ஒரு மனிதனுக்கு பாவ- சாபம் உண்டாகுமிடம் அவன் குடும்பத்திலும், அவன் உறவுகளிடம் இருந்துதான். அவன் தன் உறவுகளுக்கு செய்யும் தீமைகளே அவனுக்கு பாவ- சாபம் உருவாகக் காரணம். தந்தை, தாய், சகோதரன், மனைவி, மகன் இவர்களுக்குச் செய்யும் தீமைகளே பஞ்சமகா பாவங்கள் ஆகும். குரு, பாமர மக்களுக்கு செய்யும் தீமைகள் சமுதாயப் பாவமாகும்.
இனி இராமரின் ஜாதகத்திலுள்ள செவ்வாய் கிரகத்தினைப் பற்றி அறிவோம். ஒருவரின் ஜாதகத்திலுள்ள செவ்வாய் சகோதரன், நிலம், அகம்பாவம், எதிரிகள் ஆகியவற்றைக் குறிப்பிடும் உதாரண கிரகம்.
இராமரின் ஜாதகத்தில், செவ்வாய், மகர ராசியில் உச்சம் பெற்றுள்ளது. சனி வக்ரம் பெற்ற நிலையில் துலாம் ராசியில் உள்ளது. பொதுவாக வக்ரம் பெற்ற கிரகங்களுக்கு பலன் காணும்போது, ஜாதகத்தில் அந்த கிரகம் இருக்கும் ராசிக்கு முந்தைய ராசியில் இருப்பதாகக் கணக்கீடு செய்து பலனறிய வேண்டும். சனி கிரகத்தை கன்னி ராசியில் வைத்துப் பலனறியும்போது, செவ்வாய் இருக்கும் மகர ராசிக்கு 9-ஆமிடம் கன்னி ராசியில் வைத்துப் பலன் கூறப்படுகிறது.
பொதுவாக ஒருவரின் பிறப்பு ஜாதகத் தில், செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 7, 12-ஆவது ராசிகளில் சனி இருந்தா லும் அல்லது சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 7, 12-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தாலும் சனி, செவ்வாய் வக்ர நிலையில், ஒன்றுக்கொன்று, 4, 8, 12-ஆவது ராசிகளில் இருந்தாலும், அவர் சனி, செவ்வாய் சம்பந்தம்பெற்ற ஜாதகர் ஆவார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ram_21.jpg)
இந்த அமைப்புடைய ஜாதகர், தனது முற்பிறவிகளில் அல்லது வம்சமுன்னோர் கால வாழ்வில் உடன்பிறந்த சகோதரிகளுக்கு, முன்னோர்கள் சம்பாதித்து வைத்த, பூர்வீக சொத்துகளில் முறையாக சேரவேண்டிய பங்கினைத் தராமல் ஏமாற்றி, தான் ஒருவன் மட்டுமே அனுபவித்து அவர்களை கஷ்டப்படச் செய்தது; கூட்டுத் தொழிலில், கூட்டாளிகளுக்கு முறையாகத் தரவேண்டிய லாபத்தையும், அவர்கள் முதலீடு செய்த பங்குப் பணத்தையும் ஏமாற்றி தானே அபகரித்துக்கொண்டது என அறியலாம்.
ஒருவர் தன் பணபலம், ஆள், அதிகார பலத்தால் பிறர் நிலங்களை அபகரித்தல், தன்னை எதிர்ப்பவர்கள், தான் சொல்வதைக் கேட்காதவர்கள், தனக்கு அடங்காதவர்களை ஆயுதங்களால் தாக்குவது, கொலைசெய்வது, காவல் பணிகளில் கையூட்டு வாங்கிக் கொண்டு, குற்றவாளிகளுக்கு உதவி செய்து அவர்களை தண்டணையிலிருந்து தப்ப வைத்தது, பிறர் வீட்டுக்கு தீவைத்து அழித்தது என இதுபோன்ற இன்னும் பல செயல்களைப் பிறருக்குச் செய்திருப்பார்கள் என அறிந்துகொள்ளலாம்.
இந்தப் பிறவியில் உடன்பிறந்த சகோதரர் கள், பங்காளிகள், ரத்த சம்பந்தமான உறவு கள் பகையாவார்கள். குடும்பத்தில் இவருக்கு முறையாகக் கிடைக்கவேண்டிய பூர்வீக சொத்துகள் கிடைக்காது. கிடைத்தாலும் அதனை அனுபவிக்க முடியாது. முன்னோர் சொத்துகளால், தன் வாழ்வில் உயர்வடைய முடியாது. முன்னோர்கள் தேடிவைத்த சொத்து, தொழில், வியாபாரம், பணம் விரயமாகும். தன் குடும்பத்து உறுப்பினர்களாலும், உறவுகளாலும், சொந்த இனத்து மக்களாலும் நன்மை இராது. தன்னைப் பெற்ற தாய்- தந்தையாலும் நன்மை இராது. தான் பெற்ற பிள்ளைகளாலும் பெரிய நன்மைகளை அடையமுடியாது.
இவர் தன் சகோதர- சகோதரிகளுக்கும், குடும்பத்தினருக்கும் ஒரு தந்தையைப் போலிருந்து நன்மைகளை செய்து வளர்த்து, நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தாலும், இறுதியில் அவர்கள் நன்றி கெட்டவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் அரசியல்வாதியாக இருந்தாலும், இவர் நம்பிய கட்சித்தலைவர் இவரை ஏமாற்றிவிடுவார். பொதுவாக உறவுகள், நண்பர்கள் என அனைவரும் நம்பிக்கை துரோகிகளாகவே இருப்பார்கள்.
ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில், செவ்வாய் அவள் சகோதரனையும், திருமணத்திற்குப்பின்பு கணவனையும் குறிப்பிடும் உதாரண கிரகமாகும்.
பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்க்கை இருந்தால், திருமணம் தடை, தாமதமாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு கள் இருந்துகொண்டே இருக்கும். மூன்றாம் மனிதர் களால், உறவுகளால் அல்லது வேலையாட்களால், ஒருவர்மீது ஒருவர் சந்தேகம் கொள்வதால் குடும்பத்தில் குழப்பம், பிரச்சினை, நிம்மதி குலையும்; அன்பு குறையும்.
கணவனுக்கு தொழில், உத்தி யோகம் சரியாக அமையாது. சொந்த தொழில் செய்தால் அதில் விருத்தி இராது. கணவன் சோம்பேறியாக இருப்பான். இதுபோன்று சனி, செவ்வாய்- சேர்க்கை ஜாதகத் திலுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும், அவர்கள் வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவே இருக்கும்.
இனி இராமர் ஜாதகத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை அமைந்த காரணத்தையும், அதனால் அவர் அனுபவித்த சிரமங்களையும் அறிவோம்.
மகாவிஷ்ணு இந்த பூமியில் 26 அவதாரங்கள் எடுத்தார் என்று ஒரு சிலரும், 21 அவதாரங்கள் என்று ஒருசிலரும் எழுதி வைத்துள்ளார்கள்.
"வைச்சுத மனு' என்பவர் தும்மும் போது, அவரது மூக்கிலிருந்து இஷ்வாகு என்ற புதல்வன் பிறந்தான். அவனுக்கு 100 பிள்ளைகள் பிறந்தனர்.
இவர்கள் "இஷ்வாகு' குலத்தவர் என்று அழைக்கப்பட்டனர்.
இஷ்வாகு மன்னரின் பேரன் "புரஞ்சயன்' என்பவன் ஆவான். திரேதாயுகத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த போரில் தோல்வியடைந்த தேவர்கள் வைகுந்தம் சென்று, மகாவிஷ்ணுவை வணங்கி, போரில் அசுரர்களை அழிக்க உதவி கோரினார்கள். அதற்கு ஸ்ரீ விஷ்ணு பகவான், "எனது சகல சக்தி அம்சங்களுடன் தோன்றியவன் புரஞ்சய மன்னன். நானே அவன்; அவனே நான். எனவே புரஞ்சயன் உதவியைக் கொண்டு போர்புரியுங்கள்; வெற்றிகிட்டும்'' என்று கூறி அனுப்பினார். இராமரின் வம்ச முன்னோர் வழியில் மகா விஷ்ணு பிறந்தது இது முதல் அவ தாரப் பிறவி.
(தொடரும்)
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/ram-t.jpg)