Advertisment

இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (17) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-17

ருவர் ஜாதகத்தில் குரு தனித் திருந்தால் அவர் வாழ்வில் ஏற்படும் பலன்களைக் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இங்கு காண்போம்.

Advertisment

ஜாதகத்தில் குரு தனித்திருப்பவர் கள் மற்றவர்களுக்கான பிரச்சினைகளுக்கு சரியான யோசனைகளைக் கூறுவார்கள். ஆனால் தங்கள் வாழ்வில் உண்டாகும் பிரச்சினைகள் நீங்க சரியான வழி தெரியாமல் குழப்ப மடைந்து தவித்துக்கொண்டிருப்பார்கள்.

rr

இவர்கள் எந்தவொரு செயலை யும் செய்யும்முன்பே, "நான் வீடு கட்டுகிறேன்; தொழில் ஆரம்பிக் கப் போகிறேன்; நிலம் வாங்கப் போகிறேன்' என இதுபோன்று தான் விரும்பிச் செய்ய நினைப்பதை, செய்வதற்குமுன்பே வாயைவிட்டு பிறரிடம் கூறிவிட்டால் அந்த காரியத்தைச் செய்ய முடியாது. நினைத்ததை அடையமுடியாது. வாழ்வில் உயர்வுபெற போடும் திட்டங்கள் எதுவும் நடக்காது; தடைப்பட்டுவிடும்.

இவர்கள் கடன்வாங்கித் தொழில் செய்தால் அந்தத் தொழில் விருத்தியடையா மல் நஷ்டமேற்பட்டு, தொழிலைத் தொடர்ந்து செய்யமுடியாமல் போகும். கடன்வாங்கி வீடுகட்டினால் ஆயுள்வரை அந்தக் கடன் தீராது. வாங்கிய கடனுக்கு அந்த வீட்டை விற்றுக் கடனை அடைக்கும் நிலை கூட சிலருக்கு ஏற்பட்

ருவர் ஜாதகத்தில் குரு தனித் திருந்தால் அவர் வாழ்வில் ஏற்படும் பலன்களைக் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இங்கு காண்போம்.

Advertisment

ஜாதகத்தில் குரு தனித்திருப்பவர் கள் மற்றவர்களுக்கான பிரச்சினைகளுக்கு சரியான யோசனைகளைக் கூறுவார்கள். ஆனால் தங்கள் வாழ்வில் உண்டாகும் பிரச்சினைகள் நீங்க சரியான வழி தெரியாமல் குழப்ப மடைந்து தவித்துக்கொண்டிருப்பார்கள்.

rr

இவர்கள் எந்தவொரு செயலை யும் செய்யும்முன்பே, "நான் வீடு கட்டுகிறேன்; தொழில் ஆரம்பிக் கப் போகிறேன்; நிலம் வாங்கப் போகிறேன்' என இதுபோன்று தான் விரும்பிச் செய்ய நினைப்பதை, செய்வதற்குமுன்பே வாயைவிட்டு பிறரிடம் கூறிவிட்டால் அந்த காரியத்தைச் செய்ய முடியாது. நினைத்ததை அடையமுடியாது. வாழ்வில் உயர்வுபெற போடும் திட்டங்கள் எதுவும் நடக்காது; தடைப்பட்டுவிடும்.

இவர்கள் கடன்வாங்கித் தொழில் செய்தால் அந்தத் தொழில் விருத்தியடையா மல் நஷ்டமேற்பட்டு, தொழிலைத் தொடர்ந்து செய்யமுடியாமல் போகும். கடன்வாங்கி வீடுகட்டினால் ஆயுள்வரை அந்தக் கடன் தீராது. வாங்கிய கடனுக்கு அந்த வீட்டை விற்றுக் கடனை அடைக்கும் நிலை கூட சிலருக்கு ஏற்பட்டுவிடும். பொதுவாக இவர்கள் கடன்வாங்கிச் செய்யும் எந்த செயலும் நன்மை தராது. இவர்கள் வாழ்வைக் கடனே மூழ்கடித்துவிடும்.

ஜாதகத்தில் குரு தனித்திருக்கும் ஜாதகர் கள் அமைச்சர்களாக- அரசு அதிகாரிகளாக- தலைவர்களாக பொதுவாழ்வில் ஈடுபட்டி ருந்தாலும், தங்கள் சுகத்தைப் பெரிதாக எண்ணாமல், நாட்டின் உயர்வுக்கும் வளத்திற்கும் மக்களின் நலனுக்கும் கடினமாக உழைப்பார்கள். பெரிய பதவிகளில் இருந்தாலும் பதவி சுகத்தை அனுபவிக் காமல்- பணம், பொருளாசை இல்லாமல் எளிமையாக வாழ்வார்கள். ஆனாலும் நாட்டுமக்கள் இவர்கள் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்க மாட்டார்கள். மக்களுக்கா கவே வாழ்ந்த இவர்களுக்கு மக்களும் துரோகம் செய்து நன்றி மறந்தவர்களாகி விடுவார்கள்.

இவர்கள் தங்கள் சுய உழைப்பால் எவ்வளவு சம்பாதித்தபோதும் கையில் பணம் தங்காது; பணத்தோடு பணத்தை சேர்க்கமுடியாது. பெரும்பாலும் இவர்களுக்கு நிரந்தரமான தொழில் அமைவது சிரமம். அவ்வப்போது தொழிலில் தடைகள், மாற்றங்கள் ஏற்படும். உழைப்புக்கேற்ற ஊதியம், உயர்வை அடைய முடியாமல் போகும்.

குரு தனித்திருக்கும் ஜாதகரின் முன்னோர்கள் செல்வந்தர்களாக இருந்து கோவில் கட்டி வைத்தது, அன்னசத்திரம் வைத்தது, தெய்வ காரியங்களில் ஈடுபட்டு தேர்த் திருவிழா நடத்தியது, கோவில்களில் தர்மகர்த்தாக்களாக இருந்தது, மதகுருமார்களின் மடங்களுக்கு உதவிசெய்தது, கோவில்களுக்கு நிலம், சொத்து களை தானமாக எழுதிவைத்தது, நிறைய தான, தர்மம் செய்து புகழ்பெற்றது என இத்தகைய குடும்பங்களின் பிறந்திருந்தாலும், இளம்வயதில் செல்வாக்குடன் வாழ்ந்திருந்தாலும் தங்கள் திருமணத்திற்குப்பின்பு அமையும் வாழ்வில் செல்வம் குறைந்து சிரமமான வாழ்க்கை அமைந்துவிடும்.

இவர்களில் பலர் வறுமை நிறைந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருப்பதும் உண்டு. இளம் வயதில் சிரமம், வறுமையுடன் போராடி வாழ்வார்கள். ஆனால் பிற்கால வாழ்வில் தன் சுய அறிவு, உழைப்பால் நல்ல வாழ்க்கையைத் தாங்களே அமைத்துக் கொள்வார்கள். பணம், பதவி, செல்வாக்குடைய வாழ்க்கை அமைந்தபோதும் அதனை அனு பவித்து வாழ ஆசைப்பட மாட்டார்கள். எளிமை யாகவே இருப்பார்கள்

. இவர்களில் சிலர் வயதாக வயதாக விரக்தி மனப்பான்மையுடன் வாழ்வார்கள். சிலர் வாழ்வின்மீது வெறுப்புக்கொண்டு துறவி போல வாழ்வார்கள். இன்னும் சிலர் மன அமைதி வேண்டி கோவில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், திருவிழா நடத்துதல் போன்ற செயல் களில் ஈடுபட்டு வாழ்வார்கள். ஜாதகத்தில் குரு தனித்திருக்கும் ஜாதகர்கள் பலர் இத்தகைய சிரமங்கள் தீர, "திக்கற்றவர்க்கு தெய்வமே துணை; கடவுளை வழிபாடு செய்தால் கடவுள் காப்பாற்றுவார்' என்று எப்போதும் கடவுள் சிந்தனையிலேயே இருப்பார்கள். சிலர் வேத சாஸ்திரங்களில் கூறியபடி இறைவனை வணங்கி பூஜை, யாகம், ஹோமம், விரதங் கள் என ஈடுபட்டிருப்பார்கள். இன்னும் சிலர் புண்ணியத் தலயாத்திரை, பாதயாத்திரை என கோவில் கோவிலாகச் சென்றுகொண்டி ருப்பார்கள். இன்னும் சிலர் தனக்குத் தெரிந்த கடவுள் பற்றிய பாடல்கள், மந்திர சுலோகங்கள், தோத்திரங்களைச் சொல்லி கடவுளை வணங்கிக்கொண்டிருப்பார்கள்.

இவர்களில் பலர் தங்கள் வாழ்வில் உண்டாகும் தடைகள், சிரமங்கள் விலக ஜோதிடர்கள் கூறும் அனைத்துப் பரிகாரங்களையும் செய்துகொண்டே இருப்பார்கள். அதனால் எந்தப் பயனும் கிட்டாது. மாற்றங்கள் எதுவும் நடக்காது. பொதுவாக தெய்வங்களை வணங்கினாலும், சித்தர்களை வணங்கி காடு, மலைகளில் தேடிச்சென்று சித்தர் பீடங்களை வணங்கி னாலும், காசி, இராமேஸ்வரம், கயா போன்ற தலங்களுக்கு வருடம் தவறாமல் சென்று முன்னோர்களுக்குத் திதி கொடுத்தாலும், இத்தகைய ஆன்மிகச் செயல்களால் வாழ்வில் உண்டாகும் பிரச்சினைகள், தடைகள் என எவையும் விலகாது.

ஒரு ஆண் ஜாதகத்தில் ஜாதகரைக் குறிப்பிடும் உதாரண கிரகமான குரு தனித்திருந்தால் இதுபோன்ற நிகழ்வுகளை வாழ்வில் அனுபவிக்க நேரிடும். முற்பிறவியில் செய்த செயலால் உண்டான ஊழ்வினைப் பதிவுகள்தான் இதற்குக் காரணமென்பதைப் புரிந்துகொண்டு, சரியான நிவர்த்திசெய்து வினைப் பதிவைத் தடுத்துக்கொள்ளவேண்டும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

இந்த பூமியில் பொதுவாக எந்த ஒன்றும் தனித்து செயல்படமுடியாது. ஒன்றுடன் மற்றொன்று இணைந்துதான் செயல்படவேண்டும் என்பது இயற்கை நிர்ணயித்த விதியாகும். நடக்கும்போதும் அமரும்போதும் படுக்கும்போதும் பூமியோடு தொடர்புவேண்டும். கைகளுடன் மற்றொரு பொருள் இணைந்தால்தான் பிடிக்கவோ- எடுக்கவோ கைகள் செயல்படும். ஆண்- பெண் இணைந்தால்தான் ஒரு குழந்தையை அடையமுடியும். உணவு உண்டால்தான் பசியைப் போக்கமுடியும். மருந்து உண்டால்தான் நோய்களைத் தீர்க்கமுடியும். ஒன்றுடன் மற்றொன்று இணையாவிட்டால் இந்த பூமியில் எதுவும் செயல்படாது.

(தொடரும்)

செல்: 99441 13267

bala060522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe