவது, நீர் சம்பந்தமான நோய்கள், மனக்குழப்பம், சுயவாழ்வில் செயல்களில் தீர்க்கமானமுடிவெடுத்து செயல்பட முடியாமல் போவது, சந்தேக குணம் போன்ற இன்னும் பல சிரமப் பலன்களைத் தந்துவிடும். சந்திரனுடன் ராகு- கேது இணைந்துவிட்டால் இது துஷ்ட சக்திகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற மாந்ரீக பாதிப்புகளை அடையச் செய்துவிடும்.

இராமனின் வாழ்க்கையில், கைகேயி, மந்தரை, சூர்ப்பனகை போன்ற பெண்களால் பல இழப்புகளையும், போராட்டங்களையும் அனுபவித்தார். மனைவி சீதையாலும் கஷ்டங்களை அனுபவித்தார். வனவாச காலமான 14 ஆண்டுகள் காடு, மலை என நீண்டநெடிய பயணம்செய்து பல இடங்களில் அலைந்து திரிந்தார். நேரத்திற்கு நல்ல உணவுண்ண முடியாமல், காட்டில் கிடைத்த காய், கனி, கிழங்குகளை உண்டு வாழ்ந்தார். துஷ்ட சக்திகளான அரக்கர்களால் பல கஷ்டங்களை அனுபவித்தார்.

குரு இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில், சந்திரன் இருந்து, குருச்சந்திர தோஷம் பெற்ற ஜாதகர்களுக்கு, இராமனின் வாழ்க்கையைப் போன்ற வாழ்க்கை அமையு மென்று சித்தர்கள் ஜீவநாடியில் கூறுகிறார்கள்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala200522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe