Advertisment

இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (11) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-11-siddhardasan-sundarji-jeevanadi-observational

ரு மனிதனுக்கு பாவ- சாப தோஷங்கள் எங்கிருந்து- எப்படி உருவாகின்றன என்ற கேள்விக்கு முதலில் பதிலைக் கூறிவிடுகிறேன்.

Advertisment

இன்றைய நாளில் ஒருவர் தன் வாழ்விலுள்ள பிரச்சினைகள், குறைகள் தீர்வதற்கு, பலன்கேட்டு ஜோதிடர்களிடம் செல்லும்போது, அவர் ஜாதகத்தைப் பார்த்து, "நீங்கள் முற்பிறவியில் பாம்பைக் கொன்றதால், பாம்பு புற்றை இடித்ததால் சர்ப்ப தோஷம், ராகு- கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளது. வம்சத்தில் பசுவைக் கொன்றதால் கோசாபம், பிராமணர்களை நிந்தனை செய்து, அவர்களுக்கு பொருள் தானம் தராததால் அந்தண சாபம், சிவாச்சாரியார்களை மதிக்காததால் சிவகோபம், உறவினர் மரணத்திற்கு செல்லாததால் பிரேதசாபம், சாது சன்னியாசிகளை அவமதித்ததால் சந்நியாசி சாபம், ஒருவரைக் கொலை செய்ததால் உண்டான பிரம்மஹத்தி தோஷம், முன்னோர் சாபம் என இதுபோன்ற தோஷங்களைக் கூறி, அவை தீர்வதற்கு விதவிதமாகப் பரிகாரங்களைச் சொல்கிறார் கள். இந்தப் பரிகாரங்களை செய்து பலன் கிடைத்ததா- குறை தீர்ந்ததா என்பது அவரவர் அனுபவம்.

Advertisment

இந்த

ரு மனிதனுக்கு பாவ- சாப தோஷங்கள் எங்கிருந்து- எப்படி உருவாகின்றன என்ற கேள்விக்கு முதலில் பதிலைக் கூறிவிடுகிறேன்.

Advertisment

இன்றைய நாளில் ஒருவர் தன் வாழ்விலுள்ள பிரச்சினைகள், குறைகள் தீர்வதற்கு, பலன்கேட்டு ஜோதிடர்களிடம் செல்லும்போது, அவர் ஜாதகத்தைப் பார்த்து, "நீங்கள் முற்பிறவியில் பாம்பைக் கொன்றதால், பாம்பு புற்றை இடித்ததால் சர்ப்ப தோஷம், ராகு- கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளது. வம்சத்தில் பசுவைக் கொன்றதால் கோசாபம், பிராமணர்களை நிந்தனை செய்து, அவர்களுக்கு பொருள் தானம் தராததால் அந்தண சாபம், சிவாச்சாரியார்களை மதிக்காததால் சிவகோபம், உறவினர் மரணத்திற்கு செல்லாததால் பிரேதசாபம், சாது சன்னியாசிகளை அவமதித்ததால் சந்நியாசி சாபம், ஒருவரைக் கொலை செய்ததால் உண்டான பிரம்மஹத்தி தோஷம், முன்னோர் சாபம் என இதுபோன்ற தோஷங்களைக் கூறி, அவை தீர்வதற்கு விதவிதமாகப் பரிகாரங்களைச் சொல்கிறார் கள். இந்தப் பரிகாரங்களை செய்து பலன் கிடைத்ததா- குறை தீர்ந்ததா என்பது அவரவர் அனுபவம்.

Advertisment

இந்த கேள்விக்கு காகபுசுண்டர் ரிஷி கூறியுள்ள விளக்கத்தையும், பாவ- சாபம் உருவான காரண, காரியத்தையும் சுருக்கமாக அறிவோம்.

"நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம்

நடுவாக வந்தவிடம் பாராத் தோஷம்

கூடியே பிறந்தவிடம் காணாத் தோஷம்

குருபரனை நிந்தனைகள் செய்த தோஷம்

வாடிய வித்தோடே சேராத் தோஷம்

வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம்

கூடியே வுறவற்றே யிருந்த தோஷம்

கும்பியுங்கற் சிப்பியையும் அறியான் பாவி'

என மனிதர்களுக்கு பாவ- சாபப்பதிவுகள் உருவாகும் நிலையைக் கூறுகிறார். அதன் பொருளை அறிவோம்.

ramar

"நாடியே யுகித்தவிடம் அறியாத் தோஷம்.'

இந்த பூமியில் பிறக்கும் மனிதன் முதலான ஒவ்வொரு உயிரினமும், முதன்முதலில் ஆணின் விந்தில் உருவாகி, அவனிடம் இரண்டு மாதம் வளர்ச்சியடைந்து, பின் தாம்பத்திய உறவுமூலம் பெண்ணின் கர்ப்பப்பையில் சேர்க்கின்றது. ஒரு மனிதன் முதன்முதலில் தந்தையிடம்தான் உருவாகி றான். நம்மை உருவாக்கிய தந்தையை மதிக்காமல், தன்னை வளர்த்து ஆளாக்கிய வரை கவனியாமல், அவரை வயது முதிர்ந்த காலத்தில், உடன்வைத்துப் பாதுகாக்காமல் அலையவிட்டதால், பெற்ற தந்தையே மனம் வெறுத்து விட்ட சாபம், தந்தை சாபமாகும். இதுவே பித்ரு தோஷமாகும். இந்த சாப தோஷம் தந்தையால் நமக்கு உருவானது.

"நடுவாக வந்தவிடம் பாராத் தோஷம்'.

தந்தையின் விந்தில் உருவாகி, தாயின் கர்ப்பத்தில் அவள்மூலம் உணவு, நீர், காற்றைப் பெற்று, பத்து மாதம் நம்மை சுமந்து பெற்று பாலூட்டி வளர்த்து ஆளாக்கிய தாயைக் காப்பாற்றாமல், வயது முதிர்ந்த காலத்தில் உணவு, உடை தந்து பாதுகாக்காமல் பட்டினியால் அலைய வைத்ததால், பெற்ற தாயே மனம் வெறுத்து விட்ட வாக்குதான் தாய் சாபம்.

"கூடியே பிறந்த விடங் காணாத் தோஷம்'.

நம் உடன்பிறந்த சகோதரர்களுக்கு சேரவேண்டிய பூர்வீக சொத்துகளை முறையாகப் பிரித்துக் கொடுக்காமல், அவர்களை ஏமாற்றி அபகரித்துகொண்டு, தானும், தன் குடும்பமும் மட்டும் சுகமாக வாழ்ந்து, அவர் களை வாழ்வில் கஷ்டப்படச் செய்ததால், அவர்கள் மனம் வெறுத்து விட்ட வாக்கு சகோதர சாபம், பங்காளி சாபமாகும்.

"குருபரனை நிந்தனைகள் செய்த தோஷம்'.

நமக்கு கல்வி, தொழில், உலகிலுள்ள உண்மை- பொய் போன்றவற்றைக் கூறி, உலகியல் அறிவை போதனை செய்து, அனைத்தையும் நம் பகுத்தறிவால்- சுயமாக அறியச் செய்த ஆசாணை மதிக்காமல், அவரை நிந்தனை செய்து வெறுப்படையச் செய்ததால் ஆசான் மனம் வெறுத்துவிட்ட சாபம் குரு சாபம்.

"வாடிய வித்தோடே சேராத் தோஷம்'.

நம் வம்சம் விளங்க வாரிசு வேண்டுமென்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, அந்த குழந்தைக்குத் தரவேண்டிய கல்வி, தொழில், திருமணம் போன்றவற்றை செய்துதராமல், எதிர்கால வாழ்வுக்குத் தேவையான சொத்து, பணம், பொருட்களை சேர்த்து வைக்காமல், அவர்களை அனாதைபோல் அலைய வைத்ததால் பிள்ளைகளே மனம் வெறுத்து விட்ட சாபம்தான் புத்திர சாப- தோஷமாகும்.

"வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம்'.

தனக்கு சம்பந்தமே இல்லாதவர்கள்- பணம், பலம், சொத்து, அதிகாரம், அந்தஸ்து இல்லாத அன்றாடம் உழைத்து வாழும், தன்னைவிட கீழான மக்களை துன்புறுத்தியும், தீயவர்களுடன் சேர்ந்து தவறுகளைச் செய்து தனது முன்னோர் சொத்துகளை அழித்தும் செயல்பட்டதால், பாதிக்கப்பட்ட பாமர மக்கள் மனம் வெறுத்துவிட்ட வாக்கு பாமர சாபமாகும்.

"கூடியே வுறவற்றே யிருந்த தோஷம்'.

ஒரு ஆண், ஒரு பெண்ணை மணந்து குடும்பஸ்தனாகி, அவளுடன் கூடி, வம்சம் விளங்க வாரிசுகளை பெற்றால்தான் இந்த சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும். தன்னைப் பெற்றவர்களைப் பிரிந்து, கட்டிய கணவனே கடவுள் என வாழவந்து, அனைத்து சுகங்களையும் தந்த, தன்னை நம்பிவந்த மனைவியை மதியாமல், மனைவிக்கு ஒரு கணவன் செய்யவேண்டிய தேவைகளைச் செய்யாமல், அவளை ஒதுக்கி கஷ்டப்பட வைத்ததால், மனைவியே மனம் வெறுத்து, கைமண் வாரியிறைத்து விட்ட சாபம் மனைவி சாபம், களத்திர சாப தோஷமாகும்.

"கும்பியுங் கற்சிப்பியையும் அறியான் பாவி.'

ஒருவன் தன் குடும்பத்து உறவு களுக்கும் பாமர மக்களுக்கும் ஒரு பிறவியில் செய்த பாவம், கடலின் அடியில் வாழும் சிப்பியினுள்ளே மறைந்திருக் கும் மூத்துகளைப்போல், அவன் உயிர், உடல், ஆத்மாவில் மறைந்து கலந்திருந்து, அவனின் ஒவ்வொரு பிறவி வாழ்க்கையிலும், அவன் வம்ச வாரிசுகள் வாழ்விலும் தொடர்ந்துவந்து பாதிப்புகளைத் தந்து அனுபவிக்கச் செய்து கொண்டேயிருக்கும்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala250322
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe