இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (16) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-16-siddharthasan-sundarji-jeevanadi-observational

பாவம் செய்தவர்கள் அதற்கு நிவர்த்தி தேடி இந்த பூமியில் பிறப்பார்கள். சொர்க்க மும், நரகமும் பூமியில் நாம் வாழும் வாழ்க்கை யில்தான் உள்ளது.

ஜோதிடத்தில் கூறப்படும் கிரகங்களே, தங்களின் தவறான செயல்களால் முனிவர்களிடம் சாபங்களைப்பெற்று, அதற்குரியத் தண்டனைகளை இந்த பூமியில் வந்து அனுபவித்து வாழ்ந்து, அதன்பின் சாபவிமோசனம் பெற்றதாக புராணக் கதைகளில் கூறப்படுகின்றது.

ff

இந்த மண்ணுலகில் மனிதர்கள் முற்பிறவி கர்மவினை, பாவ- சாபங்கள் நிவர்த்தியாகி, மற்றவர்கள் புகழ்ந்து பேசும் வண்ணம் செல்வம், செல்வாக் கினை அடைந்து வாழவேண்டும். புத்தியால் எதனையும் அறிந்து, உண்மை- பொய் அறிந்து, சுயமான அறிவின் துணைகொண்டு வாழவேண்டு மென சித்தர் பெருமக்கள் கூறுகின்றார்கள். இந்த உண்மையை மண்ணுலகில் வாழும் மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தவே, மகாவிஷ்ணு இராமராகவும், கிருஷ்ணராகவும் இந்த பூமியில் பிறந்து, பாவ- சாபங்களை அனுபவித்து தீர்த்தார்கள் என

பாவம் செய்தவர்கள் அதற்கு நிவர்த்தி தேடி இந்த பூமியில் பிறப்பார்கள். சொர்க்க மும், நரகமும் பூமியில் நாம் வாழும் வாழ்க்கை யில்தான் உள்ளது.

ஜோதிடத்தில் கூறப்படும் கிரகங்களே, தங்களின் தவறான செயல்களால் முனிவர்களிடம் சாபங்களைப்பெற்று, அதற்குரியத் தண்டனைகளை இந்த பூமியில் வந்து அனுபவித்து வாழ்ந்து, அதன்பின் சாபவிமோசனம் பெற்றதாக புராணக் கதைகளில் கூறப்படுகின்றது.

ff

இந்த மண்ணுலகில் மனிதர்கள் முற்பிறவி கர்மவினை, பாவ- சாபங்கள் நிவர்த்தியாகி, மற்றவர்கள் புகழ்ந்து பேசும் வண்ணம் செல்வம், செல்வாக் கினை அடைந்து வாழவேண்டும். புத்தியால் எதனையும் அறிந்து, உண்மை- பொய் அறிந்து, சுயமான அறிவின் துணைகொண்டு வாழவேண்டு மென சித்தர் பெருமக்கள் கூறுகின்றார்கள். இந்த உண்மையை மண்ணுலகில் வாழும் மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தவே, மகாவிஷ்ணு இராமராகவும், கிருஷ்ணராகவும் இந்த பூமியில் பிறந்து, பாவ- சாபங்களை அனுபவித்து தீர்த்தார்கள் என இதிகாச கதைகளில் கூறப் படுகின்றது.

பாரம்பரிய வேத ஜோதிடத்தில், ஒருவரின் பிறப்பு ஜாதகத்திலுள்ள லக்னமும், அந்த லக்னத் திற்குரிய கிரகமும், ஜாதக னைக் குறிப்பிடும் என்று கூறுவார்கள். ஆனால் சித்தர்கள் கூறியுள்ள தமிழ்முறை ஜோதிடத்தில் ஆணின் பிறப்பு ஜாதகத் திலுள்ள குரு என்ற கிரகம், அந்த ஜாதகனைக் குறிப்பி டும் உதாரண கிரகம் என்று கூறுகிறார் கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் அந்தப் பெண்ணைக் குறிப்பிடும் உதாரண கிரகம்.

ஒரு ஆண் ஜாதகத்தில் குரு இருக்கும் நிலையையும், அதனுடன் சூரியன் முதல் கேது வரை உள்ள கிரகங்கள் சேர்ந்து, சம்பந்தம் பெற்றிருப்பதையும் கொண்டு, அவரின் முற்பிறவிநிலை, இப்பிறவி வாழ்வில் அவருக்கு குடும்பம், உறவுகள், திருமணம், புத்திரர், பதவி, தொழில், நட்பு, சொத்து, இளமைக் காலவாழ்வு, முதுமையில் வாழ்க்கை நிலை, அடுத்த பிறவிநிலை, பிறவி முடித்து மோட்சமடையும் நிலை என அனைத்தையும் அறிந்து கொள்ளவேண்டும்.

ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத் திலுள்ள சுக்கிரனின் நிலையையும், அந்த சுக்கிரனுடன் இணைந்து சம்பந்தம் பெற்றுள்ள ஏனைய கிரகங்களின் தன்மைகளைக்கொண்டும் அறியவேண்டும்.

ஆண் ஜாதகனைக் குறிப்பிடும் உதாரண கிரகமான குருவுக்கு 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் எந்த கிரகமும் இல்லையென்றா லும், முற்பிறவி பாவ- சாபங்களைக் குறிப்பிடும் உதாரண கிரகங்களான ராகு- கேதுவுக்கு ஒருபுறம் மற்ற கிரகங்களும், அதற்கு எதிர்புறம் குரு இருந்தாலும், குரு எந்த கிரகத் தொடர்புமின்றி தனித்து உள்ளதா என்றும் அறிந்துகொள்ளவேண்டும். இது போன்று ஒரு ஆண் ஜாதகத்தில் குரு தனித்திருந்தால், இப்பிறவி வாழ்வில் என்னவிதமான பலன்களை அனுபவிப்பார் என்பதை அறிவோம்.

ராசிக்கட்டத்தில் குரு தனியாக இருந்தால், இப்பிறவி வாழ்வில் அவருக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என யாருடைய உதவியும் கிடைக்காது. பூர்வீக சொத்துகளால், பூர்வீக தாய்வழி, தந்தைவழி சொந்த இனத்து மக்களால் நன்மை கிடைக்காது. நியாயமாகக் கிடைக்க, வேண்டிய சொத்துகளை குடும்பத்தினர் தரமாட்டார்கள். ஏதாவது பூர்வீக சொத்துகள் இருந்தாலும், அந்த சொத்துகள் விருத்தியைத் தராது.

ஜாதகர் தனக்குத் தேவையான வீடு, பணம், சொத்துகள், வாகனம், நிலம், ஆபரணம், தொழில், பதவி என அனைத் தையும், இவரேதான் தன் சுய உழைப்பால் தேடித்தேடி அடைந்துகொள்ளவேண்டும். ஒரு பெண்ணைப் பார்த்து, இவரேதான் திருமணம் செய்துகொள்ளவேண்டும். வேறு யாரும் இவருக்குத் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள்.

இப்பிறவி வாழ்வில், பிறர் உதவி செய்வார் கள் என்று எதிர்பார்த்து வாழ்ந்தால் யாருடைய உதவியும் இவருக்குக் கிடைக்காது. யாரும் எந்த உதவியும் செய்யமாட்டார்கள். இவர்களின் சொத்து, பணம், உழைப்பு, அறிவு, திறமை என அனைத்தையும், இவரோ அல்லது மனைவி, குழந்தைகளோ அனுபவிக்க மாட்டார்கள்; மற்றவர்கள்தான் அனுபவிப்பார்கள்.

இவர்கள் பிறருக்கு கடன் கொடுத்தால் திரும்பவராது. தொழில் செய்ய, சொத்து வாங்க என தனது சுய தேவைக்காகப் பிறரிடம் கடன் வாங்கினாலும், அந்தப் பணத்தை திரும்பக் கொடுக்க மிகவும் சிரமப்படுவார்கள். இவர்மூலம் பணம், சொத்து, பொருள் என ஏதாவதொருவகையில் உதவி பெற்றவர்கள் வாழ்க்கையில் உயர்ந்துகொண்டே செல்வார்கள். ஆனால் இவர்கள் சிரமப் பட்டுக்கொண்டே வாழ்வார்கள்.

இளகிய மனமும், இரக்க குணமும் கொண்ட இவர்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் எந்த எதிர்பார்ப்புமின்றி அவர்கள் கஷ்டப் படும்போது உதவிசெய்வார்கள். ஆனால் இவருக்கு யாரும் உதவிசெய்ய மாட்டார்கள். இவரின் பிரச்சினை, சிரமங்களை இவரே தான் அலைந்து திரிந்து தீர்த்துக்கொள்ள வேண்டும்.

இவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், இவரால் உதவி பெற்றவர்கள் என அனைவரும் நன்றி, விசுவாசம் இல்லாத வர்களாகவே இருப்பார்கள். இவர்கள் யாருக்குப் பணம் தந்து உதவினார்களோ, அவர்களே இவருக்கு எதிரியாக மாறுவார்கள். துரோகிகளாகி தீமை செய்வார்கள்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala290422
இதையும் படியுங்கள்
Subscribe