Advertisment

இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (10) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-10

பெண் சாபம் தாக்கும் காலக் கணக்கினை அறிவோம். அரிச்சந்திரன், மகன் லோகி தாசன் பிறந்தபிறகு, தன் மனைவி சந்திர மதியையும் மகனையும் பிரிந்தான். தசரதன் இராமன் பிறந்தபிறகு மனைவி கோசலை யையும், மகள் இராமனையும் விலக்கி வைத்தான். இராமன் தன் மனைவி சீதை கர்ப்ப மடைந்து தன் குழந்தைகளை அவள் கருவில் சுமந்திருக்கும்போது சீதையைப் புறக்கணித்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

Advertisment

இன்றையநாளிலும், கணவன்- மனைவி இருவரும் ஒற்றுமையாக பாசத்துடன் வாழ்ந்துகொண்டி ருப்பார்கள். ஆனால் வம்சத்தில் பெண் சாபம் இருந்து, அவர் களுக்கு ஒரு குழந்தை இது போன்ற சாபத் தாக்கத்துடன் பிறந்துவிட்டால், அந்த குழந்தை பிறந்தபின்பு கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்படலாம். கணவன்- மனைவி யிடையே கருத்து வேறுபாடு, விவாகரத்து, பிரிவு என ஏற்பட்

பெண் சாபம் தாக்கும் காலக் கணக்கினை அறிவோம். அரிச்சந்திரன், மகன் லோகி தாசன் பிறந்தபிறகு, தன் மனைவி சந்திர மதியையும் மகனையும் பிரிந்தான். தசரதன் இராமன் பிறந்தபிறகு மனைவி கோசலை யையும், மகள் இராமனையும் விலக்கி வைத்தான். இராமன் தன் மனைவி சீதை கர்ப்ப மடைந்து தன் குழந்தைகளை அவள் கருவில் சுமந்திருக்கும்போது சீதையைப் புறக்கணித்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

Advertisment

இன்றையநாளிலும், கணவன்- மனைவி இருவரும் ஒற்றுமையாக பாசத்துடன் வாழ்ந்துகொண்டி ருப்பார்கள். ஆனால் வம்சத்தில் பெண் சாபம் இருந்து, அவர் களுக்கு ஒரு குழந்தை இது போன்ற சாபத் தாக்கத்துடன் பிறந்துவிட்டால், அந்த குழந்தை பிறந்தபின்பு கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்படலாம். கணவன்- மனைவி யிடையே கருத்து வேறுபாடு, விவாகரத்து, பிரிவு என ஏற்பட்டுவிடக்கூடும். தாயும், குழந்தையும் கணவனால் புறக் கணிக்கப்படுவார்கள். தாயும் குழந்தையும் தனித்து வாழும் சூழ்நிலை அமைந்துவிடும்.

Advertisment

rr

பாசத்துடன், மகிழ்ச்சியாக வாழ்ந்த கணவன்- மனைவி யிடையே கருத்து வேறுபாடு, விவாகரத்து, பிரிவு என குழந்தை பிறந்தபிறகு ஏற்பட் டால், தாய்- தந்தை பிரிவுக்கு அந்த குழந்தையின் நிலையும் காரணமாகலாம். இதனை கவனித்து பெண் சாபத் தாக்கத் திற்கு சரியான நிவர்த்திசெய்தால் கணவன்- மனைவி பிரிவைத் தடுத்துவிடலாம்.

ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில், சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசி களில் கேது இருந்தால், அவளின் முன்ஜென்மத்தில் அல்லது வம்ச முன்னோர் கள் வாழ்வில் பெண்களுக்கு செய்த பாவத்தால் உண்டான சாபம் அந்த வம்சத்தில் பிறந்த பெண்களுக்கு பாதிப்பைத் தரும்.

முற்பிறவிகளில் தாய், மூத்த சகோதரிகள், தன் வீட்டுக்கு வாழவந்த சகோதரர்களின் மனைவிகள், கணவன் வீட்டில் மாமியார், கணவனின் சகோதரிகள் போன்ற உறவுகளை மதிக்காமல், அவர்களைத் துன்புறுத்தியது, வீட்டைவிட்டு விரட்டியது, அவர்களை எதிரிபோல் பாவித்தது போன்ற பெண்ணுக்குப் பெண்ணே செய்த பாவத்தை இந்த சந்திரன், கேது இணைப்பு உணர்த்துகிறது.

இவர்கள் வாழ்வில் மாமியார், மருமகள் ஒற்றுமை இராது. மாமியாரின் கொடுமையை அனுபவிக்க நேரும். கணவன்- மனைவி பிரிவுக்கு கணவன் வீட்டாரே காரணமாக இருப்பார்கள். கணவனின் சகோதரிகளால் நிம்மதிக் குறைவு, பிரச்சினை உண்டாகும். அவர்கள் இந்தப் பெண்ணை எதிரிபோல் எண்ணுவார்கள். வாழவந்த வீட்டில் மரியாதை இராது. திருமணத்திற்குப் பின்பு பிறந்த வீட்டுப் பாசமும் குறையும். இவளின் மருமகள்கள் இந்தப் பெண்ணை மதிக்கமாட்டார்கள். வயது முதிர்ந்த காலத்தில் சந்நியாசிபோல வாழ்வு அமையும்.

வாசகர்கள் குடும்பத்தில் கணவன்- மனைவி கருத்து வேறுபாடு, பிரிவு இருந்தாலும், மாமியார், மருமகள் பகை இருந்தாலும், வீட்டில் பிறந்த பெண்ணின் வாழ்க்கையில் இதுபோன்ற பலன்கள் இருந்தாலும், உங்கள் வம்சத்தில் முன்னோர்களால் உருவாக்கி வைக்கப்பட்ட பெண் சாபம் வாரிசுகள் வாழ்விலும் தொடர்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

முற்பிறவி பாவ- சாபப் பதிவுகளால் உண்டாகும் பலன்கள், ஆண்- பெண் இருவருக்கும் பொதுவானவை. ஆண் ஜாதகத்திற்கு ஒருவிதமான பலன், பெண் ஜாதகத்திற்கு ஒருவிதமான பலன் என தனித்தனியே கிடையாது. இந்த கட்டுரைகளைப் படிக்கும் ஆண்- பெண் ஜாதகத்தில் இதுபோன்ற கிரகங்கள் சேர்க்கை இருந்தால், இந்த பலன்களில் ஒரு சிலவற்றை அனுபவித்துதான் வாழ்ந்தாக வேண்டும்.

சந்திரன், கேது சேர்ந்துள்ள ஜாதகர்கள் பெரும்பாலோர் கடவுள் பக்தி உள்ளவர்களாக, அம்மன் பக்தையாக இருப்பார்கள். தங்கள் வாழ்விலுள்ள பிரச்சினை, சிரமம், குறைகள் தீர கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்தால், எந்தவொரு வேண்டுதலும் பலிக்காது. பிரச்சினை தீர செய்யும் பூஜை, யாகம், ஹோமம், ஜெபம், விரதம் போன்ற எதைச் செய்தாலும் சாபம் விலகாது. சங்கடங்கள் தீராது என்பதே என்னிடம் ஜீவநாடி படிக்க வந்தவர்களின் வாழ்வில் நான் அறிந்த அனுபவ உண்மை.

சித்தர் பெருமக்கள் எழுதிவைத்த தமிழ்முறை ஜோதிடம், ஒருவரின் ஜாதகம்மூலம் தன்னையறிந்துகொள்ளச் செய்வது! "தன்னையறிய தனக்கொரு கேடில்லை' என்று வழிகாட்டுவது. "தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்; எதுவும் தெரியாமல் போனாலே வேதாந்தம்' என்பதே உண்மை. இன்னும் பல பாவ- சாப உண்மைகள் பற்றி தொடர்ந்து அறிவோம்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala180322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe