சென்ற இதழ் தொடர்ச்சி...
சனி தசை
சனி தசைக்காலம் 19 வருடங்கள். சனி உங்கள் ஜாதகத்தில் யோகாதிபதியாக இருந்தால் மிக நல்ல பலன்தரும். நல்ல உத்தியோக- தொழில் சிறப்பும் கிடைக்கும். நான்காவது சனி தசையாக நடந்தால், சற்று கவனமாக இருத்தல் அவசியம். சனி தசையின் காலத்தில் சனீஸ்வர வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு, பைரவர் மற்றும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும். சனி தசையில் சந்திர புக்தியின்போது கவனம் தேவை.
சனி தசை- சனி புக்தி: கால அளவு மூன்று வருடம், மூன்று நாட்கள். சனிக்கிழமை காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் இரும்புப் பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரம் தானம் செய்யவும். அந்தப் பாத்திரத்தில் கொஞ்சம் எள் மிட்டாய், எள் பர்பி வைத்துக்கொடுங்கள். சனிக்கிழமை செய்யவேண்டும்.
சனி தசை- புதன் புக்தி: இதன் காலம் இரண்டு வருடம், எட்டு மாதம், ஒன்பது நாட்கள். சனிக்கிழமை காலை 11.00 முதல் 12.00 மணிக்குள், உங்கள் வீட்டில் வேலை செய்யும் நபர்களின் குழந்தைக்கு நவதானியம் அல்லது நவதானியக் கஞ்சி பாக்கெட் கொடுக்கவும்.
சனி தசை- கேது புக்தி: காலம் ஒரு வருடம், ஒரு மாதம், ஒன்பது நாட்கள். சனிக்கிழமை எந்த நேரத்திலும், செடிவிதைகள் அல்லது கிழங்குகளை யாருக்காவது கொடுக்கவும்.
சனி தசை- சுக்கிர புக்தி: கால அளவு மூன்று வருடம், இரண்டு மாதங்கள். சனிக் கிழமை காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் கீழ்நிலை ஊழியர்களுக்கு இனிப்பான தின்பண்டம் கொடுங்கள். அதில் எள் சேர்ந்திருந்தால் சிறப்பு.
சனி தசை- சூரிய புக்தி: கால அளவு 11 மாதம், 12 நாட்கள். சனிக்கிழமை காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் வேலை செய்யும் மனிதர்களுக்கு மெழுகுவர்த்தி, தீப்பெட்டி வாங்கிக்கொடுக்கவும். மற்றும் கேழ்வரகு தானம் நல்லது.
சனி தசை- சந்திர புக்தி: கால அளவு ஒரு வருடம், ஏழு மாதங்கள். இந்த காலகட்டத்தில் ஜாதகர்கள் கவனமாக இருக்கவேண்டும். ஏதேனும் இழப்பை சந்திக்கநேரும். எனவே, பரிகாரங்களைப் பக்குவமாகச் செய்யவும். சனிக்கிழமை பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் தயிர்சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல், நெய் சேர்த்த உணவு, பால் தானம், குடிப்பதற்கு மோர், பசுவுக்கு தீவனம், கோசாலைக்கு உதவி, எருமை மாட்டிற்கு புண்ணாக்கு என எந்த தானம் உங்களால் முடிகிறதோ அதனைக் கண்டிப் பாக செய்துவிடுங்கள். சனிக்கிழமைதோறும் மதிய நேரத்தில் யாராவது ஒருவருக்காவது, ஏதோ ஒன்றைக் கொடுத்து
சென்ற இதழ் தொடர்ச்சி...
சனி தசை
சனி தசைக்காலம் 19 வருடங்கள். சனி உங்கள் ஜாதகத்தில் யோகாதிபதியாக இருந்தால் மிக நல்ல பலன்தரும். நல்ல உத்தியோக- தொழில் சிறப்பும் கிடைக்கும். நான்காவது சனி தசையாக நடந்தால், சற்று கவனமாக இருத்தல் அவசியம். சனி தசையின் காலத்தில் சனீஸ்வர வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு, பைரவர் மற்றும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும். சனி தசையில் சந்திர புக்தியின்போது கவனம் தேவை.
சனி தசை- சனி புக்தி: கால அளவு மூன்று வருடம், மூன்று நாட்கள். சனிக்கிழமை காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் இரும்புப் பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரம் தானம் செய்யவும். அந்தப் பாத்திரத்தில் கொஞ்சம் எள் மிட்டாய், எள் பர்பி வைத்துக்கொடுங்கள். சனிக்கிழமை செய்யவேண்டும்.
சனி தசை- புதன் புக்தி: இதன் காலம் இரண்டு வருடம், எட்டு மாதம், ஒன்பது நாட்கள். சனிக்கிழமை காலை 11.00 முதல் 12.00 மணிக்குள், உங்கள் வீட்டில் வேலை செய்யும் நபர்களின் குழந்தைக்கு நவதானியம் அல்லது நவதானியக் கஞ்சி பாக்கெட் கொடுக்கவும்.
சனி தசை- கேது புக்தி: காலம் ஒரு வருடம், ஒரு மாதம், ஒன்பது நாட்கள். சனிக்கிழமை எந்த நேரத்திலும், செடிவிதைகள் அல்லது கிழங்குகளை யாருக்காவது கொடுக்கவும்.
சனி தசை- சுக்கிர புக்தி: கால அளவு மூன்று வருடம், இரண்டு மாதங்கள். சனிக் கிழமை காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் கீழ்நிலை ஊழியர்களுக்கு இனிப்பான தின்பண்டம் கொடுங்கள். அதில் எள் சேர்ந்திருந்தால் சிறப்பு.
சனி தசை- சூரிய புக்தி: கால அளவு 11 மாதம், 12 நாட்கள். சனிக்கிழமை காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் வேலை செய்யும் மனிதர்களுக்கு மெழுகுவர்த்தி, தீப்பெட்டி வாங்கிக்கொடுக்கவும். மற்றும் கேழ்வரகு தானம் நல்லது.
சனி தசை- சந்திர புக்தி: கால அளவு ஒரு வருடம், ஏழு மாதங்கள். இந்த காலகட்டத்தில் ஜாதகர்கள் கவனமாக இருக்கவேண்டும். ஏதேனும் இழப்பை சந்திக்கநேரும். எனவே, பரிகாரங்களைப் பக்குவமாகச் செய்யவும். சனிக்கிழமை பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் தயிர்சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல், நெய் சேர்த்த உணவு, பால் தானம், குடிப்பதற்கு மோர், பசுவுக்கு தீவனம், கோசாலைக்கு உதவி, எருமை மாட்டிற்கு புண்ணாக்கு என எந்த தானம் உங்களால் முடிகிறதோ அதனைக் கண்டிப் பாக செய்துவிடுங்கள். சனிக்கிழமைதோறும் மதிய நேரத்தில் யாராவது ஒருவருக்காவது, ஏதோ ஒன்றைக் கொடுத்துவிடுங்கள். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும். காகத்திற்கு தினமும் சாதம் வைக்கவும்.
சனி தசை- செவ்வாய் புக்தி: கால அளவு ஒரு வருடம், ஒரு மாதம், ஒன்பது நாட்கள். காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் சனிக்கிழமைகளில் ஒரு எவர்சில்வர் பாத்திரத் தில், கொஞ்சம் துவரம் பருப்பைப் போட்டு, தோட்டவேலை செய்பவருக்குக் கொடுக்க வும். வயலில் வேலை செய்பவர்களுக்கு கொஞ்சம் நல்லெண்ணெயும், எருமை மாட்டிற்கு புண்ணாக்கும் கொடுக்கவும்.
சனி தசை- ராகு புக்தி: கால அளவு இரண்டு வருடம், பத்து மாதம், ஆறு நாட்கள். சனிக் கிழமை காலை 9.00 முதல் 10.30 மணிக்குள் எருமை மாட்டிற்கு கண்டிப்பாக ஏதாவது கொடுத்தே ஆகவேண்டும். உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள மாடு வளர்ப்பவர் அல்லது மாட்டுத் தொழுவத்தில் உள்ளவர்களிடம். பேசி, முன்னரே பணமோ, தீவனமோ கொடுத்து, சனிக்கிழமை தோறும் எருமைக்குக் கொடுக் கும்படி ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். வேறு வழியில்லை; சனி, ராகு சம்பந்த காலத்தில் எருமைப் பரிகாரம் மட்டுமே உள்ளது. சிவனையும், பைரவரையும் வழிபடவேண்டும்.
சனி தசை- குரு புக்தி: கால அளவு இரண்டு வருடம், ஆறு மாதம், 12 நாட்கள். சனிக்கிழமை காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் பள்ளிக்கூடம், சத்துணவுக் கூடத்தில் ஆயா வேலை பார்ப்ப வருக்கு மஞ்சள் புடவை கொடுக்கவும். சனி தசைப் பரிகாரங்கள் சனிக் கிழமைகளில் மட்டுமே செய்யப்படவேண்டும்.
புதன் தசை
இதன் கால அளவு 17 ஆண்டுகள். உங்கள் ஜாதகத்தில் புதன் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும், அந்த தசைக்காலம் நல்ல அறிவு, புத்திசாலித்தனம், நினைவாற்றல், சுறுசுறுப்பு, கல்வியில் சிறப்பு, வேலைவாய்ப்பு என அனைத்தையும் அள்ளித்தரும். புதன் தசை நடக்கும்போது பெருமாளை, நாராயணரை வணங்கவும். விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீ நாராயணீயம் பாராயணம் சாலச் சிறந்தது. கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை புதன் கிழமைகளில் செய்யவும்.
புதன் தசை- புதன் புக்தி: கால அளவு இரண்டு வருடம், நான்கு மாதம், 27 நாட்கள். காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் புத்தக தானம் நல்லது. அது பள்ளிப் புத்தகமகவோ அல்லது பக்திப் புத்தகமாகவோ அல்லது வார, மாத இதழ்களாகவோ இருக்கலாம். உங்கள் வீட்டுக் கருகில் வயதானவர்கள் இருப்பின் அவர்களுக்கு வார, மாத இதழ்களை தொடர்ந்து வாங்கித் தரலாம்.
புதன் தசை- கேது புக்தி: கால அளவு 11 மாதம், 27 நாட்கள். புதன் கிழமை எந்த நேரத்திலும் தானியங்களை ஊறவைத்து ஐந்தறிவு ஜீவன்களுக்குக் கொடுக்கலாம்.
புதன் தசை- சுக்கிர புக்தி: கால அளவு இரண்டு வருடம், பத்து மாதங்கள். நண்பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் பாசிப்பருப்பு பாயசம் செய்து, அருகிலுள்ள குழந்தை களுக்குக் கொடுக்கலாம்.
புதன் தசை- சூரிய புக்தி: கால அளவு பத்து மாதம், ஆறு நாட்கள். பகல் 11.00 முதல் 12.00 மணிக்குள் யாருக்காவது துளசி இலைகள் அல்லது ஒரு பாக்கெட் கற்பூரம் வாங்கிக் கொடுக்கலாம்.
புதன் தசை- சந்திர புக்தி: கால அளவு ஒரு வருடம், ஐந்து மாதங்கள். காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் வயதான பெண்ணுக்கு வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் கொடுக்கவும்.
புதன் தசை- செவ்வாய் புக்தி: கால அளவு 11 மாதம், 27 நாட்கள். காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் பித்தனைப் பொருள் அல்லது கல்வி தடைப் பட்ட குழந்தைகளுக்கு புத்தகம், எழுது பொருள் வாங்கிக் கொடுக்கவும்.
புதன் தசை- ராகு புக்தி: கால அளவு இரண்டு வருடம், ஆறு மாதம், 18 நாட்கள். பகல் 12.00 முதல் 1.30 மணிக்குள் கரும்பச்சை நிற ஆடை, உணவுப் பொருள் என, கறுப்பும் பச்சையும் சேர்ந்த பொருள் தானம் செய்வது நன்று. புத்திசாலித்தனமான ஏமாற்றுதல் களைத் தவிர்க்கலாம்.
புதன் தசை- குரு புக்தி: கால அளவு இரண்டு வருடம், மூன்று மாதம், ஆறு நாட்கள். காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் பசுவுக்கு பச்சைநிறப் பழம், காய்கறிகள், கீரைகள் கொடுக்கவும். அருகிலுள்ள அந்தண ருக்கு பச்சை வாழைப்பழம் போன்ற கனிகள் கொடுக்கவும்.
புதன் தசை- சனி புக்தி: கால அளவு இரண்டு வருடம், எட்டு மாதம், ஒன்பது நாட்கள். காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் பச்சைப் பயறு சுண்டல் செய்து ஒரு சிறிய எவர்சில்வர் கிண்ணத்துடன் கொடுங்கள். அல்லது பச்சைக் காய்கறி கொடுக்கலாம். கருந்துளசி செடியை வளர்க்கவும்.
கேது தசை
கேது தசை ஏழு ஆண்டுகள் நீடிக்கும். இது பெரும்பாலும் ஒரு பற்றற்ற நிலையை ஜாதகருக்குக் கொடுக்கும். எதன்மூலம் மனம் வெறுத்துப்போகும் என்பதை கேதுவின் சாரநாதர் நிர்ணயம் செய்வார். கேது தசையின் காலத்தில் விநாயகர் வழிபாடும், சித்தர்கள் வழிபாடும் சிறப்பு. கேது கிறிஸ்துவர்களைக் குறிப்பதால், கிறிஸ்துவ மக்களுக்கு உதவுவது நன்று. கேதுவின் பரிகாரங்களை எந்த நாளிலும், எந்த நேரத்திலும் செய்யலாம்.
கேது தசை- கேது புக்தி: கால அளவு நான்கு மாதம், 27 நாட்கள்.
ஆஞ்சனேயர் வழி பாட்டுக்கு செந்தூரம் வாங்கிக்கொடுக்கவும். முடிந்தபோது கொள்ளு சுண்டல் விநியோகம் நல்லது.
கேது தசை- சுக்கிர புக்தி: கால அளவு ஒரு வருடம், இரண்டு மாதங் கள், முடிந்தபோது அத்திப் பழம், மொச்சை வாங்கிக் கொடுக்கவும்.
கேது தசை- சூரிய புக்தி: கால அளவு நான்கு மாதம், ஆறு நாட்கள். விநாயகர் கோவி லுக்கு மின்சாரக் கட்டணம் கட்டலாம். அல்லது மின்சார விளக்கு வாங்கிக்கொடுக்கலாம்.
கேது தசை- சந்திர புக்தி: கால அளவு ஏழு மாதங்கள். சந்நியாசி அல்லது பிச்சைக் காரர்களுக்கு தண்ணீர் அல்லது குளிர்பானம் வாங்கிக்கொடுக்கள்.
கேது தசை- செவ்வாய் புக்தி: கால அளவு நான்கு மாதம், 27 நாட்கள். கோழி, சேவல் போன்றவற்றுக்கு தீவனம் தூவவும்.
கேது தசை- ராகு புக்தி: கால அளவு ஒரு வருடம், 18 நாட்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் இனம், மதம் அல்லாத மக்களுக்கு உணவு, குடை, விசிறி, மாத்திரை போன்றவை வாங்கிக்கொடுக்கலாம். முடிந்தால் நாய், சேவல் போன்ற ஐந்தறிவு ஜீவன்களை தானம் கொடுப்பது மிகமிக நல்லது. இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
கேது தசை- குரு புக்தி: கால அளவு 11 மாதம், ஆறு நாட்கள். ஆன்மிக மடங்கள், தபோவனம், சித்தர் சமாதிகள், சித்தர் மடம், அதிஷ்டானங்கள் போன்றவை சார்ந்த இடங் களில் உழவாரப் பணி எனும் தூய்மைப் படுத்தும் பணியைச் செய்யுங்கள். அல்லது சித்தர்களை வணங்கி அமைதியாக அமரவும்.
கேது தசை- சனி புக்தி: கால அளவு ஒரு வருடம், ஒரு மாதம், ஒன்பது நாட்கள்.
கோவில்களில் வெள்ளை, காவி அடிப்பது, மடங்களைச் சுத்தம் செய்வது கோசாலைகளில் உதவி செய்வது போன்ற செயல்கள் மிக ஏற்புடையவை.
கேது தசை- புதன் புக்தி: கால அளவு 11 மாதம், 27 நாட்கள். குழந்தைகளுக்கு இலவச ட்யூசன் எடுப்பது, பக்திப் புத்தக விநியோகம், பிறமொழி உதவி போன்றவை நன்று.
சுக்கிர தசை
சுக்கிர தசை இருபது ஆண்டுகள் கொண்டது. பொதுவாக சுக்கிர தசை என்றால், "அட, நல்ல யோகம்தான்' எனக் கூறுவதுண்டு. எனினும் சிறு வயதில் வரும் சுக்கிர தசை, கொட்டிக் கவிழ்க்கும் என்பர். சிறுவயதில் சுக்கிர தசை வரும் குழந்தைகளை வெகு கவனமாக கவனித்தல் அவசியம். அவர்கள் பாதைமாறும், நெறிபிறழும் சூழ்நிலை ஏற்படும். மேலும் ஜாதகத்தில் சுக்கிரன் அமையும் நிலையைப் பொருத்து, பலன்கள் வேறுபாடு அடையும்.
சுக்கிர தசைப் பரிகாரங்களை வெள்ளிக் கிழமைகளில் பின்பற்றவேண்டும். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமித் தாயார் வழிபாடு அவசியம். மகாலட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீசூக்தம் பாராயாணம் நன்று.
சுக்கிர தசை- சுக்கிர புக்தி: கால அளவு மூன்று வருடம், நான்கு மாதங்கள். காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் சர்க்கரை அல்லது மொச்சை தானம் நன்று.
சுக்கிர தசை- சூரிய புக்தி: கால அளவு ஒரு வருடம். பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் இனிப்பான பழங்கள் தானம் நல்லது.
சுக்கிர தசை- சந்திர புக்தி: கால அளவு ஒரு வருடம், எட்டு மாதங்கள். காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் வயதான பெண்களுக்கு இனிப்பான பழச்சாறு கொடுங்கள்.
சுக்கிர தசை- செவ்வாய் புக்தி: கால அளவு ஒரு வருடம், இரண்டு மாதங்கள். காலை 11.00 முதல் 12.00 மணிக்குள் செடிகள் தானம் நன்று. இதனை இளம்வயது மற்றும் சிறுமி, சிறுவர்களுக்குக் கொடுங்கள்.
சுக்கிர தசை- ராகு புக்தி: கால அளவு மூன்று வருடங்கள். காலை 10.30 முதல் 12.00 மணிக்குள் பிறமதப் பெண்களுக்கு அலங்காரப் பொருட்கள் கொடுங்கள். மேலும் உணவு சமைக்க அஞ்சறைப்பெட்டிப் பொருட்களான கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, மசாலா பொருட்களையும் கொடுக்கலாம்.
சுக்கிர தசை- குரு புக்தி: கால அளவு இரண்டு வருடம், எட்டு மாதங்கள். காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் படிக்கும் குழந்தை களுக்கு மொச்சை அல்லது வெள்ளைக் கொண்டைக்கடலை சுண்டல் செய்து கொடுக்கவும். பசுவுக்கு சர்க்கரை கலந்து தீவனம் கொடுக்கவும்.
சுக்கிர தசை- சனி புக்தி: கால அளவு மூன்று வருடம், இரண்டு மாதங்கள். காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் வேலை செய்யும் பெண்ணுக்கு பப்பாளிப்பழம் வாங்கித்தரவும். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உணவு அல்லது உணவு வாங்க பணம் கொடுத்து உதவுங்கள்.
சுக்கிர தசை- புதன் புக்தி: கால அளவு இரண்டு வருடம், பத்து மாதங்கள். காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் சிறு பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்பான, சத்துள்ள, பராம்பரிய உணவு கொடுங்கள்.
சுக்கிர தசை- கேது புக்தி: கால அளவு ஒரு வருடம், இரண்டு மாதங்கள். வெள்ளிக் கிழமை விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடவும்.
மேற்கண்ட பரிகாரங்கள் அனைத்தும், தினசரி வாழ்வியலோடு சேர்த்து செய்யக் கூடியவையாகும். இதற்கென தனியாகப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை. வீட்டி லிருக்கும் பொருட்களையும், வீட்டில் செய்யும் பதார்த்தங்களையும் கொண்டே பரிகாரம் செய்துவிடலாம். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தால் போதும். மலையளவு தேவையில்லை. மனமளவு போதும். செல்: 94449 61845