தசா புக்திக் கெடுதல்கள் நீக்கும் மிக எளிய பரிகாரங்கள்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/simplest-remedies-get-rid-dasa-bukti-vices-r-mahalakshmi

ங்களில் பெரும்பாலோர் உங்கள் ஜாதகங்களைப் பரிசீலித்திருப்பீர்கள். சில சமயங்களில் ஜோதிடர், "உங்களுக்கு நல்ல தசை ஆரம்பித்துவிட்டது; இனி யோக நேரம்தான்' என்பார். சில சமயங்களில், "கவனமாக இருங்கள்; மோசமான தசை ஆரம்பித்துள்ளது' என்பார். கூடவே அதற்குரிய பரிகாரங்களையும் கூறுவார்.

சில பரிகாரங்களை குறிப்பிட்ட கோவிலுக்குச் சென்று செய்யவேண்டு வரும். சில பரிகாரங்களுக்கு குறிப்பிட்ட மனிதர்களிடம் சென்று யாகம், பூஜை செய்யவேண்டி நேரும். சிலசமயம் தானதர்மங்கள் செய்யும்படி அமையும்.

parigaram

இந்த "கொரோனா' காலத்தில், எல்லா மக்களும் துன்பப்பட்டார்கள் எனில், ஜோதிடர்களின் நிலைமையும் தர்ம சங்கடமாகிவிட்டது. சில பரிகாரங்களை, ஜாதகர்கள் செய்யவே இயலாத நிலையாகி விட்டது. எனவேதான் சில எளிய பரிகாரங் களைக் கூறி வழிகாட்டவேண்டிய நிலை உருவானது.

இனி, எல்லா தசாபுக்திகளுக்கும் ஏற்ற மிக எளிய பரிகாரங்களைக் காணலாம்.

சூரிய தசை

சூரிய தசையின் கால அளவு ஆறு ஆண்டுகள். இந்த தசை ஆரம்பித்தவுடன், தினமும் சூரிய வழிபாடு, ஆதித்ய ஹ்ருதயம் பாராயாணம் சிறப்பு. ஞாயிற்றுக்கிழமை களில் பரிகாரம் செய்யவேண்டும்.

சூரிய தசை சூரிய புக்தி:

ஞாயிற்றுக்கிழமையன்று முடிந்த அளவு கோதுமை அல்லது கோதுமை மாவை, காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் வயதானவருக்குக் கொடுக்கவும். கால அளவு மூன்று மாதம்- 18 நாள் இருக்கும்.

சூரிய தசை- சந்திர புக்தி: ஆறு மாதம் காலம் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் வயதான பெண்ணுக்கு அரிசிதானம் கொடுக்கவும்.

சூரிய தசை- செவ்வாய் புக்தி: காலம் நான்கு மாதம், ஆறு நாள். ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் சிறிய பையனுக்கு மயிலிறகு வாங்கிக்கொடுங்கள்.

சூரிய தசை- குரு புக்தி: காலம் பத்து மாதம், 24 நாள். ஞாயிற்றுக்கிழமை ராகு நேரத்தில் (மாலை 4.30-6.00) பிற மதத்தினருக்கு மெழுகுவர்த்தி கொடுங்கள்.

சூரிய தசை- சூரிய புக்தி: காலம் ஒன்பது மாதம், 18 நாள். ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 முதல் 12.00 மணிக்குள் பசுவுக்கு ஏதாவது கொடுங்கள்.

சூரிய தசை- சனி புக்தி: காலம் 11 மாதம், 12 நாள். ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் உங்கள் வீட்டில் வேலை செய்பவருக்கு கொஞ்சம் மிளகு கொடுங்கள்.

சூரிய தசை- சனி புக்தி: கால அளவு பத்து மாதம், ஆறு நாள். காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் சிறு குழந்த

சூரிய தசை- சனி புக்தி: கால அளவு பத்து மாதம், ஆறு நாள். காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் சிறு குழந்தைகளுக்கு பச்சைப் பயறு சுண்டல் செய்துகொடுங்கள்.

சூரிய தசை, கேது புக்தி: காலம் நான்கு மாதம், ஆறுநாள். உங்களுக்கு முடிந்த நேரத்தில் அல்லது மாலைப்பொழுதில் ஆட்டிற்கு தீவனம் கொடுக்கவும்.

சூரிய தசை- சுக்கிர புக்தி: கால அளவு ஒரு வருடம். ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் இளம்பெண் ணுக்கு கொஞ்சம் சந்தனம் கொடுக்கவும்.

தானப் பொருட்களின் அளவு உங்கள் மனதையும், "மணிபர்ஸை'யும் பொருத்தது.

சந்திர தசை

சந்திர தசை பத்து வருடங்கள் ஓடும்.

திங்கட்கிழமைதோறும் அம்பாள் வழி பாடும், பாலாபிஷேகமும். அரிசி தானமும் நன்று. லலிதா சஹஸ்ர நாமப் பராயாணம் மிகச்சிறப்பு.

சந்திர தசை- சந்திர புக்தி: கால அளவு பத்து மாதம். திங்கட்கிழமை காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் வயதான பெண்ணுக்கு பச்சரிசி தானம் நல்லது.

சந்திர தசை- செவ்வாய் புக்தி: கால அளவு ஏழு மாதம். திங்கட்கிழமை காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் தோட்ட வேலை செய்பவருக்கு ஒரு ஈயப் பாத்திரம் வாங்கிக்கொடுக்கவும்.

சந்திர தசை- ராகு புக்தி: கால அளவு ஒரு வருடம், ஆறு மாதம். திங்கட்கிழமை காலை 7.30 முதல் 9.00 மணிக்குள் ஆட்டுக்கு தீவனம் கொடுக்கவும். அல்லது மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு உணவு கொடுங்கள்.

சந்திர தசை- குரு புக்தி : கால அளவு ஒரு வருடம், நான்கு மாதம். திங்கட்கிழமை காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் அருகிலுள்ள அந்தணர் குடும்பத்துக்கு ஒரு தேங்காய் வாங்கிக்கொடுக்கவும்.

சந்திர தசை- சனி புக்தி: கால அளவு ஒரு வருடம், ஏழு மாதம். திங்கட்கிழமை காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் வேலை செய்யும் பெண்ணுக்கு சாதம் கொடுக்கவும்.

சந்திர தசை- புதன் புக்தி: கால அளவு ஒரு வருடம், ஐந்து மாதம். திங்கட்கிழமை பகல் 12.00 முதல் 1.00 மணிக்கு ஏதேனும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு முடிந்த தீவனம் கொடுங்கள்.

சந்திர தசை- கேது புக்தி: கால அளவு ஏழு மாதம். திங்கட்கிழமை எந்த நேரமானாலும், வயதான எளியவருக்கு பசியறிந்து உணவளிக்கவும்.

சந்திர தசை- சுக்கிர புக்தி: கால அளவு ஒரு வருடம், எட்டு மாதம். திங்கட்கிழமை காலை 11.00 முதல் 12.00 மணிக்குள் யாருக்காவது சாம்பிராணி அல்லது ஒரு பாக் கெட் கம்ப்யூட்டர் சாம்பிராணி கொடுங்கள்.

சந்திர தசை- சூரிய புக்தி: கால அளவு ஆறு மாதங்கள். திங்கட்கிழமை காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் யாருக்காவது முருங்கைக்காய் அல்லது கொஞ்சம் நெய் வாங்கிக்கொடுங்கள். அல்லது தீபமேற்ற நல்லெண்ணெய் வாங்கிக் கொடுக்கலாம்.

செவ்வாய் தசை

செவ்வாய் தசையின் ஆண்டுகள் ஏழு வருடம். செவ்வாய்க்கிழமைதோறும் கந்த சஷ்டிக் கவசம், மஹிஷாசுரமர்த்தினி சுலோகம் கூறுவது மிக நன்று. முடிந்தவர்கள் செவ்வாயன்று ஒருபொழுது விரதமிருக்கவும். பரிகாரங்களை செவ்வாய்க்கிழமைதோறும் கடைப்பிடிக்கவும்.

செவ்வாய் தசை- செவ்வாய் புக்தி: கால அளவு நான்கு மாதம், 27 நாட்கள். காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் சிறிது துவரம்பருப்பு கொடுங்கள்- யாருக்கேனும்.

செவ்வாய் தசை- ராகு புக்தி: கால அளவு ஒரு வருடம், 18 நாட்கள். செவ்வாய்க் கிழமை மாலை 3.00 முதல் 4.30 மணிக்குள் அந்தணருக்கு உணவு சம்பந்த தானம் செய்யவும்.

செவ்வாய் தசை- குரு புக்தி: கால அளவு 11 மாதம், ஆறு நாட்கள். பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் சிறிது சந்தனம் கொடுப்பது நல்லது.

செவ்வாய் தசை- சனி புக்தி: கால அளவு ஒரு வருடம், ஒரு மாதம், ஒன்பது நாட்கள். காலை 11.00 முதல் 12.00 மணிக்குள் வேலை செய்யும் இளைஞர்களுக்கு ஏதேனும் உடைகள் கொடுக்கவும்.

செவ்வாய் தசை- புதன் புக்தி: கால அளவு 11 மாதம், 27 நாட்கள். காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் கல்வி தடைப்பட்ட, கல்வியில் தடுமாறும் மாணவர்களுக்கு புத்தகம் கொடுக்கவும்.

செவ்வாய் தசை- கேது புக்தி: கால அளவு நான்கு மாதம், 27 நாட்கள். செவ்வாய்க்கிழமை யின் எந்த நேரத்திலும், உடல்நலம் குன்றியவர் களுக்கு உதவிசெய்யவும்.

செவ்வாய் தசை- சுக்கிர புக்தி: கால அளவு ஒரு வருடம், இரண்டு மாதம். காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் ஒரு சுமங்கலிக்குக் குங்குமம் கொடுக்கவும்.

செவ்வாய் தசை- சூரிய புக்தி: கால அளவு நான்கு மாதம், ஆறு நாட்கள். காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் கத்திரிக்காய் வாங்கிக்கொடுக்கவும்.

செவ்வாய் தசை- சந்திர புக்தி: கால அளவு ஏழு மாதம். காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் அல்லது முடிந்தபோதெல்லாம் மோர் தானம் செய்யவும்.

ராகு தசை

ராகு தசையின் ஆண்டுகள் 18 வருடம். ராகு என்பது பாம்பு சம்பந்தமுடையது. எனவே ராகு தசை ஆரம்பித்தவுடன் ஜாதகர்கள் கிலிபிடித்துப் போய்விடுகிறார்கள். ராகு தசை நடக்கும்போது பெரும்பான்மையான ஜாதகர்களுக்கு, பொதுவெளியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டதுபோல் வாழ்க்கை யின் போக்கு மாறிவிடுகிறது. ராகு பகவான் தான் அமர்ந்த இடம், வாங்கிய சாரம் ஆகிய வற்றின் வழியே ஜாதகர்களை "வச்சி செஞ்சு' விடுகிறார்.

ராகு தசை நடக்கும்போது, இன்ன நாளில்தான் பரிகாரம் செய்யுங்கள் என்று கூறமுடியாது. உங்களுக்கு என்றைக்கு எந்த நேரத்தில் முடிகிறதோ- முடிந்தமட்டும் பரிகாரம் செய்யுங்கள்.

ராகு தசை- ராகு புக்தி: கால அளவு இரண்டு வருடம், எட்டு மாதம், 12 நாட்கள். பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு- குறிப்பாக இஸ்லாமிய அன்பர்களுக்கு கறுப்பு உளுந்து வாங்கிக்கொடுங்கள்.

ராகு தசை- குரு புக்தி: கால அளவு இரண்டு வருடம், நான்கு மாதம், 24 நாட்கள்.

பகல் 1.30 முதல் 3.00 மணிக்குள் மஞ்சள், சமையலுக்கான மஞ்சள் பொடி, பூசு மஞ்சள் பொடி, பூஜை மஞ்சள் பொடி என முடிந்ததை வாங்கிக் கொடுக்கவும்.

ராகு தசை- சனி புக்தி: கால அளவு இரண்டு வருடம், பத்து மாதம், ஆறு நாட்கள். காலை 9.00 முதல் 10.30 மணிக்குள் நெல்லிக்காய் அல்லது கடுகு அல்லது எவர்சில்வர் பாத்திரம் தானம் கொடுக்கவும்.

ராகு தசை- புதன் புக்தி: கால அளவு இரண்டு வருடம், ஆறு மாதம், 18 நாட்கள். பகல் 12.00 முதல் 1.30 மணிக்குள் குருவி, கோழி போன்ற பறவையினங்களுக்கு கேழ்வரகு, அரிசிநொய் போன்றவற்றைத் தூவிவிடுங்கள்.

ராகு தசை- கேது புக்தி: கால அளவு ஒரு வருடம், 18 நாட்கள். முடிந்த போதெல்லாம் சாலையோர நாய்களுக்கு உணவு கொடுக்கவும்.

ராகு தசை- சுக்கிர புக்தி: கால அளவு மூன்று வருடங்கள். காலை 10.30 முதல் 12.00 மணிக்குள் எலுமிச்ச பழ சாதம் அல்லது எலுமிச்சை பானகம், சர்பத் கொடுக்க வும். சிறிய பெண் குழந்தைகளுக்கு நன்கு இனிப்பான தின்பண்டம் கொடுங்கள்.

ராகு தசை- சூரிய புக்தி: கால அளவு பத்து மாதம், 24 நாட்கள். மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் பிற இன, மத நபர் களுக்கு மின்சார பல்ப் அல்லது ஒரு டஜன் தீப்பெட்டி வாங்கிக்கொடுக்கவும்.

ராகு தசை- சந்திர புக்தி: கால அளவு ஒரு வருடம், ஆறு மாதம். காலை 7.30 முதல் 9.00 மணிக்குள் அல்லது முடிந்த நேரத்தில் பால் பாக்கெட் வாங்கிக்கொடுக்கவும்.

ராகு தசை- செவ்வாய் புக்தி: கால அளவு ஒரு வருடம், 18 நாட்கள். மாலை 3.00 முதல் 4.30 மணிக்குள் ஏதாவது இரும்புப் பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரம் வாங்கிக் கொடுக்கவும். அதில் உளுந்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு சிறிது போட்டுக் கொடுக்கவும்.

குரு தசை

குரு தசையின் காலம் 16 வருடம். ஜாதகத்தில் குரு நீசமாக இல்லாவிடில், குரு தசை ஓரளவு நல்ல பலன்களைத் தரும். பொதுவாக குரு தசை பாதுகாப்பாகவே அமையும். இஷ்ட தெய்வ, குலதெய்வ வழிபாடு, சிவ வழிபாடு மேன்மை தரும். சித்தர்களை வணங்குவது நன்று. உங்களுக்குத் தெரிந்த மந்திரப் பராயாணம் நன்று. வியாழக்கிழமைகளில் பரிகாரம் செய்யவும்.

குரு தசை- குரு புக்தி: கால அளவு இரண்டு வருடம், 9 மாதம், 18 நாட்கள். காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் பசுக்களுக்கு தீவனம், கோசாலைகளுககு சேவை மற்றும் காணிக்கை தருவது நல்லது.

குரு தசை- சனி புக்தி: கால அளவு இரண்டு வருடம், ஆறு மாதம், 12 நாட்கள். பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் பசுவுக்கு மஞ்சள் வாழைப் பழம், யாருக்காவது பலாப்பழம் மற்றும் பசுத் தொழுவப் பழுதுச்செலவு போன்றவை ஏற்புடையது.

குரு தசை- புதன் புக்தி: கால அளவு இரண்டு வருடம், மூன்று மாதம், ஆறு நாட்கள். காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் படிக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் பழம் வாங்கிக் கொடுக்கவும். அல்லது பள்ளியில் ஆசிரியப் பணி புரிபவர்களுக்கு மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் ஏதேனும் கொடுக்கவும்.

குரு தசை- கேது புக்தி: கால அளவு 11 மாதம், ஆறு நாட்கள். வியாழக்கிழமையின் எந்த நேரத்திலும், வயதான ஆசிரியர்கள், வைத்தி யர்கள், பிள்ளையார் கோவில் அர்ச்சகர்கள் என யாருக்கேனும் ஆடை தானம் செய்யுங்கள். அருகில் சித்தர் கோவில் இருப்பின், அங்கு அன்னதானம் செய்வது சிறப்பு.

குரு தசை- சுக்கிர புக்தி: கால அளவு இரண்டு வருடம், எட்டு மாதம். காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல் விசேஷ தானமாகும்.

குரு தசை- சூரிய புக்தி: கால அளவு ஒன்பது மாதம், 18 நாட்கள். காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் மஞ்சள் அல்லது சோளம் தானம் செய்யவும்..

குரு தசை- சந்திர புக்தி: கால அளவு ஒரு வருடம், நான்கு மாதம். காலை 11.00 முதல் 12.00 மணிக்குள் வயதானவர்களுக்கு மருந்து தானம் நல்லது.

குரு தசை- செவ்வாய் புக்தி: கால அளவு 11 மாதம், ஆறு நாட்கள். காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் காளை அல்லது பசு மாட்டுக்கு தீவனம் தரவும். அல்லது பால் கொண்டுவருபவருக்கு ஏதேனும் தொகை கொடுக்கவும்.

குரு தசை- ராகு புக்தி: கால அளவு இரண்டு வருடம், நான்கு மாதம், 24 நாட்கள். பகல் 1.30 முதல் 3.00 மணிக்குள் பிற மத, இன வழி பாட்டுத் தல குருமார்களுக்கு உளுந்து சம்பந்தப்பட்ட உணவு வாங்கிக்கொடுங்கள். அல்லது ஆடுகளுக்கு தீவனம் கொடுக்கவும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 94449 61845

bala050221
இதையும் படியுங்கள்
Subscribe