நவகிரகங்களின் கட்டுப்பாட்டில்தான் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளது வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது. இதில் உருவமுள்ள ஏழு கிரகங்களைக் காட்டிலும், உருவமற்ற இரண்டு நிழல் கிரகங்களாகிய ராகுவும், கேதுவுமே மனித வாழ்வைப் பெரிதும் தீர்மானிக்கின்றன. கர்மகாரகன், நீதிமான் சனி என்றால், சனி பகவானின் பிரதிநிதிகள் ராகு- கேதுக்கள்.
ஜாதகத்தில் ராகு- கேது செயல்படும் விதம்
ஒரு ஆன்மா பல்வேறு பிறவிகளில் செய்த வினைப் பதிவுகள் அனைத்தையும் சேமித்துவைக்கும் பெட்டகமாக விளங்கு வதும், ஒவ்வொரு பிறப் பிலும் வெவ்வேறு உடலில் இருக்கும் ஆன்மாவிற்கு, அதன் அலைவரிசைக்கேற்ப வினைகளின் நன்மை- தீமைகளை அனுப்பி அனுபவிக்கச்செய் வதும் இவர்கள்தான்.
ஆகையால், இவர் களின் தன்மையைக் கொண்டு ஒரு ஜாதகத்தில் தோஷப் பலன்கள் வீரியமானதா? இல்லையா என்பதை நிர்ணயிக் கிறோம்.
பூமிக்கு வரும் மற்ற கிரகங்களின் கதிர்வீச்சுகளையும் தடுக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள் இவர்கள். ஒரு ஜாதகரின் மரபுவழி செய்திகளை செல்களின்மூலம் கொண்டுவருவதும், செயலாக்கம் செய்வதும் இவர்களே. அதனால்தான் ஜோதிடத்தில் தந்தைவழிப் பாட்டன்- பாட்டிக்கு ராகு வையும், தாய்வழிப் பாட்டன்- பாட்டிக்கு கேதுவையும் காரணமாகக் கூறப்படுகிறது.
சர்ப்பங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் 1- 7, 2- 8 ஆகிய இடங்களில் அமர்வ தால் ஏற்படும் சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் அல்லது ராகு கேது தோஷம்.
3-ல் இருப்பதால் ஏற்படும் சகோதரவழி தோஷம்.
4-ல் இருப்பதால் ஏற்படும் மாத்ரு தோஷம், சொத்துப் பிரச்சினை.
5-ல் இருப்பதால் ஏற்படும் பு

5-ல் இருப்பதால் ஏற்படும் புத்திர தோஷம்.
9-ல் இருப்பதால் ஏற்படும் பிதுர் தோஷம்.
ராகு- கேது தங்களுடன் சேர்ந்த கிரகங் களின் காரகத்துவங்களையும், அதன் ஆதிபத் திய காரகத்துவங்களையும் பாதிப்படையச் செய்வதால் ஏற்படும் தோஷங்கள்.
ராகு- கேது தங்களின் நட்சத்திரங்களை மற்ற கிரகங்களுக்குக் கொடுப்பதன்மூலம் ஏற்படும் தோஷங்கள்.
ராகு- கேதுக்கள் அசுப கிரகங்களின் ராசியில் உள்ளபோது ஏற்படுத்தும் தோஷங்கள்.
ராகு- கேது உச்சம் பெற்று, அதன்மூலம் ஏற்படும் தோஷங்கள்.
இங்கே கூறப்படாத 6, 10, 11, 12 ஆகிய இடங்களில் இருந்தால், தோஷங்களை ஏற்படுத்துவதில்லை என்றாலும், அவர்களின் காரகத்துவம் சார்ந்த, அவர் பெற்ற சுப- அசுபத் தன்மையின் அடிப்படையில், அந்த பாவக காரகத்துவத்தை பாதிக்கவே செய்வார்.
ராகு- கேதுக்கள் சுபத்தன்மை அல்லது பலமிழக்கும் அமைப்புகள்
ராகு-கேது பகை, நீசமாக இருந்தால் மட்டுமே உடன் இணையும் கிரகங்கள் பாதிப்படையாது. ஆனாலும், நீசமான சர்ப்ப கிரகங்கள் ஏதாவது நீசபங்க விதிகளின்படி நீசபங்கமானால் ராகு-கேதுக்கள் பலம்பெற்று விடும்.
குருபகவானின் 5, 9 எனும் சிறப்புப் பார்வை பெறும்போது மட்டும் ராகு- கேதுக்கள் சுபத்தன்மை பெறமுடியும். அதாவது குருவோடு ராகு- கேதுக்கள் இணையும்போது, அவர்கள் குரு சண்டாள யோகம் ஏற்படுத்தி குருவைப் பார்க்கிறார்கள்.
குரு ராகுவையோ கேதுவையோ சமசப்தமமாகப் பார்த்தால், குருவின் பாதி பலத்தை ராகு- கேதுக்கள் எடுத்துக்கொண்டு, குருவை பலமிழக்கச் செய்துவிடுகிறார்கள்.
ஆக, குரு பகவானின் ஐந்து, ஒன்பதாம் பார்வை ராகு- கேதுக்களுக்கு கிடைக்கும் போது மட்டுமே ராகு- கேதுக்கள் சுபத்தன்மை பெறுகிறார்கள்.
ராகு- கேதுக்கள் எந்த கிரகத்துடன் சேராதபோதும், ராகு- கேதுவின் நட்சத் திரத்தில் வேறு கிரகங்கள் இல்லாதபோதும் பலமிழக்கிறார்கள்.
லக்ன சுபர்களின் சாரம் பெறும்போதும், சுபர்களால் பார்க்கப்படும்போதும், சுபர்களுடன் இணையும்போது திதி சூன்யம் அடைந்த கிரகத்தின் சாரம் பெறும்போதும், தோஷமுள்ள இடத்திலிருந்து தோஷ மில்லாத இடத்திற்கு பாவகமாற்றம் அடையும் போதும் பலமிழக்கும்.
6, 12-ல் உச்சம்பெறாமல் அமரும்போதும், 5, 9-ல் பலமின்றி அமரும்போதும், 10, 11 பாவகத்தில் அமரும்போதும் முழு தீயபலன் களையும் தருவதில்லை.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
நன்மை மட்டுமே செய்யும் ராகு- கேது அமைப்புகள்
ராசியாதிபதியோடு சேர்ந்தாலும், பார்த்தாலும், ஆட்சி, உச்சம் பெற்றாலும், ராகு- கேது நின்ற நட்சத்திராதிபதிகள் ஆட்சி, உச்சம்பெற்றாலோ, லக்னத்திற்கு திரிகோண, கேந்திரத்தில் அமைந்தாலோ ராகு-கேதுக்கள் சுபப் பலனை அதிகமாகவும், அசுபப் பலன்களைக் குறைவாகவும் செய்கின்றன.
மேலேகூறிய அனைத்து ஜோதிடரீதியான விளக்கத்திற்குமேல், சர்ப்பதோஷ பாதிப்பால் ஏற்படும் உளவியல்ரீதியான காரணங்கள் நான்குவிதமாகவே இருக்கின்றன.
உதாரணம்-1
நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசுவில் உள்ள ராகு- கேதுவினால் ஏற்படும் நன்மை- தீமைகள் ஜாதகரை வேகமாகச் சென்றடையும்.
நெருப்பு ராசியில் ராகு- கேது இருக்கும் ஜாதகர்கள் சுயநலம் மிகுதியாகவும், எளிதில் விட்டுக்கொடுக்கும் தன்மையற்றவ ராகவும் இருப்பர்.
துணிவுடன் மற்றவர்களுக்கு துன்பம் செய்யும் குணம் ஏற்படும். சண்டைக்கு அஞ்சாதவராகவும், பாவத்திற்கு பயப்படாதவ ராகவும் இருப்பார்கள்.
நல்லவர்போல் நடித்து மற்றவர்களை ஏமாற்றுவது, சுயலாபத்திற்கு மட்டும் எல்லாரையும் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
பரிகாரம்
மலை, மலைசார்ந்த கோவில்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்யவேண்டும். மிகக்குறிப்பாக, திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட நல்ல மாற்றம் ஏற்படும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
உதாரணம்-2
நில ராசிகளான ரிஷபம், கன்னி, மகரத்தில் ராகு-கேதுவினால் ஏற்படும் நன்மை- தீமைகள் ஜாதகரை நிதானமாகச் சென்றடையும்.
நில ராசியில் ராகு- கேது இருப் பவர்கள், அடுத்தவருடைய துன்பத்தை உணர்ந்து உதவும் தன்மை உள்ளவர்.
அவர்களுடைய அணுகுமுறையும் எதார்த்த மாக- நிதானமாக இருக்கும். அடுத்த வருடைய உணர்வைப் புரிந்து செயல்படு வார்கள். அதனால் எளிதில் தீமை நடக்காது.
நன்மை நடக்க போதியகால அவகாசம் தேவைப்படும். கிடைத்த நன்மை அவர்களுடனே நிலைத்து நிறைந் திருக்கும்.
பரிகாரம்
காடு, காடு சார்ந்த இடங்கள், பாதயாத் திரை சென்று வழிபாடு செய்யக்கூடிய கடவுளான முருகன், ஐயப்பன் போன்ற தெய்வங்களை வணங்க வேண்டும். தல ஷேத்திர மர வழிபாடு, உழவாரப் பணி, பொதுப்பணிகள், மரம் வளர்த்தல் நன்று.
உதாரணம்-3
காற்று ராசியான மிதுனம், துலாம், கும்பம் ஆகியவற்றிலுள்ள ராகு-கேதுவி னால் ஏற்படும் நன்மை- தீமைகள் ஜாத கரிடம் அவ்வப்போது வந்து மறையும்.
காற்று ராசியில் ராகு- கேது இருப்பவர்கள் நன்மை, தீமை எதையும் கண்டு அஞ்சுவதில்லை. வந்தால் பார்ப்போம் என்ற மெத்தனம் மிகுதியாக இருக்கும். இவர்கள் யாரையும் மதிக்காமல் தன் போக்கிலேயே இருப்பார்கள். அறிவுரை பிடிக்காதவர்கள். தன் செயல்களால் ஏற்படும் நன்மை- தீமைகளை அறிந்து செயல்படும் சக்தியற்றவர்கள். ராகு நின்ற இடம் புதன் வீடான மிதுனமாக இருந்தால், வெளித்தோற்றத்தில் தைரியமானவராகவும், மனதளவில் கோழையாகவும் இருப்பார்கள். அல்லது ராகு புதனுடன் சம்பந்தம் பெற்றால் மன நோயாளியாகி விடுகிறார்கள்.
பரிகாரம்
விஷ்ணு சகஸ்ர நாமப் பாராயணம் செய்தல் அல்லது ஒலிக்கச் செய்தல். ஸ்ரீ ராமஜெயம் எழுதவேண்டும்.
உதாரணம்-4
நீர் ராசியான கடகம், விருச்சிகம், மீனத்தில் உள்ள ராகு- கேதுவினால் ஏற்படும் நன்மை- தீமைகள் ஜாதகரை நன்கு உயர்த்தும் அல்லது பாதாளத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.
நீர் ராசியில் ராகு- கேது இருப்பவர்களுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருக்கும். இவர்களுக்கு ராகு தசை ஏற்றத் தைத் தந்தால் குரு தசை பதம் பார்க்கும்.
ராகு கடகத்தில் சந்திரனுடன் சம்பந்தம் பெற்றால், வக்கிரமான எண்ணங்கள் உருவாகி மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு ஆனந்தப்படுவர்.
பரிகாரம்
நீர்நிலைகள், கடல், புனித நதிகளில் நீராடவேண்டும்.
வெண்கடுகைப் பயன்படுத்தி வீட்டில் தூபம்போட வேண்டும்.
செல்: 98652 20406