Advertisment

இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (15) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-15-siddhardasan-sundarji-jeevanadi-observational

ராமபிரானின் ஜாதகத்தில் புதன் கிரகம் ராகுவுடன் இணைந்ததால், அவருக்கு சொந்த இனமக்கள், குடும்பத்தாரின் ஆதரவில்லாமல் போனது. அவரது வாழ்க்கையில் வேடன் குகன், வானரங்களான சுக்ரீவன், அனுமன், அங்கதன், ஜாம்பவான், பறவை சடாயு ஆகியோரின் நட்பும், அவர்களது உதவியால் நன்மைகளும் கிடைத்தன. இவர்களை இராமன் நண்பர்களாகவோ தோழர்களாகவோ எண்ணாமல் சகோதரர்களாகவே ஏற்றுக் கொண்டார். இதேபோன்று கிருஷ்ணாவதாரத்தில், ஷத்திரிய வம்சத்தில் பிறந்த கிருஷ்ணரும், அனைத்து தகுதிகளிலும் தன்னைவிட தாழ்ந்தவர்களான யாதவ குல மக்களைத் தன் உறவுகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுடனேயே வாழ்ந்தார்.

Advertisment

வைகுந்தவாசனான ஸ்ரீமன் நாராயண மூர்த்தி மேற்கண்ட இரண்டு அவதாரங்களிலும் தனது வாழ்க்கைமூலம் மண்ணுலக மக்களி டையே மதம், இனம், குலம், உயர்வு- தாழ்வு போன்ற வேறுபாடுகள், பேதங்கள் இல்லை; மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் மிகப்பெரிய உண்மையை தங்கள் நடைமுறை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார்கள். இதுபோன்று இன்னும் பல செயல்களைக் கடைப்பிடித்து வாழ்ந்ததால்தான் ரிஷி முனிவர் கள் இராமரையும் கிருஷ்ணரையும் கடவுள் என்று கூறினார்கள்.

ff

கிருத யுகம், திரேதா யுகம் நடந்த காலங்களில் வாழ்ந்த மக்கள் மதம், சாதி என்று பேதமில்லா மல் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இந்த கலியுகத்தில் சிலர் கடவுளின் பெயரால் மதம், சாதி, இனம் என மக்களிடையே பிரிவினை உணர்வுகளை ஏற்படுத்தி, அவர்களைப் பிரித்து அதன்மூலம் தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். இராமரும் கிருஷ்ணரும் சாதி, மதமற்ற சம

ராமபிரானின் ஜாதகத்தில் புதன் கிரகம் ராகுவுடன் இணைந்ததால், அவருக்கு சொந்த இனமக்கள், குடும்பத்தாரின் ஆதரவில்லாமல் போனது. அவரது வாழ்க்கையில் வேடன் குகன், வானரங்களான சுக்ரீவன், அனுமன், அங்கதன், ஜாம்பவான், பறவை சடாயு ஆகியோரின் நட்பும், அவர்களது உதவியால் நன்மைகளும் கிடைத்தன. இவர்களை இராமன் நண்பர்களாகவோ தோழர்களாகவோ எண்ணாமல் சகோதரர்களாகவே ஏற்றுக் கொண்டார். இதேபோன்று கிருஷ்ணாவதாரத்தில், ஷத்திரிய வம்சத்தில் பிறந்த கிருஷ்ணரும், அனைத்து தகுதிகளிலும் தன்னைவிட தாழ்ந்தவர்களான யாதவ குல மக்களைத் தன் உறவுகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுடனேயே வாழ்ந்தார்.

Advertisment

வைகுந்தவாசனான ஸ்ரீமன் நாராயண மூர்த்தி மேற்கண்ட இரண்டு அவதாரங்களிலும் தனது வாழ்க்கைமூலம் மண்ணுலக மக்களி டையே மதம், இனம், குலம், உயர்வு- தாழ்வு போன்ற வேறுபாடுகள், பேதங்கள் இல்லை; மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் மிகப்பெரிய உண்மையை தங்கள் நடைமுறை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார்கள். இதுபோன்று இன்னும் பல செயல்களைக் கடைப்பிடித்து வாழ்ந்ததால்தான் ரிஷி முனிவர் கள் இராமரையும் கிருஷ்ணரையும் கடவுள் என்று கூறினார்கள்.

ff

கிருத யுகம், திரேதா யுகம் நடந்த காலங்களில் வாழ்ந்த மக்கள் மதம், சாதி என்று பேதமில்லா மல் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இந்த கலியுகத்தில் சிலர் கடவுளின் பெயரால் மதம், சாதி, இனம் என மக்களிடையே பிரிவினை உணர்வுகளை ஏற்படுத்தி, அவர்களைப் பிரித்து அதன்மூலம் தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். இராமரும் கிருஷ்ணரும் சாதி, மதமற்ற சமுதாயத்தை உருவாக்கினார்கள்.

இராமர் ஜாதகத்தில் புதன், ராகு இணை வால், இராமருக்கு உடன்பிறந்த இளைய சகோதரம் இல்லாமல் போனது. சூரியன், புதன், ராகு ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால், இராமர் இராவணனுடன் செய்த போரில் விஷத்தினால் பாதிக்கப்பட்டார். இந்த கிரகச் சேர்க்கை விஷ பாதிப்புகளை ஏற்படுத்தும்.

புதன், ராகு சேர்க்கையால் இராமர் தன் வாழ்வில் புதிது புதிதாக பல இடங்களுக்குச் சென்றுவந்தார். புதிய புதிய மக்களைத் தன் வாழ்க்கையில் சந்தித்தார். இத்தகைய கிரகச் சேர்க்கை உள்ளவர்கள் பல இடங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்பும், பல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் பெறுவர். மாற்று இனம்,

மொழி பேசும் பெண்களிடம் நட்பு, பழக்கம் உண்டாகலாம். காதல் நிகழ்வுகளில் வெற்றி பெறுவார்கள்.

ஒரு மனிதன் முற்பிறவிகளில் செய்த பாவங்களை இப்பிறவியில் அனுபவிக்கச் செய்வது பாவ கிரகமான ராகு பகவான்தான். ராகு தீயசக்திகளின் கிரகம். முற்பிறவியில் செய்த பாவங்களால் நமது வாழ்வில் உண்டாகும் ஒவ்வொரு சிரம், தடைகளுக்குக் காரணம் இதுதான் என்றறியாமல், தனக்கு யாரோ பில்லி, சூனியம், ஏவல் செய்துவிட்டார்கள் என்று கூறி புலம்பித் திரிகிறார்கள். முற்பிறவியின் பாவச் செயல்களே இப்பிறவியில் பில்லி, சூனியம், ஏவல் போன்று செயல்படுகின்றன என்பதே உண்மை.

இராமரின் வாழ்வில், முந்தைய அவதாரங் களில் அவர் செய்த செயல்களால் இப்பிறவியில் இராம- இராவண யுத்தத்தில் மாந்திரீக செயல்களால் அவர் பாதிக்கப்பட்டார். ஏவல், பில்லி, சூனியம் போன்ற செய்வினைகளை ஒருவர் மற்றவருக்குச் செய்யமுடியாது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். இது குறித்த பயத்தை மனதிலிருந்து அகற்றிக் கொள்ளவேண்டும்.

ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சாப கிரகமான கேதுவுடன் சம்பந்தம் பெற்றுவிட்டால் தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் உருவாகும். அதேபோன்று தான் பெற்ற மகனிடமும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிடும். இந்த கிரக நிலையுள்ள ஜாதகர்கள் சித்தர்கள், முனிவர் களின் சாபம் பெற்றவர்கள் என அறிந்து கொள்ளவேண்டும். இந்த அமைப்புள்ள ஜாதக ரின் வாழ்வில் முன்னோர்கள் தேடிவைத்த பூர்வீக சொத்துகளை அடைய தடை ஏற்படும். அவ்வாறு கிடைத்தாலும் அதில் விருத்தி, உயர்வு, நன்மைகளை அடையமுடியாமல் செய்துவிடும். பூர்வீக சொத்துகளை அனுபவித்து வாழ இயலாமல் அவற்றை அழித்து விரயம் செய்யும் நிலை ஏற்பட்டுவிடும். தந்தைவழி உறவுகளால் ஒதுக்கப்படுவார்கள். அந்த உறவுகளால் எவ்வித நன்மையும் உதவியும் கிடைக்காது. தன்னைப் பெற்ற தந்தையாலும் நன்மை இருக்காது; தான் பெற்ற மகனாலும் நன்மை கிடைக்காது.

வயது ஆக ஆக வாழ்வில் விரக்தி உண்டாகும்.

செயல்களில் தடை, தாமதங்கள் ஏற்படும். எவ்வளவு பெரிய பதவி, சொத்துகள் இருந்தாலும், அவற்றால் சுகமான வாழ்க்கையை அனுபவிக்கமுடியாமல் செய்துவிடும். சந்தேக குணத்தைத் தந்து அதனால் குடும்ப வாழ்வில் சங்கடங்களை உருவாக்கி நிம்மதியைக் குலைத்துவிடும்.

இராமரின் ஜாதகத்தில் மேஷத்திலுள்ள சூரியன், புதன் ஆகிய கிரகங்களுடன் மிதுனத் திலுள்ள கேது இணைந்து அவர் வாழ்க்கையில் என்னவிதமான பலன்களை அனுபவிக்கச் செய்தன என்பதை அறிவோம். இராமர் தன் முற்பிறவிகளில் செய்த செயல் களால் ஏற்பட்ட சித்தர், ரிஷி, முனிவர்களின் சாபத்தால், இளம் வயதிலேயே விஸ்வாமித்திரர் செய்த யாகத்தைக் காவல் செய்ய காட்டிற்குச் சென்று சாபத்தை அனுபவித்தார். இராமரின் தந்தை தசரதன், மகன் இராமரிடம் கருத்து வேறுபாடுகொண்டு, அவரை 14 ஆண்டுகள் நாட்டைவிட்டு காட்டிற்குச் செல்ல கட்டளை யிட்டார். தந்தையின் கட்டளையை ஏற்று அரச பதவியைத் துறந்து வனவாசம் சென்றார் இராமன்.

இராமர் அயோத்தி திரும்பி மன்னராக முடிசூட்டிக்கொண்ட பின்னர், யாரோ ஒருவர் கூறிய அவதூறு சொல்லால் தன் மனைவி சீதையின்மேல் சந்தேகம் கொண்டு, கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் காட்டிற்கு அனுப்பி விட்டார். வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் சீதைக்குப் பிறந்த மகன்களான லவன், குசன் ஆகிய இருவரும் தந்தையின் பாசம் கிட்டாமல், தாய்ப் பாசத்தை மட்டுமே அனுபவித்து வாழ்ந்தார்கள். இராமருக்கும் இளம்வயதில் தந்தையுடன் சேர்ந்துவாழ முடியவில்லை; அவர் பெற்ற மகன்களும் இளம்வயதில் அவருடன் சேர்ந்துவாழ முடியவில்லை.

இராமர் தன் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து, தனக்கென ஒரு குடும்பமில்லாமல் ஒரு துறவிபோல தனிமையிலேயே வாழ்ந்தார். அரசபதவி, அதிகாரம், ஆள்பலம் அனைத்து மிருந்தும், இந்த சாபம் அவரை வாழ்வில் எதனையும் அனுபவிக்கவிடாமல் செய்துவிட்டது. இராமர் தனது முந்தைய அவதாரங்களில் எத்தனையோ அரசர்களைக் கொன்று, அவர்களது மனைவிகளை விதவைகளாக வாழச்செய்தார். அந்த அரசர்களின் பிள்ளைகளும் இளம் வயதில் தந்தையை இழந்து, தந்தையின் பாசத்தை அனுபவிக்காமல் தவித்து வாழ்ந்தனர்.

எனவே அந்த வினைப்பதிவு இராமாவதாரத்தில், இராமர் தந்தையைவிட்டுப் பிரிந்திருக்கச் செய்தது. மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்து வாழச்செய்தது.

குலகுரு வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்திரர் போன்ற மிகப்பெரும் தவ ஆற்றல்பெற்ற முனிவர்கள் இராமரின் அருகிலிருந்தும், அவரது முற்பிறவி சாபங்களால் உண்டான பாதிப்புகளைத் தடுத்து, இராமரை அவை பாதிக்காமல் காப்பாற்ற முடியவில்லை. இராமரின் வாழ்வில் மகிழ்ச்சியை உண்டாக்க முடியவில்லை. முற்பிறவி செயல்களால் ஒருவர் பெற்ற சாபத்தை- அதனால் உண்டாகும் பலன்கள் யாராக இருந்தாலும்

அனுபவித்துதான் தீர்க்கவேண்டும் என்பது இயற்கை நிர்ணயித்து வைத்த மாற்றமுடியாத விதியாகும். பூஜை, ஹோமம், யாகம், புண்ணிய தல யாத்திரை, புனித நீராடல், பிரார்த்தனை, தானம், தர்மம், விரதம் போன்ற எதனைச் செய்தா லும் தீர்த்துக்கொள்ள முடியாது.

ஆனால் அகத்தியர் முதலான தமிழ்ச் சித்தர்கள், ஒரு மனிதனுக் குள்ள முற்பிறவி சாபங்களை- அதன் பாதிப்புகளை அவரவரே தடுத்து நல்வாழ்வை அமைத்துக் கொள்ள வழிமுறைகளைக் கூறியுள்ளனர்.

ஒருவரின் முற்பிறவி செயல்களால் உருவாகித் தொடரும் பாவ- சாப விதி தரும் பயன்களை எதைச்செய்தாலும் தீர்க்கமுடியாது. ஆனால் அவரவர் தன் அறிவுச் செயல்களால் தடுத்துக்கொள்ள முடியும் என்பதே சித்தர்களின் வாக்கு. இந்த மண்ணுலகில் கடவுளே அவதாரமெடுத்துப் பிறந் தாலும் கர்மவினைப் பலன்களை அனுபவித்துதான் தீரவேண்டும். சரியான நிவர்த்திகளைச் செய்து தடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே இராமாயணமும் மகாபாரதமும் நமக்குக் கூறும் உண்மைக் கருத்துகளாகும்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala220422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe